சமீபத்திய பதிவுகள்

சுவிட்சர்லாந்தில் அவசரகால ஒன்றுகூடல் - (மரணத்தின் வாசலில் ஜநாவை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி)

>> Monday, January 19, 2009

 
 
 மரணத்தின் வாசலில் உன் இனம் இதை தடுத்திட எழுந்து வா தமிழனே அழுதது போதும் உரிமைப்போரை உன் கைல் எடு விரைவோம். விரைந்து செயல்படுவோம்!
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஒன்றுகூடல் நாளை மறுதினம் பிற்பகல் 14:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பசமாகி ஜநா மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப்பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும்.

இதில்
· தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும்
· போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜநா உட்பட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும்

என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு எமது மகளின் அவலங்களை இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம்

வரலாற்றில் இதுவரையில் இல்லாத மாபெரும் மனித அவலங்களை எமது இனம் எம் சொந்த பூமியில் சந்தித்து வருகின்றது. விரைந்து செயல்பட்டு எமது மக்களின் வாழ்வை மீட்டெடுப்பது எமது கடமை.

அனைத்து மாநிலங்களிலும் போக்கு வரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dZj0q0ecGG7X3b4F9Ei4d2g2h3cc2DpY2d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

பிரான்ஸ் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள்

 
  •  
பிரான்ஸ் ஒன்றுகூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள்
 
 
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான இன்று பரிசின் முக்கிய பகுதியான ஈபிள் கோபுரம் அமைந்துள்ள ரொக்கட்டொரோ பகுதியில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி சிறிலங்காவின் இனப்படுகொலை எடுத்துக் கூறியுள்ளனர்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்த இந்த இனப்படுகொலைக்கு எதிரான ஒன்று கூடல்  மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது. 
இதன்போது தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு வன்னியில் ஏற்பட்டுள்ள அவலத்தை எடுத்து கூறினர்.

 

 
 
 

StumbleUpon.com Read more...

வெள்ளை மாளிகையில் பதவியேற்கும் கருப்பு அதிபர்:அமெரிக்காவில் புதிய அத்தியாயம் உதயம்!

 
 
lankasri.comஇன்று வாஷிங்டனில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கிறார்.47-வயதாகும் ஒபாமா அமெரிக்காவின் இளம் அதிபர்களில் ஒருவர்.அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஹோனலூலுவில் 1961-ஆக.4ம் தேதி பராக் ஒபாமா பிறந்தார்.

இவரது தந்தை சீனியர் ஒபாமா கென்யாவை சேர்ந்தவர்.தாய் அமெரிக்காவை சேர்ந்த ஆன் டன்ஹம்.இவருக்கு இரண்டு வயதாகும் போதே இவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.10-வயதுவரை இந்தோனேஷியாவில் வசித்தார்.

பின்னர் ஹோனலூலுக்கு திரும்பி தனது தாத்தா வீட்டில் தங்கி பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.பள்ளியில் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக திகழ்ந்தார்.லாஸ் ஏஞ்சலிசின் ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்தார்.1982ம் ஆண்டு ஒபாமாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார்.தனது தந்தையை ஒபாமா ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1983ம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்சில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்கில் "பிசினஸ் இன்டர்நேஷனல் கார்ப்ரேஷன்", "நியுயார்க் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் ரிசர்ச் குரூப்" ஆகிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றினார்.

1988ல் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.சட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் வழக்கறிஞராக இருந்த போது 1992ல் மிஷல் ஒபாமாவை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார்.1993ல் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்து மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார்.

1995ல் அமெரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகள் குறித்து "டிரீம்ஸ் பிரம் மை பாதர்" என்ற புத்தகத்தை எழுதினார்.இந்த புத்தகம் மூலமாக கிடைத்த பணத்தில் சிகாகோவில் வீடு வாங்கியதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

1996ம் ஆண்டு இல்லினாய்ஸ் செனட் உறுப்பினராக தேர்வானார்.2005ல் அமெரிக்க செனட்டின் உறுப் பினரானார்.ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு பெற இவருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி பெரும் பான்மை பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று,அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஏறத்தாழ ரூ.3-ஆயிரம் கோடிக்கு மேல் தேர்தல் நிதி திரட்டினார்.ஈராக் போர் தொடர்பான புஷ்சின் கொள்கைகளை தனது பிரசாரத்தில் ஒபாமா கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார்.கடந்த நவ.4ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மெக்கைனை எளிதாக வீழ்த்தி மொத்தமுள்ள 538-இடங்களில் 365-இடங்களை கைப்பற்றினார்.52-சதவீத வாக்குகளை பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கைனுக்கு 45-சதவீத வாக்குகளே கிடைத்தன.ஒபாமாவின் பிரமாண்ட வெற்றிக்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீரழிவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஒபாமாவின் தந்தை கருப்பினத்தை சேர்ந்தவர்.இவரது தாயார் வெள்ளையினத்தவர்.எனினும் தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்களாக இருக்கலாம் என ஒபாமா தெரிவித்துள்ளார்.இவரது தந்தை இஸ்லாமியராக இருந்தாலும்,தாயின் கிறிஸ்தவ மதத்தை ஒபாமா பின்பற்றினார்.எனினும் இளைஞராக இருந்த போது சில ஆண்டுகள் நாத்திக கொள்கைகளில் நாட்டம் கொண்டார்.

ஆணுஆயுத தயாரிப்பை கைவிடும் படி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து ஒபாமா வலியுறுத்தி வருகிறார்.உலகம் முழுவதும் அணுஆயுத உற்பத்தியை நிறுத்த ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஆயுதங்களை உருவாக்க பல்லாயிரம் கோடி டாலர் செலவிடப்படுவதாகவும்,தான் அதிபரானவுடன் அதை குறைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.எண்ணெய் இறக்குமதியை குறைத்து,வேறுவகைகளில் ஆற்றல் உற்பத்தியை பெருக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.ஒபாமாவுக்கு மலியா,ஷாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1232437043&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானில் 6-பள்ளிக்கூடங்கள் குண்டுவீசி தகர்ப்பு;தலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம்

 
 
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்திலும் முகாம்கள் அமைத்து நாசவேலை மற்றும் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

கவாத் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக்கூடாது என்று ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ளனர்.ஆனால் இதை மீறி சில பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்கள்.அரசும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அனைத்து தனியார் பள்ளிகளையும் மூட வேண்டும் என்று "கெடு" விதித்து இருந்தனர்.

ஆனால் பள்ளிக்கூடங்கள் மூடப்படவில்லை.இதை அடுத்து தலிபான் தீவிரவாதிகள் சவாத்,மிங்கோரா பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.ஒரே நாளில் 6-பள்ளிக்கூடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன.மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததால் குழந்தைகள் உயிர் தப்பியது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தலிபான்கள் 150-அரசு பள்ளிக்கூடங்களை இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1232436580&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

பிரான்சில் ஒன்றுகூடல்

StumbleUpon.com Read more...

இணையதள தேடுதலில் ஒபாமாவை மிஞ்சினார் "சத்யம்" ராஜு

இணையதள தேடுதலில் ஒபாமாவை மிஞ்சினார் "சத்யம்" ராஜு
 
lankasri.comஇந்தியா மற்றும் அயல்நாடுகளில் இணையதள தேடுதலில்,அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவைவிட "சத்யம்" நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு முதலிடத்தில் உள்ளார்.கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையிலான 6-நாட்களில் இணையதளத்தில் கூகுள் வழியாக தேடுதல் நடத்தியவர்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

அதில் ராஜுவும்,ஒபாமாவும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர்.இருப்பினும் ராஜுவைக் காட்டிலும் ஒபாமா சற்றே முன்னிலையில் இருந்தார்.

ஆனால் கடந்த 7-ம் தேதி ஒரே நாளில் ராஜு குறித்து தேடுதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து,ஒபாமாவை பின்னுக்குத் தள்ளியது.அன்று ஒரு நாள் மட்டும் ஒபாமாவைக் காட்டிலும் 10-மடங்கு அதிகமாக ராஜு குறித்து தேடுதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

அதன்பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது ஒபாமாவுக்கு ஒருபடி மேலே ராஜு உள்ளார்.

இதில் சத்யம் நிறுவனர் ராஜு குறித்து அவரது சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலிருந்துதான் அதிகம் பேர் இணையதளத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதைத்தொடர்ந்து தமிழ்நாடு,கர்நாடகம்,குஜராத்,மகாராஷ்டிரம் மற்றும் தில்லி என மாநிலவாரியாக அடுத்தடுத்து அதிக எண்ணிக்கையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நகரங்களைப் பொருத்தவரை ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது.அதைத் தொடர்ந்து சென்னை,பெங்களூர்,புணே,மும்பை,தில்லி அமைந்துள்ளது.

ஒபாமா குறித்து தேடுதலில் நடத்தியவர்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.நகரங்களைப் பொருத்தவரையில் சென்னை முதலிடத்திலும்,மும்பை,நவி மும்பை,பெங்களூர்,தில்லி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.

இந்தியாவுக்கு வெளியே,ராஜு குறித்து சௌதி அரேபியாவில் அதிகம் பேர் விசாரணை நடத்தியுள்ளனர்.அதைத்தொடர்ந்து சிங்கப்பூர்,பின்லாந்து,அமெரிக்கா,போலந்து,ஆஸ்திரேலியா,பிரிட்டன்,கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.ஆங்கிலம் தவிர போலந்து மொழியிலும் ராஜு தொடர்பாக இணையதளத்தில் நாடியுள்ளனர்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1232375342&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

நெத்தலியாற்றில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 35 படையினர் பலி; 60 பேர் காயம்

 
 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நெத்தலியாற்று பகுதியில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை முதல் சிறிலங்கா படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்நகர்வினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதில் சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெத்தலியாற்றின் இரு மருங்கையும் உள்ளடக்கி ஒரு கிலோமீற்றர் அகலத்துக்கு சிறிலங்கா படையினர் இம்முன்நகர்வினை மேற்கொண்டிருந்தனர்.

 

http://www.puthinam.com/full.php?2b44OO44b3aC6DR34d31VoK2a0344AAe4d2YSmAce0de0MtHce0df1eo2cc0ScYK3e

StumbleUpon.com Read more...

வன்னியில் இருந்து அவசர அறைகூவல்

Situation Report on 15[1].01.09.2

StumbleUpon.com Read more...

மகாத்மாவின் வாழ்விலே...

மகாத்மாவின் வாழ்விலே...

அகிம்சையும் சத்தியமும் ஆயுதங்கள்

காந்திஜி வெள்ளையனே வெள்ளையேறு என்று முழக்கமிட இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வழியில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ்கண்டவாறு கூறினார்.

"இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ ஆயுதங்களைப் புறக்கணித்துவிட்டு அகிம்சை, சத்தியம் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார்கள். இவற்றை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "

சர்ச்சில் இப்படிக் கூறியது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் திகைக்க வைத்தது.  

ஜீவாதான் பாரதத்தின் சொத்து

காந்திஜியின் பெயரில் ஜீவானந்தம் (ஜீவா) ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். இது காரைக்குடிக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் உள்ள சிராவயல் எனும் ஊரில் அமைந்திருந்தது.

1927 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த காந்திஜி தனது பெயரில் நடக்கும் அந்த ஆசிரமத்தைப் பார்க்கச் சென்றார். ஜீவா தனது கையால் நூற்ற நூலை மாலையாக்கிக் காந்திஜிக்கு அணிவித்தார். அதைப் பெற்றுக்கொண்ட காந்திஜி மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

அடுத்து காந்திஜி ஜீவாவைப் பார்த்து, உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ஜீவா பாரதமே என் சொத்துதானே! என்று பதில் கூறினார். இதைக் கேட்டதும் காந்திஜி அசந்து போனார்.

உடனே காந்திஜி ஜீவாவைப் பார்த்து, "இல்லை, நீங்கள்தான் பாரதத்தின் சொத்து" என்று கூறினார். இதைக் கேட்டதும் ஜீவாவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
 

-தேனி.எஸ்.மாரியப்பன்

StumbleUpon.com Read more...

ததஜ (TNTJ) உடைந்தது இந்திய தவ்ஹித் ஜமாத் (ITJ) உதயம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு

சென்னை, ஜன. 16 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உடைந்து அதன் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய அமைப்பை எஸ்.எம். பாக்கர் அறிவித்தார்.
பாக்கருடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எம். சையது இக்பால், மாநிலப் பொருளாளர் அபுபக்கர் தொண்டியப்பா, மாநிலச் செயலாளர்கள் முகம்மது சித்திக், முகம்மது முனீர், முகம்மது சிப்ளி, அபு பைசல் ஆகியோரும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எஸ்.எம். பாக்கர் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'தின் தலைவராகவும், முகம்மது சித்திக் பொதுச் செயலாளராகவும், எஸ்.எம். சையது இக்பால் துணைப் பொதுச் செயலாளராகவும், அபுபக்கர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய அமைப்பு குறித்து எஸ்.எம். பாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
பல்வேறு அமைப்புகளில் இருந்து எதுவும் செய்ய முடியாததால் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம்.
இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. நாங்கள் என்றும் ஓரிறை (ஒரே கடவுள்) கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பிரசாரம் செய்வோம்.

திருக்குரான் மற்றும் நபி வழியை முஸ்லிம்கள் மத்தியில் போதிப்பது, செயல்படுத்துவது, மக்கள் தொகைக்கேற்ப முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராடுவது, வரதட்சணை, மது, ஆபாசம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வட்டிக் கொடுமை, மூட நம்பிக்கைகள் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு எதிராக வீரியமுடன் போராடுவதற்காகவே இந்த இயக்கம்.
வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறமாட்டோம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவோம் என்றார் பாக்கர்.

பாக்கர் நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். பாக்கர் நீக்கப்பட்டதாக அதன் துணை பொதுச் செயலாளர் எஸ். கலீல் ரசூல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிவிப்பு: சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாக்கரை அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாக்கருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினமணி
 

StumbleUpon.com Read more...

பிரபாகரன் தப்பி விட்டார்?-தினமணி

பிரபாகரன் தப்பி விட்டார்?

கொழும்பு, ஜன. 18: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பி இருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தற்போது பிரபாகரன் இலங்கையில் உள்ளாரா அல்லது வேறு நாட்டுக்குத் தப்பிவிட்டாரா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. அவர் தப்பிச் செல்லவும் வழி உள்ளது. ஆனால் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார்.

கொழும்பில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனைப் பிடிக்க இந்தியா முனைப்பாக உள்ளது. அதுபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளன. எனவே இந்த நாடுகளுக்கு பிரபாகரன் செல்வதற்கு வாய்ப்பில்லை.

அண்மையில் கப்பலில் விடுதலைப் புலிகளுக்காக கடத்தி வரப்பட்ட ஆயுதங்களை தரையிறக்கும்போது அந்தக் கப்பலை இலங்கை விமானப் படை விமானம் குண்டு வீசி அழித்தது. எனவே விடுதலைப் புலிகளால் ஆயுதங்களைக் கடத்தி வரவும் இங்கிருந்து செல்லவும் முடிகிறது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. இதைவைத்துப் பார்க்கும்போது பிரபாகரன் தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளது. தற்கொலை படகுகள் சூழ அவர் தப்பிச் செல்ல முயற்சிக்கலாம். இருப்பினும் அவர் தப்பிச் செல்லாதவாறு நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்றார் பொன்சேகா.

கிளிநொச்சி மற்றும் யானை இறவை இழந்ததை அடுத்து பிரபாகரன் தற்போது முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக பொன்சேகா முன்பு கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைமையகமாக திகழ்ந்த கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது முகாமை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டனர் என்று கூறப்பட்டது. முல்லைத் தீவில் நவீன வசதிகள் கொண்ட ரகசிய பதுங்கு குழியில் பிரபாகரன் தங்கியிருக்கிறார் என்றும் செய்தி வெளியானது.

முல்லைத்தீவையும் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதால் பிரபாகரன் பிடிபடுவது உறுதி. அவர் விரைவில் பிடிபடுவார் என்று இலங்கை ராணுவத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. பிரபாகரன் பிடிபடும் நிலையில் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வந்தது. பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசும் தயாராக இருந்தது.

இந்த நிலையில்தான் முல்லைத்தீவிலிருந்தும் அவர் தப்பியிருக்கலாம் என்று ராணுவ தளபதி தற்போது கூறியுள்ளார்.

அதேநேரத்தில் பிரபாகரன் அல்லது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் யாராவது கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது.

அதிநவீன படகுகள், ரேடார்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். எனவே பிரபாகரனைத் தப்பவிடமாட்டோம் என்று இலங்கை கடற்படை தளபதி திசநாயக தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்கரையைச் சுற்றி 25 கடல்மைல் தொலைவுக்கு நான்கு அடுக்கு வளையம் அமைத்து பிரபாகரனுக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்.
 
 

StumbleUpon.com Read more...

"தமிழீழமே ஒரே தீர்வு:" "ஒபாமாவுக்கான தமிழர்கள்" கருத்துக்கணிப்பில் உலகத் தமிழர்கள் ஏகோபித்த தீர்மானம்

"தமிழீழமே ஒரே தீர்வு:" "ஒபாமாவுக்கான தமிழர்கள்" கருத்துக்கணிப்பில் உலகத் தமிழர்கள் ஏகோபித்த தீர்மானம்
 
அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு அண்மையில் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில் 90 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் "தமிழீழத் தனியரசே" தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் என அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்தார்.

"ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பினர் இணையத்தளம் ஊடாக நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் இருநூறுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாக்களித்திருந்தனர்."
 
"வாக்களித்தவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் "தமிழீழத் தனிய"ரசை அமைப்பதே தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஒரே தீர்வு என்ற தீர்மானத்தை இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் பிரகடனப்படுத்தியுள்ளனர்."
 
"இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவினை, உலகில் தேவையான இராஜதந்திரிகள் எல்லோருக்கும் நாம் அனுப்பியிருக்கின்றோம்" எனக் கூறிய அந்த ஊடகத் தொடர்பாளர் "அவர்களில் பலர் இந்த கருத்துக் கணிப்பின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளதாக எமக்கு பதில்களைக் கூட அனுப்பியுள்ளனர்" எனவும் தெரிவித்தள்ளார்.
 
"இலங்கைத் தமிழர்கள் ஒரே நாட்டிற்குள் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வர் என்று கூறிவரும் உலகின் முதன்மையான மேற்குலக நாடுகளினதும், இந்தியாவினதும் கொள்கை வகுப்பாளர்கள் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளையும், முடிவையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்:
 
http://www.tamilsforobama.com/poll/result.asp
 
மேலும், அமெரிக்காவில், புதிதாக ஆட்சி அமைக்கவிருக்கும் பராக் ஒபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக நியமனம் பெற்றுள்ள ஹில்லாறி கிளின்டனுக்கும் மற்றும் தென்னாசியா தொடர்பான ஏனைய செயலர்களுக்கும் கொடுக்கவென "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பினால் ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது.
 
இந்த கடிதத்தில் உலகெங்குமிருந்து மிகப் பிரமாண்டமான எண்ணிக்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் கையெழுத்துக்களை இட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த கடிதத்தின் தமிழ், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கில மொழிப் பிரதிகளை கீழே உள்ள இணைப்பில் காணலாம். இந்த இணைப்பு வழியாக தொடர்ந்தும் மக்களை இந்த கடிதத்தில் கையெழுத்திடுமாறு "ஒபாமாவுக்கான தமிழர்கள்" கேட்டுக்கொள்கின்றனர்.
 
http://www.tamilsforobama.com/sign/letter.html

StumbleUpon.com Read more...

யுத்தம் முடிவடைந்த பின்னர்தான் அரசியல் தீர்வுக்கான நகர்வாம்! - இந்தியாவிடம் இலங்கை திட்டவட்டமாகத் தெரிவிப்பு

 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முற்றாக நிறைவடைந்த பின்னரே தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை அரசு இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்ச ங்கர் மேனனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசின் இந்த உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார் என்று இந்திய நாழிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தைமேற்கொண்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கண்டியில் நடந்த சந்திப்பின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான பேச்சுகளில் இவ்விடயமே முக்கியத்துவம்
பெற்றுள்ளது. மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதற்காகத் தனது அர அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையை இந்தியா கருத்தில் கொண்டுள்ளது என்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் பேச்சுகள் மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென வெளிவிவகாரச் செயலாளர் வலியுறுத்தினார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் உட்பட சகல சமூகத்தினரும் அமைதியுடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய அரசியல் தீர்வை ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் காணவேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
இலங்கையின் வட பகுதியில் காணப்படும் மனிதாபிமான நிலைவரம் குறித்த இந்தியாவின் கரிசனையையும் மேனன் தெரிவித்தார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பேச்சுகள் மூலமாக அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதென இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியை மேனன் வரவேற்றார் எனவும் உயர்ஸ்தானிகராலய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மோதலின் காரணமாகப் பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை மேனன் வலியுறுத்தினார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
a

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

ஊனம் பறப்பதற்கும் தடையல்ல
தினமலர்-வாரமலர்

StumbleUpon.com Read more...

பறக்கும் கார்
தினமலர்-வாரமலர்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP