டிப்ஸ் கதம்பம்
>> Thursday, March 25, 2010
வேர்டில் வரி அழிக்க source:dinamalar
வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் முடிவு வரை தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து பேக் ஸ்பேஸ் அல்லது டெலீட் அழுத்துங்கள். ஏன், ஸ்பேஸ் கீ அழுத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி அழிக்கப்படும். மின்னஞ்சல் கடிதங்களை சுருக்கமாகவும் நேரடியாக விஷயத்தைத் தெரிவிப்பதாகவும் அமைத்திடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை மின்னஞ்சலுடன் இணைப்பாகத் தர எண்ணினால் அவற்றை ஸிப் செய்து அனுப்பவும். அப்போது தான் கடிதத்தினைப் பெறுபவர் அனைத்து பைல்களையும் பெறுவது உறுதிப் படுத்தப்படும். இல்லை என்றால் ஒன்று கிடைத்து ஒன்று கிடைக்காமல் போகலாம்.
* ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் செயலாற்றிக் கொண்டிருக்கையில் திரையில் தோன்றும் விண்டோவினை பின்னுக்குத் தள்ளி மற்றதை முன்னுக்குக் கொண்டு வர Alt+ ESC அழுத்தவும்.
நம் விருப்ப புல்லட்
வேர்டில் உள்ள வரி ஒன்றின் நடுவே, புல்லட் போல சிறிய புள்ளி ஒன்று அமைக்க விரும்புகிறீர்கள். புல்லட் டூலைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் விரும்பியபடி புல்லட் அமையவில்லை. என்ன செய்யலாம்? எந்த இடத்தில் சிறிய புள்ளியை, புல்லட் ஆக அமைக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் நம்லாக் கீயை ஆன் செய்து, நியூமெரிக் கீ பேடில் ஆல்ட் கீயினை அழுத்தியவாறே 0183 என்ற எண்களை அழுத்தவும். புள்ளி அமைக்கப்படும்.
கண்ட்ரோல் பேனல் உங்கள் கைகளில்
நீங்கள் அடிக்கடி கண்ட்ரோல் பேனல் திறந்து பயன்படுத்துபவரா? ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் கிளிக் செய்து பல பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் பின் கண்ட்ரோல் பேனல் செல்கிறீர்களா? நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால் இந்த மவுஸ் அலைச்சல் தேவையில்லை. கண்ட்ரோல் பேனலைத் திறக்கும் வழியை உங்கள் டாஸ்க்பாரில் வைத்துக் கொள்ளலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Control Panel என டைப் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் ஐகான் காட்டப்படும்போது அப்படியே அதனை இழுத்து வந்து, உங்கள் டாஸ்க் பாரில் விடவும். அடுத்த முறை கண்ட்ரோல் பேனல் செல்ல எண்ணுகையில் இதனைக் கிளிக் செய்தால் போதும். எப்போதாவது இந்த ஐகான் எதற்கு டாஸ்க் பாரில் என்று எண்ணினால் இதன் மீது ரைட் கிளிக் செய்து Unpin this program from Taskbar என்பதில் கிளிக் செய்தால் போதும்.
வேர்டில் பைலைத் திறக்க
வேர்டைத் திறக்கையில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்களின் பட்டியலில் நாம் செட் செய்ததற் கேற்ப 4 முதல் 9 பைல்கள் வரை காட்டும். இவை 1,2,3 என வரிசைப் படுத்தப்பட்டு மெனுவின் கீழாக இருக்கும். குறிப்பிட்ட பைலைத் திறக்க மவுஸின் கர்சரை அந்த பைலின் பெயர் மீது வைத்து கிளிக் செய்வோம். இன்னொரு குறுக்கு வழியும் உள்ளது. அந்த பைலுக்கு எந்த எண் தரப்பட்டுள்ளதோ அந்த எண்ணுக்கான கீயை (1,2,3 என்றபடி) அழுத்தினால் போதும். அந்த பைல் திறக்கப்படும்
www.thamilislam.co.cc