சமீபத்திய பதிவுகள்

முள்வலி:ஒரு ரத்தப் பதிவு

>> Wednesday, October 28, 2009

 

க்டோபர் மாதம் 8--ம் தேதி. சிதம்பரம் தொகுதியில், இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு முகாம், மாணவர்களுக்குக் கட்டணமில்லா நடமாடும் கணினிப் பயிற்சியகம் ஆகிய வற்றின் தொடக்க விழா. மேடையில் தம்பிகளின் வழக்கமான நெரிசலில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தேன். கூட்டத்தின் இரைச்சலில் என் கைபேசி ஒலித்தது, சரியாகக் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து அந்தத் தகவல் அவசரமாக என்னிடம் வந்து சேர்ந்தது. 'தமிழக முதல்வர் கலைஞர் பேச விரும்புகிறார்' என்று சொன்னார்கள். என்னவோ ஏதோ என்கிற பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. அவரோடு பலமுறை நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் என்றபோதிலும் அப்போதிருந்த சூழ்நிலையில் என் படபடப்புக்கு ஒரு காரணம் இருந்தது.

ஆகஸ்ட் 17 அன்று எனது பிறந்த நாளில் வாழ்த்து பெற கலைஞரைச் சந்தித்திருந்தேன். அந்த நாளை 'எழும் தமிழீழம்' என்ற தலைப்பில் ஒரு மாநாடாக ஒழுங்கமைத்திருந்தோம். அந்த மாநாட்டையட்டி தமிழகமெங்கும் மேதகு பிரபாகரன் படம் பொறித்த விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. காவல் துறையினர் அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தினர். சுவர் விளம்பரங்களையும்கூட அவர்கள் விட்டுவைக்க வில்லை. அன்று, நான் வந்திருப்பது வாழ்த்துப் பெறு வதற்கு என்று தெரிந்திருந்தாலும், முதல்வர்


என்னைக் கடிந்துகொள்ளத் தயங்கவில்லை. அவர் என்மீதும் விடுதலைச் சிறுத்தைகளின் மீதும் அக்கறை கொண்டவர்தான். அந்த உரிமையோடு கண்டிக்கிறார் என புரிந்ததால், நான் அதை நெருடலின்றி ஏற்றுக்கொண்டேன். விமர்சித்த கையோடு எனக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளித்து வாழ்த்தவும் செய்தார் முதல்வர். அதன்பிறகு ஒருசில வாரங்கள் இடைவெளி விழுந்திருந்தது. தி.மு.க-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான உறவு குறித்து ஊடக வட்டாரங்களில் வெவ்வேறு விதமான செய்திகளும் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில்தான் முதல்வர் பேச விரும்புகிறார் என்கிற தகவல் வந்தது. அதனால்தான் அந்த மெல்லிய தயக்கம்.

தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வரோடு தொடர்புகொண்டபோது மிகவும் இயல்பாகவே பேசினார். இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காலையில் தம்மிடம் பேசியதாகச் சொன்னார். மறுபடி எனக்குள் தயக்கம். அக்டோபர் 6 அன்று கடலூரில் நடந்த கடனுதவி வழங்கும் விழா ஒன்றில் அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் பேசியது என் நினைவுக்கு வந்தது. கடலூர் நிகழ்ச்சியில், ''எனக்கும் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கும் இடையில் ஒரே ஒரு முரண்பாடு தான் உண்டு. அது என்னவென்றால், நான் தீவிரமாய் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன். அவர் தீவிரமாய் எதிர்ப்பார். அவ்வளவுதான்!'' என்று நான் பேசியிருந்தேன். ''உள்துறை அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிப் பேசலாமா? உங்கள் உறவு பாதிக்காதா?'' என்று அப்போதே ஊடகவிய லாளர்கள் கேட்டனர். அது தொடர்பாக, ப.சிதம்பரமோ கே.எஸ்.அழகிரியோ மனக்குறையாக ஒன்றும் சொல்லவில்லை. எனினும் 'முதல்வரிடத்தில் அதுகுறித்துப் பேசியிருப்பாரோ, அதைப் பற்றித்தான் முதல்வர் ஏதோ பேசப் போகிறாரோ' என்றெல்லாம் அந்த ஒரு நொடியின் பின்னப் பொழுதில் எண்ண அலைகள் பரவின.

ஆனால், அவர் அதைப்பற்றியும் கேட்கவில்லை. ''வரும் 10-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை செல்வது சம்பந்தமாக ப.சிதம்பரம் என்னிடம் பேசினார். அதன்படி, தி.மு.க-வில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கிறார்கள். தி.மு.க-வில் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெறுகிறார்கள்... தி.மு.க. சார்பில் இடம்பெறும் ஆறாவது உறுப்பினர் யார் தெரியுமா?'' என்று திடீரென ஒரு புதிரைப் போட்டார்.

அவர் என்னைச் சொல்கிறார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. என்னை இந்தக் குழுவில் இணைப்பதில் அவருக்குப் பல சங்கடங்கள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் என்னைச் சொல்கிறார் என்று அப்போது யூகிக்கவில்லை. ஆனால், அவர் என் பெயரைத்தான் சொன்னார், ''இலங்கை செல்லும். தி.மு.க. குழுவின் ஆறாவது உறுப்பினர் திருமாவளவன்!'' என்று சொல்லிச் சிரித்தார்!

கிடைத்திருப்பது அரிய வாய்ப்பு என்று பளிச்செனப் புரிந்தது. மனம் நெகிழ்ந்தது. பற்றி எரிந்துகொண்டிருந்த அடிவயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. 'உன்னை வேறு ஒரு கட்சியின் உறுப்பினராய்ப் பிரித்துப் பார்க்காமல் எங்களில் ஒருவனாகவே கருதுகிறோம்' என்று முதல்வர் கூறியதில் இருந்த நெருக்கமும் தோழமையும் புரிந்தது. ஆனாலும் இன்னொரு செய்தியை அழுத்தமாகக் கூறினார் -

''நல்ல பிள்ளையாகப் போய்விட்டுத் திரும்ப வேண்டும்!''

வாய்ப்பு பெரியது. அவர் சொன்ன தன் பொருளையும் நான் யூகித்துக்கொண்டேன். அங்கே நடக்கும் சந்திப்புகளின்போது யாருக்கும் எந்தவொரு சங்கடமும் நேராத வகையில் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்... அங்கே என்ன நடந்தாலும் உணர்ச்சிகள் கட்டுமீறிப் போகவிடக்கூடாது! அதுதானே..?

2004-ம் வருடம் இதே இலங்கை மண்ணுக்கு நெஞ்சுகொள்ளாத பெருமையோடு சென்ற நினைவுகள் என்னை உடனே ஆக்கிரமித்தன. அங்கே ஒரு இணையற்ற தலைவனுடன் அமர்ந்து, இலங்கைத் தமிழினத்தின் எதிர்காலம் குறித்து நடத்திய கனமான விவாதங்கள் வந்து அலையாக மோதின. அன்றைக்கு என் சொந்தங்களைக் காண உயிரைப் பணயம் வைத்து செய்த பயணம் அது. அப்போது என் சொந்த தாய்மண்ணில் கால்வைத்தது போன்ற உணர்வு என்னுள் எழுந்தது. அன்றைக்கு எனக்கு அந்த மண்ணில் அளிக்கப்பட்ட வரவேற்பு, என் சொந்தங்களின் பாசம் கலந்த உணர்வுபூர்வமானதாக இருந்தது. அந்தப் பாசத்தோடு அங்கே சென்று திரும்பியதற்கும், இப்போது கூட்டணிக் குழுவாக அரசு மரியாதையுடன் செல்லும்போது நிலவுகிற சூழ்நிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள். இப்போது நான் அங்கு சென்றபோது அளிக்கப்பட்ட வரவேற்பில் முழுக்க முழுக்க வெறுமையும் போலித்தனமுமே குடிகொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. 'என் தமிழ்ச் சொந்தங்களைப் பார்க்கப் போகிறேன்... எண்ணற்ற இன்னல்களில் சிக்கி, இறுதி நம்பிக்கைகளை இழந்து, எந்த திசையிலிருந்தாவது கடைசியாகவேனும் ஓர் உதவிக் கரம் நீளாதா என்று முள்வேலிகளுக்குப் பின்னால் வலியோடு காத்திருக்கும் அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்க முடிகிறதோ இல்லையோ... அவர்களுக்கு சில ஆறுதல் மொழிச் சொல்லவேனும் இப்போது வாய்ப்பு அமைந்ததே...' என்ற எண்ணம் மட்டுமே என்னுள் பொங்கியது.

குழுவாகத்தான் கிளம்பினோம். ஆனால், நான் அந்த மேடையின் நெரிசலிலும் தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தேன்.

அக்டோபர் 9...

கோபாலபுரத்தில் முதல்வரை இலங்கைப் பயணக் குழு நேரில் சந்தித்தது. அப்போது குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முதல்வர் முன்னிலையில் சில விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அங்கே போய் யார் யாரைப் பார்க்க வேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அவர் சொல்லிக்கொண்டே வந்தபோது... காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி இடைமறித்து, ''இவையெல்லாம் திருமாவளவனுக்காகச் சொல்லப்படுவதுதானே..!'' என்றார். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். நானும் அவர்களோடு அந்த கணத்தின் நகைச்சுவைபோல அதை பாவித்துச் சிரித்தாலும், நெஞ்சம் கனத்து விம்மிக் கொண்டிருந்தது.

நடந்து முடிந்தவை குறித்து நெஞ்சு விம்மிக்கொண்டே விமானத்தில் பறந்தது. 'இந்த உலகில் ஒருவருக்குக்கூடவா நெஞ்சிலே சொட்டு ஈரமில்லை? கடைசிப் பொழுதுகளிலாவது மனிதநேய அடிப்படையில் போரை யாரேனும் தடுத்திருக்கவே முடியாதா? உலகப் பந்தின் ஒரே ஒரு நாட்டுக்குக் கூடவா எம் தமிழ்ச் சொந்தங்களைக் காப்பாற்ற மனமில்லாமல் போய்விட்டது?

எல்லாமே தலைகீழாய் மாறிப் போனதே.... வன்னி நிலம் வதை நிலமானதே... மனிதநேயம் மரித்து வீழ்ந்ததே..!

உலகில் உருவான தமிழர்களின் ஒரே தேசமான 'தமிழீழம்', பகைக் கும்பலின் கைகளுக்குப் பறிபோன நிலையில்... வல்லாதிக்க வெறிபிடித்த நாடுகளின் 'கூட்டு அரசுப் பயங்கரவாதத்'தால் வீரஞ்செறிந்த ஒரு விடுதலை இயக்கம் சில்லுச் சில்லாய் நொறுங்கிச் சிதறிய நிலையில்... அடுக்கடுக்கான எத்தனை போராட்டங்கள்! பேரணிகள்! ஆர்ப்பாட்டங்கள்! மாநாடுகள்! சாகும்வரை உண்ணாநிலை அறப்போர்!

அதன் விளைவாக தமிழகத்தில் அரசியல் பெருநெருப்பு மூண்டபோதும், எம் சகோதரர்களுக்கு தோள் கொடுக்க ஒரு நாதியில்லையே என்கிற ஆற்றாமையில் அல்லவா புழுங்கித் தவித்தோம். இயலாமையால் பதைக்கும் மனதோடு வேதனையில் வீழ்ந்து கிடந்த நிலையில், எல்லாமே அல்லவா முடிந்து போனது!'

இதோ, இப்போது அங்கே செல்வதற்கு ஓர் வாய்ப்பு. ஆனால், நாங்கள் கிளம்புகிறபோதே பாழாய்ப்போன 'அரசியல் விமர்சனங்களும்' கிளம்பிவிட்டது. எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் அக்குழுவில் யாரும் இடம்பெறவில்லை. கடுமையான விமர்சனங்களுக்குக் கேட்கவா வேண்டும்? 'உண்மை நிலைமைகள் வெளிச்சத்துக்கு வராது. சர்வதேச நெருக்கடிகளிலிருந்து ராஜபக்ஷேவைக் காப்பாற்றுவதற்காக இந்திய அரசு நடத்தும் நாடகம் இது. அதற்குத் தமிழக அரசு துணை நிற்கிறது' என்றும் எதிர்க்கட்சியினர் தாறுமாறாக அறிக்கைகளை வெளியிட்டனர். தேர்தலின்போது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் இடம்பெற்றதனால், அ.தி.மு.க. கூட்டணியினருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் மீது கடுமையான ஆத்திரம். ஈழப் பயணக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றதைச் சாக்காகக் கொண்டு மனம்போன போக்கில் எங்களையும் விமர்சிக்கத் தொடங் கினர்.

இதற்கு நடுவே 'பாது காப்பு காரணங்கள் கருதி இப்பயணத்தைத் தவிர்ப் பது நல்லது' என்கிற கருத்தை விடுதலைச் சிறுத்தை தோழர்கள் முன்வைத்தனர். 'ராஜீவ் காந்தியையே ராணுவ அணி வகுப்பின்போது துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொல்ல முயற்சித்தவர்கள் சிங்களக் காடையர்கள். அங்குள்ள அரசின் அனுமதியோடு சென்றாலும்கூட, அவர்கள் எந்த நிலைக்கும் சென்று உயிருக்கு உலை வைக்கும் வாய்ப்பு உண்டு. சுட்டுத் தள்ளிய பிறகு ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி சமாளிக்கவும் வாய்ப்புண்டு. தமிழ் அமைப்புகளின் மீது பழிபோட்டுத் தப்பிக்கவும் வாய்ப்புண்டு. குறிப்பாக, இந்திய அரசையும் சிங்கள அரசையும் கடுமையாக விமர்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் மீது இந்திய ஆட்சியாளர்களுக்கும் ஆத்திரம் உள்ளது. எனவே இந்தப் பயணத்தை தவிர்ப்பதே நல்லது!' என்றனர் சிறுத்தைகள்.

எதிர்க்கட்சிகளின் ஆத்திரம், விடுதலைச் சிறுத்தைகளின் ஐயம் இவற்றையெல்லாம் தாண்டி... தமிழினத்தை அழித்தொழிக்கும் இனப்பகைவர்களையும் இனத் துரோகிகளையும் நேரில் சந்திக்கும்போது உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே என் முக்கிய சிந்தனையாக இருந்தது. என்னைச் சோதிப்பதற்கென்றே இலங்கை மண்ணில் அடுத்தடுத்து அரங்கேறின காட்சிகள்... சம்பவங்கள்...!

- ரத்தம் கசியும்...   
 

--
www.thamilislam.co.cc


source:vikatan

StumbleUpon.com Read more...

அணு சக்தி : இஸ்ரேல் - ஈரான் ரகசிய பேச்சு

 

 அணு சக்தி குறித்து ஈரானுடன் இஸ்ரேல் ரகசிய பேச்சுவார்த்தைநடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


மத்திய கிழக்கு நாடுகளுடனான அணு சக்தி பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக ஈரானுடன்,தங்கள் நாட்டு அணு சக்தி தொழில்நுட்ப நிபுணர்கள்பேச்சுவார்த்தை நடத்துவார்க்ள் என்று இஸ்ரேல் அணு சக்தி ஆணையத்தின்பேச்சாளர் யேல் டோரான் தெரிவித்தார்.

அதே சமயம் இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை மேற்கொண்டுதெரிவிக்க டோரான் மறுத்துவிட்டார்.

இதனிடையே இது குறித்து ஈரான் தரப்பில் கருத்து தெரிவிக்க அந்நாடுமறுத்துவிட்டது.


source:paranthan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஐ.நா. அதிகாரிகள் 9 பேர் சுட்டுக்கொலை:

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அதிகாரிகள் 9 பேர் சுட்டுக்கொலை: விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்


காபூல், அக். 28-

தலிபான் தீவிரவாதிகள் பிடியில் இருந்து ஆப்கானிஸ்தான் மீட்கப்பட்டு விட்டாலும் நாட்டின் பல பகுதிகளில் இன்னும் அவர்களின் ஆதிக்கம் உள்ளது.
 
அவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ் தானை நிலைகுலைய செய்து வருகின்றனர்.
 
ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் அமெரிக்கா கூட்டுபடைகள் மற்றும் ஐ.நா. சபை ஊழியர்களை குறிவைத்து அவர்கள் தாக்குகின்றனர்.
 
ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் மைய பகுதியில் ஐ.நா. சபை விருந்தினர் மாளிகை உள்ளது. தனியாருக்கு சொந்தமான ஓட்டலை விருந்தினர் மாளிகையாக மாற்றி இருந்தனர். இங்கு ஐ.நா. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கி இருந்தனர். இவர்களுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளும் தங்கி இருந்தனர்.
 
இந்த விடுதிக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் குறிவைத்து இருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன.
 
ஆனால் பலத்தபாது காப்பையும் மீறி இன்று காலை 7 மணியளவில் தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேர் இந்தமாளிகைக்குள் புகுந்தனர். அப்போது ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 100 பேர் அங்கு இருந்தனர்.
 
தீவிரவாதிகளை பார்த்ததும் அவர்களை நோக்கி பாது காப்புபடையினர் சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டு உள்ளே அதிரடியாக புகுந்து விட்டனர்.
 
கையில் எந்திர துப்பாக்கிளை ஏந்தி வந்த அவர்கள் எதிரில் பார்த்தவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டனர்.
 
தீவிரவாதிகள் புகுந்து விட்டதை அறிந்ததும் ஐ.நா. அதிகாரிகளும், ஊழி யர்களும் அறைக்குள் ஓடி சென்று மறைந்து கொண்டனர். ஆனால் தீவிரவாதி கள் வெடிகுண்டு வீசி கதவு களை உடைத்து விட்டு உள்ளே சென்று அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சிலரை பணய கைதிகளாக பிடித்தனர்.
 
தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் பலியா னார்கள். 9 பேர் காயம் அடைந்தனர்.
 
வெடிகுண்டு வீசி தாக்கியதால் கட்டிடத்தில் ஒரு பகுதியில் தீப்பிடித்து கொண்டது. இதனால் அந்தபகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.
 
தாக்குதல் நடந்த இடத்துக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் இந்த இடத்தை சுற்றி வளைத்து நின்று தாக்கினர். இருதரப்புக்கும் கடும் சண்டை நடந்தது.
 
நீண்ட நேர சண்டைக்கு பிறகு 3 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு விருந்தினர் மாளிகை பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது.
 
இந்த தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்று தலிபான் இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.
 
தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாரித் செய்திநிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டு பேசும் போது, ஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலுக்கு உதவியதால் ஐ.நா. விருந்தினர் மாளிகையை தாக்கி இருக்கிறோம். இதுஎங்கள் முதல் தாக்குதல். மேலும் தாக்குதல்கள் தொடரும் என்று கூறினான்.

source:maalaimalar
 
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மத சுதந்திரத்தில் ஐ.மு., அரசுக்கு அமெரிக்கா மனம் திறந்த பாராட்டு


 
 

Top global news update 

வாஷிங்டன் : "மத சுதந்திர விஷயத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பாக செயல்படுகிறது'என, அமெரிக்கா பாராட்டியுள்ளது.சர்வதேச அளவில் மத சுதந்திரம் எந்த அளவுக்கு கடை பிடிக்கப்படுகிறது என்பது குறித்து, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஜூலையில் இருந்து இந்தாண்டு ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் மத சுதந்திரம் பின்பற்றபட்ட விதம் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து, அமெரிக்க ஜனநாயகம் மற்றும் மனித உரிமை துறை துணை அமைச்சர் மைக்கேல் போஸ்னர் கூறியதாவது:இந்தியாவை ஆளும் ஐ.மு., கூட்டணி அரசு, மத சுதந்திர விஷயத்தில் பாராட்டத் தக்க வகையில் செயல்படுகிறது. பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, மத சுதந்திர விஷயத்தில் தேசிய அளவிலான நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. ஆனால், மாநில அளவில் கவலை அளிக்கும் விஷயங்கள் நடக்கின்றன. குறிப்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கொலை செய்யப்பட்டதால், ஒரு மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. 40 பேர் இதில் கொல்லப்பட்டனர். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவது கவலை அளிக்கிறது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மைக்கேல் போஸ்னர் கூறினார்.source:dinamalar

StumbleUpon.com Read more...

சங்கிலிகளால் கை, கால்கள் கட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழர்கள் விடுவிக்குமாறு கோரிக்கை

 

கனடா நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஓஷன் லேடி என்ற கப்பலில் சென்ற 76 இலங்கையர்களில் ஒருதொகுதியினர் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை குடிவரவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். கப்பலில் வந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு எந்த ஆவணங்களுமே இல்லாத பட்சத்தில் அவர்களை அடையாளம் காண மேலும் 30 நாள்களுக்கு தடுத்துவைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும் 'த வன்கூவர் சன்' என்ற பத்திரிகைச் செய்தி கூறியுள்ளது. 

இவர்களில் பலர் தாங்கள் யார் என்பதை நிரூபிப்பதற்கான வலுவான ஆவணங்கள் இன்றிக் கனடா வந்துள்ளனர். இலங்கையர்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றை தனது கனடா பயணத்திற்கான முகவரிடம் கையளித்துவிட்டார் எனவும் அதற்குப் பதில் தனக்கு இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்டது எனவும் கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு இந்தக் கப்பல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிவந்த தருணத்திலிருந்து கனடா அதிகாரிகள் இவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இவர்களில் எவருக்காவது குற்றச் செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை விலக்கப்போவதாகக் கனடா குடிவரவு அமைச்சர் ஜசோன் கென்னியின் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக அதிகாரிகள் கப்பலில் வந்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்பிற்காக சர்வதேச போலீசாரின் கவனிப்பில் உள்ளார். எனினும், ஏனைய அநேகமானவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு எதுவுமில்லை என அவர்களுடைய கனடா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அநேகமானவர்கள் இலங்கை அரசின் நன்கு அறியப்பட்ட வன்முறை, ஒடுக்கு முறையிலிருந்து தப்பியோடிய தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

"எனது பார்வையில் அவர்கள் அனைவரும் அமைதியாக, ஒழுங்காக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போன்று தென்படுகின்றனர்'' என அவர்களில் பலரை விசாரித்துள்ள சட்டத்தரணி லீ ரன்கின் தெரிவித்தார். இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோரி வருபவர்கள அநேகமானோர் கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 9 மாதங்களில் 93 வீதமானவர்களின் அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அத்வானியின் ரத யாத்திரையை தடை செய்ய விடாமல் செய்தது யார்?லல்லுபிரசாத் யாதவ்

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக லல்லுபிரசாத் எழுதும் புத்தகம்

பாட்னா, அக். 28-
 
அடுத்த ஆண்டு பீகார் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடை பெற உள்ளது. மத்திய மந்திரி சபையில் இடம் பெறாததால் தேசிய அரசியலில் இருந்து லல்லுபிரசாத் மாநில அரசியலில் தீவிரகவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
 
சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இப்போதே அவர் மக்களை கவரும் வகையில் பல அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார்.
 
பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி 1992-ல் பீகார் மாநிலம் வழியாக ரதயாத்திரை மேற்கொண்டார். இந்த ரதயாத்திரைக்கு தடை விதிக்காமல் அப்போது முதல்- மந்திரியாக இருந்த லல்லுபிரசாத் யாதவ் நடுநிலை வகித்தார்.
 
இந்த நிலையில் இந்த ரதயாத்திரையை தடுக்க முடியாமல் போனது ஏன்? என்பது பற்றி புத்தகம் எழுதப்போவதாக லல்லுபிசாத்யாதவ் அறிவித்துள்ளார்.
 
பாட்னாவில் இம்ராத் அகலே அன்சார் அல்- ஹிண்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் லல்லுபிரசாத் யாதவை சந்தித் தனர். அவர்கள் மத்தியில் பேசுகையில் லல்லுபிரசாத் யாதவ் புத்தகம் எழுதும் அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
 
இஸ்லாமியர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் தொடர்ந்து நான் பாடுபடு வேன். 1992-ல் அத்வானியின் ரதயாத்திரை பீகார் மாநிலம் வழியாக சென்று சமஸ்டிபூரில் நிறைவடைந்தது.
 
அப்போது ரதயாத்தி ரையை தடை செய்யவிடாமல் சில சக்திகள் தடுத்து விட்டன. இது தொடர்பாக நான் ஒரு புத்தகம் எழுதப்போகிறேன். அந்த புத்தகத்தில் அத்வானியின் ரத யாத்திரையை தடை செய்ய விடாமல் செய்தது யார் என்பது பற்றி விளக்கு வேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

latest news:மொபைல் போன்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது


 

மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டில் உள்ள சுலைமான் டெமிரல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டோல்கா அட்டாய் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது.

இடுப்பு பெல்டில் செல்போன்களை பொருத்தி வைத்து நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் அது எலும்புகளை பலவீனப்படுத்தி விடும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இடுப்பு பெல்ட்டில் செல்போன்களை வைத்து இருக்கும் 150 ஆண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 மணி நேரத்துக்கு என 6 ஆண்டுகள் அவர்கள் இடுப்பு பெல்ட்டில் செல்போனை வைத்து இருந்தால் அவர்களின் இடுப்பு எலும்பு லேசாக பலவீனமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP