சமீபத்திய பதிவுகள்

தமிழீழம் அமைக்க வாழ்த்து சொல்லுமா இந்தியா?!!

>> Friday, May 22, 2009

StumbleUpon.com Read more...

மக்கள் தொலைக்காட்சி,மேதகு பிரபாகரன்,கலைஞர் கருணாநிதி,குடும்ப அரசியல்

StumbleUpon.com Read more...

நிலைகுலைய ஒன்றுமில்லை... நிமிர்ந்து நட... விடுதலை!

 

 

நிலைகுலைய ஒன்றுமில்லை... நிமிர்ந்து நட... விடுதலை!

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகத்துயர் படிந்த தருணத்தில்  ஈழத்தமிழினம் தற்போது தவித்து நிற்கின்றது. தமிழர் அனைவரினது முகத்திலும் சோகத்தினையும், இழப்புகளாலான துயரத்தினையும் தவிர வேறெதையும் காண முடியவில்லை.

இதுவரை காலமும் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த நிலங்கள் இராணுவத்தினால் முற்றுமுழுதாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற மாயத் தோற்றப்பாடு ஒன்றினை உருவாக்குவதில் சிங்களம் மும்முரமாக முனைந்துவருகின்றது. அதற்கு திட்டம் வகுத்துக் கொடுப்பதில் இந்தியாவும் அதன் உளவுப்பிரிவான றோ அமைப்பும் தாராளமாக  ஒத்துழைக்கின்றன.

    புலிகளையும் அவர்களினது போராட்டத்தினையும் ஒழித்துவிட்டோம் எனக் கூறும் வல்லாதிக்க சக்திகளின் அடுத்த இலக்காக புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியில் தன் நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழந்துவரும் சிங்கள அரசு , புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களின்  போராட்டங்களை முடக்குவதற்கு பல வழிகளிலும் முயன்று வருகிறது. தமிழர்களின் மனவுறுதியை குழப்புவதற்காக,  தமிழீழத் தேசியத் தலைவர் தம்மால் கொல்லப்பட்டுவிட்டதாக ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டிருந்தது சிங்கள அரசு. அதைக் கேள்வியுற்று முதலில் தமிழினம் கலங்கித்தான் போனது. உலகம் பூராவுமுள்ள தமிழின உணர்வாளர்கள் எல்லோருமே ஒருகணம் திகைத்துப் போனார்கள். ஆனால் பொய்மைகள் நெடுங்காலம் நிலைக்காது எனும் விதமாய் உண்மைகள் உடனடியாகவே வெளிவரத் தொடங்கின.

சில தளபதிகளை உண்மையிலேயே இழந்திருந்தாலும் தேசியத் தலைவரும், அவருடன் முக்கியமான பல தளபதிகளும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்ற செய்தி தமிழர்கள் எல்லோருக்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றது.

    உலகம் பூராவும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரிடமும் ஈழ தேசத்தின் விடுதலைக்காக போராடவேண்டிய வரலாற்றுக் கடமை கையளிக்கப்பட்டிருக்கின்றது. இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டம் முடிவுற்றுவிட்டதான தோற்றப்பாடு காணப்பட்டாலும் அதில் உண்மையில்லை என்பதே உண்மை. போராட்டத்திற்கான களம் மாறியிருக்கின்றது.போராட்ட முறைமை மாறியிருக்கின்றது.ஆனால் இலட்சியம் ஒன்றுதான்.தனித் தமிழீழ தேசம்  என்ற  அதே இலட்சியம்தான். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்டத்துக்கான இலட்சியம் ஒருபோதும் மாறாது.

    பல ஆண்டு காலமாய் கஷ்டப்பட்டு முப்படைகளோடும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத்தின் படைக்கட்டமைப்பு சிதைக்கப்பட்டுவிட்டதை நினைத்து, தமிழர்கள் எல்லோரும் கவலைப்படுகின்றார்கள் என்பதனை கண்கூடாக காண முடிகின்றது. புலிகள் தரப்பின் ஆயுதங்கள் சர்வதேசத்தரப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க தற்காலிகமாக கீழே வைக்கப்பட்டுள்ளதே தவிர, நிரந்தரமாய் கைவிடப்படவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.சர்வதேசமும் தமிழருக்கான நியாயமான தீர்வைத் பெற்றுத்தரத் தவறுமானால் மீண்டும் ஆயுதங்களை கையில் எடுக்கத் தமிழர் தரப்பு தயங்காது என்பதும் எதிர்கால யதார்த்தம்.

    சர்வதேசம் நோக்கி இவ்வளவு நாட்களாய் பற்பல வழிகளில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள்கூட வன்னியில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழுறவுகளை காப்பாற்றத் தவறிவிட்டன. அதற்கு முதன்முதற் காரணம், ஒன்றுக்குமே உதவாத அறிக்கைகளோடு நின்றுவிட்ட சர்வதேசத்தின் கையாலாகாத்தனம்தான். அழிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தினை காக்கும் பொறுப்பிலிருந்து சர்வதேசம் தவறிவிட்டது. எவ்வளவோ வேண்டுகோள்கள் விடப்பட்டும் பயனில்லாமல் போனது. ஐ.நா சபை கூட தமிழரைக் காப்பாற்றப் பின்னடித்தது கவலைக்குரிய விடயமே. சர்வதேசம் எல்லாமே கூட்டுச்சேர்ந்து ஈழத்தமிழினத்துக்கு துரோகமிழைத்திருக்கின்றது. அதிலும் இந்தியாவின் துரோகத்தனத்தினை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. ஈழத்தின் அழிவுக்கு  அது நேரடியாவே துணைபோனது. தேர்தலினால் தன்னும் ஆட்சிமாற்றம் வந்து அதன் மூலமாவது ஏதாவது மாற்றங்கள் வருமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இனிமேல்,இந்தியாவை நம்பி எந்தப் பிரயோசனமுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. சர்வதேச நாடுகளும் தமிழரை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்குரிய காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

தமிழருக்கென்று இருந்த ஒரேகுரலான விடுதலைப் புலிகளின் குரலும் அடக்கப்பட்டு  விட்டதாக  எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும்,
தற்போதைய நிலைமையில், தமிழர் தரப்பிடமிருந்து சர்வதேசத்திற்கான இறுதிச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.
   
    சிங்கள அரசு ஒருபோதும் தமிழருக்கான நியாயமான தீர்வை தரப்போவதில்லை. போர்முடிந்ததும் தமிழருக்கான தீர்வு வழங்கப்படும் என அறிவித்த அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் தமிழரின் போராட்ட எண்ணத்தினையும், தமிழினத்தின் விழுமியங்களையும் அழிப்பதிலேயே அக்கறை காட்டுவதோடு, களையெடுப்பு என்ற பெயரில் திரைமறைவில் பல கடத்தல்களையும் , படுகொலைகளையும் அரங்கேற்றிவருகின்றது. இந்நிலை இன்னும் பலவருடங்களுக்கு தொடரும் எனவும் அஞ்சப்படுகின்றது. இதையும்விட இப்பொழுது சாதாரண சிங்களவர்கள் கூட   தமிழர்களை துன்புறுத்தத் தொடங்கிவிட்டார்கள்.அண்மையில் தமிழர்கள் இம்சிக்கப்பட்ட,அச்சுறுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் தென்னிலங்கையில் நடந்தேறியுள்ளன. அந்தளவுக்கு சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழர்கள் மீதான இனவெறி தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இலங்கையில் தமிழரின் இருப்பு கேள்விக்குறியாகும். மீறி இருந்தாலும் அச்சத்துடனான அடிமைவாழ்க்கை வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினம் தள்ளப்படும்.

    மகிந்த அரசு புலிகளை அழித்து அவர்களிடமிருந்த அனைத்து நிலப்பரப்புக்களையும் கைப்பற்றி தான் வென்றுவிட்டதாக கொக்கரித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியக் காங்கிரஸும்  அதனை நினைத்து தம் தேர்தல் வெற்றியோடு புலிகளை பழிவாங்கி விட்டதையும் சேர்த்து வெற்றிவிழாக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. பல சர்வதேச நாடுகளோ, அப்பாடா! பயங்கரவாதிகள் தொலைந்தார்கள் என நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள்.
ஆனால் தமிழினமோ,  தன் உறவுகளையும், தன் தளபதிகளையும்,தன் பூர்வீக நிலங்களையும்,உரிமைகளையும்  இழந்து பெருந்துயரில்  வாடுகின்றது.

புலம்பெயர் தமிழ் உறவுகளே!

சிங்களவன் தான் வென்று தமிழரை அடிமைப்படுத்திவிட்டதாக கொக்கரிக்கின்றான்.
அடிமை வாழ்க்கை வாழ்வதைவிட அழிந்து போவதே மேல். சிங்களவனுக்கு கீழ் அடிமையாக வாழும் ஈனத்தனமான இனமாக நாம் வழிநடத்தப்படவில்லை நம் தானைத் தலைவனால். அப்படியொரு வாழ்வை வாழ விரும்பவும் மாட்டோம். தமிழர் உரிமைகள் பறிபோவது கண்டு பொங்கியெழுந்து போருக்குப் புறப்பட்ட தன்மானத் தமிழன் நம் தலைவன். காலமாற்றத்தினாலும் கள மாற்றத்தினாலும் புதிய பரிமாணத்துடன் தமிழர் போராட்டத்துக்கான களம் முற்றுமுழுதாக புலம்பெயர்  தேசங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. போராட்டமானது தீர்க்கதரிசனமிக்க நம் தலைவனால் ஏற்கனவே புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது என்பதனை தலைவரின் கடந்த மாவீரர் தின உரையை கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். அதனைக் கருத்தில் கொண்டு புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு உரிமைப் போராட்டத்தினை தொடருவோம். தலைவனின் வழிகாட்டல் உங்களிடம் தானாய் வந்து சேரும்.

தமிழர் எல்லாரும் விடுதலைப் போராளிகளாக மாறுங்கள்!
ஆயுதப் போராட்டங்களுக்கு நிகராய் உங்கள் அறவழிப்  போராட்டங்களும் அதிசயங்கள் நிகழ்த்தும். புலிகளை அழித்து விட்டோம் என்று வெற்றி முழக்கமிடும் சிங்களத்துக்கும் அத்தோடு துணைநின்ற சதிகார சக்திகளுக்கும்  தெரியப்படுத்துங்கள், பல இலட்சம்  தமிழீழ விடுதலைப் போராளிகள் உலகெங்கும் உருவாகியிருக்கின்றார்கள் என்று.
"தமிழீழம்" என்ற தமிழரின் இலட்சியத்தினை யாராலும் அழிக்க முடியாது என்பதனை உணர்த்துங்கள்!
தமிழருக்கான ஒரே தீர்வு "தமிழீழத் தாயகம்" என்பது மட்டும்தான் என்பதனை சர்வதேசத்திற்கு உறுதியாக கூறுங்கள்!
சிங்களத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் நம் உறவுகளின் சுதந்திர வாழ்வுக்காக உரக்கக் குரல் கொடுங்கள்!
தமிழர் மீது சிங்களத்தினால் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைப் பார்த்தும் பாராமுகம் காட்டும் சர்வதேச நாடுகளை தட்டிக் கேளுங்கள்!
நம் உறவுகளை கொன்றொழித்த சிங்களப் பாவிகளை உலகின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுங்கள்!
தமிழரின் போராட்டம் முடிந்துவிட்டது என்ற சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளை தகர்த்தெறிந்து தமிழரின் உரிமைப் போராட்டம் இன்னும் உத்வேகத்துடன் தொடர்கின்றது என்பதை வெளிப்படுத்துங்கள்!
இவற்றையெல்லாம் சாதிக்கும் வல்லமை உரிமைப் போராட்டத்திற்காக ஒன்றுதிரளும் உங்களிடம் மட்டும்தான் இருக்கின்றது. காலத்தின் கட்டாயம், கடமை அறிந்து உரிமைக்காய் போராடும் தன்மானத் தமிழனாய் பாயும் புலியாய் புறப்படுங்கள்!
இச்சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டால் இதைவிட வேறொரு சந்தர்ப்பம் வாய்க்காது. நம் எதிர்கால சந்ததிக்கும் அடிமை வாழ்வையும் அகதி வாழ்வையுமே பரம்பரைச் சொத்தாக விட்டுச் செல்லவேண்டிவரும். இவ்வாறானதொரு அவலநிலை , அவமானம் தமிழினத்துக்குத் தேவையா?
    மூன்று தசாப்த காலமாக நம் தலைவர் நமக்காக போராடி தமிழரின் உரிமைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டு வந்திருக்கின்றார். தற்சமயம், போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு நாம்  உற்ற துணையாக, சக போராளியாக இருக்கவேண்டியது ஒவ்வொரு உண்மைத் தமிழனினதும் கடமை. அந்த வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்து சரித்திரம் படைப்போம்.
 நமது போராட்டத்தினைப் பார்த்து வியந்து நிற்கும் சர்வதேசத்தினை நமக்கு ஆதரவாக மாற்றிக் காட்டுவோம்.

தடுமாற்றங்கள், கலக்கங்களை தூக்கியெறிந்துவிட்டு மான்புமிகு தலைவனின் பின்னால் அணிதிரள்வோம்!
தமிழரின் போராட்டம் முடிந்துவிட்டது என அறிவித்த சிங்களத்திற்கு, தமிழரின் இறுதிப்போர் ஆரம்பமாகிவிட்டது என்பதனை முழக்கமிட்டு அறிவிப்போம்!

தாயகத்தின் விடுதலைக்காக பாய்ந்தெழுவோம் தலைவன் வழியில்!
"தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்"

தலைவன் பேரை நாவில் உரை! தாயகத்தை கண்ணில் வரை!
நிலைகுலைய ஒன்றுமில்லை... நிமிர்ந்து நட... விடுதலை!

-பருத்தியன்-

StumbleUpon.com Read more...

அதிகம் தேடப்பட்ட அத்வானி

கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட அத்வானி

கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட அரசியல்வாதி அத்வானி என ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களை அலசி ஆராய மக்களும் ‌துவங்கினர். இதன்படி சர்ச் இன்ஜினில் அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியிலில் பாஜக மூத்த தலைவரும், பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானிக்கு முதலிடமும், தொடர்ந்து வருண்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அடுத்தடுத்த இடங்களும் கிடைத்துள்ளன.

StumbleUpon.com Read more...

தலைவர் பிரபாகரன் பாதுகாப்புடன் இருக்கிறார்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு: நக்கீரன் செய்தி உறுதி செய்யப்பட்டது

 

விடுதலைப்புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவை சேர்ந்த செயலகத்தின் அறிவழகன் இன்று விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றை தொடர்பு கொண்டு பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளார். இலங்கை அரசு பரப்பி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்ட நிலையில் விடுதலைப்புலிகளும் இதை உறுதி செய்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று இலங்கை அரசாங்கமும், அந்நாட்டு ராணுவமும் மேற்கொண்டு வருகிற பொய்ப்பிரச்சாரத்திணை திட்டவட்டமாக மறுத்துள்ள விடுதலைப்புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதுபற்றி கூறியுள்ள அவர், எங்கள் பாசத்துக்குரிய தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

விடுதலை போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆதரவுக்குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

StumbleUpon.com Read more...

Funny - Mahinda is DEAD !!!

StumbleUpon.com Read more...

பிரபாகரன் மனைவி, மகள் மரணம் அடையவில்லை; பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: இலங்கை ராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2-வது மகன் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அதிகாரப் பூர்வமற்ற ஒரு தகவல் கடந்த புதன்கிழமை வெளியானது.

பிரபாகரன் உடல் கிடந்த நந்திக்கடல் கழிமுக பகுதியில் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டதாக ராணுவத்தின் 56-வது படையணி கூறியது. பிரபாகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது சிங்கள ராணுவத்தின் ஏமாற்று வேலை என்று உடனடியாக மறுப்பு தெரி விக்கப்பட்டது.

பிரபாகரன் உடல் கிடந்ததாக கூறப்படும் நந்திக்கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி மதிவ தனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் அன்றைய தினம் கிடைக்காமல் போனது என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து பிரபாகரன் மனைவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் தவறானது என்று சிங்கள ராணுவம் ஒத்துக்கொண்டது.

இது தொடர்பாக சிங்கள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகே டியர் உதய நாணயக்காரா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் ராணுவம் மீட்கவில்லை.

ராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. ராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.

கடைசி நாள் போரில் ராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்கள் பலியானார்கள் என்று கேட்டதற்கு உதய நாணயகாரா பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சிங்கள ராணுவத்துக்கு 40 ஆயிரம் வீரர்கள் தேவை என்று அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, முல்லைத்தீவு சண்டையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை சிங்கள ராணுவம் இழந்திருக்கும் என்று கருதப்படுகிறது.


முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள ராணுவம் சொல்கிறது

இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக ராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்து அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர்.

கருணாவும் அந்த உடலை பார்த்து விட்டு இது பிரபாகரன் உடல்தான் என்றார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் உறுதியுடன் தகவல் வெளியிட்டனர். பிரபாகரன் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரமும் நேற்று வெளியானது. இதனால் பிரபாகரன் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் பிரபாகரன் உடலை எரித்து விட்டோம் என்று சிங்கள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதயநாணய காரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை ராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக ரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.

பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இவ்வாறு பிரிகேடியர் உதயநாணய காரா கூறினார்.

StumbleUpon.com Read more...

நக்கீரன் பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி-சிங்கள அடிவருடிகள் கண்டுபிடிப்பு

நக்கீரன் பத்திரிக்கை வெளியிட்டு இருந்த பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கட்டுரையை கண்ட உடனே சிங்களவனுக்கும்,சிங்கள அடிவருடிகளுக்கும் பெரிய இடி விழுந்த மாதிரி இருந்திருக்கிறது போலும்.அதனால் தனோ என்னவோ நக்கீரன் பத்திரிக்கையை சகட்டுமேனிக்கு திட்டி தள்ளிவிட்டார்கள்.
 
ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று நாம் அறிந்து கொள்ளுவது முக்கியமல்லவா?
 
முதலில் நக்கீரன் பத்திரிக்கையின் அட்டை படத்தில் மேதகு பிரபாகரன் அவர்கள் உட்கார்ந்து அவர் முன்பாக உள்ள தொலைக்காட்சியில் அவரை பற்றி சிங்கள அரசாங்கள் பரப்பிவரும் பொயுரைகளை பார்ப்பதாக உள்ள படம் நக்கீரன் நேரில் சென்றுஎடுத்ததாக எங்கும் எழுதவில்லை.பத்திரிக்கைக்கு உள்ளே உள்ள கட்டுரையின் சாராம்சத்துக்கு தகுந்த மாதிரியான படத்தை பத்திரிக்கையின் முன் அட்டையாக வெளியிடுவது நக்கீரன் பத்திரிக்கையை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியாத விஷயமல்ல.அதிலும் மேதகு பிரபாகரனின் படம் இதே படம் நக்கீரனில் முதல் பக்கத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ளதை அறியாத சில அடிவருடிகள் எதோ புலனாய்வு செய்து அந்த படம் தமிழ்நெட் இணையதளத்தில் வெளியானது.அதை நக்கீரன் இப்பொழுது தான் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டது என்று விளக்கெண்ணை தனமாக பதிவு எழுதியுள்ளார்.
 
நக்கீரன் பத்திரிக்கை அட்டை கிராபிக்ஸ் ஜாலம் இது மட்டும் அல்ல இன்னும் உண்டு.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP