சமீபத்திய பதிவுகள்

லெபனானில் குண்டு வெடிப்பு : 18 பேர் பலி

>> Friday, August 15, 2008

லெபனானில் குண்டு வெடிப்பு : 18 பேர் பலி
லெபனானில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் பலியானார்கள்.

லெபனானில் உள்ள டிரிபோலி எனும் நகரின் வடக்குப் பகுதியில் இன்று காலை பயணிகள் மற்றும் ராணுவத்தினரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது தெரு விளக்கு கம்பம் ஒன்று அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு மிகுந்த சபதத்துடன் வெடித்து சிதறியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் பலியானார்கள்; 46பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர்களில் 10 பேர் ராணுவ வீரர்களாவர்.

அல் - காய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

அமெரிக்கா - ரஷ்யா மோதல்

ஜார்ஜியா விவகாரம் : அமெரிக்கா - ரஷ்யா மோதல்
ஜார்ஜிய மக்கள் மீது ரஷ்யா பயங்கரவாதத்தை திணிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம்சாற்றியுள்ளது.

ஜார்ஜியாவில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள தெற்கு ஓஸ்டியாவிலுள்ள தனிநாடு கோரும் பிரிவினைவாதிகள் மீது ஜார்ஜியா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, தங்களது ராணுவத்தைச் சேர்ந்தவர்களை, ஜார்ஜியா படையினர் கொன்று விட்டதாகக் கூறி, அவர்கள் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது.

ரஷ்யாவின் கடுமையான தாக்குதலையடுத்து, தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ஜார்ஜியா படைகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று 4வது முறையாக கூடியது.

அப்போது அமெரிக்க தூதர் சல்மாய் கலீல்ஸாத், ஜார்ஜிய மக்கள் மீது ரஷ்யா பயங்கரவாதத்தை திணிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாற்றினார்.

அவர் இவ்வாறு கூறியதும் கடும் ஆத்திரமடைந்த ரஷ்ய தூதர் விடாலி சுர்கின், " இது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஈராக், ஆப்கானிஸ்தான், செர்பியாவில் போரை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதி வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரக் கூடாது " என்று அமெரிக்காவுக்கு காட்டமாக பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் இந்தக் கூட்டத்திலும் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

மீண்டும் கலவரம் ; துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

காஷ்மீரில் மீண்டும் கலவரம் ; துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி
காஷ்மீரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தை கட்டுப்படுத்த நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்; 4 பேர் காயமடைந்தனர்.

அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தால் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று 6 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், இன்றும் மொத்தமுள்ள 10 மாவட்டங்களில், ஸ்ரீநகர் உட்பட 6 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

பாராமுல்லா, பந்திபுரா, புல்வாமா மற்றும் ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்தது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் போராட்டக்காரர்கள் காவல் நிலையம் ஒன்றை தீ வைத்துக் கொளுத்த முயன்றபோது பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டியடிக்க முயன்றனர்.

தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுக்கும் பலனில்லாமல் போகவே, வன்முறையாளர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ஒருவர் பலியானார்; 4 பேர் காயமடைந்தனர்.

இதனால் காஷ்மீர் பகுதிகளில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்திலும் பாதுகாப்பு படையினர் இன்று கொடி அணி வகுப்பு நடத்தியதோடு, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஜம்முவின் கிஸ்த்வார் பகுதியில் நேற்று கலவரக்காரர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர் என்பதால், இன்று அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனிடையே போராட்டக்காரர்களை கலைக்க சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் படையினர் அளவுக்கு அதிகமாக பலப்பிரயோகத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாற்றை சிபிஆர்பிஎப் மறுத்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP