சமீபத்திய பதிவுகள்

திருப்பதி உண்டியலில் 5 லட்சம் கள்ளநோட்

>> Wednesday, March 31, 2010 

 திருப்பதி உண்டியலில் நேற்று உள்ள பணத்தை எண்ணுவதற்காக கோவில் ஊழியர்கள் திறந்தனர். அப்போது, சுமார் ரூ.5 லட்சத்துக்கும் மேலாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் உண்டியலில் இருந்தன.

திருப்பதி கோவில் உண்டியலிலும் கள்ள நோட்டுகள் கிடப்பதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருப்பதி கோவில் அதிகாரி ஒருவர், 'கோவில் உண்டியலில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக அளவில் கள்ளநோட்டு போடப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை' என்று தெரிவித்தார்


source:nakkheeran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

BPhone — Netbook

BPhone — Netbook

ChinaGrabber began selling phone BPhone - hybrid solutions that united netbook and smartphone. BPhone pyatidyuymovym equipped with touch screen and runs on a processor Marvell CPU with a clock speed of 624 MHz. Features BPhone as follows: Operating system Linux 2.6, 256 megabytes of flash memory, built-in Bluetooth, Wi-Fi and GPS, GSM-module, QWERTY-keyboard, the ability to support Java-applications. Despite the rather large (by the standards of the phone, of course) display device does not prove too cumbersome, as a smartphone it can be used in the closed position. The display device allows you to view video in full screen mode. The cost of such a hybrid is $ 570. More images after the break...

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

எப்1 அழுத்தாதே! ஆபத்து!!

 
 

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப்பயன்படுத்துபவர்கள் எப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கம்ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளது. 
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள, விசுவல் பேசிக் கோடில் அமைந்த வரிகளில் உள்ள சிறு பிழையை ஹேக்கர்கள் பயன்படுத்த முடியும். ஏதேனும் ஒரு பாப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு எப்1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இவ்வளவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழைஉள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. யாரும் இது போல பாப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து எப்1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான பேட்ச் பைல் ஒன்றைத் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அநேகமாக இந்த செய்தியை எழுதும் நாளை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகும் பேட்ச் பைலில் இது கிடைக்கலாம். இந்த எச்சரிக்கையைப் படித்த பலர், நமக்கு எதுக்கு வம்பு, பிரவுசரையே மாற்றிவிடுவோம் என இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விடுத்து மற்றவற்றிற்கு மாறி வருகின்றனர்.

எக்ஸெல் பார்மட்டிங் காப்பி
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். அதில் நீங்கள் அமைத்த சார்ட் மிகச் சிறப்பான வண்ணங்களில், அழகான தேர்ந்தெடுத்த எழுத்துக்களால் அமைந்த சொற்களில், வெவ்வேறு அம்சங்கள் அழகாகப் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டுவிட்டது. அதனைப் பார்த்து நீங்களே உங்கள் வேலைத்திறன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்கள். ஏனென்றால் பல மணித்துளிகள் செலவழித்துச் செய்த அமைப்பு அது. அதே அமைப்பில் மற்ற சார்ட்களும் அமைய வேண்டும் என்பதே உங்கள் விருப்பம். அதற்காக ஒவ்வொரு சார்ட்டிற்கும் இதே நேரத்தினை நீங்கள் செலவழிக்க வேண்டியதில்லை. இந்த பார்மட் விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் தயாரிக்கும் புதிய சார்ட்டிலும் அப்படியே அமைக்கப்பட எளிய வழி ஒன்றை எக்ஸெல் தருகிறது.
1. முதலில் எந்த சார்ட்டின் பார்மட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ, அதனைத் திறக்கவும். அந்த சார்ட்டை காப்பி செய்திடவும். 
2. அடுத்து எந்த சார்ட்டில் இந்த பார்மட் வழிகள் அனைத்தும் அமைக்கப்பட வேண்டுமோ, அதனைத் திறக்கவும். இனி Edit  மெனு திறக்கவும். அதில் Paste Special பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்Format  பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் OK  கிளிக் செய்திடவும். 
3. இரண்டாவது சார்ட்டில், முதல் சார்ட்டில் இருந்த அனைத்து பார்மட் வழிகளும் பின்பற்றப்பட்டு, நீங்கள் விரும்பும் வகையிலான தோற்றத்தினைக் காட்டும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP