சமீபத்திய பதிவுகள்

தலைவன் இருக்கிறான் ?! உயிர்த்தெழும் 'பிரபாகரன்'

>> Friday, January 22, 2010

 

 

'இல்லை' என்கின்றனர் பலர். 'இருக்கிறார்' என்கின்றனர் சிலர். ஈழத்துக் காடுகளில், தமிழகத்தின் தெருக்களில், கனடாவில், அமெரிக்காவில் என இன உணர்வுத் தமிழர்கள் கூடினாலே, 'இருக்காருல்ல..?' என்ற கேள்வி எழுப்பாமல் பிரிவதில்லை. ஏழுமாதங் களாக எட்ட முடியாத விடையாக விரிந்துகொண்டே இருக்கிறது பிரபாகரன் மர்மம்!

புதிதாகக் கிளம்பியிருக்கும் தமிழ்மாறன் என்பவர் தன் பங்குக்கு ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார். தைத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, புதிய இணைய தளமாக உதித்த எல்.டி.டி.இ. பிரஸ் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. 'தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி இலங்கை அரசாங் கத்தாலும் சில சர்வதேசச் சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கிறது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர்பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தேசியத் தலைவர் அவர்கள் விரைவில் மக்கள் முன் தோன்றி, உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்' என்று அறிவித்திருக்கிறார் ச.தமிழ்மாறன். தன்னை விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளராக அறிவித்துக்கொண்டுள்ளார். புலிகளின் இலச்சினையை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதும் இவரது உத்தரவு.

தமிழ்மாறன் யார், இதற்கு முன்னால் இவருக்கு என்ன பெயர், இந்தப் பொறுப்பில் இவரை நியமித் தது யார் என்ற கேள்விகளுக்கு இப்போதைக்கு விடை கிடைக்காது. ஆனால், பிரபாகரன் மர்மத் திரை மெள்ள விலகுவதாகவே தெரிகிறது.

''தம்பி இருக்கிறார்'' என்று நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் உறுதியாகச் சொல்லி வருகிறார்கள். பிரபாகரனின் அம்மா பார்வதியை திருமாவளவன் கடந்த வாரத்தில் சந்தித்தபோது, ''தம்பி நலமாக இருக்கிறார். என்னைக் கனடாவில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார்'' என்று சொல்லியிருப்பது ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியிருக்கிறது. இவர்கள் கர்ஜிப்பதைவிட, சிங்கள அரசியல்வாதிகளின் மௌனம்தான் கூடுதலாகக் குழப்புகிறது.

'பிரபாகரனை அழித்துவிட்டேன்' என்பதுதான் மகிந்தாவின் செல்வாக்கை சிங்களவர் மத்தியில் உயர்த்தியது. 85 சதவிகித மக்களுக்குச் சந்தோஷம் தரக்கூடிய செய்தியைச் சொல்லி வாக்குகள் தேட மகிந்தா ராஜபக்ஷே ஏன் முயற்சிக்கவில்லை? 'புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை' என்று மகிந்தா சொன்னதாக சிங்களப் பத்திரிகையான திவயின தெரிவிக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை ஒப்படைப்பதாக பல்நோக்குக் கண்காணிப்புக் குழு சொன்னது. ஆனால், இன்னமும் தரவில்லை. எதுவும் முற்றாக முடிந்துவிடவில்லை என்பதையே இந்தச் செய்திகள் காட்டுகின்றன.

தமிழ்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கைக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை இந்தத் தகவல்கள்தான் தருகின்றன. பிரபாகரன் குறித்து கொழும்பு பத்திரிகையாளர்கள் ஒரு புதுத் தகவல் தருகிறார்கள்.

மே 17-ம் தேதி 'இன்னும் சில மணி நேரத்தில் அனைவரையும் முடித்துவிடுவார்கள்' என்று சேட்டிலைட் தொலைபேசியில் அறிவித்த கடற்படைத் தளபதி சூசையிடம் எதிர்த் தரப்பில் இருந்து பேசியவர், 'தலைவர் என்ன ஆனார்?' என்று கேட்கிறார். அந்த நேரத்திலும் சூசை, 'தலைவர் பத்திரமாகத்தான் இருக்கிறார்' என்று சொல்லியிருக்கிறார். 'தலைவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுபோக நாங்கள் அனைவரும் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். அவர் சம்மதிக்கவில்லையானால், மயக்க மருந்து கொடுத்தாவது கடத்திச் சென்றுவிடுவோம் என்று பொட்டு அம்மான் அப்போது சொன்னார்' என்று அங்கிருந்து தப்பி வந்த போராளி ஒருவர் இணைய தளம் ஒன்றில் எழுதி இருக்கிறார். 'நாங்கள் கடைசியாகப் பார்த்த அன்று, தலைவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். தலைவரும் பொட்டுவும் ஜீப்பில் வந்தார்கள்' என்று சொல்கிறார் அவர். ஜீப்பில் வந்தார் என்றால் இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் குறுக்கப்பட்ட காலமாக அது இருக்க வாய்ப்பில்லை. சிலபல மாதங்களுக்கு முன்பாகவே இருக்க முடியும்.

இதற்கு மத்தியில் வீடியோ ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் பரவியது. ''வீட்டுக்கு ஒருவரைப் போராட்டத்துக்குத் தர வேண்டும் என்ற அடிப்படையில் தன்னைப் பலியிடவே தலைவர் தயாரானார். ஆனால், போராட்டச் சூழ்நிலை மாறி, 'போரைத் தொடங்க நீங்கள் அவசியம் இருந்தாக வேண்டும்' என்று மற்றவர்கள் சொன்னார்கள். எனவே, அதுவரை கிழக்கு மாகாணக் காடுகளில் இருந்த மகன் சார்லஸ் ஆன்டனி முல்லைத் தீவுக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகுதான் தலைவரை அங்கிருந்து வெளியேற்றத் திட்டமிட்டோம்'' என்று செய்தி சொல்லப்பட்டது. அப்படியானால், சிங்கள அரசாங்கம் காட்டும் பிரபாகரன் சடலம் யார்? அதற்கும் அந்த வீடியோவில் பதில் இருக்கிறது. 'பிரபாகரனின் தோற்றத்தைப்போலவே இருப்பவர் போராளி விமலன். தலைவருக்கும் அவருக்குமான உருவ ஒற்றுமை அனைவரும் அறிந்ததுதான். அதைவைத்து சிங்கள அரசாங்கம் வேடிக்கை காட்டுகிறது' என்று பதில் சொல்லப்படுகிறது. 'பொட்டு அம்மானே இது போன்ற திசை திருப்பும் காரியங்களை அழகாகச் செய்வார் என்பதால், அவரது வேலையாகக்கூட இந்தச் சடலம் இருக்கலாம்' என்று சொல்பவர்களும் உண்டு.

'தலைவர் பிரபாகரன் விரைவில் உயிர்த்தெழுவார்' என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வதைஅலட்சி யப்படுத்த முடியவில்லை!

 source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அதிக நேரம் டிவி பார்த்தால் இதய, புற்று நோய் ஏற்படும்

 Swine Fluசிட்னி : நீங்கள் டிவியின் முன்பு அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களா? அப்படியானால் உங்களுக்கு இதய, புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாம். டிவி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஆயுள் குறையும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

அதிக நேரம் டிவி பார்ப்பவர்கள் மற்றும் அலுவலகங்களில் கணினி முன்பு ஒரே இடத்தில் நீண்ட நேரம் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பேக்கர் ஐடிஐ இதய நோய் சிகிச்சை மையத்தின் வல்லுநர் டேவிட் டன்ஸ்டன் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
இதற்காக, இதய நோய் பாதிப்பு இல்லாத 25 வயதுக்குட்பட்ட 3,846 ஆண்கள் மற்றும் 4,954 பெண்கள் உள்ளிட்ட 8800 பேரை தேர்ந்தெடுத்தனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், 2 முதல் 4 மணி நேரம் பார்ப்பவர்கள் மற்றும் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக பார்ப்பவர்கள் என மூன்று குழுவாக பிரிக்கப்பட்டனர். 
அடுத்த 6 ஆண்டுகள் கழித்து அவர்களை அழைத்தபோது, 284 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதில் 87 பேர் இதய நோயாலும் 125 பேர் புற்று நோயாலும் மற்றவர்கள் வேறு காரணங்களாலும் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
புற்று நோயால் உயிரிழந்ததற்கும் அதிக நேரம் டிவி பார்த்ததற்கும் ஓரளவு தொடர்பு இருந்தது. அதேசமயம், இதயநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக நேரம் டிவி பார்த்ததற்கும் நேரடி தொடர்பு இருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அதாவது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதமாகவும், புற்றுநோய்க்கான வாய்ப்பு 9 சதவீதமாகவும் உள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, நீண்டநேரம் டிவி பார்த்தால் உயிரிழப்பதற்கு 11 சதவீதம் வாய்ப்பு உள்ளதாம். மனிதர்களின் உயிரிழப்புக்கு புகைப் பழக்கம், ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போல, அதிக நேரம் டிவி பார்ப்பதற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 
டிவி பார்ப்பது மட்டுமல்லாமல், அலுவலகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி நீண்ட நேரம் பணியாற்றுபவர்களுக்கும் இத்தகைய நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
ÔÔமனிதனின் உடலமைப்பு சுறுசுறுப்பாக இயங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதற்காக அல்ல. டிவி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் வாழ்நாள் குறைகிறது. இயக்கமின்றி இருந்தால், கொடிய நோய் ஏற்பட்டு உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதுÕÕ என ஆய்வாளர் டேவிட் தெரிவித்தார்.source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சீனாவின் 'சைபர்' அட்டாக்கைத் தாக்குப் பிடிக்குமா இந்தியா?:

சீனாவின் 'சைபர்' அட்டாக்கைத் தாக்குப் பிடிக்குமா இந்தியா?:மத்திய அரசு தீவிர விசாரணை
 

புதுடில்லி:இந்தியாவின் பாதுகாப்புத் துறை வெப்சைட்களுக்குள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்யும் விஷமச் செயல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.கடந்த டிச., 15ம் தேதி, அமெரிக்காவின் பாதுகாப்பு, நிதி மற்றும் தொழில்நுட்பத் துறை வெப்சைட்டுகளுக்குள், சீனாவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்ததாக புகார் எழுந்தது. கூகுல் தேடுதல் இணைய தளத்திலும் இதுபோன்ற குளறுபடிகள், சீனாவில் இருந்து செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது. அதே நாளில், இந்திய பாதுகாப்புத் துறை வெப்சைட்களிலும், சீனா அரசு சார்பில் சில விஷமிகள் ஊடுருவி, அவற்றில் குளறுபடிகள் செய்ய முயன்றதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த எவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இருந்தாலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், விரைவில் கவர்னர் பதவியை ஏற்கவிருப்பவருமான நாராயணன், இந்த தகவலை பகிரங்க படுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு சீனாவில் இருந்து இ-மெயில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் "ட்ரோஜன்' என்ற வைரஸ் உள்ளது.இந்த வைரஸ் மூலம், சீனாவைச் சேர்ந்த "சைபர்' விஷமிகள், சம்பந்தப்பட்ட இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய ஆவணங்களை "டவுண் லோடு' செய்து கொள்ள வோ, அல்லது அந்த ஆவணங்களை அழித்து விடவோ முடியும். சரியான நேரத்தில் இந்த "சைபர் அட்டாக்' கண்டுபிடிக்கப்பட்டதால், பிரச்னை எதுவும் ஏற்படவில்லை.இதுகுறித்து பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தவுள்ளோம்.இவ்வாறு நாராயணன் கூறியுள்ளார்.பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறுகையில்,"சீனாவின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இவை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் வராமல் தடுப்பதற்கு போதிய நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

BREAKING NEWS: தமிழீழ தேசியத் தலைவரைப் போலவே உள்ள ஒருவர் – வீடியோ ஆதாரம்


தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு அறிவித்தமை, பொய்யான சேதி என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இக் காணொளியைப் பதிவு செய்தோர் சிங்கள இராணுவத்தினர் ஆவர். ஒட்டுசுட்டான் பகுதியை சிங்கள இராணுவப் படையினர் கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட படம் இது.
இப்படத்தில், சிங்களப் படையினரில் ஒருவராக வட்டத் தொப்பி அணிந்த மனிதர் நிற்கிறார். அவரது தோற்றம் தலைவர் பிரபாகரன் போலவே உள்ளது.

pirabaharanpola_oruvar_1

pirabaharanpola_oruvar_2

மேலும், தலைவர் பிரபாகரனது உடல் என சிங்களர் காட்டிய உருவம் இத் தொப்பித் தலையரது உருவம் போல் தெரிகிறது. இக்காணொளியைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

"இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது தான் பிரபாகரன் கொல்லப்பட்டார். பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் வேறு உடையில்தான் இருந்தார். நாங்கள் தான் விடுதலைப் புலிகளின் சீருடையை அவரது உடலில் அணிவித்தோம்" என்று இறுதி கட்டப் போரின்போது பணியில் ஈடுபட்டிருந்த 53வது படைப் பிரிவின் தளபதியான கமல் குணரத்ன ஏற்கெனவே தெரிவித்திருந்தார். லங்கதீப் என்ற சிங்கள இதழுக்கு அளித்தப் பேட்டியில் அவர் அதனை தெரிவித்திருந்தார். இந்நாள் வரை அதைனை அவர் மறுக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PRABA2

தமிழீழ தேசியத் தலைவரைப் போலவே விமலன் என்ற போராளி படைக்குள் இருந்ததாகவும் சிலா கூறுகின்றனர். சிங்கள இராணுவத்தை திசைத் திருப்ப தமிழீழ புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவரது சடலத்தைக் கூட அவ்வாறு விட்டுச் சென்றிருக்க முடியும் என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.

source:namthesam
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஜிமெயில் காண தனி கீ போர்டு

 
 

கூகுள் ஜிமெயில் தளத்தில் பல ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது பலருக்கு சிரமமாயுள்ளது என்ற குற்றச் சாட்டு பொதுவாக எழுவது உண்டு. இந்த சிரமத்தைப் போக்க, கூகுள் ஜிமெயில் தளத்தில் பயன்படுத்த எனத் தனியே கீ போர்ட் ஒன்று உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 19.99 அமெரிக்க டாலர். விரைவில் இந்தியாவிலும் இது வரலாம். 
இது 19 கீகள் கொண்டு நம்பர் கீ பேட் போல அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கீயிலும் ஒரு ஷார்ட் கட் வழி அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மெசேஜை ஸ்டார் இட்டு அமைப்பது, சர்ச் ஒன்றைத் தொடங்குவது, மெசேஜ் த்ரெட்களுக் கிடையே செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஷார்ட் கட் கீகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை செட் செய்வதற்கு எனத் தனியே டிரைவர் புரோகிராம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஜிமெயில் இணைய தளம் சென்று அதில் ஷார்ட் கட் கீகளை இயக்கும் விருப்பத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். 
ஜிமெயில் இணைய தளம் இல்லாத போது, இந்த ஷார்ட் கட் கீகளில் என்ன கீகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த கீகளாக இவை செயல்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், இதனை வடிவமைத்து, உருவாக்கித் தந்தது கூகுள் நிறுவனம் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சார்லி மேசன் என்பவராவார். 
ஏற்கனவே நீங்கள் ஜிமெயில் ஷார்ட் கட் கீகளை நன்கு பயன்படுத்துபவராக இருந்தால் இந்த கீ போர்டு தேவையில்லை. இருப்பினும் விரைவான செயல்பாடு இதன் மூலம் கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இந்த கீ போர்டு உதவியாக இருக்கும்.
ஜிமெயிலில் ஏறத்தாழ 69 கீ போர்டு ஷார்ட் கட் கீகள் இருக்கின்றன என்று எண்ணுகையில் இந்த கீ போர்டு நம் வேலையை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இது கிடைக்கும் நாளை எதிர்பார்ப்போம்.ஜிமெயில் டிப்ஸ்....
இன்று பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இலவச இமெயில் தளமாக ஜிமெயில் உருவெடுத்துள்ளது. இந்த இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டால் தான் கூகுள் தரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். எனவே பயன்படுத்துகிறோமோ இல்லையோ பலரும் ஜிமெயில் தள அக்கவுண்ட் வைத்துள்ளனர். 
ஜிமெயில் தளம் சென்றவுடன் நமக்கு வந்திருக்கும் மெயில்களின் பட்டியலைப் பார்த்தால் அவை நமக்கு வந்த தேதிவாரியாக வைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். பொதுவாக நாம் இமெயில்களைப் பார்த்தவுடன், அனுப்பியவர்களின் பெயரைப் பார்த்து, முக்கிய மெயில்களை முதலில் பார்ப்போம். பின்னர், மற்ற மெயில்களை சாவகாசமாகப் படிப்போம். எனவெ மெயில் வரிசையில் சில மெயில்கள் படித்தவையாகவும், சில படிக்காதவையாகவும் இருக்கும். படிக்காதவற்றைத் தேடி எடுத்து கிளிக் செய்து படிக்கும் சிரமத்தைப் போக்க, ஜிமெயில் ஒரு வசதியினைத் தந்துள்ளது. ஜிமெயில் அஞ்சல் பட்டியல் மேலாக உள்ள தேடல் பாக்ஸில் 'is:unread in:inbox' எனக் கொடுத்து 'Search Mail' கிளிக் செய்தால் நாம் படிக்காத மின் அஞ்சல்கள் மட்டும் காட்டப்படும். அவற்றைப் படிக்கலாம்; அல்லது நீக்கலாம்.கிராஷ் ஆன பின் போல்டர்களைக் காப்பாற்ற
விண்டோஸ் எக்ஸ்பியில் நிறைய போல்டர்களைத் திறந்து வைத்து செயல்படும்போது ஒன்று கிராஷ் ஆனாலும் அனைத்தும் மூடப்படும். இதனை நாம் தவிர்க்கலாம். அதற்கான வழியை எக்ஸ்பி வைத்துள்ளது. கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options  என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் 'Launch folder windows in a separate process'  என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP