சமீபத்திய பதிவுகள்

அந்நியரை ஈர்த்த அன்னைத்தமிழ் - பாகம் 1

>> Thursday, December 3, 2009

 

அந்நியரை ஈர்த்த அன்னைத்தமிழ் - பாகம் 1


tamilநீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.


தமிழ்மொழியின் வரலாற்று வீழ்ச்சியும் அதன் சீரழிவுகளும்

       "ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள். ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள். ஆம். சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது . சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும், காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றது. சிறிது, சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வியாபிக்க, தென் பகுதியில் திராவிட இனம் சிறுமை படதொடங்கியது.(அது இன்று வரை தெடர்கிறது). கழகக்காலம் வரையில் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த, நம் தாய்மொழியாகிய தூய,இனிய செந்தமிழ், அதற்குப் பின், ஆரியரின் வேதமத்தாலும், மற்ற காரணங்களாலும் தாக்குண்டு, படிபடியாய்ச் சீர்கெட்டது. தொல்காப்பியத்துள் கூறப்பெறும் வடமொழிச் சேர்ப்பு இலக்கணமும், அம் மொழி வந்து தமிழில் கலந்து வழஙகுவதற்கு வழிவகுத்ததாகவே அமையும். ஆரியரின் வேதமொழியும் வடதிரவிட மொழிகளான பிராகிருதமும் பாலியும் கலந்து செய்யப் பெற்ற சமற்கிருதமும் சமய நோக்கத்துடன் தமிழ் மொழியொடு கலக்கப்பெற்று அதைச் சீர்குலைத்தன. வேத ஆரியர்களும், தமிழ் மூல நூல்களைத் தம் மொழியாகிய சமற்கிருத்தில் பெயர்த்தெழுதித் தம் மொழிக்கு ஏற்றம் தேடிக் கொண்டு, தமிழ் மூலநூல்களை அழித்தனர். இவ்வாறு மதப் போராட்டங்களாலும், வேதமத்தின் அளவிறந்த வளர்ச்சியாலும் தமிழ்மொழி மேன்மேலும் சீரழிந்து கலப்பு மொழியாய்ப் பெருமை குன்றி வாழ வேண்டுயதாயிற்று. ஊர்ப் பெயர்களும் வடமொழியாகிய சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பெற்று வழ்க்கூன்றன. ஏராளமான வடமொழிச் சொற்கள் மக்கள் வாழ்வியலின் அன்றாடப் புழக்கத்தில் ஏறின. உரைநடை நூல்கள், செய்யுள் நூல்கள்,இசை,நாடகம் எனும் அனைத்திலும் வடமொழி ஆட்சி செலுத்தியது. களப்பிரர், பல்லவர் ஆட்சியரசுகள் வடமொழியாளர்க்கும் அவரின் வேத மதத்துக்குமே ஊக்கமளித்துப் போற்றிப் புரந்தன. மக்களுக்குள் சாதி வேறுபாடுகள் கற்பிக்கப்பெற்று, இனவொற்றுமையும் சீர்குலைக்கப்பெற்றது. அரசியல், குமகாயம், சமயம் ஆகிய முத்துறைகளிலும் பிராமணர்களின் ஆளுமை கொடிகட்டிப் பறந்தது. இந்த வீழ்ச்சி பயணம் 17ம் நூற்றாண்டு வரை தெடர்ந்து.


தரங்கை வளர்த்த தமிழியல்
தரங்கம்பாடிக் கடற்கரையில் 1706ஆம் ஆண்டு ஆனித் திங்கள் சீகன்பால்கு(Bartholomaeus Ziegenbalg) கால் வைத்த அன்றே தமிழ் வளர்ச்சி பாதையில் வீருநடை போடதுவங்கியது. இவ்வாறு கிறித்தவ மதத்திற்க்கும் தமிழியிற் கல்விக்கும் ஒரே சமயத்தில் தூதுவராக விளங்கிய அந்தப் பெருமகன் முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிவைத்த தமிழியலை நன்றியுணர்வோடு குறிப்பிட்டாக வேண்டும். என்ன செய்தார் அவர்: • தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து உலகநீதி,கொன்றைவேந்தன், நீதிவெண்பா முதலிய தமிழ் நூல்களை மொழிபெயர்த்தது • ஓலைச்சவடிகளாக இருந்த தமிழ்நூல்களைத் தேடித் தொகுத்து ஒரு நூலகத்தை நிறுவிக்ககொண்டது • தமிழ்ச் சுவடிக்களுக்கு ஒரு விளக்கப் பட்டியலை அமைத்துக்கொண்டது • தமிழைப் பயிலும்போதே அகராதிகளைத் தொகுக்கத் தொடங்கியது. • தமக்குப் பின் தமிழைக் கற்போருக்குப் பயன்படுமாறு தமிழ் இலக்கணம் ஒன்றை வரையறுத்தது. • தமிழ் மக்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கியது.இது போன்ற தமிழ் பணிகளை அவர் கணணி,வகனம்,தட்டச்சு மற்றும் சரியாக காகிதம் கூட இல்லாமல் மணலில் தமிழை எழுதிப் பழகி மேற்கண்ட பணிகளை நிறைவேற்றியது வியப்புக்குரியதேயாகும். தொலைநோக்கோடு செயலாக்கப்பட்ட இப்பணிகளின் மூலமாகத் தமிழியலுக்கு வலிவான கால்கோளை அமைத்துவிட்டதோடு தமிழியல் வரலாற்றில் புது மரபொன்றையும் அவர் உருவாக்கிவிட்டார்.இவருக்குப் பின் சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்த வால்தர்(Walther), பப்ரிலியுஸ்(Fabricius), ப்ரைடஹதுப்ட்(Breithaupt), பைஸன் ஹெர்ட்ஸ்(Beisenherx) கிரவுல்(Graul), ரெனியுஸ்(Rhenius), பைத்தான்(Beythan), ஷொமேருஸ்(Schomerus), லேமன்(Lehmann) போன்ற பேரறிஞர்களும் சீகன்பால்கின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழியலை வளர்த்தனர். இதன் விளைவாக இந்தியவியலோடு தமிழியலும் இணைந்து செயல்படத் தொடங்கியது. தொடக்காலத் தமிழியலுக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி சிரிவான நூல்களும் கட்டுரைகளும் முன்பே வெளிவந்துள்ளன. பேராசிரியர் தனிநாயக் தொகுத்து வழங்கிய 'வெளிநாடுகளில் தமிழியல்: நல்ல கட்டுரைத் தொகுதி(Xavier S.Thaninayagam, Tamil Studies Abroad: Asymposium, 1968) என்னும் நூலில் டாக்டர் ஆல்ப்ரெஹ்ட் வெட்ஸலர்(Dr.Albrecht Wetzler) டாக்டர் அரனோலேமன்( Dr.Arno Lehmann) ஆகிய இருவரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவற்றை விரிவாக் காணலாம்.

செம்மொழி
கால்டுவெல் (Rev. Robert Caldwell) அவர்களின் "திரவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்" . தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பை உணர்த்தியதுடன், தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதென்னும் தவறான கருத்தை உடைத்தெறிந்து; அஃது ஓர் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை நிலைநாட்டியது. தமிழ் ஒரு செம்மொழி என்பதை நிலை நாட்டுவதற்க்காக அவர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கால்நடை பயணமாக ஒவ்வொரு கிராம பகுதிக்கும் சென்று தமிழ் சொற்களை தொகுத்தார்(Word List ). என்னென்றால் அங்கு தான் வடமொழி சொற்கள் கலக்காத தூய தமிழ் சொற்கள் கிடைக்கும் என்று அவர் அவ்வாறு செய்தார். அவ்வாறு அவர் தொகுத்த சொற்கள் முலம் அவர் தமிழ் தனித்தியங்க வல்ல நல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுருத்தினார்.
கால்டுவெல் பற்றிய ஒரு சம்பவத்தை தங்களிடம் பகிந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த திரு.க.அன்பழகன் ஒரு முறை திருநெல்வேலிக்கு அரசாங்க அலுவல் காரியமாக வந்தார் அப்போது அவர் திருநெல்வேலிக்கு அருகில் கால்டுவெல் கடைசியாக இருந்த விட்டிற்க்கு வருகை தந்தார். அந்த நினைவு இடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கால்டுவெல் பயன்படுத்திய பொருள்களை பார்த்துக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் அங்கு இருந்த ஒருவர் கால்டுவெல் பயன்படுத்தி வந்த ஒரு படுக்கையை காண்பித்து இதில் தான் கால்டுவெல் தூங்கினார் என்று கூறினார். அதற்க்கு அன்பழகன் "கால்டுவெல்க்கு உண்மையிலே தூங்க நேரம் இருந்ததா என்ன?" . ஆம் அவருக்கு தூங்க நேரம் இருந்து இருக்காது தான். எம் மொழியை, எம்தமிழ் மொழியை செம்மொழி என இந்த தரணிக்கு உணர்த்த அவர் இரவு பகல் பாராது அயராது உழைத்தார். தமிழ் மொழியை கன்னித்தமிழ் என்பதை அவர் நிருபணம் செய்ய அவர் தம்மையே அதற்கென அர்ப்பணித்தார். தமிழ் ஒரு செம்மொழி என அறிவிக்கபட இருக்கும் இந்த நேரத்தில் கால்டுவெல் செய்த பணியை நாம் கடுகளவும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

..............தொடரும்

By Vijay

 

உங்கள் பார்வைக்கு

தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி

 tamil vowelsconsonantstamil numbers

source:www.tamilchristians.com
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உங்கள் அருகில் உளவாளி இருக்கலாம்!-டேஞ்சர் இந்தியா... டெரர் ஸ்டோரி!

உங்கள் அருகில் உளவாளி இருக்கலாம்!
டேஞ்சர் இந்தியா... டெரர் ஸ்டோரி!

ரியாக ஓர் ஆண்டு ஆகிறது- 10 தீவிரவாதிகள் மும்பையை முற்றுகையிட்ட தினம், நவம்பர் 26. தீவிரவாத முற்றுகை என்பதுகூடத் தொடர்ந்து நடப்பதுதான். ஆனால், மும்பை பக்கமே வந்து பார்க்காத அந்தப் 10 பேருக்கும் அந்த நகரத்தைப்பற்றியும் தாஜ் ஹோட்டலின் ஒவ்வொரு முனையும் தெரிந்திருந்ததுதான் அதிர்ச்சியான விஷயம். ஹோட்டலை மீட்கக் களத்தில் குதித்த போலீஸிடம் இல்லாத வரைபடங்களைக்கூட அவர்கள் வைத்திருந்தார்கள். இதையெல்லாம் திரட்டுவதற்காகத் தனி டீம் இருப்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அப்படிப்பட்ட சில உளவாளிகள் சமீபகாலமாகச் சிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் கைதாகியுள்ள டேவிட் ஹெட்லியைப் பார்த்து, இந்தியாவின் முகமே இருட்டில் உறைய ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் இதயத்தையே ஆயுதங்களால் அசைத்துப்பார்க்க அமெரிக்காவில் இருந்தபடி அத்தனை காரியங்களையும் பார்த்தவராகச் சுட்டிக்காட்டப்படும் டேவிட்டுக்கு, அங்கும் இங்கும் போய் வர எந்தச் சிக்கலும் இல்லை. அவருடைய நட்பு வட்டாரத்தில், மும்பையில் வளரும் முக்கிய பாலிவுட் புள்ளிகள் இருப்பதுதான் வேதனையான விஷயம்.

இந்திப் பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட், பாலிவுட் நடிகர்களான இம்ரான் ஹாஸ்மி மற்றும் கரண்கபூர் ஆகியோருக்கும், 'தாம்தூம்' நாயகி கங்கணா ரணாவத்துக்கும் இந்த டேவிட் ஹெட்லியுடன் தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி சந்தேகப்படுகிறது. அமெரிக்காவில் நிரந்தரமாக வசித்து வந்த அவரையும் அவரது நண்பராக இருந்த ரணாவத்தையும் முதலில் அந்நாட்டு அதிகாரிகள்தான் சந்தேகப்பட்டார்கள். ரணா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நீ யார், என்ன என்று விசாரித்தபோது, டேவிட் அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். ''தெற்கு மும்பையில் 'சியாம் நிவாஜ்' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தேன். வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி வைத்திருந்தேன். பாக். தூதரக அதிகாரிகளுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதைவைத்து அவர்களுக்குப் பல தகவல்களைத் தந்து வந்தேன். அவர்கள்தான் என்னை இங்கு அனுப்பிவைத்தார்கள்'' என்றார் டேவிட். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு, மும்பை ஹோட்டல் தாக்குதல் இரண்டுக்கும் தகவல் பரிமாற்றம் செய்த சூத்திரதாரியாக டேவிட் ஹெட்லியைச் சந்தேகப்படுகிறார்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் அந்நிய உளவாளிகளால் இந்தியா நிறைந்திருப்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது. முக்கியமான அதிகாரிகளில் ஆரம்பித்து, எதுவும் தெரியாத அப்பாவிகள் வரை உளவு பார்க்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். கறுப்பு ஆடுகளின் நடமாட்டம் கணக்கற்ற எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.

'நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் ஒருவர் வேலை பார்த்தார். அவர் அமெரிக்க உளவாளியாகச் செயல்பட்டார். இந்திய அணு ஆயுத ரகசியங்கள் ரகசியமாக அவர் மூலம் கடத்தப்பட்டன' என்று ஜஸ்வந்த் சிங் சொன்னார். இது சர்ச்சை ஆனதும் பிரதமர் மன்மோகன் சிங், 'ஆள் யார்?' என்று கேட்டார். 'தனியாக உங்களிடம் மட்டும் சொல்வேன்' என்றார் ஜஸ்வந்த். ஆனால், அதையும் கடைசி வரை சொல்லவில்லை. வெளிப்படையாகச் சொல்லி, அமெரிக்காவின் கோபத்தைத் தாங்க அவராலும் முடியாது. அதற்காக அப்படியரு ஆள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியாது. பிரதமர் அலுவலகத்தில் இருந்த தேவன் சந்த்மாலிக் என்ற அதிகாரி மீது நான்கு ஆண்டுகளுக்கு முன் திடீர் சந்தேகம் எழுந்தது. வெளிநாட்டு ஒற்றரோ என்ற சந்தேகத்தில் அவரைக் கண்காணித்தார்கள். உடனேயே அவர் தலைமறைவானார். விசாரணையில் அவர் வங்காளி என்பதும் பங்களாதேசுக்குச் சில தகவல்களைத் தொடர்ந்து அளித்த தகவலும் கிடைத்தது. 1999 முதல் 2005 வரை இந்தக் காரியங்களை எந்தச் சிரமமும் இல்லாமல் பார்த்திருக்கிறார். ரவீந்தர் சிங் என்ற அதிகாரி மீதும் இதுபோன்ற சந்தேகம் பாய்ந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அமெரிக்கா பறந்திருக்கிறார். 2002-ம் ஆண்டில் மட்டும் 12 அதிகாரிகள் மீது ரகசியங்களை விற்றதாகப் புகார்கள் பதிவானதாம். அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இஸ்ரேல், சீனா, இலங்கை ஆகிய நாடுகளும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை மையமாகக்கொண்டு இயங்கும் பயங்கரவாத இயக்கங்களும் 'எல்லா வசதிகளையும்' செய்து கொடுத்து, தனக்கான ஒற்றர்களை இந்தியா முழுவதும் உருவாக்கிவைத்து இருக்கின்றன.

தகவல் திரட்டுவதற்காகவே ஒற்றர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆபரேஷன்களில் இவர்கள் இறங்க மாட்டார்கள். சுதன் சுதாகர் என்ற ராணுவ வீரர் மீது உயர் அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திடீர் சந்தேகம் வந்தது. ராணுவத்தில் சாதாரணமான கேர்டர் சோல்ஜர்கள் மற்ற உலக விஷயங்கள் குறித்து அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால், தனக்கு மேலுள்ள அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து ஏதோ சந்தேகங்கள் கேட்பது மாதிரி பேசியபடியே இருந்தாராம். தேவை இல்லாத இடங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறார்கள். உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், நம்பிக்கைக்கு உரியவர் இல்லை என்பதால் சஸ்பெண்ட் செய்தார்கள். வேறு ஒரு தேடுதல் வேட்டையில் இவரது பெயரும் சிக்கியது. ஆளை வளைத்தது போலீஸ். அதற்குள் உஷாராகித் தப்பிவிட்டார் சுதன் சுதாகர். அவரது வீட்டில் காஷ்மீர் எல்லையில் ஏவுக¬ணைகள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் இடங்களைக் குறிக்கும் வரைபடம் இருந்தது. ஐந்து சிம் கார்டுகளைக் கைப்பற்றினார்கள். ஒரு சிம்கார்டில் நேபாள நாட்டு எண்கள் மட்டுமே இருந்தன. இதே மாதிரி தெரிந்தும் தெரியாமலும் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த வரிசையில் டெல்லி விமான நிலையத்தில் ஜாபர் என்ற சையது அமீர் அலி கைதானான். அவனிடம் மீரட் ராணுவத் தளத்தின் வரைபடம் இருந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கராச்சியில் இருந்து நேபாளம் போய் அங்கிருந்து டெல்லிக்கு வந்திருக்கிறான். லக்னோவில் ஓராண்டு தங்கியிருந்து, பின்னர் டெல்லி மானசரோவர் பூங்கா அருகில் ஒரு இன்டர்நெட் சென்டரில் டெக்னீஷியனாக வேலைக்குச் சேர்ந்து உளவு வேலை பார்த்ததாக ஒப்புக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவை சிரமம் இல்லாமல் கிடைத்துள்ளது. இதுபோன்ற ஊடுருவல் இஸ்ரோ வரை நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட உயர்மட்ட ஆட்களில் ஆரம்பித்து, கீழ்நிலை அதிகாரிகள் வரை உளவாளிகளாக எப்படிச் சிக்குகிறார்கள்? என்று சென்னைப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு மற்றும் போர் திறனியல் துறைத் தலைவர் கோபால்ஜி மால்வியாவைக் கேட்டபோது, அவர் சொல்லிய தகவல்கள் பயத்தை அதிகப்படுத்தின.

"எதிரி நாடுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உள்நாட்டில் இருந்து தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. உள்ளூர் தொடர்பு ஏதும் இன்றி இந்தப் பயங்கரவாதிகள் ஊடுருவுவது இல்லை. உள்நாட்டில் இப்படி உதவுகிறவர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுபற்றி முழுவதுமாக நமது உளவுத் துறைக்குத் தெரியவில்லை. ஆனாலும், எந்த மாதிரியான ஒத்துழைப்பு, பொருட்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நம் உளவுத் துறை கண்காணித்துக்கொண்டே வருகிறது. இந்தத் தகவல் கொடுப்பவர்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. சித்தாந்தம், மதம், மொழி போன்ற ஒற்றுமைகள், அடிப்படைவாதம் போன்றவற்றைக்கொண்டு தேர்வு செய்கின்றன. இவர்களுக்கு மூளைச்சலவை செய்து, தங்கள் செயலுக்குத் தயார்படுத்துகிறார்கள். இவற்றுக்கும் மேலாகப் பணம் முக்கியப் பங்காற்றுகிறது. இன்ஃபார்மர்களாக இருப்பதற்குப் பணம் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது.

முன்பெல்லாம் தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலானதாக, எளிதில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தகவல் பரிமாற்றமும் நவீனமாகிவிட்டது. இவர்களை லேப்டாப் டெரரிஸ்ட் என்கிறோம். அவர்களிடம் அதிநவீன செயற்கைக்கோள் போன், இன்டர்நெட், நவீன வாக்கிடாக்கி உள்ளது. இந்த நிலையில் தகவல் பரிமாற்றத்தைக் கண்டறிவது, இடைமறித்துத் தகவல்களைப் பெறுவது என்பது மிகவும் சிக்கலாகிவிட்டது.

இருப்பினும், உளவுத் துறையை நவீனப்படுத்துவதன் மூலமும், உளவுத் துறையினருக்குச் சமீபத்திய கருவிகளை வாங்கிக் கொடுப்பதன் மூலமும் இந்தத் தகவல் பரிமாற்றத்தை ஓரளவுக்குக் கண்டறியலாம். பயங்கரவாதி நவீன மெஷின்கன் வைத்திருக்கிறான், நாம் 303 ரைபிள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மும்பை தீவிரவாதச் சம்பவத்தில் பலியான கார்கரேகூட காலாவதியான புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணிந்திருந்தார். ஹெல்மெட் 18-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்தது. நம்முடைய உளவுத் துறைக்கு நிறையத் திறமை உள்ளது. அதைவைத்துப் பல தகவல்களைச் சேகரிக்கிறது. ஐ.பி, ரா, நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி, ஆர்மி இன்டெலிஜென்ஸ், நேவி இன்டெலிஜென்ஸ், மாநில உளவுத் துறை என்று நிறைய உளவு அமைப்புகள் நம்மிடம் உள்ளன. ஆனால், இவர்களுக்குள் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததும் ஒரு பிரச்னைதான். எனவே, போதுமான நவீன கருவிகள், உளவு நிறுவனங்களுக்குள் ஒருங்கிணைப்பு, உளவுத் துறையில் உள்ளவர்களுக்குப் போதுமான பயிற்சி இருந்தால் மட்டுமே இதுபோன்ற உளவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்'' என்றார்.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முதல்படி இதுபோன்ற கறுப்பு ஆடுகளைக் களை எடுப்பதுதான்!

 

source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உலக மகா பிராடுகளில் ராமலிங்க ராஜு 4ம் இடம்


 
 

Top global news update 

நியூயார்க்: உலக மகா பிராடு தொழிலதிபர்கள்  என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டதில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜுவுக்கு  நான்காவது  இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக  சமீபத்தில் கைது செய்யப்பட்ட  ராஜரத்னத்துக்கு மூன்றாவது  இடம்  கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, இந்த  ஆண்டுக்கான  மெகா மோசடி தொழிலதிபர்கள் என்று 10 பேரைப் பட்டியலிட்டுள்ளது.இந்த பட்டியலில்,  "கோல்ட்மேன் சச்ஸ்' நிறுவனத்தின் தலைவர் லாய்டு பிளாங்க்பெய்ன் முதலிடத்தில் உள்ளார். "மெரில் லின்ச்' நிறுவன மாஜி  தலைவர் ஜான் தெய்ன் இரண்டாமிடம். அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசடி, புலிகளுக்குப் பண உதவி போன்ற குற்றச்சாட்டுகளின் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த ராஜரத்னம் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை  நிறுவி, அதன் பங்குகளைத் தன் பெயரிலும் தனக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயரிலும் மாற்றி பல கோடிகளை மோசடி செய்த ராமலிங்க ராஜு,  நான்காம் இடத்தில் இருக்கிறார்.அமெரிக்கத் தொழிலதிபர் தாமஸ் பீட்டர்ஸ் ஐந்தாமிடம்; ஏ.ஐ.ஜி., நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எட்வர்ட் எம்.லிட்டி ஆறாமிடம்; "பிரைவேட் ஈக்விட்டி மேனேஜ்மென்ட் க்ரூப்' நிறுவனத்தின் தலைவர் டான்னி பாங்க் ஏழாமிடம்;  21 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட பில்லியனரி அல்லென் ஸ்டான்போர்டு எட்டாமிடம்; ஒன்பதாமிடத்தில் சி.டி.ஆர்., நிதிநிறுவனத்தின் தலைவர் டேவிட் ரூபின்; பத்தாமிடத்தில் "மொரன் யாச்ட் அண்டு ஷிப்' நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் மொரன். "பெர்னார்ட் மடோப் என்பவரை இவர்கள் பத்துப்பேரும் சேர்ந்தாலும் "பிராடு'த் தனத்தில்  வெல்ல முடியாது என்றாலும், அவர்களிடம் பேராசை, ஆணவம் இவற்றுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது' என்று போர்ப்ஸ் பத்திரிகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தாய் தூங்கிவிட்டதால் விபரீதம் பாலூட்டும்போது மூச்சு திணறி குழந்தை பலி; விமான பயணத்தில் சம்பவம்


 
 லண்டன், டிச.3-

அமெரிக்க தலைநகரம் வாஷிங்டனில் இருந்து குவைத்துக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் எகிப்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து 1 மாதமே ஆன கைக்குழந்தையுடன் பயணம் செய்தார்.
 
விமானம் பறந்து கொண்டிருந்தபோது குழந்தை பசியால் அழுதது. எனவே அவர் பாலூட்டினார். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டார்.
 
குழந்தை கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக குழந்தையை இறுக்கி அணைத்தப்படி பாலூட்டி கொண்டிருந்தார். தூங்கும் போது தன்னை அறியாமலேயே இன்னும் அதிகமாக இறுக்கி அணைத்துள்ளார்.
 
அவர் கண் விழித்து பார்த்தபோது குழந்தை மயங்கியபடி மடியில் கிடந்தது. உடனே விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்.
 
அப்போது விமானம் இங்கிலாந்து அருகே பறந்து கொண்டிருந்தது. இதனால் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்கினார்கள்.

குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்


source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்தோனேசிய ஆசாமி உயரத்தில் கின்னஸ் சாதனை


 
 

Top global news update ஜகார்த்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், உலகின் மிக உயரமான மனிதர் என, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்த விவசாயி சுல்தான் கோசன் என்பவர் தான், தற்போது உலகின் மிக  உயரமான மனிதராக உள்ளார். இவரது உயரம் 2.41 மீட்டர். இந்த உலக சாதனையை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள லாம்பங் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளியான, சுபர்வோனா(25) முறியடிக்க உள்ளார். இவரது உயரம் 2.71 மீட்டர் (8.89 அடி) என, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவின் சாதனை பதிவுத்துறை மேலாளர் நதாரி கூறியதாவது: எங்கள் குழுவினர், சுபர்வோனாவை, இந்தோனேசியாவின் மிக உயரமான மனிதராக அறிவித்துள்ளனர். இவர், இந்தோனேசியாவில் முந்தைய சாதனையாக இருந்த 2.21 மீட்டர் உயரத்தை முறியடித்துள்ளார். இவர், உலகிலேயே மிக உயரமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளோம். இவ்வாறு நதாரி கூறினார்.இதுகுறித்து சுபர்வோனா கூறுகையில்,"சில நேரங்களில் என் உயரத்தை பற்றி பெருமைப்படுகிறேன். ஆனால், அதிக உயரமாக இருப்பது சில நேரங்களில் எனக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. என்னால் சாதாரண மக்களை போல வாழ முடியவில்லை. பஸ்சில் ஏறுவது மற்றும் எனக்கு  ஏற்ற உடைகளை தேர்ந்தெடுப்பதில், மிகவும் பிரச்னை ஏற்படுகிறது' என்றார்.source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு


 


 தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!


1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
3. கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர். 
4.ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில்(MAIL)  என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL  என்பதில்HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது. 
5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore)  என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to 'more noise' என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronicsஎன்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கிNTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.
6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software  என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft  எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டுMICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது. 
7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David's Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாகYAHOO  என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP