இந்தியா
04. தம்பதிகளை பிரிக்கும் மொபைல் போன்கள்
புதுடில்லி: அமித்துக்கும், பிரியாவுக்கும் திருமணமாகி, ஓராண்டுதான் ஆகிறது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், மேனேஜராக உள்ள அமித், தனது பணியாளர்களுடன், சில சமயம் இரவு நேரங்களிலும் பேசுவது வழக்கம். அவர் தோழியுடன் பேசுவதாக சந்தேகித்தார் பிரியா. இதனால், சச்சரவு வலுத்து, மகளிருக்கு எதிரான வன்முறை தடுப்புப்பிரிவு போலீசில் புகார் செய்துவிட்டார்.
* தெற்கு டில்லியை சேர்ந்த வசதியான குடும்பத்தை சேர்ந்த சுனிதி, தனது கொழுந்தனார்களால் துன் புறுத்தப்படுவதாக புகார் செய்தார். விசாரித்த போது, தனது தாயிடம் நீண்ட நேரம் பேசுவதை கொழுந்தனார்கள் கண்டித்ததும், அதை கணவரிடம் கூறிய போது கண்டு கொள்ளாததும் தான் காரணம் என்பது தெரியவந்தது.
* தனது வீட்டில் இருந்து கணவருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டார் மனைவி. கார் ஓட்டிக் கொண்டிருப்பதாகவும், வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார் கணவர். சந்தேகமடைந்த மனைவி, "ஆரன் அடியுங்கள்' என்று கூற, தனி அறையில் இன்னொரு பெண்ணுடன் இருந்த கணவர் மாட்டிக் கொண்டார்.
* படுக்கை அறையில் இருக்கும் போது கூட எப்போதும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார் கணவர். இனி படுக்கை அறையில் மொபைல் போன் பேசக்கூடாது என்ற நிபந்தனை விதித்தார் மனைவி.
ஆனால், அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்புகளை கணவரால் தட்ட முடியவில்லை. இதனால், தனியறையில் படுத்தார் மனைவி. கோபம் தீராமல் புகார் செய்துவிட்டார்.டில்லியில் உள்ள மகளிருக்கு எதிரான வன்முறை தடுப்பு போலீஸ் பிரிவு நிலையங்களுக்கு தினமும் வரும் புகார்கள் இவை. கடந்த ஆண்டில் இங்கு வந்த 10 ஆயிரம் புகார்களில், எட்டாயிரம் புகார்கள், மொபைல் போன் சம்பந்தப்பட்ட புகார்கள் தான். கணவன் மனைவியை பிரிக்கும் அரக்கனாக மொபைல் போன்கள் மாறி வருவதை இது காட்டுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில், பெண்கள் தங்களின் தாயுடன் இரண்டு மணி நேரத் துக்கு அதிகமாக ஒரே நேரத்தில் பேசுவதும் உண்டு. இதனால், குடும்பத்தில் பெரும் பிரச்னை ஏற்படுகிறது. இது போன்ற புகார்களின் போது, கணவன், மனைவியை அழைத்து போலீசார் சமாதானப்படுத்துகின்றனர். 26 சதவீதம் பேர் உடனே சமாதானமாகி விடுகின்றனர். ஆனால், 16 சதவீதம் பேர், திருமண பந்தத்தையே முறித்துக் கொள்கின்றனர். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது, குற்ற நடவடிக்கையை போலீசார் துவக்கும் நிலை ஏற்படுகிறது.
http://www.dinamalar.com/2008MAR19/general_ind4.asp
Read more...