சமீபத்திய பதிவுகள்

காங்கிரஸ்,திமுக,அதிமுக மற்றும் ஜல்லியடிக்கும் கும்பல் ஆகியோர் விரும்பாத மடல்!!!!!!

>> Friday, February 20, 2009

இனியென்ன செய்யப் போகிறோம் தமிழா?
 
இன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. புறநானூற்றிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழனின் வீரம் கொட்டிக்கிடப்பதான வரலாற்றினை நாங்கள் படித்திருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி உலகத்தின் ஒரு மூலையில் வாழ வழியின்றி எதிரியின் ஷெல்கள் பட்டு வீழ்ந்து கொண்டிருக்கிறது.

 
ஆனால் அனேக தமிழ்மக்கள் கையாலாகாத பார்வையாளர்களாய் தமது பிழைப்பை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை எழுதப்பட்ட எமது வரலாறுகளில் இப்படிப்பட்டதொரு காலகட்டம் பதிந்து வைக்கப்படவில்லை. அல்லது பதிவு செய்திருக்கப்படவில்லை.

கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த ஒரு எட்டப்பனும், சின்னமலையைக் காட்டிக்கொடுத்த ஒரு சமையல்காரனும் இன்னும் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததுண்டு. ஆனால் அவர்களெல்லாம் துரோகிகள் என்று எம் வரலாற்றாசிரியர்களால் தூற்றப்பட்டும் எம் தமிழ் மக்களால் அடையாளம் காணப்பட்டும் வந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்படி அனேக துரோகிகள் ஒருசேரவே அமையப்பெற்றதொரு காலகட்டம் எமது வரலாற்றில் பதியப்படவில்லை. அல்லது இதுவரை நடந்திருக்கவே இல்லை. காரணம், எமது மொழி தமிழ், அம்மொழிக்கு வீரனை எவ்வாறு வாழ்த்தத் தெரியுமோ அதைவிட நூறு மடங்கு துரோகியைத் தூற்றவும் தெரிந்திருந்தது.

மானமும் ,வீரமும் மறவர்க்கு அழகு என்று எம் தமிழ்ச் சான்றோர்கள் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறார்கள். அத்தகைய மறவர் படை தமக்காக விழும் சில சோற்றுப் பருக்கைகளுக்காக தமது சகோதரன் அழித்தொழிக்கப்படுகின்ற வேளையிலும் அமைதி காப்பது என்ன நியாயம்?.

பதவி என்னும் பஞ்சடைத்த காதுகள்….!

தமிழ்.. தமிழ் என்று சொல்லியே வயிறு வளர்த்த தமிழினக் காவலர்கள் இன்று பதவி சுகத்துக்காக தனது தொப்புள்கொடி உறவுகளின் கூரையைப் பிய்த்து குண்டு போடச் சொல்பவனுடைய குண்டியைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

சாதாரண தும்மல் வந்தால் கூட துடித்துப் போய்விடும் தொண்டன் இன்று உமக்கு அறுவை சிகிச்சை செய்த போதும் துடிக்கவில்லையே, ஏன் என்று கூட உரைக்கவில்லையா அல்லது நீங்கள் படுத்திருக்கும் ஆஸ்பத்திரியின் கதவுகளினூடே தமிழனின் விசும்பல் சத்தம் புகவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால் உமது காதுகள் பதவி என்னும் பஞ்சை வைத்து அடைக்கப்பட்டு விட்டமையால் எமது கேள்விகள் உங்களை எட்டாது என்னும் அவ நம்பிக்கையால் கேட்காமலே விட்டு விடுகிறோம்.

பகுத்தறிவும் , சுயமரியாதையும் பேசியே வளர்ந்த திராவிடத்தின் வழி வந்த ஒரு கட்சியின் பார்ப்பனத் தலைமையோ தமிழினத்தை அழிக்கத்துடிக்கிறது. அது அந்தத் தலைமையின் தவறேதுமில்லை. அத்தகையவர்களைத் தலைமைப் பொறுப்பில் தூக்கி வைத்த தமிழர்களின் தவறேயன்றி வேறொன்றுமில்லை.

போயஸ் தோட்டத்திலா போர்ப்பரணி??

நரம்பு புடைக்க, நெஞ்சு விம்ப ஈழத்தின் கதி பாரீர் என்று கண்ணீர் மல்கப் பேசும் புரட்சிப்புயலே உமது உரையின் வீச்சு எம் நெஞ்சைத் தொடுவது உண்மைதான். ஆனால் நீ எழுப்பும் உணர்ச்சியையும், எமது உணர்வுகளையும் நீ போயஸ் தோட்டத்தில் கொண்டு போய் அடகு வைக்கப்பார்ப்பதால் உம்மீதான நம்பிக்கையும் அற்றுப் போய் விட்டது.

பின் என்ன புலிகளை ஒழிப்போம் , ஈழத்தமிழன் எவனுமே இல்லை, எல்லோரும் இலங்கைத் தமிழன் தான் என்று போர்முரசு கொட்டும் அன்புச் சகோதரிக்கு நீ வீசும் சாமரத்தின் காற்றுப் பட்டு எங்கள் சுவாசம் இன்னும் வலுப்பெறும் என்றா நீ நினைக்கிறாய்?  மாறாக அவ்வசுத்தக் காற்றின் வீச்சம் தாங்காமல் எங்கள் மூச்சு முட்டுவதை உன்னால் உணர முடியாமல் போவதை நீ எப்போது உணரப் போகிறாய்?

உலகத்தின் அத்துணை கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டாலும் எமக்கான ஒரு குரலாய் ஒலிக்கும் மக்கள் தொலைக்காட்சியின் விழிப்புணர்வு பணியினால்தான் நாங்கள் இப்போதும் கொஞ்சமாவது நம்பிக்கையுடன் உறங்கச் செல்கிறோம். அதற்கான அனைத்து நன்றிகளையும் உங்களுக்கு தெரிவிக்கின்ற வேளையிலேதான் நாங்கள் இன்னும் தமிழின அழிப்பிற்கு தூபம் போடும் காங்கிரசுக்கு துணை நிற்கிறோம் என்று சொல்லி எங்களின் கொஞ்ச நம்பிக்கையையும் கிழித்து வீசுவது என்ன நியாயம் மருத்துவரே?

தமிழன் அழிவதில் எமக்கு விருப்பமில்லை. தமிழனை அழிக்க நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை. ராஜபக்ச வீட்டுத்தொழுவத்தில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டவே நாங்கள் டாங்கிகளைக் கொடுக்கிறோம். தூர வரும் மேகத்தின் திசையறியவே நாங்கள் ரேடார்களைக் கொடுக்கிறோம். திருடன் பொலிஸ் விளையாட்டு விளையாடத்தான் துப்பாக்கிகளைக் கொடுக்கிறோம் என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கத்துடிக்கும் காங்கிரஸு கனவான்களே! எங்கள் 3 கோடி வாக்குகளால்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதையாவது எண்ணிப் பார்த்தீர்களா?

ராஜீவின் உயிர் எவ்வகையில் மேம்பட்டது?

எங்கள் தமிழனின் உயிரும் கூட உயிர்தான். அவனுக்கும் வலிக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் குருட்டு மனச்சாட்சிக்குப் புரியுமா?

எங்கோ ராஜிவ் சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டால் மறியல் செய்யத் துடிக்கும் தமிழ்நாட்டு காங்கிரஸ் ஜல்லிகளே, இதுவரை எத்தனை தமிழ் உயிர்கள் அவமதிக்கப்பட்டிருக்கின்றன ஈழத்தில். ஒரு சிலையையும், உயிரையும் ஒன்றாகவே நீங்கள் கருதினால் கூட சிலைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய நீங்கள் ஒரு உயிருக்காக இதுவரை நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

சோனியாவின் கொடும்பாவியை எரித்துவிட்டதாக குமுறும் காங்கிரஸ்காரர்களே, அங்கே உயிருடன் தமிழன் எரித்துக் கொல்லப்படும்போது உங்கள் உள்ளம் குமுறவேயில்லையா? அப்படி குமுறவே இல்லையென்றால் நீங்கள் தமிழர்கள்தானா?

தமிழர்களாக இருந்தும் உங்கள் உள்ளத்தை தமிழனின் சாவு உலுக்கவில்லையென்றால் உங்கள் பிறப்பை நாங்கள் சந்தேகப்படுவதில் தவறேதும் உண்டா? தமிழனின் உயிர் வேண்டாம். ஆனால் அவனது  வாக்கு மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று தமிழன் தூக்கி வீசிட மாட்டான் என்று நினைத்துக்கொண்டீர்களா? அவ்வளவு முட்டாள்களா தமிழர்கள்.?

நீங்களே படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்து கொண்டு நீங்களே போராட்டங்களை யாருக்கெதிராக நடத்துகிறீர்கள் என்று கூட அறியாத மடையனா தமிழன்?

எல்லாவற்றிலும் அரசியல், எல்லா நிகழ்வுகளிலும் வாக்குவங்கி , எல்லா நேரமும் சதா தேர்தல் அரசியல் என்று குறிக்கோளிலிருக்கும் அனைத்து தமிழகக் கட்சிகளும் துரோகிகள் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது. வரலாற்றில் துரோகிகளை என்றைக்குமே ஒரு இனம் மன்னிக்கப் போவதில்லை.

பொறுத்திருங்கள், உங்களை ஒழிப்பதற்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது. காலம் உங்களுக்கெல்லாம் சரியான தண்டனை தரும். அதற்கான சாட்சியாய் நீங்கள் யாருடைய நம்பிக்கைக்காய் இப்படி நாடகமாடுகிறீர்களோ அவர்கள்தான் நிற்கப்போகிறார்கள்.

ஆயுதத்தைக் கீழே போடச்சொல்வது அநீதியில்லையா?

எதற்கு அன்று தந்தை செல்வா அமைதி வழியில் போராடினாரோ, எதற்கு தமிழர்கள் காலங்காலமாக போராடினார்களோ அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே , இன்னுஞ்சொல்லப்போனால் அக்காரணங்கள் பல மடங்கு விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. அத்தகையதொரு அமைதிப் போராட்டம் சீங்களவர்களிடமிருந்து உரிமைகளைப் பெற்றுத் தர உதவவில்லை என்ற காரணத்தினால்தான் ஈழத்தமிழர்கள் இன்று ஆயுதமேந்தினார்கள்.

நாம் எந்த ஆயுதத்தை ஏந்தவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற ஆழ்ந்த முதுமொழிக்கேற்ப சிங்கள எதிரிகளால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட தொரு ஆயுதத்தை , இன்றைக்கும் கொஞ்சமாவது தமிழர்களைப் பாதுக்காக்க முயல்கின்றதொரு ஆயுதத்தை கீழே போடு என்று எதிரியும் சொல்கிறான். தனக்குட்பட்ட விதிகளுக்குள்ளே சர்வதேசமும் அதையே சொல்கின்றது. தொப்புள் கொடி உறவுள்ள இந்தியாவும் அதையே சொல்கிறது.

அதற்கான அர்த்தம் என்ன? சிங்கள அரசு இதுகாறும் எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வையும் வைக்காததொரு சூழலில் தமிழனை மட்டும் ஆயுதத்தை கீழே போடச் சொல்வதற்கான அர்த்தம் என்ன?

நிராயுதபாணியாய் கேட்டால் நீதி கிடைக்குமா?

ஒரு போட்டி மேடையில் இருவரும் வாளேந்தியிருக்க, ஒருவனை மட்டும் வாளைக்கீழே போட்டுவிட்டு மல்லுக்கு வா, ஆனால் மற்றொருவன் ஆயுதத்தைக் கீழே போட மாட்டான், நீ காக்கத் துடிக்கும் மக்களை அழித்தொழிப்பான், நீ தடுக்கவும் கூடாது என்று சொல்வதன் மர்மம் என்ன?

தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் தரப்படும் என்றார் இயேசுபிரான். ஆனால் தட்டியும் கிடைக்கவில்லை நீதி, கேட்டும் தரப்படவில்லை நீதி. இன்று ஆயுதத்தைக் கீழே போட்டு அமைதியாய்க் கேட்டால் நீதியும் உரிமையும் கேட்டால் தரப்படும் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறது சர்வதேசம்?

போர் நிறுத்தக் காலமனைத்தையும் புலிகள் தமக்கான ஆயுதங்களை வாங்குவதையே தொழிலெனக் கொள்கிறார்கள் என்று சொல்லும் சிங்களமே, நீ மட்டும் உமது போலி பரப்புரைகளால் புலிகளைப் பயங்கரவாதிகளென்று சொல்லி அனேக நாடுகளின் கதவையும் அடைத்ததென்ன முறை?

சமமான படை வலு உள்ளதொரு சூழலில் கூட சம உரிமையை வழங்க மறுத்த நீயா புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டபின் சம உரிமை கொடுத்துக்கிழிக்கப்போகிறாய்?

அப்படிக்கொடுத்துக் கிழிக்கப் போகும் சம உரிமைக்காகவா இந்திய அரசே நீ வாய்மூடி மெளனியாக தமிழின அழிப்பிற்கு மெளன சாட்சியாக இருக்கிறாய்? சர்வதேசமே , அத்தகையதொரு அடிமைச்சாசனத்தில் கையெழுத்திடவா 70000 தமிழ் உயிர்களை இந்தப் போராட்டம் காவு கொண்டது? அப்படி அடிமையாக இருக்கத் தீர்மானித்தால் இறந்த எமது 70000 சகோதர, சகோதரிகளின் ஆத்மா தமிழினத்தைச் சபிக்காதா? அந்தச் சாபம் தமிழனின் இனிவரும் ஏழேழு பரம்பரைக்கும் நீடிக்காதா?

இன்று யாரோ சிலர் சுயநலமிகளாகவும், துரோகிகளாகவும் மாறிப்போயிருக்கலாம். இன்னும் அனேக வீர மறவர்கள் தமது இன்னுயிரைத் துறக்க தயாராக இருக்கிறார்கள். இன்று எம் தமிழ்நாட்டுத் தலைமைகள் வேண்டுமானால் பதவிக்காக சோரம் போயிருக்கலாம், ஆனால் தொலைநோக்குள்ள தலைவர் ஈழத்திற்கு இருக்கிறார். அவர் காலத்திலேயே தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைக்கும். கிடைக்க வேண்டும் என்பதே தமிழர்களின் அவா.

இன்று ஈழத்தமிழன் சிந்தும் இரத்தத்திற்கும், வீரமறவனின் வீரத்திற்கும் தகுந்ததொரு மரியாதை அந்த ஈழநாட்டில் தான் கிடைக்கும்.

இந்தியப் பேரரசின் தமிழினத் துரோகம்.!

இன்று சற்றேறக்குறைய தமிழினத்தின் 90 சத மக்களும் இந்தியப்பேரரசின் ஆளுமைக்குட்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமது உழைப்பை, அறிவினை, வரியினைக் கொடுத்து அனுதினமும் இந்தியப்பேரரசின் வல்லரசுக்கனவிற்கு தன்னலமின்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் முதன்மை மாநிலமாக, தொழில்துறையில் சிறந்த மாநிலமாக விஞ்சி நிற்கின்றது தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்கு நன்றிக்கடன்பட்டுள்ள இந்தியப் பேரரசு மறைமுகமாக தமது பிராந்திய நலன்களுக்காய் எமது சொந்தங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது. எமது தொப்புள் கொடி உறவுகளை மட்டுமல்ல, தமிழக மீனவர்களையும்தான்.

ஈழத்தை விடுங்கள். இன்றுவரை தமிழக மீனவர்களைச் சுட்டதற்காவது ஒரு கண்டனத்தை தெரிவித்ததா இந்த இந்திய அரசு? இல்லையே!  அப்படியென்றால் தமிழக மீனவர்கள் இரண்டாந்தர குடிமக்களா என்ன? இல்லை. தனக்குத்தானே யாரும் கண்டனம் தெரிவிக்க முடியுமா? ஆம், இந்தப் போரை பின்னாலிருந்து இயக்குவதே இந்தியாதானே? தமது பிராந்திய நலனுக்காக மட்டுமன்றி, தனிப்பட்ட சோனியா காந்தியின் வன்மத்திற்காக ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டதொரு இனத்தின் மீது நிகழ்த்தப்படும் போர்தான் இது.

ஊருக்கெல்லாம் காவல்காரன் என்று சொல்லிக்கொள்ளூம் அமெரிக்காவோ, இல்லை உலக அமைதிக்கான ஐ.நாவோ தெற்காசியாவில் இந்தியாவின் நிலையையே தனது நிலையாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் தனக்குரிய மிகப்பெரிய சந்தையை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் அனேக நாடுகள் இந்தியாவின் ஈழத்துக்கெதிரான இந்தப் போரில் வாய்மூடி மெளனிகளாகவே நிற்கின்றன.

எமது துரதிஷ்டம், அந்தப் பேரரசின் சொந்த விருப்புகளுக்கேற்ப நடைபெறும் ஒரு போரைத் தட்டிக்கேட்க வேண்டிய தாய்த் தமிழகத் தலைமைகள் அந்தப் பேரரசு போடும் ஓரிரு ரொட்டித்துண்டு பதவிகளுக்காக குட்டி போட்ட பூனை கணக்காய் சோனியாவின் முந்தானை பிடித்து அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த ரொட்டித்துண்டுகளுக்காக தமது வரலாற்றுக்கடமையை மறந்து அல்லது மறைத்து தமிழர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

இனியென்ன செய்ய வேண்டும் நாம்?

அத்தகைய திசை திருப்பலிருந்து தமிழகத் தமிழர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த உணர்வெழுச்சியினை திசை மாறாமல், யாரும் தமது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாமல் நமது போராட்டக் களத்தினை வென்றெடுக்க வேண்டும்.

ஈழம் தொடர்பில் எமது விருப்பு, வெறுப்பிற்கேற்பவே இந்திய அரசின் கொள்கை இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் ஒரு மத்திய அரசு அலுவலகம் கூட இங்கே இயங்க முடியாது என்ற நிலையை ஏற்படச் செய்ய வேண்டும். தமிழகத்திலேயே இருந்து கொண்டு, கூட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்தும் இலங்கைத் தூதரகம் தனது துரோகத்தை நிறுத்தும் வரை இயங்காது செய்தல் வேண்டும்.

ஒரு விமான நிலைய முற்றுகைப் போராட்டம் தாய்லாந்தில் ஒரு அரசையே மாற்ற முடியுமானால் இந்த சர்வதேசத்தின் கவனத்தைப் பெற நாம் எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற வழிவகை காணப்பட வேண்டும்.

எமது உணர்வுகளை மதிக்காத இந்திய அரசை நாம் ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்வி விண் முட்டி இடி முழக்கமாய் மாற வேண்டும். அந்த இடிமுழக்கம் டெல்லியில் இருக்கும் எவரையுமே நமது கோரிக்கையை மதிக்கும் வரை தூங்கிடாமல் செய்யும் வண்ணமிருக்க வேண்டும். பேரணிச்செய்திகளும் , மனிதச் சங்கிலியொட்டிய செய்திகளும் , ஆர்ப்பாட்டச் செய்திகளும் அவர்களின் குப்பைக் கூடைக்கு நேரடியாகச் செல்வது போல அல்லாமல் அந்த இடிமுழக்கம் இருத்தல் வேண்டும்.

ஆனால் , தமிழர்களே – ஒரே ஒரு வேண்டுகோள்!!!

நமது போராட்டத்தை இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளிடம் மட்டும் அடகு வைத்துவிடக்கூடாது. இவர்கள் நமது கோவணத்தையும் விற்று காசாக்கி விடுவார்கள். நம் மானத்தைக் காக்க மறந்த இவர்களா உரிமையைக் காக்கப்போகிறார்கள் என்று சிந்தித்துத் தெளிவோம்! தெளிவான தலைமையின் கீழ் திரள்வோம்.!

அந்தத் தலைமை யார்? யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அத்தலைமை நமது உணர்வுகளை முன்னெடுத்துச்செல்வதாக இருக்க வேண்டும். ஓட்டரசியலுக்கு பலியாகாத, தன்னலமற்ற, பொது நலமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dZj060ecGG7r3b4P9Es4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இலங்கை பொய் சொல்லுகிறது!!!!!!!பிண்ணூட்டம்

புலிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக சொல்லுவது பொய் என்று "Breaking News:தமிழீழ தேசிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களின் உடைந்த பாகங்கள்"  https://www.blogger.com/comment.g?blogID=445513404353505899&postID=5621719255067436807
 
இந்தக்கட்டுரையின் பிண்ணூட்டம் இப்படி விடயங்களை சொல்லுகிறது
 
 
 
//�தற்கொலைப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா?�

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தையும், சிங்கள அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்திய வான் புலிகள் படைப் பிரிவின் கரும்புலிகள் விமானங்களை இலக்குகளின் மீது வெற்றிகரமாக மோதவிட்டு வீரமரணமடைந்துள்ளார்கள்.

தற்கொலைப்படை தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா என புலிகள் தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புலிகள் தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலும், ஈழ மக்களுக்கு விமானத் தாக்குதல் மூலம் பெரும் துயரை விளைவித்த இலங்கை விமானப் படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தும் பொருட்டே இந்த தற்கொலைத் தாக்குதலை வான்புலிகளின் கரும்புலிகள் பிரிவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் இலங்கை ராணுவம், இந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறிக் கொள்கிறது.

விமானத் தாக்குதல் நடந்து முடிந்த முதல் 3 மணி நேரங்கள் என்ன நடந்தது என்பதே தெரியாமல், செய்திச் சேனல்களுக்கு, வாய்க்கு வந்ததையெல்லாம் செய்திகளாகக் கூறிக் கொண்டிருந்தனர் கேகலிய ரம்புக்வெலவும், உதய நாணயக்கராவும்.

இந்தத் தாக்குதல் குறித்து எந்த செய்தியும் வெளியில் கசியக் கூடாது என்றும் ராணுவம் அனுமதிக்கும் செய்திகள் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

பிறகுதான், கட்டுநாயக விமான தளம் அருகே புலிகளின் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுக் கிடந்ததாகவும், அதிலிருந்த விமான ஓட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட விமானத்திலிருந்தவர் உடல் எந்தவித காயமும் படாமல், போட்டிருந்த யூனிபார்ம் கூட கசங்காமல் காட்சி தந்தது குறிப்பிடத்தக்கது!//
 
 

StumbleUpon.com Read more...

Breaking News:தமிழீழ தேசிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களின் உடைந்த பாகங்கள்


The wreckage of the LTTE aircraft shot down near the Katunayake
airforce base- , and the parts of the wreckage of the aircraft crashed
on to the Inland Revenue Department Building, being taken away by
police officers. Pix by Pradeep Dilrukshana , Daminda Harsha
Perera and Manoj Ratnayake

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=41258

StumbleUpon.com Read more...

கொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் தொகுப்பு

கொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் தொகுப்பு
இந்த வானூர்திகளில் ஒன்று கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதியில்
சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்கா வான் படையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்று கொழும்பு கொம்பனித்

தெரு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள உள்நாட்டு
இறைவரித் திணைக்களத்தின் மீது குண்டு ஒன்றைப் போட்டுள்ளது.

இதனால் கட்டடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதுடன்,

இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 பேர் படுகாயமடைந்து கொழும்பு
தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதி ஊடாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில்

இரண்டு வானூர்திகள் கொழும்பு நகரை நோக்கிப் பிரவேசிப்பது
கற்பிட்டி பகுதியில் உள்ள கதுவீகளால் அவதானிக்கப்பட்டது.

உடனடியாகவே கொழும்பு நகரில் வானூர்தி எதிர்ப்பு பொறி

முறையைச் செயற்படுத்திய படையினர், கொழும்பு நகரில்
முழுமையாக மின்சாரத் தடையை ஏற்படுத்தினர்.

அதேவேளையில், வானை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்பட்ட அதே

வேளையில், வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வானை
நோக்கி கடுமையான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது.

இதனால் கொழும்பு நகர் இரவு சுமார் 9:20 முதல் சுமார் ஒரு மணி

நேரத்துக்குத் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருந்தது.
இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் காணப்பட்டது.

இந்தவேளையில், கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயப்

பகுதிக்குள் பிரவேசித்த விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்று
உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு வீச்சுத்
தாக்குதலை நடத்தியுள்ளது.

பாரிய சத்தத்துடன் இந்தக் குண்டு வெடித்த போது 13 மாடிகளைக் கொண்ட

இந்த பாரிய கட்டடம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. கட்டத்தின்
சிதைவுகள் வீதியில் சிதறிக்கிடக்கின்றன.

உடனடியாகவே தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும்

அப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டதாகத் தெரிகின்றது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்

பட்டவர்களில் ஒருவர் இரவு 11:30 நிமிடமளவில் சிகிச்சை
பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சம்பவத்தில் காயமடைந்த 47 பேர் இதுவரையில்

மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டுள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக
இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான்

படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்து முன்பாகவே வான்

படையின் தலைமையகம் அமைந்திருக்கின்றது.

வான் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப்

புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத்
தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத்தின்
மீது குண்டு வீழ்ந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கி கட்டடம் உட்பட பல

கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன.

சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள

படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால்
தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.


இதேவேளையில், கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதியில்
தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகளின் மற்றைய வானூர்தி
வான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்காவின்

பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான
கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வானூர்தி நிலைய பகுதியில் இருந்து புலிகளின் வானூர்தியின்
சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் வானோடியின் உடலமும் மீட்கப்
பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் தொடர்பில் அமைச்சர்
கேகலிய ரம்புக்வெல முன்னுக்குப் பின் முரணான
தகவல்களையே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இத்தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள்
எதனையும் பெறமுடியவில்லை.

இதேவேளையில், புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம்
ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக
புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர்
கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத
விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது
பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத
வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய
நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவு ஒன்றை
இன்றிரவு பிறப்பித்திருந்தது.http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

கொழும்பில் இராணுவ தலமையகம் உட்பட பல இடங்களில் வான் புலிகள் தாக்குதல்

கொழும்பில் இராணுவ தலமையகம் உட்பட பல இடங்களில் வான் புலிகள் தாக்குதல் (4 ம் கட்டம்)    

alt

(4 ம் கட்டம்) இன்று இலங்கை நேரம் இரவு 9.30 மணியளவில் கொழும்பின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இரண்டுக்கு மேற்ப்பட்ட வான் ஊர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

 

 

 

 

 
பாதுகாப்பு காரணங்களிற்காக உடனடியான மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கொழும்பு நகர் இருளில் மூழ்கியுள்ளது.
 
கொழும்பு இறைவரித் திணைக்களத்தின் மீதும், இராணுவத் தலமையகத்தின் மீதும் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமானத்தளத்தின் மீதும்  என பல இடங்களிலும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத் தலமையகம் உட்பட பல இடங்கள் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
இதனை வன்னித் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
 
இதில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கேலித்திய ரம்புகல தெரிவித்தார். இவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுள்ளதாகவும் தெரிவித்தர்.
 
கொழும்பு வான் பரப்புற்குள் விடுதலை புலிகளின் விமானங்கள் வந்தவுடன் தங்களது விமான எதிர்ப்பு சமிக்கைகள் தன்னிச்சையாக செயற்ப்பட்டதாகவும் இதனால் கொழும்பு மக்கள் பீதி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
படையினர் விமான எதிர்ப்பு தாகுதல்களை நடாத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவத்தரப்பின் ஊர்ஜிதப்படுத்தபடாத செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.  
http://www.swissmurasam.net/news/breakingnews-/12335-2009-02-20-18-06-11.html

StumbleUpon.com Read more...

புலிகளின் விமானங்கள் அதிரடி: கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல்

புலிகளின் விமானங்கள் அதிரடி: கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல்

 விடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.10 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதால்  கொழும்பு நகரில் மின்சாரம்,  தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டள்ளதாகவும் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும் கொழும்புவில் இருந்து வரும் செய்திகள், 

இலங்கை ராணுவம் புலிகள் மீது விமான தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு புலிகள் விமானங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் இந்த தாக்குதலில் கொழும்பு ராணுவ தலைமைச்செயலகம், கொழும்பு துறைமுகம் ஆகியன  தாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பு துறைமுகம், மற்றும் முக்கிய இடங்களிலிருந்து பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி பதில் தாக்குதல்  நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தால் கொழும்பு நகரமே பதட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயமே தவிர ஆயுதங்கள் அல்ல

விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயமே தவிர ஆயுதங்கள் அல்ல": விஜயகாந்த்
தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டு விட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா?" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டித்தும் அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது.

கறுப்புச்சட்டை அணிந்து இதில் கலந்து கொண்ட விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பேரணியின் முடிவில் விஜயகாந்த் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

"இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகின்றது. எமது மக்கள் இலங்கையில் நாளாந்தம் செத்து மடிகின்றனர். அதனால் எமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல.

இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சினையில் நாடகமாடி வருகின்றனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவோ, 'விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்' என்று கூறுகின்றார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும்.

விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.

அடுத்த நாட்டு பிரச்சினையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகின்றது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. எனவேதான் இதில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காண வேண்டும் என்று இந்த பேரணியை நாங்கள் நடத்துகின்றோம்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு சாதாரண சட்டக் கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன். உடனே தேர்தலுக்கு நான் பயந்து விட்டதாக கூறுகின்றனர்.
நான் என்றும் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை தொடக்கத்தில் இருந்தே கூறி வருகின்றேன். அப்படி தனித்து நிற்பதற்கு இங்கு எந்தக்கட்சிக்கும் தைரியம் இல்லை. ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த அடிப்படையில் தான் நாடாளுமன்ற தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடும் என்று நான் கூறுகின்றேன்.

தமிழர்கள் மீது இலங்கையில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனை இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி தொடர்பாகத்தான் பேசுகின்றனரே தவிர, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பெரிய கட்சிகள் என்று கூறுகின்றனர். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்றார் அவர்.

பேரணியின் நிறைவில் விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு கையளித்தனர்.
(puthinam)
http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

தமிழ் இனம் விடுதலைக்கு நம் பங்கு என்ன ? செத்து மடியும் தமிழ் இனம்.. இன்று அவர்கள் நாளை நீயும் நானும் .... 
Subject:  தமிழ் இனம் விடுதலைக்கு நம் பங்கு என்ன ? செத்து மடியும் தமிழ் இனம்.. இன்று அவர்கள் நாளை நீயும் நானும் ....
 
 
To:

 
வன்னியில் இன்று அதிகாலையிலிருந்து அகோர எறிகணைத் தாக்குதல்: 46 தமிழர்கள் படுகொலை 126 பேர் காயம்
[வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2009, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நா.சிவகுமார் (வயது 29)

க.பாலசுந்தரம் (வயது 45)

பா.பவானி (வயது 38)

சி.அனுசா (வயது 22)

தி.நளாயினி (வயது 33)

க.நாதன்லேக்கா (வயது 16)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் உடலங்களை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டு சென்ற காரணத்தினால் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

இதில் வலைஞர்மடம் சிறிலங்கா படையினர் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கிருஸ்ணபிள்ளை இசைக்கீரன் (8 மாதம்)

கிருஸ்ணபிள்ளை சயந்தன் (வயது 05)

கிருஸ்ணபிள்ளை யதுர்சன் (வயது 05)

ஆகிய மூவரும் சகோதரர்கள் ஆவர்.போ.புஸ்பலதா (வயது 07)

 ந.கமலேஸ்வரி (வயது 26)

ஜீனஸ்ரீ (வயது 19)

பு.ராமசாமி (வயது 52)

அ.நாகம்மா (வயது 61)

யோ.அந்தோனிப்பிள்ளை (வயது 65)

ச.மயூரன் (வயது 15)

இ.குமுதா (வயது 26)

வ.வசந்தரூபன் (வயது 28)

சி.ரத்தினம் (வயது 58)

கு.விஜயஸ்ரீ (வயது 28)

ச.சின்னத்தம்பி (வயது 82)

ஜெ.பிலோமினா (வயது 32)

அ.நீதினி (வயது 54)

க.இராசேந்திரன் (வயது 32)

ந.நந்தகுமாரி (வயது 30)

வ.சிவராசா (வயது 50)

க.துர்க்கா (வயது 12)

த.பாலகுமார் (வயது 28)

கு.சுரேஸ் (வயது 33)

செ.சின்னம்மா (வயது 62)

த.சூரியகுமார் (வயது 32)

கி.சேகர் (வயது 28)

அ.விவேகானந்தன் (வயது 60)

பெ.நடராசா (வயது 52)

த.சக்திவேல் (வயது 32)

பவானந்தி (வயது 32)

மா.தியாகராசா (வயது 68)

த.குகானந்தன் (வயது 36)

க.கிருஸ்ணபிள்ளை (வயது 75)

சி.பவானி (வயது 42)

க.விமல் (வயது 30)

ந.ஜெயபாலன் (வயது 30)

க.சரோசினிதெவி (வயது 39)

து.கிருபாயினி (வயது 31)

பரமேஸ்வரி (வயது 56)

செல்வரஞ்சிதம் (வயது 60)

தவதர்சன் (வயது 17)

குமுதா (வயது 10)

ஜெயரூபன் (வயது 35)

மகாலிங்கம் (வயது 55)

ஜெயந்தன் (வயது 23)

புஸ்பமாலா (வயது 64)

நிலவன் (வயது 29)

குணபாலசிங்கம் (வயது 33)

சு.சந்திரன் (வயது 26)

சி.பிறேசன் (வயது 09)

பசுமதிசுதா (வயது 26)

ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் நெக்கட் பணிப்பாளருமான திருமதி சிறீகந்தராசா சாந்தி (வயது 43) இடது காலினை இழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் உள்ள பொக்கணை பகுதி மீது இன்று காலை 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

பிந்திய 10 செய்திகள்

--
அன்புடன்,

         தமிழன்.

 
 

StumbleUpon.com Read more...

பாப் பாடகியை மிரட்டும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் இன அழிப்பு இடம்பெறுவதாக ஆங்கில பாடகி மாதங்கி கூறிய குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு
   இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு இடம்பெற்று வருவதாக பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷம் கூறிய குற்றச்சாட்டுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹேன பதிலளித்துள்ளார்.
 
மாயா ஒரு சிறந்த கலைஞர் எனவும் அவரது நலத்திற்கு தாம் வாழ்த்துவதாகவும் அவர் தவறான தகவலை வழங்கியிருக்கிறார் எனவும் தெரிவித்த பாலித கோஹேன அவருக்கு அரசியலை விட இசை துறையே  சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.athirvu.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP