சமீபத்திய பதிவுகள்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்: 5 பேர் உடல்கள் மீட்பு

>> Wednesday, September 2, 2009

 
ஐதராபாத் : ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். அவருடன் இருந்த 5 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாயமான ஹெலிகாப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ விமானபடை அதிகாரி கூறியுள்ளார்

ஐதராபாத் : ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மாயமான ஹெலிகாப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ விமானபடை அதிகாரி கூறியுள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவசர உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு ரேடியோ தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் மாயாமாகி விட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் போன் இல்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகாப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.தற்போது கர்னூலுக்கு கிழக்கே 40 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை ராணுவ ஹெலிகாப்டர்கள் சுற்றிவளைத்துள்ளன. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உள் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.எந்த நிலையில் ஹெலிகாப்டர்: தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஹெலிகாப்டர் எந்த நிலையில் உள்ளது, விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி உறுதியான தகவல் ஏதும் கூற முடியாது என்றார். ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதி மிக சிரமமான மலைப்பகுதி என்பதால் அங்கு செல்ல சிரமம் ஏற்படும் என கருதப்படுகிறது.பேரா கமாண்டர்கள் விரைவு : ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதிக்கு பேரா கமாண்டர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் ஹெலிகாப்டர் இருக்கும் பகுதியில் இறக்கி விடப்படுவார்கள். இன்னும் 20 நிமிடங்களில் அவர்கள் அங்கு செல்வார்கள் என தெரிகிறது. ஹெலிகாப்டர் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடந்த வனப்பகுதியில் இருக்கிறது.பிரதமர் அவசர ஆலோசனை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ‌‌ஹெலிகாப்டர் கண்டுபிடிக்‌கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.சோனியாவும் பங்கேற்கிறார்.இஸ்ரோ எடுத்த புகைப்படத்தில் எதுவும் சிக்கவில்லை: தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ள இஸ்ரோ 41 புகைப்படங்களை எடுத்துள்ளது. ஆனால் இதில் ராஜசேகரரெட்டி சென்ற ஹெலிகாப்டர் குறித்து எவ்வித அடையாளமும் சிக்கவில்லை. இது மேலும் கவலையை அதிகரித்தது.மக்கள் பிரார்த்தனை: 24 மணி ‌நேரமாக எவ்வித தகவலும் கிடைக்காத காரணத்தினால் மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.  ஏராளமான புதிர்கள் : அவர் பறந்து சென்ற "பெல் 430 ரக ஹெலிகாப்டர், கடந்த சிலமாதங்களுக்கு முன் ,திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை ஐதராபாத்தில் இருந்து குல்பர்க்கா விற்கு அழைத்துச் சென்றது. அப்போது சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது, ஆனால் பிரச்னை பெரிதாகவில்லை. சமீபத்தில் இந்த ஹெலிகாப்டர் முகப்பில் உள்ள பகுதியில் லேசான கீறல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பின் சீர்செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த ரக ஹெலிகாப்டரில் இரண்டு ரேடியோ தகவல் தொடர்பு சாதனம், பகல் மற்றும் இரவு நேரத்தில் பறக்க உரிய நவீன சாதனங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.அப்படி வசதிகள் இருக்கும் பட்சத்தில், ஹெலிகாப்டர் வனப்பகுதியில் தரையிறங்கியிருந்தால், உரிய சமிக்ஞைகள் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. இல்லாவிட்டால், அதிக மழைப்பொழிவு காரணமாக, மின்னல் தாக்கியதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கேரளாவில் கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல்-பரபரப்பு தகவல்கள்கேரளாவில்
கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல்
பரபரப்பு தகவல்கள்


திருவனந்தபுரம், செப்.2-

கேரளாவில் கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன

கல்லூரி மாணவிகள்

கேரளமாநிலம் பத்தனம்திட்டையில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் கடந்த சிலமாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர், கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி மேற்கண்ட 2 மாணவிகளையும் கண்டு பிடித்து ஆஜர்படுத்த கேரள போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அந்த மாணவிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையில் திருமண ஆசை காட்டி அந்த மாணவிகளை கட்டாய மதமாற்றம் செய்ய, இளைஞர்கள் சிலர் முயற்சி செய்து இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகளாக...

இதற்கிடையே இதுகுறித்து மத்திய உளவுத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர்கள் புனித போர் நடத்தினால் சொர்க்கம் கிடைக்கும் என்று அந்த மாணவிகளை மூளை சலவை செய்துள்ளதும், அதோடு சில தற்கொலை தாக்குதல் வீடியோ காட்சிகளையும் காட்டி உள்ளதும் தெரியவந்தது.

இந்த கும்பல் மாணவிகளை ஏமாற்றி காதலித்து தீவிரவாதிகளாக மாற்ற முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில போலீசார் தனிப்படை அமைத்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆந்திரா முதல் மந்திரி எங்கே?பரபரப்பு தகவல்ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தேடும் பணி இரவு முழுவதும் நடக்கும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார். காலை 8.35 மணிக்கு அவர் புறப்பட்டார். 9.35 மணி வரை ரேடார் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் சென்ற அரசு ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் வந்தது. அதன் பிறகு சிக்னல் கிடைக்வில்லை. இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.முதல்வர் எங்கே ? : காலை 9.35க்கு பிறகு ஆந்திர முதல்வருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அரசு வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. முதல்வர் எங்கே என்று ஆந்திர மாநிலம் தேடி வருகிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தரையிறங்கிருக்கலாம் என்றும் இதனால் அவர் ஏதும் பிரச்னையில் சிக்கி இருக்கலாம் என்றும் ஆந்திர ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருகின்றன. உள்துறை அமைச்சகம் கருத்து: ‌ முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ராணுவ ‌ஹெலிகாப்டரும் காணாமல் போன ஹெலிகாப்டரை ‌தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னை குறித்து ஆழமாக கவனித்து வருகிறது உள் துறை அமைச்சகம் . பிரச்னை இன்னும் முடிவுக்கு வராததால் குழப்ப நிலை நீடிக்கிறது. ஆந்திர முதல்வருடன் தலைமை செயலக அதிகாரிகள் 2 பேர் மற்றும் பைலட்கள் 2 பேரும் மாயமாகியுள்ளனர்.ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா பேட்டி : ஆந்திர நிதி அமைச்சர் ரோசய்யா அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ராஜசேகர ரெட்டி நலமாக இருக்கிறார் என நம்புகிறோம். அவரை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணியில், பெங்களூரு, செகுந்தராபாத், கிருஷ்ணபட்டணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ‌‌ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் முதல்வர் பத்திரமாக மீட்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. காட்டுப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் சென்ற விமானத்தை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் அருகில் உள்ள வன இலாக்கா அதிகாரிகளிடமோ , போலீசாரிடமோ அல்லது வருவாய் துறையினரிடமோ தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது.பத்திரிகை மற்றும் டி.வி., நிருபர்களுக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் கி‌டைத்தால் அரசுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மாயாமான சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் முதல்வரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  ஆந்திர முதல்வர் மாயமானது பற்றி காங்கிரஸ் கட்சியும் கவலை தெரிவித்துள்ளது.சோனியா கவலை : ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயமானது குறித்து காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா கவலை தெரிவித்துள்ளார்.  ஆந்திராவில் தற்போது நிலவும் நிலவரங்களை சோனியா தீவிரமாக கண்காணித்து வருவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். மேலும் அவர் ஆந்திராவில் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்றும், ரெட்டி மீண்டும் நலமுடன் திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி மற்றும் சவானை ஆந்திரா செல்லவும் சோனியா கேட்டு கொண்டுள்ளார்.உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேட்டி: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் இது குறித்து பேசுகையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் விமானம் மூலம் தேடும் பணி முடிந்துவிட்டது. வனத்துறைகளில் ராணுவ படையினர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவும் தேடும் பணி தொடர்ந்து நடக்கும் . இது வரை நல்ல தகவல் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.இஸ்ரோ உதவி  : ஆந்திர முதல்வரை தேடும் பணியில் இஸ்ரோ உதவி செய்கிறது. இதற்காக இஸ்ரோவின் சிறப்பு விமானமும் தேடும் பணியில் உதவி செய்வதற்க்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேடும் பணியில் நக்சல் ஒழிப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நன்றி:தினமலர்--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ரூ. 1 கோடியே 83 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு

ரூ. 1 கோடியே 83 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு
 

லண்டன், ஆக. 31-

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த 1980-ம் ஆண்டு ஒரு ஆடு ரூ. 1 கோடியே 17 லட்சத்துக்கு விற்கப்பட்டது.  கடந்த 24 ஆண்டுக்கும் மேலாக அது உடைக்க முடியாத உலக சாதனையாக இருந்தது.
 
கடந்த வியாழக்கிழமை ஸ்காட்டிஸ் நேஷனல் டெக்சல் சந்தையில் ஒரு ஆடு பரபரப்பாக ஏலம் விடப்பட்டது. டெவரன்வாலே என்றழைக்கப்பட்ட அந்த ஆட்டை வாங்க கடும் போட்டி நிலவியது.
 
இறுதியில் கெயர்னஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் கொடுத்து அந்த ஆட்டை வாங்கினார். உலக சந்தையில் ஒரு ஆடு இவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த ஆடு விற்பனை மூலம் அதன் உரிமையாளருக்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. ஒரு ஆடு இந்த அளவுக்கு விலை போனது டெக்சல் பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


 
 
source:maalaimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழீழப் பிரச்சனையில் இலங்கைக்கு முதல் அடி

ஜி.எஸ்.பி வணிக சலுகையை இலங்கை இழக்கவுள்ளது 

இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச் சலுகையை இலங்கை இழக்கவுள்ளது.

இலங்கையில் ஏற்றுமதிகளில் மிக முக்கியமானது ஆடை ஏற்றுமதியாகும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகை அளித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை அடுத்து இச்சலுகையை ஐ.ஒ நிறுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி மற்றும் சர்வதேச வணிக அமைச்சு, செயலாளர் ரனுக்கே கூறியுள்ளார்.

இந்த அறிக்கை ஒரு வாரத்துக்கு முன்னரே கிடைத்ததாகவும், அதில் கடந்த 25 வருட போரில் இலங்கையரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அறிக்கை மிக மோசமாக உள்ளதாகவும் ஜி.எஸ்.பி வரி இனி கிடைக்காது எனவும் அவர் மேலும் கூறினார்.

ஆனால் இந்த அறிக்கை பற்றிய கருத்துக்களை வெளியிட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெர்னாட் சவகே மறுத்து விட்டார். இது ஆரம்ப கட்ட அறிக்கை என்றும், இது இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் மறுமொழிகளையும் சேர்த்து இறுதி அறிக்கை விரைவில் வெளிவிடப்படும் என்று சவகே கூறினார்.

இவ்வாறு வரி சலுகை இழக்கப்படுமிடத்து வருடத்துக்கு 150 மில்லியன் டொலர்கள் இலங்கை அரசுக்கு நட்டமேற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கை ஒக்ரோபர் மாதத்தில் வெளிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த முடிவென்றாலும் அது மேல் முறையீடு செய்யப்ப்ட முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்:அதிர்வு

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP