சமீபத்திய பதிவுகள்

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

>> Saturday, October 25, 2008

 

இந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடக்கும் ஜூம்மா நமாஸ் எனப்படும் ஒரு மணிநேரத் தொழுகையில் அப்துல் ஹலீம் உரையாற்றும் போது "அண்டை வீட்டார் பசியோடிருக்கும் போது உங்கள் வயிற்றை நிரப்புவது கூடாது, உங்களுக்கு அருகில் குடியிருப்போர் முசுலீமா, இந்துவா என்றெல்லாம் மதவேறுபாடு பார்க்கக்கூடாது" என்று வந்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். இதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 53 மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஒரு மத அறிஞராக வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹலீமை குண்டு வெடித்த மறுநாளே போலீசு அதிரடியாகக் கைது செய்கிறது. மசூதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹலீமின் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் இந்தக் கைதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். சிறையலடைக்கப்பட்ட ஹலீமை இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முன் நிறுத்திய போலீசு அவர் குண்டு வெடிப்புச் சதிகளில் ஈடுபட்டிருந்த்தாகக் குற்றம் சாட்டியது. இதையே ஊடகங்களும் பரபரப்பாக கண் காது மூக்கு வைத்து அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தன.

மேலும் அவர் சிமி எனப்படும் தடைசெய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்துடன் தொடர்புள்ளவர் எனவும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர், அகமதாபத் நகரிலுள்ள முசுலீம் இளைஞர்களை தெரிவு செய்து உத்திரப் பிரேதச மாநிலத்திற்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி எடுக்க வைத்தவர், அதன் மூலம் 2002 கலவரத்திற்கு பழிவாங்கும் முகமாக அத்வானி, மோடி முதலானவர்களைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குஜராத் அரசு வழக்கறிஞரால் நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து ஹலீம் தலைமறைவாகி விட்டார் என்றும் போலீசு குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் துளி கூட உண்மையில்லை என்பதை தெகல்வாக வார ஏடு (9.08.08) புலன் விசாரனை செய்து வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் குடியிருக்கும் ஹலீமை அவ்வட்டார மக்கள் நன்கு அறிவர். அவரைப் பற்றி போலீசுக்கும் நன்கு தெரியும். குண்டு வெடிப்புக்கு முந்தைய நாள் வரை அவர் சிமி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்று போலீசு எப்போதும் கூறியதில்லை.

இந்த ஆண்டு மே மாதம் ஹலீமும் அவரது மதப்பிரிவைப் பின்பற்றுவர்களும் ஒரு கடை முகவரியில் ஆரம்பித்த டிரஸ்ட் சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பிய போலீசு அதில் அந்த ட்ரஸ்ட்டில் உள்ளவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டிருக்கிறது. எந்த வித குற்றப் புகாரும் இல்லாத நிலையிலும் கூட ஹலீம் அந்த ட்ரஸ்ட் சம்பந்தமான விவரங்களை போலீசுக்கு அனுப்பியிருக்கிறார். இதிலிருந்து அவர் தலைமறைவாக இல்லை என்ற உண்மை போலீசுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹலீம் தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தனது குடும்பத்தினரை போலீசு அச்சுறுத்தியது என்று குஜராத்தின் போலீசு டைரக்டர் ஜெனரலுக்கும், அகமதாபாத் காவல் துறை ஆணையருக்கும் தந்தி அனுப்பியிருக்கிறார். அடக்குமுறைக்குகெதிரான இந்த சட்டப்பூர்வ முயற்சிகளையெல்லாம் ஒரு தலைமறைவு பயங்கரவாதி செய்வாரா என்ன?

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருமதத்தவர்களையும் அடக்கிய சமூக ஒற்றுமை அமைதிக்கான இயக்கம் என்ற அமைப்பு மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதி வாங்கியபோது அந்த விண்ணப்பத்திலிருந்த முக்கிய சொற்பொழிவாற்றுபவர்களின் பட்டியலில் ஹலீமின் பெயரும் இருந்தது. இதையெல்லாம் சொல்லித்தான் ஹலீமின் அப்பாவித்தனத்தை நீருபிக்க வேண்டுமென்பதில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். தனது குழந்தைகள் மீது ஆணையாக அவர் ஒரு பயங்கரவாதியில்லை, அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ஹலீமின் மனைவி நூர் ஷாபா.

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி வழங்க ஹலீம் முயிற்சி எடுத்த போதுதான் போலீசின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. கலவரத்தால் வீடு வாசல், உற்றார் உறவினரை இழந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் சிறார்களுக்காக உதவி பெற ஹலீம் முயன்றார். குவைத்திலிருந்து வந்த இரண்டு இந்திய முசுலீம்களை அவர் அந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று உதவி கோரினார். அதற்காகப் பின்னர் கடிதம் எழுதினார். அந்த இரண்டு நபர்களும் பின்னர் டெல்லி போலீசால் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு டெல்லி நீதி மன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த்தாக சாட்சி அளித்தவர்கள் போலீசார் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மொரதாபாத் வணிகர் ஒருவரை விடுதலை செய்த நீதிமன்றம் அகதிகள் முகாமுக்குச் சென்று குழந்தைகளுக்காக உதவி செய்ய நினைத்ததை குற்றமென வரையறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

குஜராத்தின் அனாதை முசுலீம் குழந்தைகளுக்காக இவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதால் ஹலீமும் வேறு ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உதவி கேட்டு இடம் பெற்ற வாசகங்கள் எல்லாம் போலிசால் தீவிரவாதத்தின் பொருளாகத் திரிக்கப்பட்டன. இதன் பொருட்டு கைது செய்யப்பட்ட ஹலீம் பின்னர் பிணையில் வந்தார். இவ்வழக்கின்படி குஜராத் குழந்தைகளைத் தீவிரவாதிகளாக்கும் பொருட்டு பயிற்சி முகாமுக்கு அனுப்ப முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு மூலமாக காட்டப்படுகிறது. ஆக வெளிப்படையாக ஒரு மத அறிஞராகவும், முசுலீம் மக்களுக்கு உதவவேண்டுமெனவும் பாடுபட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு இன்று சிறையில் வாடுகிறார். கடை வருமானத்தை இழந்த அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குஜராத் போலிசோ குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்ததாக ஊடகங்களை நம்ப வைக்கிறது.

ஹலீமின் கதையோடு இந்த நாடகம் முடிந்து விடவில்லை. இவரைப் போன்ற பல இசுலாமிய அப்பாவிகள், குறிப்பாக இளைஞர்கள் இந்தியாவெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதை தெகல்கா ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அனாதை என்பதன் பொருளை பெற்றோர், உற்றார், உறவினரோடு வாழும் ஒருவர் அவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் எந்த உறவுமின்றி ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு அனாதையின் உளவியலை சகஜ வாழ்க்கையில் இருக்கும் நம்போன்றோர் அறிவதில்லை. இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல சமூக வாழ்க்கைக்கும் பொருந்தும். சொல்லப்போனால் சமூக வாழ்க்கையில் அனாதைகளாக்கப்படும் நபர்கள்தான் சொல்லணாத் துயரத்தைச் சந்திக்கின்றனர். இந்து மதவெறியர்களின் அடக்குமுறைக் கலவரங்களின் எதிர் விளைவால் தோன்றும் இசுலாமிய பயங்கரவாதம் உண்மையில் பல அப்பாவி இசுலாமிய மக்களையே பலி கொள்கிறது.

தொப்பியும், தாடியும் வைத்திருக்கும் ஒரு இசலாமிய இளைஞன் எந்த வித முகாந்திரமுமின்றி பயங்கரவாதியக இருக்கலாம் என்று சமூக அமைப்புக்களால் நினைக்கப்படுகிறான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் கேட்பார் கேள்வியின்றி இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகே இவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். எந்தக் குற்றமும் செய்யாத தம்மை இந்த சமூக அமைப்பு கிரிமனல் போன்று நடத்தப்படுவதை வைத்துத்தான் தங்களை எந்த உதவியுமின்றி துன்பப்படும் அனாதைகளாக இவர்கள் உணர்கின்றனர். இந்தியாவில் இத்தகைய இசுலாமிய அனாதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சமூக அளவில் தன்னை அனாதையாக்கும் இந்த அமைப்பு குறித்து அவர்களிடம் எழும் கோபத்தை எவரும் தணிக்க இயலாது.

பயங்கரவாத்த்திற்கெதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் இந்தப்போரின் விளைவு பல தீவிரவாதிகளை உருவாக்கவே உதவி செய்யும். மதசார்பற்ற சக்திகள் இந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவது ஒன்றே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலைச் சிறிதேனும் தரும். இல்லையென்றால் அதன் விளைவை எல்லோரும் சந்திக்கவேண்டும்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் கிறித்தவ மக்கள் மீது கட்டவழ்த்து விடப்பட்டிருக்கும் இந்து மதவெறியர்களின் பயங்கரவாதத்தை இந்த அரசியல் அமைப்பு கேள்வி கேட்பதில்லை. லட்சுமணானந்தா சரஸ்வதி என்ற விசுவ இந்து பரிசத்தின் தலைவரும், அவ்வட்டாரத்தில் பிரபலமான இந்து மதவெறியராகவும் இருந்த இவர் கொலை செய்யப்பட்டதை வைத்து இந்து மதவெறியர்கள் இந்தக் கொலைக்குத் தொடர்பில்லாத கிறித்தவ மக்களை வேட்டையாடுகின்றனர். குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் கற்பித்து விட்டோம், ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் கற்பிப்போம் என்று சங்க பரிவாரங்கள் வெளிப்படையாகவே வெறியைப் பரப்பி கலவரம் செய்து வருகின்றனர். ஒரிசாவே பற்றி எரியுமளவுக்கு பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 2000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு, 25பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிரகாம் ஸ்டேன்ஸ் எனும் ஆஸ்திரேலியப் பாதிரியார் இரு மகன்களுடன் ஒரு காரில் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்து மதவெறியர்களின் இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு கூட அவர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. அதனால்தான் இன்றும் அரசு ஆதரவோடு அவர்களது பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மத்த்திற்கு மதம்மாறிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களெல்லாம் அன்றாடம் இந்து பயங்கரவாதத்தைக் கண்டு நடுங்கியபடியேதான் வாழ நேரிட்டது. கடந்த பத்தாண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட கிறித்தவ மக்கள் பல தாக்குதல்களை சந்தித்திருக்கின்றனர். அதன் தொடர் விளைவாகத்தான் இன்றைய கலவரங்கள் இந்துமதவெறியர்களால் நடத்தப்படுகின்றன.

குண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்துமதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது. கிறித்தவ மக்கள் உயிருடன் கொளுத்த்தப்படும் போதுகூட போலிசின் துப்பாக்கிகள் சுடாமல் அமைதி காத்தன. பா.ஜ.கவின் இளைய பங்காளியான நவீன் பட்நாயக் அரசோ மோடியின் அரசுபோல இந்து மதவெறியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தொகாடியா போன்ற இந்து மதவெறியர்களின் பேச்சும் நடவடிக்கையும் எந்த தடையுமின்றி ஒரிசாவில் வலம் வருகின்றன.

இந்த நாட்டின் அரசியல் அதிகார அமைப்புகள் இந்து மதவெறிக்கு ஆதரவாக இயங்கிவரும்போது இதன் பயங்கரவாதத்தை எவரும் சட்டபூர்வமாக ஒழிக்க முடியாது. மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடும் பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவெறியர்கள் திசை திருப்பி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்றனர். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்து மதவெறியர்களை கருவறுக்கும்வரை எவருக்கும் விடுதலை இல்லை.

பயங்கரவாதத்தின் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை இந்தியாவில் அமைதி என்பது பிடிபடாத மாயமானைப் போல ஓடிக்கொண்டே இருக்கும்.

 

http://tinyurl.com/5a8zqr

நன்றி வினவு

StumbleUpon.com Read more...

வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க - மீண்டும் திருவாளர் மெனாங்கு

 

உங்களின் தொடர்ந்த ஆதரவினால் ஆறாம் முறையாக நம்மையெல்லாம் சிரிக்க வைக்க வருகிறார் திருவாளர் மெனாங்கு,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்குக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் " டுபாங்கு! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து திருவாளர் மெனாங்கு குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் டுபாங்கு அல்ல மெனாங்கு என்று.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்கு இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார்.

திருவாளர் மெனாங்கு கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை திருவாளர் மெனாங்கு, நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.

மெனாங்கிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் மெனாங்கிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார்.

திருவாளர் மெனாங்கு 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.

உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..

மெனாங்கு அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

வீட்டிற்க்கு வந்த உடன் திருவாளர் மெனாங்கு நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார்.

அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார்.

உடனே மெனாங்கு கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்குக்கு அவரது அம்மா எழதிய கடிதம் ,

அன்புள்ள மெனாங்குக்கு, நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.

நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார்.

புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த டுபாங்கு இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ரச மாற்ற வேண்டாம் பாரு..

இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல.

கிளைமேட் ரொம்ப மோசமில்லை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது.

நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன்.

சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெருமையாக எல்லோரிடமும் சொல்கிறார்.

முக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல.

வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க நகர் ஒன்றில், திருவாளர் மெனாங்கு ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

மெனாங்கும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் திருவாளர் மெனாங்கின் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ் , மெனாங்கிடம் 'குட் வ்னிங் சார்..

'திருவாளர் மெனாங்கு 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'.

போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

திருவாளர் மெனாங்கு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மெனாங்கின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மெனாங்கு,டுபாங்கு இரண்டு பெரும் நண்பர்கள் , இருவரும் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.

மெனாங்கு சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம்,

அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது.

போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".

'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் டுபாங்கு.

அதற்கு மெனாங்கு "என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".

டுபாங்கு தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது.

அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை.

அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை.

வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று

மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மெனாங்கு.

"வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை மெனாங்கும் நண்பர்களும் இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறி திருடனிடம் மாட்டிக் கொண்டனர்.

வழிபறி திருடன் தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.

பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கழட்டி கொடுத்து விட்டனர்.

ஆனால் மெனாங்கு மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார்.

கோபமான வழிபறி திருடன் ஊசியால் மெனாங்கின் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான்.

மெனாங்கு கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், மெனாங்கிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு மெனாங்கு சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்கு புகைப்படம் எடுக்க ஒரு இடத்திற்கு சென்றிருந்தார் , அங்கு அவரை ஒரு பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்

"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"

என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஊரில் மெனாங்கு பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர்.

பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர்.

அதற்கு மெனாங்கு ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார்.

அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர்.

மெனாங்கு அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
நன்றி அறிவிழி
 
http://arivili.blogspot.com/2008/10/blog-post_4598.html

StumbleUpon.com Read more...

சேது சமுத்திரத் திட்டமும் -தடுக்க நினைக்கும் சதிகாரர் கூட்டமும்

 

மிக நீளமான கடற்கரையைக் கொண்ட இந்தியா தனது கடலோர பாதுகாப்பு பணியை செய்வதற்குக் கூட தன்னுடைய மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இருந்து கிழக்குக் கடற்கரைப் பகுதியை அடைய வேண்டுமானால் இலங்கையை சுற்றிக் கொண்டுதான் வரவேண்டும். இது இந்தியப் பாதுகாப்புக்கே ஆபத்தானதாக உள்ளது.


இதற்கு காரணம் தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும், இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள 30 கி.மீ. நீள கடற்பகுதியானது சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாக உள்ளது .


இந்த மணல் மற்றும் பாறைகளால் ஆன மேடுகள் மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பகுதியில் கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன.


அதனால்தான் இந்தப் பகுதியைக் கப்பல்கள் கடந்து செல்ல முடியாமல் இலங்கையை சுற்றிக் கொண்டு செல்கின்றன. இதனால் ஏற்டும் பாதகங்கள் இவை,

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை அதிகரிக்கிறது .

இதனால் போர் போன்ற அவசரக் காலங்களில் கூட இந்தியக் கடற்படை கப்பல்கள் விரைவாகப் இலக்கை அடைய முடியாத நிலை உள்ளது.

சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றின் கடற்பயண தூரம் அதிகரிப்பதால் பயண நேரம் 30 மணிநேரம் வரை அதிகரிக்கிறது.

கூடுதல் எரிபொருள் செலவு ,

அந்நியச் செலாவணி இழப்பு .

கப்பல் வாடகைக் கட்டணம் அதிகரிப்பு.

கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் எதுவும் வளர்ச்சி அடைய முடியாத் நிலை .


1860- இல் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லர் இந்த மேட்டுப்பகுதிகளை ஆழப்படுத்தி அந்தப் பகுதியைக் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றுவதன் மூலம் இந்தப் பாதிப்புகளை களைய முடியும் என்று ஒரு திட்டத்தை வகுத்தார்.


அந்த திட்டம்தான் சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் என்று அழைக்கப்பட்டு தற்போது வரை முழுமையாக நிறைவேறுவதில் பல இழுபறிகளை சந்தித்து கொண்டுள்ளது.


சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் என்பது பாக் நீரிணைப்பு மற்றும் தனுஸ்கோடி - தலை மன்னர் இடையே உள்ள மணல் திட்டுப் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே ஆகும்.


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக குறிப்பிட்ட அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் 300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இருக்கும்.. இந்த திட்டத்தில் இராமர் பாலம் அருகே 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படுகிர்றது. போதிய ஆழமுள்ள 78 கி.மீ பகுதி ஆழப்படுத்தப்பட தேவையில்லை.


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் வழியாக 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் செல்ல முடியும். இந்தக் கால்வாயில் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல முடியும். 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.


இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் போகும் நன்மைகள் ஏராளம் ,

கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள வளர்ச்சி பெறாத துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகக்கூடிய பொருட்களுக்கு ஆகும் கப்பல் போக்குவரத்து செலவு குறைவதால் ஏற்றுமதி அதிகரித்து தொழில் வளம் அதிகரிக்கும்.

தமிழகத்தில் நடைபெறும் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்பட்டு , செலவுகளும் குறைக்கப்படும் .

தூத்துக்குடி துறைமுகம் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு , பெருமளவு அந்நிய செலாவணி ஈட்ட முடியும்.

இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அடைந்து வேலைவைப்புகள் பெருகி, தமிழகத்தின் பொருளாதாரம் வளர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியக் கடலோர பாதுகாப்பு பலப் படுத்தப்படும். கடலோரக் கண்காணிப்பு இந்திய கடற்பகுதி முலவதற்குமே மேற்கொள்ள முடியும் என்பதால் , கடலோர கடத்தல் , ஊடுருவல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். இந்தியக் கடற்பகுதியின் முழுக் கட்டுப்பாடும் இந்தியக் கடற்படையின் கையில் இருக்கும்.


இவ்வளவு நன்மைகள் உள்ள இந்தத் திட்டத்தைத்தான் மதத்தின் பெயரால் சிலர் தடுத்து நிறுத்த துடிக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அகழ்வுப்பணிகள் நடத்தப்படும் மணல் திட்டுப் பகுதிகள் புராணத்தில் கூறப்பட்ட ராமர் பாலம் , எனவே அதை இடிக்கக் கூடாது, என்று கூறி போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்று உள்ளனர் .


புராணக்கதையான இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்ற நம்பிக்கையாலேயே இப்படிக் கூறுகிறார்கள் .


நாசாவின் விண்வெளி புகைப்படத்தில் காணப்படும் இந்த பாலத்தை சில இந்து அமைப்புகள் இதற்கு சான்றாக கருதுகின்றன. ஆனால் நாசா இதை சான்றாக அங்கீகரிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.


செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றதிற்கு அளித்த அறிக்கையில் இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது.


இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது.


இந்திய நிலப்பொதியியல் கழகம் (geological survey of India) நடத்திய ஆராய்ச்சியில் இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிடப்பட்டு, கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்ந்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கண்டுபிடிக்கப் பட்டது.


நாட்டில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் போதும், புதிய சாலைகள், அரசு கட்டிடங்கள் அமைக்கப் படும் போதும் எத்தனையோ கோவில்களும் , பள்ளிவாசல்களும் , தேவாலயங்களும் இடிக்கப்படுவது இல்லையா?


ராமர் பாலம் என்று அழைக்கப்படும் அந்த மணல் திட்டுப் பகுதிகள் ராமர் கட்டிய பாலமாகவே இருந்தாலும் இன்று அது யாருக்கும் உபயோகமற்றது தானே?


மக்களுக்கு பல நன்மைகள் விளையும் என்ற சூழலில் அந்தப் பாலத்தின் ஒரு சிறிய பகுதியில் அகழ்வுப் பனி மேற்கொள்வதால் என்ன மத நம்பிக்கைக்கு என்ன பாதிப்பு வந்து விடும் ?


சேது சமுத்திரக் கப்பல் கால்வாய் திட்டம் என்பது ராமர் பாலம் என்பதை முழுவதுமாக சிதைக்கப் போவது இல்லையே ?


மக்களுக்கு நன்மைகள் செய்யவே மதங்கள் உள்ளன, அதை விடுத்து மக்களுக்கு வரப் போகும் நன்மைகளை தனது பெயரைக் கூறி தடுக்கும் சதிகாரர்களை , மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவதாரம் எடுத்த அந்த ராமரே மன்னிக்க மாட்டார் அல்லவா?


இதை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல தமிழக எதிர்க்கட்சித் தலைவரான செல்வி ஜெயலலிதா இந்தத் திட்டத்தை எதிர்த்து, அதனை முடக்க நினைப்பவர்களுக்குத் துணை போவது ஏன் என்று புரியவில்லை


ஏற்கனவே நமது தமிழக மக்கள் மதத்தின் பெயரால் பலவாறாக அடிமைப் படுத்தப் பட்டு பல காலமாக அடிமைகளாக , முன்னேற்றம் அடைய இயலாமல் இருந்தது போதாதா?


தமிழகத்திற்கு மிகவும் பயன் தரக் கூடிய இந்த திட்டம், மீண்டும் மத நம்பிக்கையின் பெயரால் தடுக்கப்படுவதை தற்போது அனுமதித்தால் பின்னர் எக்காலத்திலும் தமிழகம் தலை நிமிர முடியாமல் போய்விடும் என்பது உறுதி.


நன்றி..................
 
நன்றி அறிவிழி
http://arivili.blogspot.com/2008/10/blog-post_23.html

StumbleUpon.com Read more...

இயேசுவும்,ஜிஹாதும்

இயேசுவும்,ஜிஹாதும்

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்ற‌ன‌… 

நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்

Open Letter to Our Muslim Friends:

செப்டம்பர் பதினோறாம் தேதியின் அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காக‌வும் அது போன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என‌ நான் எண்ணுகிறேன். 


உங்களில் ப‌ல‌ர் அமைதி விரும்பும் ம‌க்க‌ளாக இருக்கிறீர்கள். அமைதிக்காக‌வும் ந‌ம்பிக்கைக்காக‌வும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான ம‌ன‌ப்போராட்ட‌த்தினால் அழுத்த‌த்திற்குள்ளாகி எக்கார‌ண‌த்தை முன்னிட்டும் நீங்களும் மற்ற‌வர்களும் ஒரு உட‌ன்பாடுக்கு வர இயலாத‌ நிலையில் இருக்கின்றீர்க‌ள். ஒரு வ‌ச‌தியான‌ நிலையில் உள்ள‌ ஒரு கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து ஒரு பெய‌ர் கிறிஸ்த‌வ‌ன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் ப‌ல‌வீன‌மாக இருக்கின்றானோ அதில் உங்க‌ளில் ப‌ல‌ர் உங்க‌ளின் ந‌பிக்காக‌வும் புனித‌ நூலுக்காக‌வும் மிகுந்த‌ வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்க‌ள்.

இந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற‌ நிகழ்வுகளுக்காக‌ நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம்.

ஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது.

இன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் "வெறும் மனிதர்க"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே.

பைபிள் காட்டும் ந‌ம‌து இயேசு வ‌ன்முறைக்கு எச்ச‌ந்தர்ப்ப‌த்திலும் ஒப்புதல் அ‌ளிக்க‌வில்லை. ஒரு கோப‌முற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்ப‌லிடம் எதிர்ப‌ட்ட‌போது கூட‌ அவ‌ர‌து அணுகுமுறை ப‌ணிவாக‌வே இருந்த‌து. பொய்யான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் அவ‌ருக்கு எதிராக‌ சும‌த்த‌ப்ப‌ட்ட‌போதும், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல", அவர் வாயைத் திற‌க்க‌வில்லை. கொடும் ம‌ர‌ணத்தைச் சந்தித்த‌போதும் கூட‌ அவ‌ர‌து முடிவைத் தம் ப‌ர‌லோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார்.

மரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல‌, மாறாக மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜெயித்தார் (He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான‌ அவரது ஜிஹாத், அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே காட்டப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்.

"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்."

முன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் "சினேகிதனே" என அழைக்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார்.

தமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொண்டார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த‌ அழியாத‌ அவ‌ர‌து புதிய உடம்பில் அவ‌ர் தெரிந்து ஏற்றுக் கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார்


அவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்க வேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழ வேண்டுமென்றார்.

கிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் "எளிய, அமைதலுள்ள பண்புடன்" வாழாத‌ இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. இத்தகைய இதயங்கள் சுயந‌லம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது.

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்க வில்லை; நீங்கள் கொ லைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக் கூடாமற் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்." (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4)

உங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள‌ அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இத‌யத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான்.

இப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க‌ ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது.

நபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது:

"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்." லூக்கா 6:27,28

இயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்து காட்டியது போல் வாழத் தவறிவிட்டோம்.

உங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்ச‌லத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின் பற்றுபவர்களை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற‌ வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப் பெற்றது என நீங்களே அறிந்து கொள்ளுங்கள்

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" (மத்தேயு 11:28 – 30).

 

இப்படிக்கு

க்ளன் எம் மில்லர்
(Glenn M. Miller, www.Christian-thinktank.com)

[The author of this article, Glenn M. Miller, hereby grants permission to copy this article freely, provided that the material is not modified in any form (other than translation into another language); that the material is distributed without cost, and that the ThinkTank web site identification remains with the material. We further ask that the source is acknowledged as: Source: www.answering-islam.org/glenn.html]

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/glenn.html

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழினத்தின் அவலமும் தாய்த்தமிழக எழுச்சியும்!!! குமுதம் இணையதள காணொளி!

ஈழத்தமிழினத்தின் அவலமும் தாய்த்தமிழக எழுச்சியும்!!! குமுதம் இணையதள காணொளி!
சிங்கள இனவெறித் தாக்குதலையும் , கொடுமைகளையும் அனுபவிக்கும் நம் உறவுகளின் அவலங்களை படம்பிடித்து காட்டும் குமுதம் காணொளிக் காட்சிகள்……..
உலக பார்வைக்காக….நன்றி: குமுதம் இணையம்
http://www.eelavarkural.com/2008/10/22/42/

StumbleUpon.com Read more...

தமிழ் முஸ்லீம் அறிவிப்பு

அன்பான நண்பர்களை இந்த பிளக்கர் வாழ்த்தி வரவேற்கிறது.உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் இனிமேல் உங்கள் அனைவரின் பதிவுகளும் இங்கு வறைமுறைக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
 
1,கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள பதிவுகள் அனுப்பவும்.
 
2,கிறிஸ்தவ சாட்சிகள்
 
3,உலக,இந்திய,விளையாட்டு செய்திகள்
 
4,கிறிஸ்தவ நம்பிக்கையின் விளக்கங்கள்
 
5,வன்முறையாளர்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களை பற்றிய செய்திகள்
 
6,விஞ்ஞான ,அறிவியல் செய்திகள்
 
போன்றவற்றை நீங்கள் மூலத்தொடுப்புடன் அனுப்பலாம்.உங்கள் பெயருடன் அவை வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP