|
சமீபத்திய பதிவுகள்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஜனவரியில் பதவி ஓய்வு பெறுவதற்கு முன்பாக முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஈராக் சென்று, ஈராக்கிய பிரதமருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Read more...பிரபல நடிகை, பாடகர் படுகொலை
பிரபல தெலுங்கு நடிகை பார்கவி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது காலடியில் காதலன் பிரவீன் இறந்து கிடந்தார்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நந்தி நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பார்கவி தனது தயாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் அறிந்து போலீசார் விரைந்தனர். அவரது உடலில் எட்டு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது பிணத்தின் காலடியில் ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரி ரவி வர்மா விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது பார்கவியுடன் பிணமாக கிடந்தவரின் பெயர் பிரவீன் என்று தெரிய வந்தது. மேலும்,
நெல்லூரில் இசைக்குழு நடத்தி வந்த பிரவீன், புஜ்ஜி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டிருக்கிறார்.
குண்டூர் முன்ளாள் டி.எஸ்.பி.யின் மகள் டாலியை முதல் திருமணம் கொண்ட பிரவீன் பின்னர் சுவப்னா என்ற நடிகையை இரண்டாவதுப் திருமணம் செய்திருக்கிறார். இதன் பின்னர் நடிகை பார்கவியை மூன்றாவது திருமணம் செய்திருக்கிறார் என்ற விபரங்களும் தெரியவநதுள்ளது.
விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது : பிரபாகரன் சகோதரி
விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரி விநோதினி, தனது கணவர் ராஜேந்திரனுடன் கனடாவில் வசிக்கிறார்.
கனடாவின் ரொரண்டோ நகரின் கிழக்கு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், நேஷனல் போஸ்டிற்கு தனது வாழ்க்கை குறிப்புகளை தெரிவித்துள்ளார். அப்போது, தனக்கும் இளைய சகோதரர் பிரபாகரனுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும்,
இலங்கையை விட்டு கனடாவிற்கு புலம் பெயர்ந்த பிறகு வீட்டினருடன் தொடர்பு வைத்துக்கொண்டேன். சகோதரருடன் மட்டும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.என் அப்பா ஒரு காரியத்தை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டார்.
அதே போல்தான் சகோதரர் பிரபாகரனும். தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரிலிருந்து விலக மாட்டார். அவரை வெகு சீக்கிரத்தில் கொல்லப்போவதாக இலங்கை ராணுவம் கூறி வருகிறது. அவர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். அவ்வளவு சீக்கிரத்தில் அவரை கைது செய்ய முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.