சமீபத்திய பதிவுகள்

கூகுளின் புதிய அவதாரம் - Buzz

>> Sunday, February 28, 2010

  

 ஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டன. ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர். இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது. Twitter, FaceBook, Friendfeed  என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள். இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால்,http://www.google.com/buzz முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் "Buzz" என ஒரு பட்டன் காட்டப்படும். இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம். இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் "Buzz" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம். குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிலி நாட்டு பூகம்ப பலி 300 ஆக உயர்வு, கோடிகளில் நஷ்டம் : ஜப்பான், ரஷ்ய தீவுகளில் சுனாமி பாதிப்பு

 Top global news updateசான்டியாகோ : சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. பூகம்பத்தைத் தொடர்ந்து, பசிபிக் கடல் பகுதியில் உள்ள பல நாடுகளை சுனாமி தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதுவரை 300 பேர் பலியாகியுள்ளதாக, சிலி அரசு தெரிவித்துள்ளது. பூகம்பத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் காணப்படுவதால், மக்கள் தெருக்களிலேயே தங்கியுள்ளனர். தண்ணீர் மற்றும் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது.சுனாமியால் பாதிப்பு : பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டதால், துறைமுக நகரமான டால்கா ஹுயானோவில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் எல்லாம் தூக்கி வீசப்பட்டு, நகரின் பிரதான சாலைகளில் கவிழ்ந்து கிடக்கின்றன. துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த  ஏராளமான கன்டெய்னர்கள், ராட்சத அலைகளால் நகரத்துக்குள் அடித்து வரப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. சிலி நாட்டில் தாமிர சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இதனால், செப்பு உலோக உற்பத்திக்கு இந்த நாடு  புகழ் பெற்றது. இந்த பூகம்பத்தால், பல சுரங்கங்கள் சேதமடைந்து விட்டன. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கைதிகள் தப்பி ஓட்டம் : சான்டியாகோ நகரில் உள்ள மத்திய சிறை, பூகம்பத்தால் சேதமடைந்ததால் சிறையில் இருந்த 269 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 28 கைதிகளை மீண்டும் கைது செய்துள்ளனர். "தற்போதைய நிலவரப்படி சிலியில் உள்ள 15 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் இந்த பூகம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் பேர்  பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, சிலி அதிபர் மிச்சேல் பேச்லெட் தெரிவித்துள்ளார். கன்செப்ஷன் நகரில் உள்ள 15 அடுக்கு கட்டடம், பூகம்பத்தால் தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. சிலியில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி நாளை பார்வையிடுகிறார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, உடனடியாக 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை அளிப்பதாக தெரிவித்துள்ளது.ரஷ்யாவை தாக்கிய சுனாமி : பசிபிக் கடலில் ஏற்பட்ட சுனாமியால் சிலி மட்டுமல்லாது ஜப்பான் ரஷ்யா நாடுகளும், அமெரிக்காவின் ஹவாய் தீவும் பாதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். நியூசிலாந்தின் சதம் என்ற தீவை சுனாமி அலைகள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டன.ஜப்பானின் ஹொகைடோ பகுதியில் உள்ள ஒகினாவா கடற்கரை பகுதியில்  சுனாமி காரணமாக கடலில் 10 அடி உயரத்துக்கு அலைகள் சீறி எழுந்தன. இதனால், இந்த கடற்கரை அருகே வசித்த மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சில பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
மினாமிடோரி என்ற சிறிய தீவு தான் சுனாமியால் நேரடி தாக்குதலுக்குள்ளானது. 30 செ.மீ., அளவுக்கு இந்த தீவில் சுனாமி பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ரஷ்யாவில் குரில் தீவு, சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மக்கள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வேர்டு: நெட்டு பத்திகளை சமப்படுத்த

 
 

 வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், செய்தித் தாள்களில் நாம் பார்ப்பது போல நெட்டு பத்திகளை (Columns)  அமைப்பது மிக எளிது. டாகுமெண்ட் அமைத்த பின், ஸ்டாண்டர்ட் டூல் பாரில் சென்று Columns என்ற ஐகானில் கிளிக் செய்திட்டால், உடனே பத்திகள் எத்தனை இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க சிறிய படம் காட்டப்படும். அதில் மவுஸின் அம்புக் குறி எடுத்துச் சென்றால், எத்தனை பத்திகள் என்பது காட்டப்படும். நம் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் அத்தனை பத்திகளில், அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட் அமைக்கப்படும். (இந்த நெட்டு பத்தி அமைக்கும் டூல்,வேர்ட் 2007 தொகுப்பில் Page Setup குரூப்பில் Page Layout டேப்பில் கிடைக்கும்.)
ஆனால் இதில் என்ன சிரமம் என்றால், உள்ள டெக்ஸ்ட்டை பல பத்திகளிடையே சரியாக, சமமாக அமைப்பதுதான். இந்த பத்திகள் எப்படி அமைக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இங்கு வேர்ட் என்ன செய்கிறது என்றால், முதல் நெட்டு (First Column) பத்தியில் டெக்ஸ்ட்டை அமைக்கும். பின் மீதமுள்ள டெக்ஸ்ட்டை இரண்டாவது, மூன்றாவது பத்திகளில் அமைக்கும். அதாவது முதல் பத்தி மிக நீளமாக அமைந்து, அது முழுவதும் டெக்ஸ்ட் அமைக்கப்படும். அடுத்த பத்தியில் மீதமுள்ள டெக்ஸ்ட் முழுவதும் அமைக்கப்படும். இதனால் இணையாக, சமமாக இந்த பத்திகள் அமையாது. அவ்வாறு சமமாக அமைக்க இரண்டு வழிகள் உள்ளன.
1. முதலாவதாக ஒரு Column break ஒன்றை உருவாக்குவது. இதற்கு Insert  சென்று அதில்Break என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். சிறிய விண்டோவில் Column break  உருவாக்க உள்ள பிரிவில் கிளிக் செய்திடவும்.
2. இரண்டாவதாக Continuous Section break  ஒன்றை ஏற்படுத்துவது. இதற்கும் முன்பு சுட்டிக் காட்டியது போல Insert சென்று அதில் Break என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். சிறிய விண்டோவில்Section break உருவாக்க உள்ள பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த பிரிவுகளில்Continuous என்பதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்களாக டெக்ஸ்ட்டைச் சுருக்கி, விரித்து இரு பத்திகளில் சமப்படுத்தலாம். இருப்பினும் காலம் பிரேக் அங்கே காட்டப்படும். இதனை நீக்க நீங்கள் விரும்பலாம். மீண்டும் ஸ்டாண்டர்ட் டூல் பாரில் Show/Hide என்பதில் கிளிக் செய்திடலாம். செக்ஷன் பிரேக் ஈக்குவல் சைன் வரிசையாக அமைத்தது போல காட்சி அளிக்கும். இதனை ஹைலைட் செய்து டெலீட் பட்டனை அழுத்தினால், கோடு மறைந்து போகும். மேற்காணும் இரு வழிகள் வழியாக, நீங்கள் விரும்பும் வகையில் டெக்ஸ்ட்டை சமப்படுத்தி வைத்து சரி செய்திடலாம்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி

>> Saturday, February 27, 2010


An Important Issue: MUST READ

Politics is not a SERVICE anymore but a PROFESSION!! !


An Important Issue!

Salary & Govt. Concessions for a Member of Parliament (MP) 

Monthly Salary :
 Rs. 12,000/- 

Expense for Constitution per month : 
Rs. 10,000/-

Office expenditure per month : 
Rs. 14,000/- 

Traveling concession (Rs. 8 per km) :
 Rs. 48,000/-

(eg. For a visit from South India to Delhi & return : 6000 km) 

Daily DA TA during parliament meets :
 Rs. 500/day 

Charge for 1 class (A/C) in train :
 Free (For any number of times) 
(All over India )
 

Charge for Business Class in flights :
 Free for 40 trips / year (With wife or P.A.) 

Rent for MP hostel at 
Delhi : Free.

Electricity
 costs at home : Free up to 50,000 units..

Local phone call charge :
 Free up to 1, 70,000 calls.. 

TOTAL expense for a MP 
[having no qualification] per year : Rs.32, 00,000/-

[i..e. 2.66 lakh/month] 
TOTAL expense for 5 years :
 Rs. 1, 60, 00,000/-

For 534 MPs, the expense for 5 years : 
Rs. 8,54,40,00,000/ -

(Nearly 855 crores) 
AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES.... . 
This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities. ........ 
And this is the present condition of our country :
 
 


855 crores could make their lives livable!!
 
Think of the great democracy we have

&

FORWARD

THIS MESSAGE TO ALL REAL CITIZENS OF INDIA !!
ARE YOU?
I know hitting the Delete button is easier...but....try to press the Fwdbutton & make people aware!


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP