சமீபத்திய பதிவுகள்

அவனுடைய காலை பார்த்து அவன் பேரைச் சொல்லுங்கள்(நகைச்சுவை)

>> Friday, April 11, 2008

ஒரு கல்லூரி மாணவனுக்கு தனது பாட அட்டவணையில் மீதம் இருந்த இரண்டு மணி நேர பாட நேரங்களை நிரப்ப வேண்டியதாய் இருந்தது. அதற்கு காட்டு வாழ்க்கையை பற்றின விலங்கியல்(Wildlife Zoology) பாடம் மட்டுமே இருந்தது. எனவே வேறு வழி இன்றி அதை அவன் எடுத்தான்.

ஒரு வாரம் கழித்து தேர்வு நடந்தது. பேராசிரியர் வினாத்தாளை ஒவ்வொருவருக்கும் கொடுத்து கொண்டே வந்தார். வினாத்தாள் ஒரே பேப்பர்(paper)-ஆகவும், அதிலே நான்கு கட்டங்களும் இருந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் மிக கவனமாக வரையப்பட்ட பறவைகளின் கால்கள்(legs) உள்ள படம் இருந்தது. அதிலே உடலும்(body) இல்லை, பாதங்களும்(feets) இல்லை, வெறும் கால்கள்(legs) மட்டுமே இருந்தன. மாணவர்கள் அனைவரும் பறவைகளின் பெயரை அதின் கால்களின் மூலம் கண்டறிந்து பதில் எழுத வேண்டும் என்று கேட்கப்பட்டனர். நம்ம மாணவன் உட்கார்ந்து கொண்டு வினாத்தாளை முறைத்து பார்த்து கொண்டு இருந்தான். மேலும் நிமிடத்திற்கு ஒரு முறை கோபப்பட்டு கொண்டிருந்தான். ஏண்டா இந்த படத்தை எடுத்து தொலைச்சோம், இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி இருக்குதே என்று எண்ணினான்.

கடைசியில ஒண்ணுமே எழுதாம(தெரிந்தால் தானே எழுத முடியும்) வெறும் பேப்பர்(paper)-ஐ ஆசிரியரிடம் சென்று கொடுத்தான். "இது தான் என் வாழ்க்கையிலே ரொம்ப கேவலமாக எழுதிய தேர்வு" என்று சொன்னான்.

ஆசிரியர் அவனை பார்த்து: " ஏய், நீ இந்த test-இல் பெயில்(fail) தான். என்ன உன் பெயர் எழுதாமல் பேப்பரை கொடுத்திருக்கிறாய். உன் பேர் என்ன?" என்றார்.

உடனே மாணவன் தன் pant-ஐ முழங்கால் வரை உயர்த்தி தனது கால்களை காண்பித்து பின்வருமாறு சொன்னான்: "நீங்களே சொல்லுங்க"


A college student needed a small two-hour course to fill his schedule and the only one available was wildlife Zoology.

After one week, a test was held.The professor passed out a sheet of paper divided into four squares. In each square was a carefully drawn picture of a bird's legs. No bodies, no feet, just legs. The test asked each student to identify the birds from their legs. The student sat and stared at the test getting angrier every minute.

Finally he stomped up to the front of the classroom and threw the test on the teacher's desk. "This is the worst test I have ever given."

The teacher looked up and said: "Young man, you have flunked the test.

What's your name?"

The student pulled up his pant to the knee showing his legs and said:

"You tell me..."


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13558#13558

StumbleUpon.com Read more...

ஆசிரியர் பயிற்சி பெறப் போகிறீர்களா? உங்களுக்கு ஒரு ஆலோசனை

அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேராதீர்கள் ? மாணவர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்


சென்னை, ஏப். 11-
அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்ற ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவ, மாணவிகள் சேரவேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் நேற்று இது தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஞானசேகரன் (காங்): வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஜெபிஎஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கூறி அப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அதிகம் உள்ளது. இதில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கம் தென்னரசு:
ஜெபிஎஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். பத்திரிகைகளிலும் இதுகுறித்து விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அப்பள்ளியில் படித்த 172 மாணவிகளும் 9 மாணவர்களும் ஏமாந்து உள்ளனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். அனுமதி பெறாமல் ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தியதற்காக அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். அவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1995-ம் ஆண்டுக்கு பிறகு மழலையர் ஆசிரியர் பள்ளிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மோசடியாக மாணவர்களை சேர்த்துக்கொண்டு அவர்களை பகடைகாயாகப் பயன்படுத்தி தேர்வு எழுத அனுமதி கேட்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் செய்தால் தவறு தொடர்ந்த கொண்டுதான் இருக்கும்.
எனவே மாணவ, மாணவிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேரும்போது அங்கீகாரம் பெறப்பட்டு நடத்தப்படுகின்ற பள்ளியா என்று பார்க்க வேண்டும். எத்தனை மாணவ, மாணவிகள் படிக்க அனுமதி பெற்று உள்ளனர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்ற பள்ளியில் சேர்ந்து ஏமாந்து விடாதீர்கள்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

விமானத்தில் பயணம் செய்ய இனி தபால் நிலையம் போனால் போதும்


தமிழகத்தில் இன்று முதல்


தபால் நிலையங்களில் விமான டிக்கெட் விற்பனை


சென்னை, ஏப். 11-
தமிழ்நாட்டில் 247 தபால் அலுவலகங்கள் மூலமாக ஏர் டெக்கான் விமான டிக்கெட்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார், ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஏர் டெக்கான் டிக்கெட் விற்பனை சேவை இன்று முதல் தொடங்குகிறது.
ஒப்பந்தத்திற்கு பிறகு ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறியதாவது:
இந்தியாவில் சாதாரண மக்கள் விமான சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏர் டெக்கான் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சாமானியருக்கும் ஏர் டெக்கான் விமான பயணச் சீட்டு கிடைப்பதற்காக தபால் துறையுடன் இணைந்து செயல்படுகிறோம்.
முதல்கட்டமாக கர்நாடகா தபால் வட்டத்தில் உள்ள 500 தபால் அலுவலகங்கள் மூலமாக ஏர் டெக்கான் விமான பயண டிக்கெட்கள் விற்று வருகிறோம். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நாளை முதல் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள 247 தபால் அலுவலகங்களிலும் விமான பயணச் சீட்டுகள் விற்பனையை தொடங்கியுள்ளோம்.
இந்தியாவில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை பெரு நகரங்களிலேயே அமைக்கப்படுகின்றன. இந்தியா என்பது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மட்டுமல்ல. ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கியது. அந்த கிராமங்களும் முன்னேறினால் தான் நாடு முன்னேறியதாக அர்த்தம்.
இந்தியாவில் 500 விமான ஓடு தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இவற்றை சீரமைத்து விமான சேவை வழங்கினால் எல்லா இடங்களுக்கும் விமானத்தில் செல்லும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார் பேசும்போது, ''தமிழகத்தில் ஏர் டெக்கான் விமான டிக்கெட்கள் விற்பனை செய்ய உள்ள 247 தபால் அலுவலகங்கள் இன்டர்நெட் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் தலா 2 ஊழியருக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வது குறித்து ஏர் டெக்கான் பயிற்சி அளித்துள்ளது. டிக்கெட் விற்பனைக்காக கூட்டுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வழக்கம் போல் சேவை வரி, கல்வி வரி மட்டும் உண்டு. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, டிக்கெட் விற்பனைக்கான அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதன் மூலம் தபால் துறைக்கு 5 சதவீதம் வருமானம் கிடைக்கும்'' என்றார்.
நிகழ்ச்சியில் அஞ்சல் துறை தலைவர்கள் மூர்த்தி, ராமச்சந்திரன், பொதுமேலாளர் முருகையன், இயக்குனர் டி.எஸ்.வி.ஆர்.மூர்த்தி பங்கேற்றனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

ரசனை உள்ளவர்கள்,மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டு பார்த்து ரசிக்க(சிரிக்க)வேண்டிய படம்

CRICKETCARTOONS Photo Arcade

CRICKETCARTOONS Photo Arcade
CRICKETCARTOONS Photo Arcade
CRICKETCARTOONS Photo Arcade
CRICKETCARTOONS Photo Arcade
http://www.dinamani.com/gallery/cartoon.asp

StumbleUpon.com Read more...

மனதை நொறுக்கி கண்களை குழமாக்கிய படங்கள்

ஆழிப்பேரலையின் சுவடுகள் ரணங்களாக


The day after: Grief and Rehabilitation on TN Coast Photo Arcade
The day after: Grief and Rehabilitation on TN Coast Photo Arcade
The day after: Grief and Rehabilitation on TN Coast Photo Arcade

The day after: Grief and Rehabilitation on TN Coast Photo Arcade

http://www.dinamani.com/gallery/show.asp?id=DNQ20041228012115&Topic=901

StumbleUpon.com Read more...

கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுட்டுக்கொலை

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுட்டுக்கொலை



நேபாளத்தில் வியாழக்கிழமை நடைபெற இருக்கும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தலுக்காக, மாவோயிஸ்டுகளுக்கு அதிக ஆதரவு இருக்கும் ரோல்பா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடியில் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸôர்.

காத்மாண்டு, ஏப். 9: நேபாளத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (யு.எம்.எல்) கட்சி ஆதரவாளர்களிடையே செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் யு.எம்.எல் கட்சி வேட்பாளர் ரிஷி பிரசாத் சர்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வன்முறையில் 5 பேர் காயமடைந்தனர். சர்மா போட்டியிட்ட சுர்கட் -1 தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வன்முறை நடந்த இரு கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்மா கொலையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என் அக் கட்சி கூறியுள்ளது.

7 மாவோயிஸ்டுகள் பலி: இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 33 பேரை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிப்பதற்காக போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 மாவோயிஸ்டுகள் பலியாகினர்.

அரசியல் நிர்ணய சபைத் தேர்தலுக்கான பிரசாரம் 6-ம் தேதி மாலையுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், 6-ம் தேதிக்குப் பிறகும் வடக்கு நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அந்தக் கட்சியைச் சேர்ந்த 33 பேரை மாவோயிஸ்ட் இளைஞர் அணியினர் பிடித்துச் சென்றனர்.

அவர்களை விடுவிப்பதற்காக போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மாவோயிஸ்டுகள் 5 பேர் பலியாகினர்.

எனினும், படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் பின்னர் இறந்து விட்டதாக மாவோயிஸ்ட் தலைவர் சாகர் கூறினார்.

அந்தப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமருடன் பிரசண்டா சந்திப்பு: இதற்கிடையே, பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என தமது கட்சியினரைக் கேட்டுக்கொண்ட அவர், அமைதியான முறையில் தேர்தல் நடப்பது ஒன்றே இப்போதைக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, நேபாளத்தின் வேறு சில பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது. தாடிங் பகுதியில் மர்ம நபர்கள் குண்டு வீசியதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20080409132122&Title=International+News&lTitle=NoY%FARNf+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=0

StumbleUpon.com Read more...

சூரிய சக்தி அபாரம்

http://www.dinakaran.com/daily/2008/apr/11/jannal_@.jpg

 

   பாங்காக்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லூயிஸ் பால்மர் என்ற இவர், உலக வெப்பமயமாதலுக்கு எதிரான பிரசாரம் செய்து வருகிறார்.

காற்றை மாசுபடுத்தும் பெட்ரோலியப் பொருட்களுக்கு பதிலாக சூரிய சக்திக்கு மாறுமாறு வலியுறுத்தி தனது சோலார் பவர் காரில் உலகை வலம் வருகிறார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரைச் சுற்றி வரும்போது உற்சாகமாக கையசைக்கிறார் பால்மர். அவரது சூரிய சக்தி கார் அதிகபட்சம் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. பயணம் செய்யலாம்.
 

StumbleUpon.com Read more...

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் ஒ பங்கு பெற்ற அழகுப் போட்டி

 
 
ஒட்டகம் விலை ரூ.11 கோடி
 
 
துபாய்: துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல்&மக்டோம் ஒட்டகப் பிரியர். ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டியின் அமைப்பாளரான இவர், ரூ.18 கோடிக்கு இரண்டு ஒட்டகங்களை வாங்கியுள்ளார்.

அபுதாபியில் ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டி நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் அதில் முதலிடத்தைப் பெறும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கு ரூ.38 கோடி பரிசு கிடைக்கும்.

அழகுப் போட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் ஒட்டகங்கள் பங்கேற்கின்றன. அதில் பரிசு பெற்ற ஒரு ஒட்டகத்துடன் அதன் உரிமையாளர்.
http://www.dinakaran.com/daily/2008/apr/11/jannal.asp

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP