சமீபத்திய பதிவுகள்

குழந்தைகளின் பெற்றோருக்கு..

>> Tuesday, January 5, 2010

 

.

PrintE-mail

1/5/2010 5:18:44 PM

குழந்தை பிறந்தவுடன் நான்கு நிமிடத்திற்குள் அழ வேண்டும். அழுவதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக மூளையை சென்றடைகிறது. குழந்தை 6 முதல் 8 வாரத்திற்குள் முகம் பார்த்து சிரிக்கவேண்டும். 12 முதல் 15 வாரத்திற்குள் தலை நிற்கவேண்டும். 20 வாரத்தில் குப்புறப்படுக்கவேண்டும். 6 மாதத்திற்குள் உட்காரவேண்டும். 8 மாதத்தில் நடப்பதற்கும், ஒரு வருடத்திற்குள் யார் துணையுமின்றி நடக்கவேண்டும்.

இந்த வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும். இதில் ஏதும் மாறுதல் இருக்கும்பட்சத்தில் மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படும். எனவே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.

 


source:dinakaran
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மொபைல் எண் மாறாமல் இருக்கும் திட்டம்

மொபைல் எண் மாறாமல் இருக்கும் திட்டம் எப்போது? 

Top world news stories and headlines detail புதுடில்லி : மொபைல் சேவை வழங்கும் எந்த நிறுவனத்துக்கு மாறினாலும், மொபைல் எண் மாறாமல் இருக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அளவை அரசு நீட்டித்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஒரு நிறுவனத்தில் இருந்து மாறி, மற்றொரு நிறுவனத்தின் சேவையை பெறும் போது, மொபைல் எண்கள் மாறும்.இவ்வாறு இல்லாமல், எந்த நிறுவனத்தின் சேவைக்கு மாறினாலும், மொபைல் எண்கள் மாறாமல் ஒரே எண்ணை பயன்படுத்தும் வகையிலான திட்டத்தை, 31ம் தேதி அறிமுகப்படுத்த, அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், மொபைல் சேவை வழங்கும் சில நிறுவனங்கள், இவ்வசதியை அறிமுகப்படுத்த தேவையான நெட்வொர்க்குகள் தயாராக இல்லை என தெரிவித்தன. இதற்காக, பல்வேறு கூட்டங்கள் நடத்தி, மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் சில நிறுவனங்கள், இத்திட்டத்திற்காக, தங்கள் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கால அளவை வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட மொபைல் சேவை நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி, தொலைத் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அழகு கூடும் நெருப்பு நரி

மெருகு பெறும் பயர்பாக்ஸ்

 
 

தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு போட்டியாக இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், பல புதிய வழிகளில் மேம்பாடு அடைய உள்ளது. மொஸில்லா தன் இணைய தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. 
இந்த மாற்றங்கள் இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப் படும். முதல் நிலை மாற்றங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 3.7ல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தரப்படும். மற்ற மாற்றங்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் தொகுப்பு 4ல் ஏற்படுத்தப்படும்.
பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில் தன் பயர்பாக்ஸ் நல்லதொரு இடத்தைப் பிடித்து வருவதனை மொஸில்லா நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி பல வசதிகளைத் தொடர்ந்து சேர்த்து வழங்கி வருகிறது. 
தற்போதைய பயர்பாக்ஸ் முகப்பு தோற்றம் மிகப் பழமையாக இருப்பதாக மொஸில்லா எண்ணுகிறது. முகப்பு தோற்றத்தில், விஸ்டா தொகுப்பில் வந்த கிளாஸ் ஸ்டைலில் முதல் மாற்றம் இருக்கும் Page  மற்றும் Tools  என இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளதாக மெனு மாற்றி அமைக்கப்படும். Stopமற்றும் Reload ஆகிய இரண்டும் ஒரே பட்டனில் தரப்படும். மெனு பார் மறைக்கப்பட்டு ரிப்பன் ஸ்டைல் மெனு தரப்படும் என முன்பு அறிவித்தபோது பலத்த எதிர்ப்பு இருந்ததால், அதனைக் கைவிட்டுவிட்டது மொஸில்லா. 
அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார் ஒரே கட்டத்தில் தரப்படும். ஸ்டேட்டஸ் பார் எடுக்கப்படும். இவை எல்லாம் குரோம் பிரவுசர் போல தோற்றத்தைத் தருவதற்கான முயற்சிகள் என்று சிலர் கூறிய போது, மொஸில்லா அதனை வன்மையாக மறுத்து பயர்பாக்ஸ் எப்போதும் பயர்பாக்ஸ் போலத்தான் தோற்றமளிக்கும் எனக் கூறப்பட்டது. 
அனைத்து பிரவுசர்களும் ஒரே மாதிரியான வேலையை மேற்கொள்வதால், சில வேளைகளில் இவை ஒன்றுக்கொன்று மற்றதைக் காப்பி செய்வது போலத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென்று ஒரு தனித் தோற்றத்தைக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது. 
பிரவுசர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியில், இன்னும் இன்டர்நெட் தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யைக் காட்டிலும் கூடுதலானவர்கள் பயர்பாக்ஸினைப் பயன்படுத்துகின்றனர். 
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பலர் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவியதற்கு முக்கிய காரணம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல இடங்கள் ஹேக்கர்களுக்குச் சாதகமாக இருந்ததுதான். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்திடும் ஸென்ஸிக் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் ஹேக்கர்கள் காணும் பலவீனமான இடங்களைக் கொண்டிருப்பதில் முதல் இடம் பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன் பாதுகாப்பற்ற தன்மை 44 சதவீதம், சபாரி 35சதவீதம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 15சதவீதம் என அறிவித்துள்ளனர். இந்த ஆய்வின் நம்பகத் தன்மை இப்போது கேள்விக் குறியாகி இருந்தாலும், பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்ளும் ப்ளக் இன் புரோகிராம்கள்தான் இந்த பாதுகாப்பற்ற தன்மையினைத் தருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், பயர்பாக்ஸ் உடனே தன் பிரவுசரில் இருந்த பலவீனமான இடங்களைச் சரி செய்துவிட்டது.பயர்பாக்ஸ் 3.6 பீட்டா 2 
பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், இதன் பதிப்பு 3.5 னைத்தான் அதிகமாகப் பயன்படுத்து கின்றனர் என்றாலும், பலரும் ரிஸ்க் எடுத்து பயர்பாக்ஸ் 3.6 சோதனைத் தொகுப்பினையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கான சோதனைத் தொகுப்பு 2 அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 190 பிரச்னைகள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 
சென்ற வாரம் வெளியான பயர்பாக்ஸ் 3.6 சோதனை பதிப்பு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளுக்கு இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏரோ பீக், டாஸ்க்பார் தம்ப்நெயில் பிரிவியூ போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். ஆனால் விண்டோஸ் 7 தரும் ஜம்ப் லிஸ்ட்டின் வசதிகள் பயர்பாக்ஸ் பதிப்பில் இல்லை. 
குறிப்பாக இதனுடன் இயங்க முடியாமல் இருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களால், பயர்பாக்ஸ் கிராஷ் ஆவது தடுக்கப்பட்டுள்ளது. 
பிரவுசரின் தோற்றத்தினை பயன்படுத்துபவர்கள் எளிதில் மாற்ற பெர்சனா என்ற டூலை மொஸில்லா வழங்கியது. இந்த தொகுப்பில் இன்னும் பல ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன. இப்போது பெர்சனாவில் ஒரே கிளிக் செய்வதன் மூலம் பயர்பாக்ஸ் தோற்றத்தினை மாற்றுவதற்கு வழி தரப்பட்டுள்ளது. வீடியோக்களை இயக்குகையில் முழு திரையிலும் பார்க்க வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்து பவர்களுக்கு, பழசாகிப் போன, பயன்படுத்த முடியாத ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகள் புதிய பிரவுசர் தொகுப்பிற்கு ஏற்றவைதானா என்று அறிய ஆட் ஆன் கம்பாடிபிளிட்டி ரீடர் என்னும் புரோகிராம் டவுண்லோட் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது.
கம்ப்யூட்டரிலிருந்து பைலை பிரவுசரின் அட்ரஸ் பாரில் போட்டு திறக்க வழி செய்யப்பட்டுள்ளது. 
மொஸில்லா என்ன செய்ய வேண்டும் என்பதனை கூகுள் தந்த குரோம் பிரவுசர் சுட்டிக் காட்டியது. அதே போல குரோம் பிரவுசரில் இருந்த புதிய வசதிகளை பயர்பாக்ஸ் தரத் தொடங்கியது. பிரவுசர் யுத்தத்தில் பயர்பாக்ஸ், குரோம் பிரவுசரை எதிர் கொண்டாலும், ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டினையே மேற்கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. எச்.டி.எம்.எல். வசதியை புரோகிராமிங் மற்றும் டிஸ்பிளேவுக்கான வலிமையான சாதனமாகக் கொண்டு வருவதில் இரண்டும் செயல்படுகின்றன. 
பயர்பாக்ஸ் 3.7 அடுத்த 2010 ஆம் ஆண்டின் நடுவிலும், பதிப்பு 4 அடுத்து ஒரு ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாகப் புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன குடும்ப இளம் பெண் மர்ம மரணம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன குடும்பத்தில் 30 வயது இளம் பெண் மர்ம மரணம் 

Top world news stories and headlines detailலாஸ் ஏஞ்சல்ஸ் : உலகப்புகழ்பெற்ற ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனி நிறுவன நிறுவனரின் கொள்ளுப்பேத்தி அவரது இல்லத்தில் மர்ம முறையில் இறந்துள்ளார். இவருக்கு வயது 30 . இளம் மங்கையான இவர் திருமண நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்திருந்தது. அமெரிக்காவில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 124 ஆண்டுகளுக்கு முன்னதாக துவக்கப்பட்டது. இக்கம்பெனியை ராபர்ட் வுட் ஜான்சன். ஜேம்ஸ்வுட் ஜான்சன், எட்வர்டு ஜான்சன் ஆகியோர் துவக்கினர்.இந்நிறுவனத்தில் மருத்துவம் சார்ந்த மற்றும் மக்களின் அடிப்படையான அன்றாட உபயோக பொருட்களை ( சோப், பவுடர், காது குடையும் பட்ஸ் வரை ) தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இக்கம்பெனி பெயர் யாருக்கும் தெரியாமல் இருக்காது என்பது உண்மை. இந்தக்குடும்பத்தை சேர்ந்த ராபர்ட் வூட்ஜான்சன் நியூயார்க்கில் ஜெட் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகள் கேசி ஜான்சன் (30 ). இவர் ஜான்சன் கம்பெனியின் சட்டப்பூர்வ வாரிசு. லாஞ் ஏஞ்சலில் உள்ள இவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இவரது மறைவு குறித்து எவ்வித உறுதியான தகவலும் இல்லை.இது தொடர்பாக அருகில் உள்ள போலீசார் கூறுகையில் இயற்கை மரணமாக இருக்கலாம் என கருதுகிறோம். அதே நேரத்தில் இது தொடர்பாக விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிரபலமான இக்குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணம் அங்கு அனைவராலும் பேசப்படுகிறது.திருமண நிச்சயதார்த்தம் யாருடன்: கேசி ஜான்சன் சமீபத்தில் டி.வி.,யில் கிளாமராக நடத்து வரும் பிரபல திலா தெக்யூலா என்ற பெண்மணியுடன் காதல் திருமணம் ( லெஸ்பியன் ) செய்‌ய முடிவு செய்திருந்தார். இருவரும் நிச்சயதார்த்தம் செய்து‌ கொண்டதாக மோதிரம் மாற்றும் வைபவம் டிவிட்டரில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரது மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மனைவியை கணவன் அடிக்கலாம்: காஷ்மீர் பெண்கள் சொல்கின்றனர்

 
 

Front page news and headlines today ஸ்ரீநகர் : மனைவியை அடிக்க கணவனுக்கு முழு சுதந்திரம் உள்ளதாம்; ஆம்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இப்படி வித்தியாசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.தேசிய குடும்ப நல மையம் ஒன்று, நடத்திய ஆய்வில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களில், 64 சதவீதத்தினர், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, நாடு முழுவதும் நடத்தப்பட்ட, ஆய்வு தகவல் கடந்த 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு தகவலை மாநில வாரியாக, மத்திய குடும்ப நல அமைச்சகம், கவனித்து வந்தது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளது.அதில்,"கணவன் வீட்டாரை மனைவி மதிக்காமல் நடந்தால், அவர்களை கணவன் அடிப்பது நியாயம் என 50 சதவீதம் பெண்களும், வீடு மற்றும் குழந்தைகளை புறக்கணித்தால், அவர்களை அடிப்பது நியாயம் என 48 சதவீதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளதாக' கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, சமூக நிபுணர்கள் கூறுகையில்,"இந்தியாவில் கணவன் மனைவியை அடிப்பதை பெண்கள் ஏற்றுக் கொள்வதற்கு, குறைந்த கல்வியறிவு உட்பட பல்வேறு சமூக பொருளாதார நிலையே காரணம்' என்றனர்.இதுகுறித்து, கல்வியாளர் ஏ.ஜி.மாதோஷ் கூறுகையில்,"காஷ்மீர் பெண்கள் மத்தியில் அதிகளவு பாதுகாப்பின்மை நிலவுகிறது. கணவன் மனைவியை அடிப்பது சரியே என பெண்கள் கருதுவதற்கு, கல்வியறிவின்மை மற்றும் வறுமை ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக அமைகின்றன' என்றார்.கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தம் 55.5 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். சுகாதாரம் தொடர்பான ஆய்விற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்த 2,415 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 15 வயது முதல் 49 வயது வரையிலான 3,281 பெண்கள் மற்றும் 15 வயது முதல் 54 வயது வரையிலான 1,076 ஆண்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆய்வில், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என ஜம்மு காஷ்மீர் மாநில ஆண்களும், அதிகளவில் கருத்து தெரிவித்துள்ளனர்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆப்ரிக்கர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

 ஆப்ரிக்கர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! (கட்டுரை)

source:dinamani

-- 


StumbleUpon.com Read more...

உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் இன்று திறப்பு


 
 

Top global news updateதுபாய் : துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம்  இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடத்துக்கு பர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,684 அடி ( 818 மீட்டர்) உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன.
அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர்; தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 504 மீட்டர். எனவே, இந்த கட்டடம், உலகின் மிக உயர்ந்த கட்டடமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP