சமீபத்திய பதிவுகள்

ஒரு திடுக் வேண்டுதல் யாகம்...'ராஜபக்ஷே தலையில் இடிவிழ...!'

>> Sunday, January 3, 2010


 

 
 

லங்கை அதிபர் ராஜபக் ஷேயின் அதிபர் நாற் காலிக்கு வேட்டு வைக்க, அங்கே அதிரடித் திட்டங்களை அரங்கேற்றி வருகிறார் முன்னாள் தளபதி ஃபொன்சேகா. இதற்கிடையில், ராஜபக்ஷேயின் தலையில் 'இடிவிழ வேண்டி'(!)... ராமேஸ்வரத்தில் யாகம் நடத்தத் தயாராகி வருகிறது இந்து மக்கள் கட்சி!

டிசம்பர் 13-ம் தேதியன்று ஏற்பாடாகி இருக்கும்இந்த யாக நிகழ்ச்சியில்... பழ.நெடு மாறன், ம.நடராஜன், மதுரை ஆதீனம், இலங்கை எம்.பி- யான சிவாஜிலிங்கம், ம.தி.மு.க-வின் அரசியல் ஆய்வுமைய செயலாளர் செந்தில் அதிபன், பெங்க ளூரு ராம்சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் சிறகடிப்பதால், பரபரப்பாகிக் கிடக்கிறது ராமேஸ்வரம்.

இந்த வினோத வேள்வி குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சரவண னிடம் பேசினோம். ''உலகம் முழுவதும் நடந்த அறப்போராட்டங்களால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமை களை தடுக்க முடியவில்லை. ராஜபக்ஷேயின்இனவெறி யால் இலங்கையில் ஆயிரக்கணக் கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படித்தான் புராண காலத்தில் புத்தநந்தி என்பவர் தலைமையில் புத்த குருமார்கள் ஒன்று கூடி திருஞானசம்பந்தரை கொலை செய்யத் திட்டமிட்டனர். அவர் களின் தலையில் இடிவிழ வேண்டும் என, ஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தை சம்பந்தர் சரணாலயர் இறைவன் முன் பாடினார். அந்த வேண்டுதல் பலித்து, தப்பெண்ணம் கொண்டிருந்த புத்த குருமார்களின் தலையில் இடி விழுந்து அவர்களை அழித்தது. அதுபோல இலங்கை தமிழர்களின் உயிர்பலிக்குக் காரணமான ராஜபக்ஷேயின் தலையில் இடிவிழ வலியுறுத்தி 'தமிழ் திருமுறை ஞானவேள்வி' நடத்துகிறோம். பிறகு, இலங்கையில் அல்லல்படும் தமிழர்களின் நலனுக்காகவும், அங்கு தனித்தமிழ் ஈழம் மலர வேண்டியும் ராமநாதசுவாமிக்கு புனிதநீர் அபிஷேகம் செய்து இறைவனை இறைஞ்சுகிறோம். இதில் தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் பலரும், தமிழ்ப்பற்று கொண்ட சான்றோர்களும் பங்கேற்கின்றனர். முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடக்க இருக்கும் இந்த வேள்வியை முடக்க போலீஸ் ஏக கெடுபிடிகளை செய்கிறது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு திட்டமிட்டபடி வேள்வியை நடத்தியே தீருவோம்!'' என்றார்.

சமீபத்தில் இலங்கை அரசின் ஏற்பாட்டின் பேரில் அங்குள்ள கோயில் பூசாரிகளுக்கு வழிபாட்டுப் பயிற்சி அளித்துவிட்டு வந்திருக்கும் பஷி சிவராஜனிடம் பேசினோம். ''இந்து மதத்தில் வேதம், ஆகமம், தாந்திரிகம், பௌராணிகம் ஆகிய நான்கு முறைகளில் இறைவனை வழிபடலாம். அதனடிப்படையில் பௌராணிக முறைப்படி நடக்க இருக்கும் இந்த வேள்விக்கு, இறைவன் நல்ல பலன் தருவார். மக்கள் ஒன்றுகூடி மனமுருகி இறைவனுக்கு விடுக்கும் வேண்டுதலின் பலனாக இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையாக வாழ வழி பிறக்கும். ஆனால், தனிப்பட்ட ஒரு மனிதரின் அழிவுக்காக இந்த வேள்வியை பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் சிறப்பு பெறும்!'' என்றார்.

தமிழ் திருமுறை ஞானவேள்வி குறித்து மதுரை ஆதீனத்திடம் பேசினோம். ''இலங்கை தமிழர்களின் சுபிட்சத்துக்காக இந்து மக்கள் கட்சியினரால் நடத்தப்படும் வேள்வியில் நானும் பங்கேற்க உள்ளேன். ஆனால், ராஜபக்ஷே அழிய வேண்டும் என்ற வேண்டுதலில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஓர் உயிரை பறித்துத்தான் மற்றவர் வாழ வேண்டும் என்பதில் நான் ஏற்புடையவன் அல்ல. எனவே, இலங்கைத் தமிழர்கள் இன்னல்கள் தீர்ந்து இன்புற வாழவேண்டும் என்பதையே இந்த வேள்வியின் மூலம் இறைவனிடம் வேண்டுவேன்!'' என்றார்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி
  
 

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வித்தியாசமான ஷார்ட் கட் கீ

 
 

 .   ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பினை, எடுத்துக்காட்டாக Ctrl+Y என அழுத்தினால் அவர் செட் செய்திடும் ஒரு வாக்கியம் (எ.கா.–இன்று சுபிட்சமான நாள்) வேர்டில் அமைக்கப்பட வேண்டும். இதை ஆட்டோ டெக்ஸ்ட் பட்டியலில் அமைக்கலாம் என்றாலும் அதிலும் சிறிய தடை இருக்கிறது. எனவே வேறு ஒரு முயற்சியையும் மேற்கொண்டு தீர்வைக் கொண்டு வர முடிந்தது.
1. முதலில் வழக்கமாக ஓர் Auto Text Entryஎன்ட்ரியை எப்படிக் கொண்டு வர வேண்டுமோ அந்த வழியைத் தொடங்க வேண்டும். அதாவது Insert  மெனு அழுத்திப் பின் மெனுவில் Auto Text  தேர்ந்தெடுக்க வேண்டும். பின் நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட்டை Enter Auto Text Entries Here என்ற பாக்ஸில் டைப் செய்து ஓகே கிளிக் செய்து மூட வேண்டும்.
2. பின் Tools மெனு கிளிக் செய்து அதில் Customize  பிரிவில் கிளிக் செய்திடவும். வேர்ட் Customize Dialogue Box  காட்டும். 
3.இதில் Key Board பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Customize Key Board Dialogue Box னைக் காட்டும்.
4. கர்சரை New Short Cut Key என்ற பாக்ஸுக்குக் கொண்டு செல்லவும். 
5. எந்த ஷார்ட் கட் கீயினை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அந்த கீயினை இப்போது அழுத்தவும். இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பு வேறு ஒரு கட்டளைக்குப் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருந்தால் அது காட்டப்படும். அப்படிக் காட்டப்படாத ஒரு ஷார்ட் கட் கீ தொகுப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். 
6. இப்போது அருகே உள்ள Categories  லிஸ்ட்டை ஸ்குரோல் டவுண் செய்து செல்லவும். அதில் Auto Text என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸின் வலது புறம், ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிகள் காட்டப்படும். 
7. முதலில் ஸ்டெப் 1 ல் ஏற்படுத்திய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடவும். 
8. பின் Assign என்ற பட்டனை அழுத்தி புதிய ஷார்ட் கட் கீ தொகுப்பிற்கு இதனை அசைன் செய்திடவும்.
9. இனி கஸ்டமைஸ் கீ போர்டு டயலாக் பாக்ஸை குளோஸ் பட்டன் அழுத்தி மூடவும்.
10. அடுத்து இதே போல கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸையும் மூடவும். 
இனி நீங்கள் அமைத்த ஷார்ட் கட் கீ அழுத்தப்படும்போது டெக்ஸ்ட் தானாக டாகுமெண்ட்டில் அமைக்கப்படும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கின்ன்ஸில் இடம் பிடித்த தமிழ் படம்

 

ழப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'சிவப்பு மழை" என்ற தமிழ் படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேவா இசையில் கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கி பனிரெண்டு நாட்களில் தயாரித்து, நடித்த படம் சிவப்பு மழை. இப்படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படம், மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படம் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதற்குமுன் 1990-ல் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றால் பதின்மூன்று நாட்களில் தாயாரிக்கப்பட்ட 'பாஸ்ட் பார்வேர்ட்' என்ற ஆங்கிலப் படமே குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தது. அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. 'சிவப்பு மழை'.

கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை படக் குழுவினருக்கு அனுப்பபட்டு இருந்தது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளை செய்தவர் சுரேஷ் ஜோக்கிம். இவர் இலங்கையில் நடைபெற்ற ஈழப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கியிருந்ததால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களையும் சந்தித்தது.

விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தை 23 நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் சப் டைட்டில் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

'சிவப்பு மழை' தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டு அதிக மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட படம் என்ற சாதனையையும் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மரித்த பின் மகான் ! ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி!

மரித்த பின் மகான் !

ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி! - இதுதான் புரட்சியாளர்களுக்குக் கிடைக்கும் பரிசு.

பெரும்பாலான புரட்சிகள், ஒன்று தோல்வியில்ஆரம்பிக் கின்றன அல்லது தோல்வியில் முடிகின்றன. மாவோ, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற பலரின் புரட்சிகள் தோல்வியில்தான் தொடங்கின. இந்தியச் சுதந்திரத்தின் பின்னேகூட சிப்பாய் கலகம், கதர் போராட்டம் (இங்கே கதர் என்றால் கிளர்ச்சி என்று அர்த்தம்), கிலாபத் கிளர்ச்சி எனப் பல புரட்சிகள் தோற்றுப்போயிருக்கின்றன.

உலகின் மிக அதிகப் புரட்சிகளை வெற்றிபெறவைத்தது யார் தெரியுமா? மாணவர்கள்! இதனாலேயே 'மாணவர்கள் களம் இறங்கினால் எந்தப் புரட்சியும்வெற்றி பெறும்' என்று 1989 வரை உலகமே நம்பிக் கொண்டு இருந்தது. அந்த கான்செப்ட்டை பீரங்கி ஏற்றி நசுக்கியது சீனா. சீன பொது உடைமைக் கட்சியின் அரசியல் மற்றும்பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பெய் ஜிங்கின் தியாங் மென் சதுக்கத்தில் 1989-ல் மாணவர்கள் ஒன்றுகூடினார்கள்.மாணவர் களை மிரட்ட பீரங்கிகளைக் களம் இறக் கியது சீனா. நிராயுதபாணியான மாணவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது. ரத்தக்களறி ஆனது சதுக்கம். '200 பேர்தான் இறந்தார்கள்' என்கிறது சீனா. 'இது பச்சைப் பொய். மூவாயிரம் மாணவர்கள் வரை கொல்லப்பட்டார்கள்' என்றது சீன மாணவர்கள் சங்கம். உலக நாடுகள் சீனாவுக்குக் கடும் கண்டனம் தெரி வித்தன. உலகிலேயே அதிகம் கவனிக் கப்பட்டு தோல்வியில் முடிந்த புரட்சி இதுதான்.

இறப்புக்குப் பிறகு கொண்டாடப் படும் புரட்சியாளர்கள் வாழும்போது எதிர்கொள்ளும் அவமானங்கள் நிறைய. ஜெர்மானிய வரலாற்றில் 'தி கிரேட் ஆர்லாண்டோ மொசார்ட்டோ' (உயர்ந்த புரட்சி வீரன்) என்றுகொண் டாடப்படும் நேதாஜி, வாழும்காலத் தில் இந்தியா முழுக்கப் புரட்சிக்கு ஆதரவு தேடி அலைந்தார். உலகில் தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்கப் பெற்ற மிகச் சில புரட்சியாளர் களில் லெனினும் ஒருவர். 'புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள்' என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறார் லெனின்!

உண்மைதானே?

இரா.மன்னர் மன்னன்

புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி! 

- ஹெச்.ஜி.வெல்ஸ்

 

source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இன்டர்நெட்டில் ஆபாச படம் சீனாவில் 5 ஆயிரம் பேர் கைது


 
 பீஜிங்:சீனாவில் இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை பார்க்க ஏற்பாடு செய்த ஐந்தாயிரத்து 394 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சீனாவில் இன்டர்நெட் மையங்கள் புற்றீசல் போல பெருகி விட்டன. இந்த மையங்களில், ஆபாசப் படங்கள் பார்ப்பதும் அதிகரித்துள்ளது. அந்த நாட்டில், 40 கோடி பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.


கடந்த 2006ம் ஆண்டை விட, இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இன்டர் நெட் மையங்களில் ஆபாசப் படங்களை பார்க்க அனுமதித்த, ஐந்தாயிரத்து 394 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிலர் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்."இந்த ஆண்டு ஆபாசப் படங்களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும். இதற்காக இன்டர் நெட் மையங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP