சமீபத்திய பதிவுகள்

அறிவியல் - தொழில்நுட்பம்

>> Thursday, October 22, 2009

 

மிகப்பெரிய விண்வெளி கற்கள் 

விண்வெளிக் கற்களிலேயே பெரியதான இதன் சுற்றளவு 950 கிலோ மீட்டர்கள் ஆகும். ரோமானிய விவசாய தேவதையின் பெயரான "செரஸ்' இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக் கற்களிலேயே முதன்முறை யாகக் கண்டுபிடிக்கப்பட்ட இது செவ்வாய்-வியாழன் கிரகங்களுக்கு இடையிலான சுற்று வட்டப்பாதையில் காணப்படுகிறது. இத்தாலிய விண்வெளி ஆய்வாளரான ஜியூசெப்பே பியாஸி இதை கண்டுபிடித்தார். ஆனால் இதன் சரியான இடத்தைக் கண்டுபிடித்தவர் கணிதவியல் அறிஞர் கார்ல் காஸ். இது கணித்துக் கூறப்பட்ட இடத்திலேயே அமைந்தி ருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் ஓராண்டுக்குப் பின் கண்டுபிடித்தனர். 

கூலி வேலை செய்யும் ரோபோக்கள் 

விவசாய பணிகளில் நாற்று நடுதல், அறுவடை செய்தல் போன்ற பணிகளில் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது காய்கள், பழங்களை சேகரித்தல், இலைகளை பறிப்பது போன்ற பணிகளை செய்யும் ரோபோக்களை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோக்கள் பழங்கள், காய்கள் இலைகளின் தடிமனை உணர்ந்து கொண்டு அவற்றை சேகரிக்கும். சரியான விளைச்சல் உள்ள காய், கனிகளை தேர்ந்தெடுத்து சரியாக பறிக்கும். சிறிது கூட சேதம் இல்லாமலும், தவறவிடாமலும் பணியை துரிதமாக செய்து முடிக்கும் திறன் உடையவை இந்த ரோபோக்கள். 

130 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த பறவைகள் 

130 ஆண்டுகளாக காணாமல் போயி ருந்ததாகக் கருதப்படும் பிஜி பெட்ரெல் (எண்த்ண் டங்ற்ழ்ங்ப்) என அழைக்கப்படும் கடல் பறவை யினம் பசிபிக் பெருங்கடலின் பிஜியின் குவா தீவு அருகே கடலின் மீது பறந்தப்போது கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இவ்வினத்தின் வளர்ச்சியுறாப் பறவை ஒன்று 1855-ஆம் ஆண்டில் பிஜியின் காவு (ஏஹன் ஒள்ப்ஹய்க்) தீவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 130 ஆண்டுகளாக இவை ""காணாமல்"" போயிருந்தன. இப்பறவையினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத் தினால் 192 ஆபத்துக் குள்ளாக் கப்படக்கூடிய அல்லது அரிதான இனங்களில் ஒன்றாக பட்டியல் படுத்தப் பட்டுள்ளது. 

தர்பூசணியில் இருந்து எரிபொருள் 

தர்பூசணியின் வெள்ளைப் பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றில் சர்க்கரையும், உயிரி எரிபொருள்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த எரிபொருள் எத்தனால் போல செயல்படும். அமெரிக்காவை சேர்ந்த வேளாண் அமைப்பு இதை கண்டுபிடித்து உள்ளது. தர்பூசணியில் உள்ள லைகோபின் மற்றும் சிட்ரலின் போன்ற ரசாயனங்கள் தேவைமிக்கதும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துமாகும். 

நில நடுக்க மண்டலமாகும் வங்கதேசம் 

2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி பேரழிவை ஏற்படுத்திய இந்தோ னேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட உலகின் அதிபயங்கர நிலநடுக்கத்தின் விளைவாக பூமியின் அடியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது வங்கதேச நாட்டில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 2006 முதல் மே 2009 வரை ரிக்டர் அளவு கோலில் 4-ம் அதற்கு சற்று கூடுதலான அளவிலும் பதிவான நிலநடுக்கங்கள் மட்டும் 86 என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நான்காவது விண்வெளி மையத்தை அமைக்கிறது சீனா 

விண்வெளி மையத்தை விரைவிலேயே அமைக்கும் நோக்கத்துடன், நான்காவது விண்கல ஏவு தளம் மையம் ஒன்றை நிறுவும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹனியன் தீவில் இந்த மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவின் விண்வெளி திட்டங்கள் அந்நாட்டின் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், எதிர்காலத்தில் ஆளுடன் கூடிய விண்வெளி விமானங்களை அனுப் பவே இந்த நான்காவது விண்கல ஏவுதள மையத்தை சீனா அமைத்து வருகிறது. 

source:nakkheeran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன


 

இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே. 

பெண்கள் உட்பட சுமார் 4நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும்.


www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலம்பெயர் தமிழர்கள் திறந்துள்ள புதிய போர்க்களம் தமிழீழத்தை இயல்பாகவே பிரசவிக்கும் சூழலை ஏற்படுத்தும்!


புலம்பெயர் தமிழர்கள் திறந்துள்ள புதிய போர்க்களம் தமிழீழத்தை இயல்பாகவே பிரசவிக்கும் சூழலை ஏற்படுத்தும்!

 நீங்கள் ஒரேயடியாகமரணிக்கப் போகிறீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக எனது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவாறு இரையாகப் போகிறீர்களா?' என்று அந்த வனராஜாவான சிங்கம் அங்கு வாழ்ந்த விலங்குகளைப் பார்த்து கர்ச்சித்தது. நடுங்கிப்போன வன விலங்குகள் வனராஜாவுக்கு உணவாக, தினமும் சிலவாக மரணிக்கச் சம்மதித்தன.

ourlandஇந்த நிலையில்தான் சிங்கள கொலைக் கரங்களின் பிடியிலிருந்து தப்பி வவுனியா முள்வேலி முகாம்களில் வதைபடும் வன்னித் தமிழர்களும், வாயடைக்க வைக்கப்பட்டு வெளியே வாழ மட்டும் அனுமதிக்கப்பட்ட தமிழர்களும் உள்ளார்கள். இலங்கைத் தீவில் தொடர்ந்தும் வாழ வேண்டுமானால் அவர்கள் சிங்கள தேசத்துடன் இதுபோன்றதொரு உடன்படிக்கைக்கு வந்தேயாகவேண்டும் என்பதே விதியாக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாரான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவை மட்டுமே சிந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்ந்த வாழ்க்கையையும், அனுபவித்த சுதந்திரத்தையும் மறக்க முடியாத அந்த மக்களது ஏக்கப் பெருமூச்சின் வெப்பம் அந்த வாழ்விட வான் வெளியை தகிக்க வைக்கின்றது. விடுதலை வேள்விக்காகத் தமது பிள்ளைகளை, உறவுகளை அர்ப்பணித்த அந்த மக்கள் அவர்களது கல்லறைகளில் கதறி அழத் தவிக்கின்றார்கள். இறுதி யுத்த காலத்தில் வன்னி மண் எங்கும் வித்துக்களாகி, புதைக்கவும் விதியின்றிச் சிதைந்து போன தம் உறவுகள் வீழ்ந்த நிலத்தில் முத்தமிட ஏங்குகின்றார்கள்.

நாளைய எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் அந்த உறவுகளுக்கு இன்றைய பொழுதும் உத்தரவாதம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. தினம் தினம் அங்கு கடத்தப்படும் இள வயதினர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாமலேயே உள்ளது. சிங்களவனால் விதிக்கப்பட்ட மரணம் எப்போது வரும் என்று அறியாமலேயே அந்த முகாமின் கூடாரங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.

பருவ மழை ஆரம்பமாவதற்கு முன்னராக அந்த மக்கள் வதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால், ஏற்படப் பொகும் பேரழிவுகள் எண்ணிப் பார்க்க முடியாதது. சிங்கள அரசு விருப்பம்போல, விரும்பும் வகையில் அவர்களைப் பலி கொண்டு வருகிறது.

இந்த நிலையில், 'இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண முடியுமேயொழிய, தனிநாடு சாத்தியமில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று சிங்கள ஜனாதிபதி மகிந்த அறிவித்துள்ளார்.

இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர், 1983 கறுப்பு ஜுலை வரை சிங்களவர்களால் நிகழ்த்தப்பட்ட அத்தனை இனக் கலவரங்களையும் எதிர்கொண்ட ஈழத் தமிழர்கள், அதன் பின்னரான யுத்தங்களில் எதிர்கொண்ட இழப்புக்களை, சிங்கள அரசு நிகழ்த்திய கொடூரங்களை, அவமானங்களை, வன்புணர்வுக் குற்றங்களை, அம்மணமாக்கிச் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த வாலிபர்களின் நினைவுகளை, முள்ளிவாய்க்கால் அவலங்களை… இவற்றை எல்லாம் மறந்து ஈழத் தமிழர்கள் இனியும் சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து வாழ்வது சாத்தியம்தானா? என்ற கேள்விகள் அந்த சிங்களத்து மூளைகளில் உதிப்பதே இல்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவை யுத்த வெற்றியாகக் கொண்டாடியபோதே சமாதானத்திற்கான அத்தனை பாதைகளும் மூடப்பட்டு விட்டன. வன்னி மக்களை வதை முகாம்களுக்குள் அடைத்த போதே ஐந்தாவது கட்ட ஈழப் போர் அவசியம் என்பது தமிழர்களுக்கு உணர்த்தப்பட்டு விட்டது. இதன் பின்னர் சமாதானம் எங்கிருந்து வரும்? சமரசம் எப்படி உருவாகும்?

பல நாடுகளில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரங்களும், அந்தக் கோர அனுபவங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆற்றுப்படுத்தல்களும் வழங்கப்பட்டு அமைதி கொண்டு வருவதே வழக்கமாக இருந்துள்ளது. ஆனால், சிங்கள தேசம் இதற்கு மாறாக, முன்னரிலும் பார்க்க கொடுமைகளையும், அவமானங்களையும், அழிவுகளையுமே தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், இலங்கைத் தீவில் சமாதானம் என்பது சிங்கள இனவாதத்தால் சாத்தியமில்லாத கருவாகவே ஆக்கப்பட்டு விட்டது.

இந்திய பிராந்திய வல்லாதிக்க கனவும், சிங்கள இனவாதமும் இணைந்து பயணிக்கும் இன்றைய காலப் பொழுது ஈழத் தமிழருக்கு மிகவும் சவாலானதாகும். தனது வல்லாதிக்க கனவுக்காக ஈழத் தமிழர்களைத் தொடர்நதும் இந்தியா பலி கொடுக்கவே போகின்றது. இது சிங்களத்தை ஈழத் தமிழர்கள் எதிர்ப்பதனால் மட்டும் உருவானதல்ல. தமிழக மீனவர்களையும் இதே காரணத்திற்காக இந்தியா பலி கொடுத்தே வருகின்றது.

83 வரை இனக்கலவரங்கள் மூலம் தமிழர்களை அச்சுறுத்திய சிங்கள இனவாதம் முள்ளிவாய்க்காலின் பின்னர் மீண்டும் மூர்க்கம் பெற்று வருகின்றது. சிங்களத்து போர்முனை வெற்றியைக் கொண்டாட தமிழர்களிடம் கட்டாய வசூலிப்பு, வர்த்தக நிறுவனங்களில் கப்பம் அறவிடல், தமிழ்ப் பெண்களிடம் அத்து மீறல், தமிழர்களை அவமானப்படுத்தல்… எனத் தொடரும் சிங்கள இனவாதத் திமிர் மீண்டும் கறுப்பு ஜுலைகளை எதிர்காலத்தில் உருவாக்கப் போவதையே எதிர்வு கூறுகின்றது.

அத்துடன், சிங்கள அரசின் தொடர் கைதுகளும், சந்தேக சித்திரவதைகளும், விசாரணைகள் அற்ற தடுப்புக் காவல்களும் தமிழ் இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தைத் தொடர்ந்தும் சீரழித்து வருகின்றது.

தமிழீழ மக்கள் சிங்கள இனத்துடன் இணைந்து வாழ்வதற்கான எந்த அனுகூலங்களையும் சிங்கள தேசம் விட்டு வைக்கவில்லை. சிங்கள இனவாத லோதிக்க சிந்தனைக்குப் பலியான சிங்கள மக்களிடமிருந்து வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில் சமரசம் என்பது அங்கே சாத்தியமில்லாததாகவே உள்ளது.

இன்றுவரை, வவுனியா முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களைப் பார்ப்பதற்கு பொது அமைப்புக்களுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் நடாத்தி முடிக்கப்பட்ட மனிதப் பேரவலங்களின் தடையங்கள் மறைக்கப்படும் வரை அந்தப் பகுதிகளும் தடை செய்யப்பட்ட பிரதேசமாகவே இருக்கப் போகின்றது.

சிங்கள அரசு தன்னால் பிரயோகிக்கக்கூடிய அத்தனை அடக்குமுறைகளினூடாகவும் அங்குள்ள தமிழ் மக்களை மவுனிக்கச் செய்துள்ளது. ஆனாலும், சிங்கள தேசத்தின் அத்தனை கொடுமைகளும் புலம்பெயர் தமிழர்களைக் கொதித்தெழவும், போராடவும் நிர்ப்பந்தித்துள்ளது. புலம்பெயர் தமிழர்கள் திறந்துள்ள புதிய போர்க்களம் சிங்கள தேசத்திற்குப் பல புதிய நெருக்கடிகளை உருவாக்கப் போகின்றது. அது தமிழீழத்தை இயல்பாகவே பிரசவிக்கும் சூழலை ஏற்படுத்தும் என்பது உறுதி.


source:nerudal.

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விண்வெளியில் விருந்தினர் மாளிகை


இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தண்ணீர்இருப்பதை கண்டுபிடித் துள்ளதுஇது விண்வெளி ஆராய்ச்சின் புதியபரிணாமம்போல அமைந்துவிட்டதுஇதையடுத்து நிலவை மையமாக வைத்துபல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறதுஅதாவது நிலவு ஒரு விருந்தினர்மாளிகைபோல செயல்பட இருக்கிறது.

முதல்கட்டமாக நிலவை ஒரு மினி ஆராய்ச்சி கூடம்போல பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதுவிண்வெளி ஓடங்களில் எரிபொருளாகபயன்படுவது ஹைட்ரஜன்தான்எனவே விண்கலங்களின் எரிபொருள்தேவையை பூர்த்தி செய்யும் இடமாக நிலவை பயன்படுத்த திட்ட மிடப்பட்டுஇருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும்போது நிலவில்இறங்கி எரிபொருளை நிரப்பிக் கொள்ளப் போகிறார்கள்இதனால் மற்றகிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் வேகமாகச் செயல்படுத்த முடியும்.

மேலும் ஏற்கனவே நடந்த ஆய்வின்படி குறிப்பிட்ட ரசாயனத்தை நிலவின்பாறைகள் மீது தெளிப்பதால் ஆக்சிஜன் வெளிப்படும் என்று அமெரிக்கவிஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர்தற்போது நிலவில் ஆக்சிஜனும்,ஹைட்ரஜனும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் இதே முறையில்கூடுதலாக ஆக்சிஜனை வெளிப்படச் செய்து செயற்கை முறையில் நீர்உற்பத்தியை பெருக்கவும் முடியும்இதன் மூலம் உயிரினங்களின் தோற்றம்உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும்மேலும் மனிதர்களின்புதிய குடியேற்றத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

இது குறித்துஆய்வாளர் குழுவைச் சேர்ந்த லாரி டெய்லர் கூறும்போது, "நிலவில் காணப்படும் சாதகமான சூழல் சில ஆயிரம் ஆண்டுகளில்உயிரினங்கள் வசிக்கக்கூடிய நிலைமையை அடையும்அங்குள்ளஹைட்ரஜன்விண்கலங்களின் எரிபொருள் தேவையை 85 சதவீதம் பூர்த்திசெய்யும்" என்றார்.


source:paranthan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள்


 
 


கம்ப்யூட்டரில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில், குறிப்பாக பழைய விண்டோஸ் பதிப்புகளில், திடீரென ஸ்கிரீன் முழுக்க நீல நிறமாக மாறி வெள்ளை நிற எழுத்துக்களில் ஏதோதோ செய்திகள் வரும். நாம் ஒரு நிமிஷம் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம். தயாரித்துக் கொண்டிருந்த பைல் சேவ் செய்யப்படாமல் உழைப்பை இழந்து விடுவோமா எனப் பதட்டம் அடைவோம். அவசர பயத்தில் எதை எதையோ செய்து பின் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்வோம். இந்த மாதிரி செய்திகள் பலவகைகள் உள்ளன. இப்படிப்பட்ட செய்திகள் வரும்போது பதட்டப்படாமல் அது என்ன எனப் படித்து அறிய வேண்டும். அதற்கான காரணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.


நீங்கள் இயக்கும் கம்ப்யூட்டரின் இயக்கத்தில் வழக்கத்திற்கு மாறான அல்லது கம்ப்யூட்டரின் சிபியு எதிர்பார்க்கும் செயல்பாடு இல்லாத நிலையிலேயே இந்த பிழைச்செய்திகள் வருகின்றன. இங்கு சில முக்கிய பிழைச்செய்திகளையும் அவை கிடைப்பதற்கான காரணத்தையும் அத்தகைய சூழ்நிலைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதனையும் காணலாம். This program is not responding End Now Cancel  நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் கம்ப்யூட்டருடன் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலை வருகையில் இந்த செய்தி கிடைக்கிறது. புரோகிராம் ஏதாவது ஒரு செயல்பாட்டில் கிராஷ் ஆகி இருக்கும். End Now / Cancelஎன இரு வழிகளுடன் உங்களுக்கு செய்தி கிடைக்கும். இது பொதுவாக பழைய கம்ப்யூட்டர்களில் ஏற்படும். புரோகிராமினைச் சிக்கலான செயல்பாட்டிற்கு உட்படுத்தி இருப்போம். அதற்கான செயல்வேகம் இல்லாத போது இந்த செய்தி கிடைக்கலாம். இந்நிலையில் Cancel  கிளிக் செய்து புரோகிராம் மீண்டும் இயங்குகிறதா எனப் பார்க்கலாம். அல்லது End Now கிளிக் செய்து புரோகிராமை மூடிப் பின் மீண்டும் இயக்கலாம். இவ்வாறு முடிக்கையில் நாம் கடைசியாக சேவ் செய்தவரையில் பைல் கிடைக்கும். சேவ் செய்யாமல் மேற்கொண்ட பணிகளை இழக்க வேண்டியது தான். 
Non system disk or disk error. Replace and press any key when ready.ஒரு கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திட அதற்கான டிஸ்க்கைக் கம்ப்யூட்டர் படிக்க இயலாத போது இந்த செய்தி கிடைக்கும். இது பெரிய தவறு இல்லை. நீங்கள் இதற்கு முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் இருந்து எடுக்காமல் விட்டிருப்பீர்கள். அப்படி இருந்தால் டிஸ்க்கை எடுத்துவிட்டு ஸ்டார்ட் செய்திடவும். இல்லை எனில் இது ஹார்ட் வேர் பிரச்னையாக இருக்கும். மின்சாரத்தை நிறுத்திவிட்டு கேபினைத் திறந்து அனைத்து கேபிள்களும் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா எனச் சோதித்து சரி செய்திடவும். பின் கம்ப்யூட்டரை இயக்கவும். மீண்டும் இயங்கவில்லை என்றால் கம்ப்யூட்டர் மெக்கானிக்கைக் கூப்பிடவும். 
An exception OE has occured அனைத்து புரோகிராம்களும் இயங்குவதற்கு மெமரி தேவைப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் தேவையான மெமரியை கம்ப்யூட்டர் வழங்குகிறது. ஆனால் ஒரு புரோகிராம் தனக்கு அனுமதி வழங்கப்படாத மெமரி இடத்தை ஆக்ரமிக்க முற்படுகையில் இந்த செய்தி கிடைக்கிறது. இந்த செய்தி அடிக்கடி கிடைத்தால் அண்மையில் இன்ஸ்டால் செய்த புரோகிராமை நீக்கிப் பார்க்கவும். அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால் அதனை முன்பிருந்தபடி அமைக்கவும். இதற்கு System Restore என்ற புரோகிராம் உங்களுக்கு உதவும். An error has occurred in your program. To keep working anyway, click ignore and save your work to a new file. To quit this program, click Close" இயக்கப்படும் புரோகிராமில் ஏதேனும் புரோகிராமிங் பிழை (bug)  இருப்பின் இந்த செய்தி கிடைக்கும். இந்த செய்தி காட்டப்பட்டாலும் அந்த புரோகிராமினை உங்களால் தொடந்து இயக்க முடியும். அப்படி விரும்பினால் Ignore  என்பதைக் கிளிக் செய்து தொடருங்கள். உங்கள் பணியை புதிய பெயருள்ள பைலில் சேவ் செய்திடுமாறு செய்தி கிடைத்துள்ளது. ஏற்கனவே நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற பைல் கெட்டுப் (corrupt)போயிருக்கலாம். எனவே புதிய பெயர் கொடுத்து சேவ் செய்து பணியைத் தொடரவும்.
Duplicate Name exists இது போன்ற செய்தி நெட்வொர்க்கில் பணியாற்றுகையில் வரும். நெட்வொர்க்கில் இணைந்துள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு பெயர் உண்டு. இல்லை எனில் கம்ப்யூட்டரை நெட்வொர்க்கில் இயக்க முடியாடு. இந்த செய்தி கிடைத்தால் ஏற்கனவே இதே பெயரில் இன்னொரு கம்ப்யூட்டர் அந்த நெட்வொர்க்கில் உள்ளது என்று பொருள். எனவே நீங்கள் இயக்க விரும்பும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டர் ஐகானை வலது புறமாகக் கிளிக் செய்து Computer Nameஎன்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Change  என்பதைக் கிளிக் செய்து கம்ப்யூட்டருக்குப் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து பின் ஓகே அழுத்தி வெளியில் வந்து கம்ப்யூட்டரைத் தொடர்ந்து இயக்கவும். A runtime error has occurred. Do you wish to debug? இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை இயக்குகையில் இந்த செய்தி கிடைக்கும். இது நீங்கள் இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் வெப் சைட் உருவாக்கத்தில் உள்ள பிழையினால் ஏற்படுவது. இதனால் சிறிதும் கவலைப்பட வேண்டாம்.debug  செய்வது என்பதெல்லாம் புரோகிராமர்கள் பார்க்க வேண்டிய சமாச்சாரம். இந்த மாதிரி செய்தி எல்லாம் பின் எனக்கு ஏன் வருகிறது என்று நீங்கள் கவலைப் பட்டால் இப்படிப்பட்ட செய்தி வருவதனைத் தடுத்துவிடலாம். Tools பிரிவு சென்று Internet Optionsகிளிக் செய்து பின் Advanced டேபைத் தேர்ந்தெடுக்கவும். பின் Browsing பிரிவில் Disable Script Debugging என்பதில் டிக் செய்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த பிழை செய்தி கிடைக்காது.The margins of section ... are set outside the printable area of the page. Do you want to continue? in Word  பல பிரிண்டர்கள் ஒரு தாளின் முழு அளவில் ஒரு பக்கத்தினை அச்சடிக்காது. மார்ஜின் ஸ்பேஸ் என்று சொல்லப்படும் நான்கு பக்க இட வெளி அச்சடிக்கத் தேவை. மேற்காணும் செய்தி மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் கிடைத்தால் No  என்பதில் கிளிக் செய்து பின் அந்த டாகுமெண்ட்டின் பேஜ் செட் அப் சென்று பார்த்து மார்ஜின் மற்றும் பேப்பர் அளவை மாற்ற வேண்டும். அச்செடுப்பதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ பார்த்தால் எந்த அளவில் பிரிண்ட் ஆகும் எனத் தெரியும். அதற்கேற்ற வகையில் அளவைச் சரி செய்து பின் பிரிண்ட் கொடுக்க வேண்டும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ராஜபட்ச போர்க் குற்றவாளி: திருமாவளவன்

 

சென்னை, அக். 19: இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
  மேலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் சார்பில் வரும் 22-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
  இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு தனது அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் அவதூறுக்கு மாறாக தமிழர்களின் அவல நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தியது.
  அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. மக்களிடையே மன அழுத்தங்களும், அச்சமும் மோலோங்கி நிற்கின்றன. கால் வயிற்று கஞ்சிக்காக கையேந்தி நிற்கிறார்கள். மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா '' என்று சிலர் கதறி அழுதனர்.
  2 பேர் மட்டுமே படுத்து எழக் கூடிய கூடாரங்களில் 10 பேர் வரை மனிதாபிமானமற்ற முறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டை சொற்களால் விவரிக்க முடியாது.
  இலங்கை ராணுவ ஆட்சியின் கொடுமைகளை எம்.பி.க்கள் குழு உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு இலங்கை அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளது.
  மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்காக உதவ வேண்டுமென்பது இன்றியமையாத ஒன்று. எனினும் இலங்கை இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அவசியம்.
பொருளாதார தடையும்...  எனவே இலங்கை இன வெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, ராஜபட்ச மற்றும் அவரது சகோதரர்களை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு உலக அளவில் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படுகிறது என திருமாவளவன் அதில் தெரிவித்துள்ளார்.
அதிருப்தி எதிரொலி:   இலங்கை சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுடன் திருமாவளவன் கைகுலுக்கியதையும், அவருடன் ஆலோசனை நடத்தியதையும் பல்வேறு தமிழ் அமைப்புகள் முன்னதாக குறைக்கூறி அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய ஒருவாரத்துக்கு பிறகு இத்தகைய அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.


source:dinamani


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

Back to TOP