அப்போது அவர்,''தமிழக ஆதரவும் கூட இன்றி போராடிய தமிழன் பிரபாகரன். அதனால்தான் இனி பிறக்கும் குழந்தையும் பிரபாகரன் பேரைச்சொல்லி பிறக்கும்.

தெருக்களில் உள்ள பிரபாகரன் படங்களை வேண்டுமானால் அகற்றலாம். ஆனால் தமிழர் உள்ளங்களில் உள்ள பிரபாகரனை அகற்ற முடியாது.

பிரபாகரனை இனி சட்டைப்பையில் சின்னதாக குத்திக்கொள்ளுங்கள். பனியன்களாக அணிந்துகொள்ளுங்கள்.

Seeman

பிரபாகரன் படங்களை ஏன் அரசியல்வாதிகள் அகற்றச்சொல்கிறார்கள். படம் பார்க்கவே இவர்களுக்கு பயம். இன்னும் பக்கத்தில் வந்து நின்றால் சொல்லவா வேண்டும்.

இன்று படத்தை இறக்கியவர்களே நாளை பிரபாகரன் படத்தை ஏற்றி பிடிப்பார்கள். அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது நம்மை விட இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்தான் தெரியும். அதனால்தான் பிரபாகரன் படங்களுக்கு தடை விதிக்கிறார்கள்.

இப்போதைய வீழ்ச்சி மகிழ்ச்சியே. மறுபடியும் பெருவோம் எழுச்சி''என்று பேசினார்.