சமீபத்திய பதிவுகள்

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

>> Wednesday, March 17, 2010

 
 


 வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும். 
இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம். 
http://www.youtube.com/results?search_query=thillana+remix&search_type=&aq=f இதில்youtube  என்ற சொல்லில் 'y' என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும்.http://www.3outube.com/results? search_query=thillana+ remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். சோனியின் புதிய டிஜிகேம்
சென்ற வாரம் சோனி நிறுவனம் 22 புதிய டிஜிட்டல் கேமராக்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 12,999 முதல் ரூ. 29,999 வரை உள்ளன. தன் 3டி டிஜிட்டல் கேமராக் களையும் விரைவில் இங்கு விற்பனை செய்திடக் கொண்டு வரப்போவதாகவும் அறிவித்துள்ளது.
புதிய கேமராக்கள் அறிமுகத்தின் மூலம் இந்திய கேமரா விற்பனைச் சந்தையில் தன் பங்கினை இரு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் 4 லட்சம் கேமராக்களை விற்பனை செய்த, சோனி நடப்பு நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறது. அடுத்த நிதியாண்டில் 8 லட்சம் கேமராக்களை விற்பனை செய்திட திட்டமிடுகிறது


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பின்லேடனை உயிருடன் பிடிக்க முடியாது

பின்லேடனை உயிருடன் பிடிக்க முடியாது: அமெரிக்கா

அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை உயிருடன் பிடித்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தும் சாத்தியம் இல்லை என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் எரிக் ஹோல்டர் கூறியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி நிலைக் குழுவின் முன், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அரசு தலைமை வழக்கறிஞர் எரிக் ஹோல்டர், "ஒன்று அமெரிக்கப் படைகள் ஒசாமா பின் லேடனைக் கொன்றுவிடும் அல்லது அவரது ஆட்களாலேயே அவர் கொல்லப்பட்டுவிடுவார்.
 
எனவே உயிருடன் ஒசாமாவை நீதிமன்றத்தில் நிறுத்துவது என்பது சாத்தியமல்ல" என்று கூறியுள்ளார்.

ஒசாமாவை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தினால், எந்த ஒரு அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள உரிமைகளை ஒசாமாவும் பயன்படுத்திக் கொள்வார் என்று குடியரசுக் கட்சியினரின் வாதம் அடிப்படையற்றது என்றும் ஹோல்டர் கூறியுள்ளார்.


source:nakkheeran



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP