சமீபத்திய பதிவுகள்

பெற்றோரை போல டாக்டராக விரும்புகிறேன்: பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 2-வது இடம்பபிடித்த மாணவன் பேட்டி

>> Thursday, May 8, 2008

திருச்செங்கோடு, மே. 9-

தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாண வன் தளபதி விக்ரம்குமார் 1181 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2-வது இடம் பிடித்துள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ் - 193

ஆங்கிலம் - 190

கணிதம் - 200

இயற்பியல் - 199

வேதியியல் - 199

உயிரியல் - 200

இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரிய குளம் தென்கரை ஆகும். தந்தை செல்வராஜ். தாய் இந்துமதி. இருவரும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். தளபதி விக்ரமிற்கு உடன்பிறந்த தம்பி உள்ளார். அவன் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாநிலத்தில் 2-வது இடம் பிடித்த மாணவன் தளபதி விக்ரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்தேன். அப்போது 1060 மதிப் பெண்கள் பெற்று மாநில அளவில் 5-வது இடம் பிடித்தேன். மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தேன். ஆனால் ஒருசில மதிப்பெண்களில் 5-வது இடத்திற்கு தள்ளப் பட்டேன்.

அதன்பின்னர் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்தேன். ஆனாலும் 2-வது இடமே கிடைத்துள்ளது. இருந்த போதிலும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கால்பந்து விளையாடுவதை 9-வது வகுப்பிலேயே நிறுத்தி விட்டேன். பொதுவாக இரவு 12 மணி வரை தொடர்ந்து படிப்பேன். அதன்பின்னர் தூங்கி விடுவேன். மீண்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன்.

நான் மாநில அளவில் 2-வது இடம் பிடிக்க வித்யா விகாஸ் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்கள், சென்னையில் ஆசிரியராக பணியாற்று என்னுடைய மாமா ஆகியோர் ஊக்கம் அளித்தனர்.

கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும். நான் எனது பெற்றோரைப் போல டாக்டராகி கிராம மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

பிளஸ்-2 தேர்வில் கணி தத்தில் 3852 பேர் 200 மார்க் எடுத்துள்ளனர்.

சென்னை, மே. 8-

பிளஸ்-2 தேர்வில் கணி தத்தில் 3852 பேர் 200 மார்க்
எடுத்துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவில் பல்வேறு பாடங்களில் மாணவ-மாணவிகள் 200-க் கும் 200 மார்க் வாங்கி உள் ளனர். அதில் 3852 பேர் கணிதத்தில் 200 மார்க் எடுத் துள்ளனர். கடந்த ஆண்டு 1568 பேர் மட்டுமே 200 மார்க் எடுத்திருந்தனர்.

இயற்பியலில் 282 பேரும் வேதியியல் 306 பேரும் உயி ரியலில் 153 பேரும், தாவர வியலில் 19 பேரும் 200 மார்க் வாங்கியுள்ளனர்.

பாட வாரியாக எத்தனை மாணவர்கள் 200 மார்க் எடுத்துள்ளனர் என்ற முழு விவரம் வருமாறு:-

கணிதம்- 3852

இயற்பியல்- 282

வேதியில்- 306

உயிரியல்- 153

தாவரவியல்- 19

விலங்கியல்- 1

கம்ப்ïட்டர்

விஞ்ஞானம்- 60

வணிகவியல்- 148

அக்கவுண்டன்சி- 739

வர்த்தக கணிதம்- 291

முதல் வகுப்பு

தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 722 பேர் 60 சதவீதத்துக்கு மேல் மார்க்குகள் வாங்கி முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளன

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=266153

StumbleUpon.com Read more...

பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகள்

முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகள்

சென்னை, மே. 9-

பிளஸ்-2 தேர்வில் பாட வாரியாக முதல் 3 இடங் களை பிடித்த மாணவ- மாணவிகள் வருமாறு:-

தமிழ்

தமிழ் பாடத்தில் நாமக்கல் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் தமிழில் எடுத்த மதிப்பெண் (198).

2-வது இடம்: மோகன பிரியா (197). சேரன் மெட்ரிக் குலேசன் பள்ளி, கரூர்.

3-வது இடம்: சரவண பிரியா (197). ஏஞ்சல் மெட்ரிக்குலேசன் பள்ளி, திருநின்றவூர்.

இயற்பியல்

1. ஆஷா (200). அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி, அண்ணாநகர், சென்னை.

2. மனோஜ்குமார் (200). எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ராசிபுரம்.

3. பல்லவி (200). டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபால புரம், சென்னை.

வேதியியல்

1. ஆஷா (200). அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி, அண்ணாநகர், சென்னை.

2. மனோஜ்குமார் (200). எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ராசிபுரம்.

3. பல்லவி (200). டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபால புரம், சென்னை.

உயிரியல்

1. மனோஜ்குமார் (200). எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ராசிபுரம்.

2. தினேஷ் (200). எஸ்.வி. மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

3. அருண் (200). செயிண்ட் ஜோசப்ஸ் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

தாவரவியல்

1. வீனா சங்கரி (200). எஸ்.பி.ஒ.ஏ. மெட்ரிக்குலே சன் பள்ளி, அண்ணா நகர் மேற்கு, சென்னை.

2. பூமிநாதன் (200). ஹாஜி பி.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

3. சமீதா ஆப்ரீன் (200). ï.எச்.ஒ. அரபிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளப் பட்டி, கரூர்.

விலங்கியல்

1. ஆல்பிரட் டேனியல் (200). ஸ்காட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி, நாகர் கோவில்.

2. அருண் (199). ஆக்ஸ் போர்டு மெட்ரிக்குலேசன் பள்ளி, வடசெம்பாளையம், விழுப்புரம்.

3. சமீதா ஆப்ரீன் (198). ï.எச்.ஒ. அரபிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளப் பட்டி, கரூர்.

கம்ப்ïட்டர் சயின்ஸ்

1. ஆஷா (200). அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன், அண்ணாநகர், சென்னை.

2. பல்லவி (200). டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபால புரம், சென்னை.

3. முரளி கிருஷ்ணன் (200). எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.

கணிதம்

1. ஆஷா (200). அண்ணா ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், சென்னை.

2. மனோஜ்குமார் (200). எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.

3. பல்லவி (200). டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபால புரம், சென்னை.

பொருளாதாரம்

1. பரனீஷ் (200). தி சபர்பன் மேல்நிலைப்பள்ளி, ராம்நகர், கோவை.

2. ஷிவானி ஷெட்டி (200). கோல்டன் கேட் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

3. பிராசி சேதியா (200). செயிண்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளி, திருப்பூர்.

வரலாறு

1. முருகானந்தம் (200). எம்.சி.என்.ï.வி.டி.ஏ. மேல் நிலைப்பள்ளி, சின்னையா புரம், விருதுநகர்.

2. இனியா (199). சேவா மந்திர் மேல்நிலைப்பள்ளி. பரங்கிபேட்டை, கடலூர்.

3. ரூபினி (198). ஸ்ரீ.கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை, தஞ்சாவூர்.

வணிகவியல்

1. ரேவதி (200). அரசு மேல்நிலைப்பள்ளி, தேக்களூர், திருப்பூர்.

2. செல்வி (200). செயிண்ட் அருளாண்டவர் மேல்நிலைப் பள்ளி, ஒரிïர், ராமநாத புரம்.

3. கனகா (200). டி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பெரம் பலூர்.

புள்ளியல்

1. சிவரஞ்சனி (200). எல்.எப்.சி. பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ராணிப் பேட்டை.

2. கார்த்திக் (200). பி.வி.பி. மெட்ரிக்குலேசன் பள்ளி, திண்டல், ஈரோடு.

3. துர்கேஸ்வரன் (200). பி.வி.பி. மெட்ரிக்குலேசன், திண்டல், ஈரோடு.

பூகோளம்

1. மகேஸ்வரி (196). அரசு பெண்கள் பள்ளி, தென்காசி.

2. அஜீசா பீவி (196). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தென்காசி.

3. கலா (195). கே.ஜி.கே.ஜி. வேதராண்யம், நாகப்பட்டி னம்.

நுண்ணுயிரியல்

1. ஸ்ரீலேகா (199). பெத்தல் மெட்ரிக்குலேசன், அயனா வரம், சென்னை.

2. சபீனா பர்ஜீன் (197). விவேகானந்தா மெட்ரிக்குலே சன், சீர்காழி, மயிலாடுத் துறை.

3. சத்யா (196). சாராள்டக்டர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை.

ஹோம் சயின்ஸ்

1. நளினி (197). ரனீஷ் மேல்நிலைப்பள்ளி, புதுக் கோட்டை.

2. வெரோனிகா பிரியங்கா லாய்ட் (195). சி.எஸ்.ஐ. பேய்ன் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை.

3. கீர்த்தனா (191). சி.எஸ்.ஐ. பேய்ன் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம், சென்னை.

அக்கவுண்டன்சி

1. பி. பிரனேஷ் (200). தி சபர்பன் மேல்நிலைப்பள்ளி, ராம்நகர், கோவை.

2. ஐஸ்வர்யா (200). அகோபில மடம் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

3. திவ்யா (200). ஜவகர் மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர், சென்னை.

ஆங்கிலம்

1. காயத்திரி (195). பரனி பார்க் மேல்நிலைப்பள்ளி, கரூர்.

2. லட்சுமி பவானி (194). பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.

3. விவேக் சித்தார்த்தன் (194). எஸ்.சி.ஐ. மேல்நிலைப் பள்ளி, பரங்கிமலை, சென்னை.

மலையாளம்

1. சுஜா (195). செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி, கே.கே. புதூர், கோவை.

2. லிஜி ஜேக்கப் (194). எட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வேயணூர், தக்கலை.

3. ரமிஷா (194). சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.

தெலுங்கு

1. வினோத்குமார் (185). அரசு மேல்நிலைப்பள்ளி, பாகலூர், ஓசூர்.

2. முனிராஜு (184). அரசு மேல்நிலைப்பள்ளி, பாகலூர், ஓசூர்.

3. பவ்யா (182). ஸ்ரீவிஜய் வி.பி. மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி.

பிரெஞ்சு

1. ஆஷா (198). அண்ணா ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், சென்னை.

2. சினேகா (198). சிருஷ்டி மேல்நிலைப்பள்ளி, பிரம்ம புரம், திருப்பத்தூர்.

3. ஷிவானி ஷெட்டி (198). கோல்டன் கேட் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

இந்தி

1. அம்ரீன் பேகம் (198). பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி, சென்னை.

2. விகாஷ் பேதலா (197). அகர்வால் வித்யாலயா மேல் நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை.

3. சித்தார்த் சதுர்வேதி (197). பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், சென்னை.

உருது

1. முகமது வாசிம் (197). இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி.

2. பஷீர் ரகுமான் (196). இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு.

3. அஸ்மாபானு (192). இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, மேலவிசாரம், வேலூர்.

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=266153

StumbleUpon.com Read more...

ஓடுங்கள் ஓடுங்கள் : உங்கள் மதத்தை விட்டு வேகமாக ஓடுங்கள்

ஓடுங்கள் முஸ்லீம்களே ஓடுங்கள் : இஸ்லாமை விட்டு வேகமாக ஓடுங்கள்

ஓடுங்கள் முஸ்லீம்களே ஓடுங்கள் : இஸ்லாமை விட்டு வேகமாக ஓடுங்கள்


( Run! Muslims, Run!! - Author: Sher Khan)
குர்‍ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் முஸ்லீம்களுக்கு சில வசனங்களை மேற்கோள் காட்டப்படும் போது, உடனே அவர்கள் அதற்கு சாக்கு போக்கு சொல்ல ஆரம்பிப்பார்கள். அதாவது, குர்‍ஆனின் மற்றும் ஹதீஸ்களின் சில குறிப்பிட்ட வசனங்களின் உண்மையான பொருளை முன்னால் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீமல்லாதவர்கள் சரியாக புரிந்துக்கொள்ள தவறுகிறார்கள் என்று அடிக்கடிச் சொல்வார்கள். இந்த முறை நான் இஸ்லாமிய போதனையின் வசனங்களுக்கு பொருள் சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக, முஸ்லீம்களின் புனித புத்தகங்களிலிருந்து சில வசனங்களை மேற் கோள் காட்டி, அந்த வசனங்களுக்கு முஸ்லீம்களின் ஆதாரபூர்வமான அறிஞர்கள் என்ன பொருள் கூறியிருக்கிறார்கள் என்றுச் சொல்லப்போகிறேன்.


முடிவிலே, அவர்களிடம் ஒரே ஒரு சுலபமான கேள்வியை மட்டும் கேட்க விரும்புவேன்.Quote:
4:24 இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.


YUSUFALI மொழிபெயர்ப்பு: Quran 004.024 Also (prohibited are) women already married, except those whom your right hands possess: Thus hath Allah ordained (Prohibitions) against you: Except for these, all others are lawful, provided ye seek (them in marriage) with gifts from your property,- desiring chastity, not lust, seeing that ye derive benefit from them, give them their dowers (at least) as prescribed; but if, after a dower is prescribed, agree Mutually (to vary it), there is no blame on you, and Allah is All-knowing, All-wise.


PICKTHAL மொழிபெயர்ப்பு: And all married women (are forbidden unto you) save those (captives) whom your right hands possess. It is a decree of Allah for you. Lawful unto you are all beyond those mentioned, so that ye seek them with your wealth in honest wedlock, not debauchery. And those of whom ye seek content (by marrying them), give unto them their portions as a duty. And there is no sin for you in what ye do by mutual agreement after the duty (hath been done). Lo! Allah is ever Knower, Wise.


SHAKIR மொழிபெயர்ப்பு: And all married women except those whom your right hands possess (this is) Allah's ordinance to you, and lawful for you are (all women) besides those, provided that you seek (them) with your property, taking (them) in marriage not committing fornication. Then as to those whom you profit by, give them their dowries as appointed; and there is no blame on you about what you mutually agree after what is appointed; surely Allah is Knowing, Wise.


Dr. MUHAMMAD TAQI-UD-DIN AL-HILALI and Dr. MUHAMMAD MUHSIN KHAN மொழிபெயர்ப்பு :Also (forbidden are) women already married, except those (captives and slaves) whom your right hands possess. Thus has Allâh ordained for you. All others are lawful, provided you seek (them in marriage) with Mahr (bridal money given by the husband to his wife at the time of marriage) from your property, desiring chastity, not committing illegal sexual intercourse, so with those of whom you have enjoyed sexual relations, give them their Mahr as prescribed; but if after a Mahr is prescribed, you agree mutually (to give more), there is no sin on you. Surely, Allâh is Ever AllKnowing, AllWise.


-----Tafsir Ibn Kathir Starts -------


இபின் கதீர் அவர்களின் தஃப்சீர்(உரை):


அல்லா சொன்னான்:Quote:
(இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.)இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால், ஏற்கனவே திருமணமான பெண்களை நீங்கள் திருமணம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.Quote:
(இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர,)போரில் பிடிப்பட்டு உங்கள் ஆதரவில் இருக்கும் கர்ப்பமாக‌ இல்லாத பெண்களைத் தவிர, என்று பொருள் ஆகும்.அபு சையத் அல் குட்ரி சொன்னதாக, இமாம் அஹமத் பதித்த ஹதீஸ்:


"ஏற்கனவே திருமணமான சில பெண்களை நாங்கள் ஔடாஸ் என்ற இடத்தில் பிடித்தோம், நாங்கள் அவர்களோடு உடலுறவு கொள்ள விரும்பவில்லை, காரணம் அவர்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் ஆனதால். எனவே, இதைப் பற்றி நபி அவர்களிடம் நாங்கள் கேட்டோம், அப்போது இந்த வசனம் இறங்கியது. "இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது."


Quote:
Imam Ahmad recorded that Abu Sa`id Al-Khudri said, "We captured some women from the area of Awtas who were already married, and we disliked having sexual relations with them because they already had husbands. So, we asked the Prophet about this matter, and this Ayah was revealed,
(Also (forbidden are) women already married, except those whom your right hands possess).இந்த வசனத்தின் அடிப்படையில் நாங்கள் அந்த பெண்களோடு உடலுறவு கொண்டோம். இந்த ஹதீஸ் அல்‍திர்மிதி, அன் நசய், இபின் ஜரிர் மற்றும் முஸ்லீம் போன்றவர்களால் தொகுக்கப்பட்டது.மேலும் அல்லாவின் வசனம் சொல்கிறது:


Quote:
(இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்.இதன் பொருள் என்னவென்றால், இந்த நியதி அல்லாவினால் உங்களுக்காக உண்டானது. எனவே, அல்லாவின் புத்தகத்திற்கு கீழ்படியுங்கள், அவர் விதித்த வரம்பை மீறாதீர்கள், மற்றும் அவரது சட்டத்திற்கு கீழ்படியுங்கள்.


Source: Tafsir Ibn Kathir, Abridged by a group of scholars under the supervision of Shaykh Saifur-Rahman Al-Mubarakpuri, Published by Darussalam, Riyadh, Saudia Arabia.

-----Tafsir Ibn Kathir Ends -------


சஹி முஸ்லீம் ஹதீஸ் ஆதாரம்:


Quote:
அபு ஸையத் அல்குத்ரி சொன்னார்: ஹுனைன் யுத்தத்தின் போது, அல்லாவின் தூதர், அடஸ் என்ற இடத்திற்கு இராணுவத்தை அனுப்பி எதிரிகளோடு சண்டையிட்டார். அந்த எதிரிகளை போரில் தோற்கடித்து அவர்களை அடிமைகளாக பிடித்துக்கொண்டனர். அல்லாவின் தூதரின் தோழர்கள் பிடிக்கப்பட்ட பெண்களோடு உடலுறவு கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால், அப்பெண்களின் கணவர்கள் ப‌ல தெய்வங்களை வணங்குபவர்களாக இருந்ததால். அப்போது அல்லா மிகவும் உயர்ந்தவர், இந்த வசனத்தை வெளிப்படுத்தினார்: உங்கள் வலதுகை சொந்தமாக்கப்பட்ட பெண்களைத் தவிர, திருமணமான பெண்கள் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது (அப்பெண்களின் "இத்தா" காலம் முடிந்தபிறகு அவர்களோடு நீங்கள் உறவுகொள்ளலாம்) (குர்‍ஆன் 4:24)Quote:
Sahih Muslim: Book of Marriage: "Abu Said Al-khudri narrated that at the Battle of Hunain, the Mesenger of Allah sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them as captives, the Companions of the Messenger of Allah seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, the most High, revealed: "And women already married, except those whom your right hands possess..." (i.e., they were lawful for them when their Iddah period came to an end.)"(Quran 4:24)

Source: Sahih Muslim, compiled by Al-Hafiz Zakiuddin Abdul-Azim Al-Mundhiri, published by Darrussalam Publishers, Riyadh, Saudi Arabiaஇந்த மேலே சொல்லப்பட்ட வசனங்கள் இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மதத்தின் போதனைகள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். மற்றும் நீங்கள் ஒரு முஸ்லீமாக 7ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் போரில் அவர்கள் (இஸ்லாமியர் அல்லாத மதத்தவர்கள்) பிடித்துக்கொண்டு சென்றுள்ளார்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்:உங்களை அவர்கள் சங்கிலிகளால் கட்டி, உங்கள் கண்களுக்கு முன்பாக உங்கள் மனைவியையும், சகோதரியையும் அல்லது உங்கள் தாயையும் அந்த மக்கள் கற்பழித்துக்கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டு ரசிப்பீர்களா?


இந்த கேள்விக்கான பதில் "ஆம்" என்று இருக்குமானால், உண்மையாகவே நீங்கள் தான் உண்மையான முஸ்லீம்.

ஒருவேளை உங்கள் பதில் "இல்லை" என்று இருக்குமானால்...

ஓடுங்கள்! முஸ்லீம்களே ஓடுங்கள்!

உங்களால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக இஸ்லாமை விட்டு ஓடுங்கள்
.Quote:
Would you enjoy watching your wife, sister or mother being raped by her captors, while you are shackled with a chain nearby?

If an answer to the question is yes, you surely are a perfect Muslim.

However, if your answer is no:

Run! Muslims, Run!!

Run away from Islam as fast as you can.

Source: http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1878

Source: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=16186#16186

StumbleUpon.com Read more...

இணைய தளத்தில் பிளஸ் 2 முடிவுகள்
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/09/001/09_05_2008_001_013.jpg

StumbleUpon.com Read more...

ரஷ்யாவுக்காக விண்ணில் பறந்த நாய்

லைக்கா'... இந்தப் பெயரைக் கேட்டதும் ஏதாவது தோன்றுகிறதா... பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்தும் போது நன்றாக கவனித்திருந்தால் நிச்சயம் நினைவுக்கு வரும்... சரி மூளையை கசக்காதீர்கள்... 'லைக்கா'... விண்வெளியில் அனுப்பப்பட்ட முதல் உயிரினமான பெண் நாயின் பெயர்.

கடந்த 1957ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி 'ஸ்புட்னிக்-2' என்ற உலகின் 2வது செயற்கைக்கோள் மூலம் லைக்கா விண்ணில் பயணித்தது. வான்வெளியில் பயணித்த முதல் உயிரினம் என்ற பெருமையை பெற்ற லைக்கா, ஒரு சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது.

பிராணவாயு பற்றாக்குறை காரணமாக லைக்கா இறந்ததாக அப்போது தெரிவித்த ரஷ்ய அரசு, கடந்த 2002 அக்டோபரில் லைக்காவின் மரண சாசனத்தை திருத்தி வெளிட்டது... "லைக்கா பிராணவாயுக் குறைபாட்டால் இறக்கவில்லை, விண்வெளியின் வெப்பம் தாளாமலே உயிரிழந்தது" என்று.

FILE

இப்படி வீர மரணம்(!) அடைந்த லைக்காவுக்கு ரஷ்ய அரசு கடந்த ஏப்ரல் 11ம் தேதி சிலை வைத்துள்ளது. மாஸ்கோ நகரில் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோள் ஏவப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள ராணுவ ஆராய்ச்சி நிலையத்தில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது இந்த ஆளுயர சிலை. இதன் உயரம் மிகத் துல்லியமாக 2 மீட்டர் (படத்தைப் பார்த்து நீங்களை அளந்து கொள்ளுங்கள்).

கடந்த காலத்தில் வல்லமை படைத்த வல்லரசு யார் என்பதில் ரஷ்யா, அமெரிக்கா இடையே குடுமிப்பிடி சண்டை. விண்வெளியில் கால் பதிக்க வேண்டும், அங்கும் தத்தமது நாட்டின் கொடிகளை பறக்க விட வேண்டும் என 2 நாடுகளுமே கங்கணம் கட்டிக் கொண்டு யோசித்தன. இதன் விளைவாகவே உலகின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

சரி காலண்டரை கொஞ்சம் பின்னோக்கி திருப்புவோம்.... ஆண்டு 1957... மாதம் அக்டோபர்... ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையிலும் அதி தீவிரமாக மூழ்கியிருந்த சமயம். அந்நாட்டின் ராணுவ விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் பாம் தயாரிக்கும் பணியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டிருந்தனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ரஷ்யாவின் வி-7 ஏவுகணையை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையாக பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டிருந்தது. அப்போது தான் அந்நாட்டின் தலைமை விஞ்ஞானியான கொரோலெவ்-க்கு அந்த யோசனை தோன்றியது.

உடனே அதனை அப்போதைய அதிபர் குருஷேவின் காதில் கசிய விட்டார். இதன் விளைவாகவே
FILE

உலகின் முதல் செயற்கைக்கோள் உருவானது.


கொரோலெவ் யோசனை... வி-7 ஏவுகணையை பயன்படுத்தி உலகின் முதல் செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என்பது தான். அவரின் யோசனைப்படியே கடந்த 1957ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஸ்புட்னிக்கை ரஷ்ய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவினர். இதுவே விண்வெளி போட்டியிலும் செம்படையின் ஆதிக்கத்திற்கு ஆனா, ஆவன்னா எழுதும் சம்பவமாக அமைந்தது.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0804/23/1080423035_1.htm

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் - 6 ராணுவத்தினர் பலி

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் - 6 ராணுவத்தினர் பலி

Air Tigers With Prabhakaran

கொழும்பு: இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடைய கடும் சண்டை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 165 இலங்கை ராணுவத்தினரை கொன்றதாக புலிகள் தெரிவித்தனர். ஆனால் அரசுத்தரப்பில் 48 பேர் உடல் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் 39 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை வெலிஓயா பகுதியில் இன்று அதிகாலையில், விடுதலைப் புலிள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கை படைகளுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் 2 போர் விமானங்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மொத்தம் 3 குண்டுகளை ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் போட்டுள்ளனர்.

இதில் 6 பேர் பலியானதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவத் தரப்புக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீப காலமாக விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் புலிகள் இருந்து வந்த நிலையில் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் செக் நாட்டின் சிறிய ரக போர் விமானங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த விமானப்படை தாக்குதலில் இறங்கியது. இதுவரை 5 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி அனுராதபுரம் விமான தளத்தின் மீது தாக்குதல் நடந்தது.

அதன் பின்னர் விமானப் படைத் தாக்குதல் நடக்காமல் இருந்தது. இடையில், விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை முற்றிலும் அழித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்தது.

ஆனா ல்தற்போது மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியிருப்பது இலங்கை ராணுவத்தை அதிர வைத்துள்ளது. அதிலும் இந்த முறை நடந்த தாக்குதல் குறி தவறாமல் இருந்ததாக ராணுவமே கூறியுள்ளதால் புலிகளின் விமான பலம் இன்னும் குறையவில்ைல என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

மேலும் மணலாறு பகுதியில் ராணுவம் நுழைய முயன்றதையும் விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பகுதியில் ராணுவத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சண்டையில் பாலம்பிட்டி, தட்சணமாறாதமடு ஆகிய இடங்களில் 8 போராளிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வவுனியா மற்றும் மேற்கு வெலிஓயாவில் நடந்த மோதலில் 10 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் மன்னார் பகுதியில் பரப்பகந்தல் என்ற இடத்தில் 4 புலிகளை கொன்றதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த 1 வருடமாக மணலாறு பகுதி வழியாக விடுதலைப்புலிகள் முகாம்களுக்குள் ராணுவத்தினர் முயற்சித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


http://thatstamil.oneindia.in/news/2008/04/27/lanka-22-tigers-killed-in-lanka-clashes-army.html

StumbleUpon.com Read more...

தமிழ் ஈழ பெருந்தலைவர் பிரபாகரன் "ஒத்தைக்கு ஒத்தை" சண்டைக்கு வர வேண்டும்-ராஜபக்சே சவால்!!

'ஒண்டிக்கு ஒண்டி'- பிரபாகரனுக்கு ராஜபக்சே சவால்!!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgets

கொழும்பு: என்னுடன் நேருக்கு நேர் சண்டை போட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தயாரா என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நூதன சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது நடைபெற்று வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் என்ற இடத்தில் ஆளும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராஜபக்சே பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் கொன்று குவித்து வருகின்றனர். பிரபாகரன் இதைக் கைவிட வேண்டும். வேண்டுமானால் என்னுடன் நேருக்கு நேர் சண்டை போடட்டும். அதற்கு அவர் தயாரா?

கிழக்குப் பகுதியை தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து விட்டோம். இப்போது அங்கு தேர்தல் நடைபெறப் போகிறது. அதேபோல வடக்கையும் மீட்டு அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோம்.

கிழக்கில் அமைதியில்லாமல் போனதற்கு யார் காரணம் என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும். அங்கு மசூதியில் தொழுகை நடத்திய 160 பேரை கொன்று குவித்தனர்.

அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளிலிருந்து அரசு ஒருபோதும் பின்வாங்காது என்றார் ராஜபக்சே


http://thatstamil.oneindia.in/news/2008/05/08/lanka-rajapakse-dares-prabhakaran-to-fight.html

StumbleUpon.com Read more...

பாரதியாரின் அபூர்வ கடிதங்கள் வெளியீடு

பாரதியாரின் அபூர்வ கடிதங்கள் வெளியீடு
Bharathiyar
மஹாகவி பாரதியார்
இந்து பத்திரிகையில், பாரதியார் எழுதிய கடிதங்கள் மற்றும் கட்டுரைகள், ' இந்து நாளிதழில் பாரதியார் எழுத்துக்கள்' என்ற பெயரில் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்து பத்திரிகை ஆசிரியருக்கான 16 கடிதங்கள், இரண்டு பகிரங்கக் கடிதங்கள் மற்றும் இரண்டு கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கடிதங்கள் பாரதியாரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறுகிறார் இந்த நூலைத் தொகுத்துள்ள வெங்கடாச்சலபதி.

தேச விடுதலை, தாய்மொழிக் கல்வி போன்ற விடயங்களை இந்த ஆக்கங்களில் பாரதியார் வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாரதியாரின் இந்த கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் குறித்த வெங்கடாச்சலபதி அவர்களின் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2008/04/080421_bharathiletters.shtml

StumbleUpon.com Read more...

உயிர் வாழுவதற்காக உடலை விற்று பிழைக்கும் ஈராக் பெண்கள்

உயிர் வாழ உடல் விற்றல்
Iraqi girls in at a night club in Damascus
பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் இராக்கியப் பெண்கள் பலர் இளம் பிராயத்தினர்
யுத்தம் காரணமாக இராக்கிலிருந்து வெளியேறி சிரியாவில் ஏழ்மையில் வாடும் இராக்கிய அகதிகள் பிழைப்புக்காக பாலியல் தொழிலில் இறங்கிவரும் அவலநிலை குறித்த அலசல்.

Survival Sex, உய்தலுக்காக பாலியல் தொழில் என்கின்ற இந்தப் பதம்தான் இராக்கில் இருந்து வந்து சிரியாவில் தங்கியிருக்கின்ற அகதிகளைக் கையாள்கின்ற தொண்டு நிறுவன அதிகாரிகளால் தற்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும்.

சில அகதிக் குடும்பங்கள் உணவுக்காக, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் எந்த அளவுக்கு ஈடுபடுகிறார்கள் என்பதை விபரிப்பதற்காக இந்தப் பதம் அங்கு பயன்படுத்தப்படுகின்றது.

15 லட்சம் இராக்கியர்கள் தற்போது சிரியாவில் வாழ்கிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் அண்மைய வருடங்களில் ஏற்பட்ட மோதல்களால் இடம்பெயர்ந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்களாவர்.

இவர்களில் எத்தனைபேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்த சரியான புள்ளிவிபரங்கள் இல்லாதபோதிலும், தற்போது அதிகரித்து வரும் கவலைகளுக்கான ஒரு முக்கிய காரணமாக இந்த விவகாரம் திகழ்வதாக டமாஸ்கஸில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2008/04/080418_survivalsex.shtml

StumbleUpon.com Read more...

தமிழ் பெயரில் லண்டனில் ஓட்டல்-சிறந்த உணவு விடுதியாக தேர்வு


தமிழ் பெயரில் லண்டனில் ஓட்டல்
சிறந்த உணவு விடுதியாக தேர்வு


லண்டன், மே.8-

டெல்லியை சேர்ந்த ரோஹித் கட்டார் என்பவர் லண்டனில் பல்வேறு பெயர்களில் ஓட்டல்களை நடத்தி வருகிறார். அவற்றில் ஒன்றுக்கு தாமரை என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த ஓட்டலில் அனைத்து ஆசிய நாடுகளின் உணவு வகைகளும் கிடைக்கும். இரவு நேர கிளப்பும், கலைக்கூடமும் உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஓட்டல் லண்டனின் சிறந்த இரவு நேர உணவு விடுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த தேர்வு எங்கள் குழுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அந்த ஓட்டலின் பொதுமேலாளர் அன்ஷுமன் சக்ஷேனா தெரிவித்தார்.

http://dailythanthi.com/article.asp?NewsID=411402&disdate=5/8/2008

StumbleUpon.com Read more...

கார் ஓட்டும் 3 வயது சிறுமி


கார் ஓட்டும் 3 வயது சிறுமி


பல்கேரியா நாட்டில் பேலி லோம் நகரைச் சேர்ந்தவர் ஜ×ர்செல். 27 வயதான இவருக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவள் பெயர் கரோலினா. அவர் காரை விட்டு இறங்கி பொருள்கள் வாங்குவதற்காக சென்றபோது சிறுமி கரோலினா காரில் டிரைவர் இருக்கையில் ஏறி உட்கார்ந்து கொண்டு என்ஜினை ஆன் செய்தாள். எஸ்கலேட்டரில் காலை வைத்து அழுத்தி காரை ஓட்டத்தொடங்கினாள். அவள் மார்க்கெட் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிச் சென்றாள். அவளுடன் காரில் அவளது பெரியம்மாவின் 4 மற்றும் 6 வயது மகள்கள் இருந்தனர்.

காரை அவள் ஓட்டிச்சென்று வழியில் குறுக்கிட்ட ஆற்றில் இறக்கி விட்டாள். தண்ணீருக்குள் சென்றதும் கார் நின்றுபோய் விட்டது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் சிறுமிகளை காரில் இருந்து காப்பாற்றினார்கள். இதில் யாரும் காயம் அடையவில்லை.

http://dailythanthi.com/article.asp?NewsID=411404&disdate=5/8/2008

StumbleUpon.com Read more...

தேர்தல் செலவுக்கு ஹிலாரி ரூ. 26 கோடி கடன் வாங்கினார்

வாஷிங்டன், மே. 8-

அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயக கட்சி வேட் பாளருக்கான தேர் தலில் ஹிலாரி போட்டியிடுகிறார். அவருக்கும், ஒபாமாவுக் கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. யார் வெற்றி பெறுவார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இழுபறி நிலைமை நீடிக்கிறது.

இதில் எப்படியாவது வெற்றி பெற்று அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஹிலாரி தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதற்காக தீவிர பிரசா ரத்தில் அவர் இறங்கினார். பிரசார செலவுக்கு பணம் இல்லாமல் பாங்கியில் ஏராளமாக கடன் வாங்கி உள்ளார். கையில் இருந்த பணத்தை செலவு செய்தது போக ரூ. 26 கோடி கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

ஏப்ரல் 11-ந்தேதி ரூ. 20 கோடியும், மே 1-ந்தேதி 4 கோடியும், அதன் பிறகு ரூ. 2 கோடியும் கடன் வாங்கி இருக்கிறார். இன்னும் 6 மாகாணங் களில் தேர்தல் நடக்க வேண்டியது இருக்கிறது. அதற்கும் அதிக பணம் செல வாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

ஹிலாரி தேர்தல் பிரசாரம் தொடங்கும் போது ரூ. 120 கோடி பிரசாரத்துக்காக வைத்து இருந்தார். அவை அனைத்தும் ஏற்கனவே செலவாகி விட்டது. தேர்தல் செலவுக்காக பணத்தின் ஒரு பகுதியை நன்கொடை மூலமும், இசை நிகழ்ச்சிகள் நடத்தியும் அவர் திரட்டினார்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

சமீபகாலமாக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவ, மாணவியர் கொலை செய்யப்படுகிறார்கள்-அதிர்ச்சி தகவல்

ஆந்திர மருத்துவ மாணவி பிரிட்டனில் படுகொலை
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgets

Jyotirmayi
லண்டன்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஜோதிர்மயி, இங்கிலாந்தில் படுகொலை செய்யப்பட்டார்.

விஜயவாடா, லம்பாடிப்பேட்டையைச் சேர்ந்த நாக சாய்பாபா மற்றும் நாகராஜகுமாரி தம்பதியினரின் மகள் ஜோதிர்மயி. இவர் இங்கிலாந்தின், பிர்மிங்ஹாமில் உள்ள உல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து வந்தார்.

அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரும், மேலும் இரு மாணவிகளும் தங்கியிருந்தனர். இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் ஜோதிர்மயி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவருக்கு அருகில் ஒரு இளைஞர் மயக்க நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று, ஜோதிர்மயியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிக் கிடந்த இளைஞரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜோதிர்மயியைக் கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. மயங்கிக் கிடந்த இளைஞர் உடல் நலம் தேறிய பின்னரே அவரிடம் விசாரிக்க முடியும்.

கொலை நடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டுக்கு ஆந்திராவைச் ேசர்ந்த நான்கு மாணவ, மாணவியர் வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விஜயவாடாவில் உள்ள விஜயா மருத்துவ அறிவியல் கழகத்தில் பிசியோதெரப்பியில் இளநிலைப் படிப்பை முடித்த ஜோதிர்மயி, 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் படிப்புக்காக லண்டன் சென்றார்.

ஜோதிர்மயியின் படுகொலை அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவ, மாணவியர் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாணவி படுகொலை செய்யப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.


http://thatstamil.oneindia.in/news/2008/05/08/world-woman-medico-from-india-killed-in-uk.html

StumbleUpon.com Read more...

அப்பரண்டீஸ் அர்ச்சகர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்

முதல் ஹோமத்தை நடத்திய ஸ்ரீரங்கம் பயிற்சி அர்ச்சகர்கள்


ஸ்ரீரங்கம்: தமிழக அரசின் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சியை மேற்கொண்ட முதல் பேட்ச் அர்ச்கர்கள், ஸ்ரீரங்கம் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.

தமிழக அரசு அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி வைணவ மத பூஜை முறைகள் குறித்து ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

திருச்சியில் நடந்து வந்த இந்த ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பின் முதல் பேட்ச் வகுப்பு முடிவடைந்துள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சி அர்ச்சகர்கள், நேற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீ கட்டழகிய சிங்கர் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியின்போது ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உடன் இருந்தார்.

மொத்தம் 30 பயிற்சி அர்ச்சகர்கள், ஸ்ரீசுதர்சன ஹோமத்தை முதன் முதலில் நடத்தினர். தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு பிரிவுகளாக பிரிந்து இந்த பயிற்சி ஹோமம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் 2 மணி நேரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை இணை இயக்குநரும், ரங்கநாதசுவாமி கோவில் செயல் அதிகாரியுமான கவிதா கூறுகையில், இந்த மாத இறுதியில் பயிற்சி அர்ச்சகர்கள் எழுத்துத் தேர்வை எழுதவுள்ளதாக தெரிவித்தார்.


http://thatstamil.oneindia.in/news/2008/05/08/tn-trainees-perform-homam-in-tn.html

StumbleUpon.com Read more...

ஆங்கிலம் தெரியாதவர்கள் தயவு செய்டு இனிமேல் இங்கு வரவேண்டாம்

ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை!

லண்டன்: போதிய ஆங்கில அறிவு இல்லாமல் யாரும் இனிமேல் இங்கிலாந்துக்குச் செல்ல முடியாது. குறிப்பாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இங்கிலாந்துக்குள் வர முடியாது என அந்த நாட்டு அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்குள் வர விரும்புவோருக்கு புதிய சட்ட திட்டங்களை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டால் இனிமேல் இங்கிலாந்துக்குள் நுழைய முடியாதாம். இந்தப் புதிய உத்தரவின் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் வெளிநாட்டினரை தடுக்க முடியும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.

இந்த புதிய விதிமுறைக்கு சர்வதேச விளையாட்டு வீரர்களும் விதி விலக்கல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் பெரும் பாதிப்படைவார்கள் என்று கருதப்படுகிறது.

குறிப்பாக பிரேசில் நாட்டு கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ, அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. எனவே இவர்களால் இங்கிலாந்துக்குள் நுழைவது இயலாத காரியமாகியுள்ளது.

யாருக்காகவும் இந்த விதிமுறையை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் இங்கிலாந்து தெளிவுபடுத்தியுள்ளது.

சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால்தான் இங்கிலாந்துக்குள் இனி நுழைய முடியும் என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளதால், பல நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டு அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்படலாம் என கருதப்படுகிறது.

இந்தப் புதிய விதிமுறையை இங்கிலாந்து நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் லியாம் பைர்ன் நேற்று அறிமுகப்படுத்தினார்.


http://thatstamil.oneindia.in/news/2008/05/08/world-ronaldinho-may-be-debarred-from-british-visi.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP