|
சமீபத்திய பதிவுகள்
விடுதலைப்புலிகள் இயக்க தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மரணம்
விடுதலைப்புலிகள் இயக்க தளபதி பால்ராஜ் மரணம்
கொழும்பு, மே.21-
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மரணம் அடைந்தார்.
பிரிகேடியர் பால்ராஜ்
விடுதலைப்புலிகளின் சார்லஸ் ஆன்டனி படைப்பிரிவின் தளபதியாக 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ். பல்வேறு நவீன யுக்திகளை கையாண்டு சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இலங்கை ராணுவத்துக்கு எதிராக பல முறை நேரடியாக களம் இறங்கி சண்டையிட்டும் உள்ளார்.
2000-ம் ஆண்டு யானை இரவு பகுதியில் சிங்கள ராணுவத்தை விரட்டியடித்ததிலும், கடற்புலிகள் பிரிவை வலிமையானதாக உருவாக்கியதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
மரணம்
மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் 2003-ம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது சிங்கப்பூர் சென்று இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வன்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அவருக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
பிரிகேடியர் பால்ராஜ் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் 23-ந்தேதி முடிய 3 நாள் துக்கம் கடைப்பிடிப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=413957&disdate=5/21/2008
சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட 79 வயது சாமியார் ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை
சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட
79 வயது சாமியார் ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதற்கு அனுமதி
ஹுஸ்டன், மே.21-
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சாமியார் ஒருவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கைதானார். அவர் இந்தியா வருவதற்காக ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
200 ஏக்கர் பரப்பில் கோவில்
அமெரிக்காவில் உள்ள இந்துக்கோவில்களில் மிகப்பெரியது பர்சானா தாம். இந்த கோவில் டெக்சாஸ் நகரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 35 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்டியவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி என்ற சாமியார். 79 வயதாகும் இவர் 3 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1996 வரை உள்ள காலகட்டத்தில் இவர் 2 சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாகவும் இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதைம்தொடர்ந்து தான் அவர் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில்
கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி டல்லஸ் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டார். அவர் ஐரோப்பாவில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று விட்டு திரும்பினார். அவர் நிறுவிய கோவிலில் தான் குற்றம் நிகழ்ந்ததால் அவர் அந்த கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
சாமியார் இந்தியா செல்லவேண்டி இருப்பதால் அவரை அனுமதிக்கவேண்டும் எக்றும் இதற்கு வசதியாக அவரை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்றும் கோரி மனுச்செய்யப்பட்டது.
ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை
கோவிலை நடத்தி வரும் கம்பெனியின் இயக்குநர் மற்றும் பொருளாளரான பீட்டர் ஸ்பீக்கல் மனுச்செய்தார். 4 கோடி ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்ய கோர்ட்டு அவருக்கு அனுமதி அளித்தது. அதற்கு சம்மதம் தெரிவித்த பீட்டர் ஸ்பீக்கல் அந்த தொகையை செலுத்தினார். அதன்பிறகு அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஜாமீனில் விடுதலை செய்யப்படும் அவர் இந்தியா செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று போலீஸ் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பை மாவட்ட கோர்ட்டு நீதிபதி சார்லஸ் ராம்சே ஏற்கமறுத்து, சாமியார் இந்தியா செல்ல அனுமதி வழங்கினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=413906&disdate=5/21/2008
ஷாருக்கான் பெயரை தனது நாய்க்கு சூட்டிய அமீர்கான்-ரசிகர்கள் எதிர்ப்பு
ஷாருக்கான் பெயரை தனது நாய்க்கு சூட்டிய அமீர்கான்
ரசிகர்கள் எதிர்ப்பு
மும்பை, மே.21-
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் வளர்த்து வரும் செல்ல நாயின் பெயர், `ஷாருக்'. பஞ்சகனி என்ற இடத்தில் உள்ள அமீர்கான் வீட்டில் இந்த நாய் வளர்ந்து வருகிறது. பஞ்சகனிக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஷாருக்கான் வந்த நாளில், இந்த நாய் வாங்கப்பட்டதால், அதற்கு `ஷாருக்' என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நாய் பற்றி அமீர்கான், தனது இணையதளத்தில் கிண்டலாக எழுதி உள்ளார். `ஷாருக் என் காலை நக்குகிறான். அவனுக்கு நான் பிஸ்கெட் கொடுக்கிறேன். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?' என்று அவர் எழுதி உள்ளார்.
அமீர்கானின் இந்த அணுகுமுறைக்கு ஏராளமான ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இதுபற்றி விளக்கம் அளித்த அமீர்கான், `நகைச்சுவைக்காகவே அப்படி எழுதினேன். ஷாருக்கான் எனது நெருங்கிய நண்பர். அவரை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=413904&disdate=5/21/2008