சமீபத்திய பதிவுகள்

மீரட்டில் குண்டுவெடிப்பு:5பேர் பலி (பட இணைப்பு)

>> Sunday, November 9, 2008

மீரட்டில் குண்டுவெடிப்பு:5பேர் பலி (பட இணைப்பு)
திகதி : Saturday, 08 Nov 2008, [Sindhu]
lankasri.comஉத்தரப்பிரதேசத்தில் மீரட் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5பேர் உயிரிழந்தனர்.மீரட்டின் ஜாகீர் நகர் என்ற இடத்தில் உள்ள பெங்காலி பஸ்தி பகுதியில் இன்று மாலை இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.குப்பைத் தொட்டியில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பில் 5பேர் உயிரிழந்ததாகவும் 6பேர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.போலீஸசாருக்கு முன்னர் அப்பகுதிக்கு வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும்,பொதுமக்களும் இணைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் நிகழ்ந்த மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் ராம் பாபு என்பவர் கூறும் போது,"கடையில் வழக்கம் போல பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.அப்போது திடீரென பயங்கரமான வெடிச்சப்தம் கேட்டது.நான் கீழே விழுந்து விட்டேன்.எழுந்து பார்த்த போது பலர் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தனர்" என்று தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கு தீவிரவாத நடவடிக்கை காரணமல்லகழிவுப் பொருள்களுடன்,வெடிக்கும் தன்மையுடைய ராணுவ பீரங்கி குண்டு எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வேறு பீரங்கி குண்டுகள் ஏதும் அப்பகுதியில் உள்ளதா என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர் என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பி.கே.ராமசாஸ்திரி தெரிவித்தார்.

எனினும்,குண்டுவெடிப்பு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்திருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 
lankasri.com

lankasri.com

lankasri.com

lankasri.com

lankasri.com

 

 

StumbleUpon.com Read more...

இந்தோனேசியாவில் பாலி குண்டுவெடிப்பு குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றம்

 
 
lankasri.comபாலி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மூன்று பேரின் மரண தண்டனை இந்தோனேசியாவில் இன்று நிறைவேற்றப்பட்டது.ஜெமா இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த இமாம் சாமுத்ரா,முஹ்லாஸ் மற்றும் அம்ரோஸி ஆகியோரின் மரண தண்டனை மத்திய ஜாவாவில் உள்ள நுஸகம்பாங்கன் தீவில் இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது.

இதனை இந்தோனேசிய அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜஸ்மன் பாஞ்ஜய்தன் தெரிவித்தார்.

இதனிடையே பாலி குண்டுவெடிப்பு குற்றவாளிகளின் மரண நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது ஆதரவாளர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2002-ஆம் ஆண்டு பாலித் தீவில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 88-ஆஸ்திரேலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

 

 

StumbleUpon.com Read more...

அறிமுக டெஸ்டிலேயே 8விக்கெட் வீழ்த்தி கிரெஜ்சா சாதனை

 
lankasri.comஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் (ஆப்-ஸ்பின்னர்) 25வயதான ஜேசன் கிரெஜ்சா தனது முதல் சர்வதேச டெஸ்டிலேயே பிரமிக்க வைத்திருக்கிறார்.இந்தியாவின் நேற்றைய 5விக்கெட்டுகளையும் சாய்த்த அவர் முதல் இன்னிங்சில் 43.5ஓவர்கள் பந்து வீசி 215ரன்கள் விட்டுகொடுத்து 8விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக டெஸ்டின் முதல் இன்னிங்சிலேயே 8விக்கெட்டுகளை அள்ளிய 6-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஆல்பர்ட் திரோட் (8-43, இங்கிலாந்து எதிராக,அடிலெய்டு,1895),ஆஸ்திரேலியாவின் பாப் மஸ்சி (8-53, இங்கிலாந்து எதிராக, லார்ட்ஸ்,1972),இந்தியாவின் நரேந்திர ஹிர்வானி (8-61,வெஸ்ட் இண்டீஸ் எதிராக,சென்னை,1988),தென்ஆப்பிரிக்காவின் குளுஸ்னர் (8-64,இந்தியா எதிராக,கொல்கத்தா,1996),வெஸ்ட் இண்டீசின் அல்ப் வாலட்டின் (8-104,இங்கிலாந்து எதிராக,மான்செஸ்டர் 1950) ஆகியோர் தங்களது முதல் இன்னிங்சிலேயே 8விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்கள்.இதில் பாப் மஸ்சி,ஹிர்வானி ஆகியோர் 2-வது இன்னிங்சிலும் 8விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

கிரெஜ்சா ஒரு பக்கம் அற்புதம் நிகழ்த்தி இருந்தாலும்,மறுபுறம் மோசமான சாதனைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.அதாவது அறிமுக இன்னிங்சிலேயே அதிக ரன்களை (215 ரன்கள்) வாரி வழங்கியவர் கிரெஜ்சா தான்.இதற்கு முன்பு அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓமரி பேங்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2003-ம் ஆண்டு) தனது முதல் இன்னிங்சில் 3விக்கெட்டுகள் எடுத்து 204 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

கிரெஜ்சாவுக்கு முதல் 3டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. காரணம்,டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஐதராபாத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவர் 199ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.இதனால் அவர் மீது ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்துக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை.அதே சமயம் முதல் 3 டெஸ்டிலும் சேர்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் கேமரூன் ஒயிட் சோபிக்கவில்லை.இதனால் முக்கியமான இந்த போட்டிக்கு அழைக்கப்பட்ட கிரெஜ்சா,முதல் டெஸ்டிலேயே எல்லோரது கவனத்தையும் கவர்ந்து விட்டார்.

ஹர்பஜன்சிங் 300

இந்திய சுழற்பந்து வீச்சாளர் 28வயதான ஹர்பஜன்சிங் நேற்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங்கை 10-வது முறையாக தனது பந்து வீச்சில் ஆட்டம் இழக்கச் செய்தார்.இது ஹர்பஜன்சிங்கின் 300-வது விக்கெட்டாக அமைந்தது மேலும் சிறப்புக்குரியதாகும்.இந்திய மண்ணில் மட்டும் 200விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.

தனது 72-வது டெஸ்டில் விளையாடி வரும் ஹர்பஜன்சிங்,கும்பிளே (619 விக்கெட்,132 டெஸ்ட்),கபில்தேவ் (434 விக்கெட்,131 டெஸ்ட்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 300 விக்கெட் மைல்கல்லை எட்டிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.மேலும் உலக அரங்கில் இச்சிறப்பை பெற்ற 22-வது வீரர் ஆவார்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1226156586&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

களத்தில் கங்குலியுடன் வங்கமொழியில் பேசினால் "டென்ஷன்" பறக்கும்:உணர்ச்சி பொங்க சச்சின்

 
lankasri.com"ஓய்வு பெறும் கங்குலியை நிச்சயமாக "மிஸ்" பண்ணுவேன்.களத்தில் நெருக்கடியான நேரங்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வோம். அவருடன் வங்கமொழியில் தட்டுத் தடுமாறி பேசுவேன்.அப்போது "டென்ஷன்" பறந்து போய் "ரிலாக்சான" சூழ்நிலை ஏற்படும்," என சச்சின் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா,ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடக்கிறது.முதல் இன்னிங் சில் சச்சின்(109),கங்குலி(85) இணைந்து,இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ஓய்வு இல்லை:டெஸ்ட் அரங்கில் 40வது சதம் அடித்த சச்சின் ஓய்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என உறுதியாக தெரிவித்தார்.

இது குறித்து சச்சின் அளித்த பேட்டி:நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்.தற்போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை.நான் நிகழ்காலத்தை மட்டும் சிந்திப்பவன். அடுத்த நான்கு அல்லது 6 ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறேன் என்பதற்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது.

ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தால்,உடனடியாக அனைவருக்கும் தெரிவிப்பேன்.இது பரபரப்பான செய்தியாக இருக்கும் என்பதை அறிவேன்.ஆனாலும் தவறான செய்தி அல்ல என்பதால்,யாரிடமும் மறைக்க வேண்டியதில்லை.இப்போட்டியுடன் கங்குலி ஓய்வு பெறுவது வருத்தமான விஷயம்.அவருடன் இணைந்து பேட் செய்வது "ஸ்பெஷல்" அனுபவம்.இக்கட்டான நேரங்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவரை பார்த்து கொள்வோம்.இது போன்ற தருணங்களில் 100சதவீத கவனம் செலுத்த வேண்டும்.

அதிக கவனம் தேவைப்படாதபட்சத்தில் "ரிலாக்சாக"இருக்க வேண்டும்.இதனை உணர்ந்து சரியோ,தவறோ,எனக்கு தெரிந்த வங்கமொழியில் கங்குலியுடன் பேசுவேன்.அப்போது இறுக்கமான நிலை மாறி"ரிலாக்சான" சூழல் ஏற்படும். பின்னர் இருவரும் இயல் பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.12ஆண்டு காலம் இருவரும் விளையாடியுள்ளோம். வரும் போட்டிகளில் கங்குலியை நிச்சயமாக "மிஸ்" பண்ணுவேன்.

ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி:எனது 19ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு கேப்டன்களை சந்தித்துள்ளேன்.அனைவரிடமும் வித்தியாசமான அணுகுமுறையை காணலாம்.ராகுல் டிராவிட் எப்போதும் "சீரியசாக"இருப்பார்.ஆட்டத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துவார்."டிரஸ்சிங் ரூமில்"கூட அமைதி நிலவ வேண்டுமென விரும்புவார். எனது 16 வயதில் ஸ்ரீகாந்த் தலைமையில் தான் முதன் முதலாக விளையாடினேன்.

அப்போது வீரர்கள் "டென்ஷனாக" இருந்தால்,"ஜோக்" அடித்து கலகலப்பான நிலைமையை ஏற்படுத்துவார். தற்போது எனக்கு 35வயதாகிறது.இப்போதும் ஸ்ரீகாந்த் என்னிடம் "ஜோக்"அடிப்பது உண்டு.ஸ்ரீகாந்தை போல கங்குலியும் "ஜாலியான" வீரர்.அவ்வப்போது நகைச்சுவையாக பேசி,வீரர்கள் மத்தியில் காணப்படும் நெருக்கடியை போக்குவார். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

2011 உலக கோப்பை?:இந்திய துணை கண்டத்தில் வரும் 2011ல் நடக்க உள்ள உலக கோப்பை போட்டியில் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவிக்க சச்சின் மறுத்தார்.இவர் கூறுகையில்,"அடுத்து விளையாட உள்ள போட்டியை பற்றி தான் முதலில் சிந்திப்பேன்.2011,உலக கோப்பை போட்டிக்கு சுமார் 900நாட்கள் உள்ளன.தற்போதைக்கு நாக்பூர் டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்," என்றார்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1226157315&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

வெள்ளை மாளிகையின் கணினிகளில் வைரஸ் தாக்குதல்

 
 
lankasri.comஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள கணினிகளை சீனாவைச் சேர்ந்த இணையதளக் குற்றவாளிகள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இணையதள இணைப்பு மூலம் வெள்ளை மாளிகை கணினிகளில் உள்ள பல்வேறு தகவல்களை அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும்,அரசு அதிகாரிகள் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களையும் அவர்கள் திருடியுள்ளனர்.

இதனிடையே,இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பது சற்று கடினம் என்று மென்பொருள் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"தி பைனான்சியல் டைம்ஸ்"உள்ளிட்ட பல்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226246958&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

காஞ்சீபுரத்தில் ஆர்.எஸ்.எஸ்.முகாமை எதிர்த்து கலவரம்

 
 
lankasri.comகாஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை கிராமத்தில் பாரதிதாசன் மெட்ரிக்கு லேஷன் பள்ளி உள்ளது.இங்கு 3,500மாணவர்கள் படிக்கிறார்கள்.நேற்று விடுமுறை என்பதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது.

மேலும் பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 2நாள் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் தொடங்கியது.இந்த முகாமில் பங்கேற்க 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் வந்திருந்தனர்.

பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ்.முகாம் நடத்த அந்த பகுதியைச் சேர்ந்த கம்念2985;ிஸ்டு,விடுதலை சிறுத்தைகள்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்கள் காலை 10மணிக்கு பள்ளி முன்பு திரண்டனர்.பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் ஆர்.எஸ்.எஸ்.முகாம் நடத்த எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள்,இந்து முன்னணியினர்,பாரதீய ஜனதா தொண்டர்கள் வந்து எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள்.அவர்களுக்கு எதிராக கம்யூனிஸ்டு நிர்வாகிகள் முத்துக் குமார்,ஜீவா,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் நாராயணன்,ஒன்றிய செயலாளர் டேவிட் மற்றும் முஸ்லிம் முன்னேற்ற பிரமுகர்கள் எதிர்ப்பு கோஷம் போட்டனர்.

இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் போட்டதால் திடீரென மோதல் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மீது கல் வீசப்பட்டதுஆவேசம் அடைந்த அவர்கள் தடிகளுடன் ஓடி வந்து கல்வீசியவர்களை சரமாரியாக தாக்கினார்கள்.இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள்.அங்கு அடிதடி கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார்,கமலநாதன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த டேவிட்,நாராயணன்,வெங்கடேசன்,முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாஷா,ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜா,ராகவன் உள்ளிட்ட 14பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் 9பேர் சிகிச்சை பெற்று திரும் பினார்கள்.மற்ற 5பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கலவரத்தை பார்த்து பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கலவரம் பற்றி கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர்.போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளை போலீசார் பாதுகாப்புடன் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பள்ளி நிர்வாகி அருண் குமாரை போலீஸ் அதிகாரிகள் அழைத்து ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை உடனே வெளியேற்றும்படி கூறினார்கள்.

இதற்கிடையே பயிற்சி முகாமுக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மீதும்,அதற்கு இடம் கொடுத்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்குள்ள அம்பேத்கார் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன்,துணை செயலாளர் அம்பேத்கர்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள்.இந்த கலவரத்தால் ஓரிக்கை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.பாதுகாப்புக்காக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் குறித்து கம்யூனிஸ்டு நிர்வாகி நாராயணசாமி கூறும்போது,"மதவெறியை தூண்டும் வகையில் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முகாம் நடத்த ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அனுமதி அளித்தது தவறு.இனி மீண்டும் அனுமதி அளித்தால் எங்கள் போராட்டம் தொடரும்.

எங்கள் கட்சியினர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து காஞ்சீபுரத்தில் 10-ந்தேதி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்றார்.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ராஜன் கண்ணன் கூறுகையில்,"ஆண்டு தோறும் நடக்கும் கூட்டம் தான் இது.இதை எதிர்த்து கம்யூனிஸ்டு,விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து கல்வீசி தாக்கினர்.இதிலிருந்து எங்களை காப்பாற்றிய போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP