சமீபத்திய பதிவுகள்

வேளாங்கன்னியில் சிங்களவர்கள் விரட்டியடிப்பு !

>> Monday, August 8, 2011

 

 

தமிழ் நாட்டில் உள்ள வேளாங்கன்னி கோவிலுக்கு அருகாமையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த சிங்களவர்களை வெளியேறக்கோரி தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடித்தியுள்ளனர். பணத்தைப் பார்க்காமல் மனச்சாட்சியைப் பாருங்கள் ! இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களை ஒரு கணம் யோசியுங்கள் ! என்ற கோகஷங்களால் லாட்ஜ் உரிமையாளர்கள் மனம்மாறி சிங்களவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளனர். இதனை அடுத்து பெட்டி படுக்கைகளோடு சிங்களவர்கள் வேறு லாட்ஜ் ஒன்றைத் தேடி அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள் எங்கு தங்கினாலும் தாம் அங்கெல்லாம் சென்று போராட்டம் நடத்துவோம் என தமிழ் உணர்வாளர்கள் கூறியுள்ளனர். இனப்படுகொலை புரிந்த சிங்களவர்களுக்கு தமிழ் நாட்டு மண்ணை மிதிக்கும் தகுதி இல்லை என உணர்வாளர்கள் அதிர்வு இணைய நிருபரிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் சிங்களவர்கள் தாக்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பியுள்ள நிலையில் , தமிழ் நாட்டில் தற்சமயம் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அடுத்த விமானத்தைப் பிடித்து இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP