|
சமீபத்திய பதிவுகள்
மொபைல்- நெட்வொர்க் மாறினாலும் அதே நம்பர்!
மொபைல்- நெட்வொர்க் மாறினாலும் அதே நம்பர்! |
டெல்லி: ஒரு நிறுவனத்தி்ன் மொபைல் போன் சர்வீஸிலிருந்து வேறு நிறுவன சேவைக்கு மாறினாலும், வாடிக்கையாளர் பழைய மொபைல் எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தும் வகையிலான திட்டம் (Mobile Number Portability) அடுத்த ஆண்டு இந்தியாவில் அமலாக்கப்படவுள்ளது.
உதாரணத்துக்கு ஏர்டெல்லிலிருந்து நீங்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறினாலும் உங்கள் பழைய ஏர்டெல் எண்ணையே தொடர்ந்து உபயோகிக்க முடியும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த சேவையை அறிமுகப்படுத்த இந்திய தொலைத் தொடர்புத் துறை உத்தேசித்துள்ளது. இத்தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெஹூரா தெரிவித்தார்.
2015ல் 100 கோடி உபயோகிப்பாளர்கள்!:
இந் நிலையில் வரும் 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 100 கோடியைத் தொட்டுவிடும் என இந்திய மொபைல் போன் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் இயக்குநர் டி.வி. ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மொபைல் போன் உபயோகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2012ல் 75 கோடி மக்கள் மொபைல் போன்களை உபயோகிப்பார்கள் என நம்புகிறோம். இந்த நிலை மேலும் அதிகரித்து 2015லேயே 100 கோடி இலக்கைத் தொட்டு விடும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 30 கோடி.
இனி உலகத் தரத்துக்கு ஏற்பட மொபைல் போன் வசதியை இந்தியாவில் செய்து தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளோம் என்றார் ராமச்சந்திரன்.

மத சுதந்திர சட்டத்தை திருத்தும் ஒரிஸ்ஸா அரசு
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில மத சுதந்திர சட்டத்தை திருத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. மதமாற்றம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு மாநில அரசு வந்துள்ளது.
ஒரிஸ்ஸாவின் காந்தமால் மாவட்டத்தில் வி.எச்.பியைச் சேர்ந்த சுவாமி லட்சுமாணந்தாவை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர்.
மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் பணியில் இவர் ஈடுபட்டிருந்த நிலையில் கொல்லப்பட்டார். இதையடுத்து கிருஸ்துவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந் நிலையில் 1967ம் ஆண்டு இயற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்தை திருத்தி அதை கடுமையாக்க ஒரிஸ்ஸா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் மதமாற்றங்களுக்கு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து, இதுபோன்ற மதக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் கிட்டத்தட்ட மத மாற்ற தடை சட்டம் போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநில உள்துறைச் செயலாளர் டி.கே.மிஸ்ரா கூறுகையில், காந்தமால் வன்முறை சம்பவங்களுக்கு மதமாற்றமே முக்கிய பின்னணி காரணமாக இருந்தது. எனவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத சுதந்திர சட்டம், உரிய நேரத்தில் திருத்தி அமைக்கப்படும்.
இது தொடர்பாக மத சுதந்திர சட்டத்தில் உள்ள பிரிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு முன், இதை முழுமையாக ஆராய ஒரி்ஸ்ஸா அரசு முடிவு செய்துள்ளது.
இதுபோன்ற முடிவுகள், செயலர்கள் மட்டத்திலான குழுவில் விவாதித்தே இறுதி செய்யப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை முக்கியத்துவத்துடன் அணுகப்படும்.
மதக் கலவரங்களுக்கு இன்னொரு பிரச்னையாக, பழங்குடியினர் உரிமை நிலங்களை ஆக்கிரமிப்பதும் ஒன்றாக கருதப்படுகிறது. பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுப்பதற்கு, 1992ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகள், 2002ம் ஆண்டு கடுமையாக்கப்பட்டாலும், அதில் பல ஓட்டைகள் அடைக்கப்படாத நிலையே தொடர்கிறது.
பழங்குடியினர் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காந்தமால் மாவட்டத்தில் 20,000க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் மிஸ்ரா.

மதமாற்றத்திற்கு சிறார்களை கூட்டிச் சென்றதாக 4 பேர் கைது
மதமாற்றத்திற்கு சிறார்களை கூட்டிச் சென்றதாக 4 பேர் கைது |
மடிகேரி: மதமாற்றத்திற்காக சிறார்களை கூட்டிச் சென்றதாக நான்கு பேரை கர்நாடக போலீஸார் கைது செய்து, அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம் மடிகேரி மாவட்டம் எச்.டி. கோட்டை அருகே சித்தாபூரில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் சிலர் மதமாற்றத்திற்காக குழந்தைகளை ஜீப்பில் அழைத்துச் செல்வதாக இந்து அமைப்பு ஒன்று போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அந்தவாகனம் ஆனந்தப்பூரிலிருந்து வந்தது. ஏராளமான 56 சிறார்கள் இருந்தனர்.
அனைவரையும் எச்.டி. கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஹாஸ்டலில் சேர்க்க அழைத்துச் செல்வதாக வேனில் இருந்த கேரளாவைச் சேர்ந்த பிஜூ, இடுக்கியைச் சேர்ந்த ரோஹி தாமஸ், எச்.டி. கோட்டையைச் சேர்ந்த மீனாட்சி, குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுபோல கடந்த இரண்டு வாரங்களில் 16 சிறார்களை அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள், சிடிக்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்களுக்கு அந்தமானைச் ேசர்ந்த வர்கீஸ் என்பவர் நிதியுதவி செய்வதாகவும் நான்கு பேரும் போலீஸில் தெரிவித்துள்ளனர். எஸ்டேட் தொழிலாளர்களையும், அவர்களது குழந்தைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
கர்நாடகாவில், கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், மதமாற்றம் செய்வதற்காக சிறார்களை அழைத்துச் சென்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகை பயமுறுத்திய அணுவெடிப்பு சோதனை திடீர் தள்ளிவைப்பு;தொழில்நுட்ப கருவிகளில் கோளாறு
|
கர்நாடக பஜ்ரங் தளம் அமைப்பாளர் கைது
கர்நாடக பஜ்ரங் தளம் அமைப்பாளர் கைது |
பஜ்ரங் தளத்தின் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகவலை மேற்கு சரக துணை ஐ.ஜி. ஏ.எம். பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.செப்டம்பர் 15ம் தேதி, மங்களூர், உடுப்பி, சிக்மகளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இதில்,பஜ்ரங் தளம் மீது குற்றம்சாட்டப்பட்டது. தேவாலயங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு கடுமையாக எச்சரித்திருந்தது.இந்நிலையில்,அதன் மாநில அமைப்பாளர் மகேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். |
மத்திய அரசுக்கு பிஜேபி சவால்
மத்திய அரசுக்கு பிஜேபி சவால் |
கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், துணிவிருந்தால் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி பார்க்கட்டும் என்று மத்திய அரசுக்கு பிஜேபி சவால் விடுத்துள்ளது. "மத்திய அரசுக்கு துணிவிருந்தால் இன்னும் ஒருபடி மேலே சென்று அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை கர்நாடகாவில் பிரயோகம் செய்து பார்க்கட்டும். இதற்கான கடும் விளைவுகளை அவர்கள் ஏற்க வேண்டிவரும். நாட்டு மக்கள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்"என்று பிஜேபி செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் புதுடெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் வன்முறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். |
மழை:உ.பி.யில் 44 பேர் சாவு;ஒரிசாவில் 10லட்சம் பேர் பாதிப்பு
மழை:உ.பி.யில் 44 பேர் சாவு;ஒரிசாவில் 10லட்சம் பேர் பாதிப்பு |
|
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடும் மழைக்கு 44 பேர் பலியானார்கள். ஒரிசாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் வீடு மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்களும், விளம்பரப் பலகைகளும் பெயர்ந்து விழுந்ததால் மின்சார விநியோகமும், தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரிசாவில்:ஒரிசாவில் கடும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், மஹாநதி மற்றும் அதன் கிளை ஆறுகளில் 31 இடங்களில் உடைப்பு ஏற்பட்டதாலும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிராகுட் அணையின் 64 மதகுகளில் 46 மதகுகள் திறக்கப்பட்டு 6.93 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மஹாநதியில் 31 இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் கட்டக், புரி, கேந்திரபாரா,அங்குல், ஜகத்சிங்புர், ஜஜ்புர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 4 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 8 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக இதுவரை 7பேர் இறந்துள்ளதாக அரசு கூறினாலும், 13 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும், நிவாரணப் பணிகளிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் |
Subscribe to:
Posts (Atom)