சமீபத்திய பதிவுகள்

சுவிஸ் ஜெனீவா ஐநா முன்றலில் நடைபெற்ற அழிவிலும் எழுவோம் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் !

>> Wednesday, February 4, 2009

 

February 4, 2009

swis-4.jpg 
சிங்கள சிறீலங்கா அரசின் சுதந்திர நாளான 04.02.2009 புதன்கிழமை தமிழர் வாழ்வின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் "அழிவிலும் எழுவோம்" என்ற குறியீட்டுப் பெயருடன் சுவிஸ் தமிழ் இளையோர்கள் விடுத்த அழைப்பை ஏற்று சுவிசில் பல பாகங்களிலும் வாழும் தமிழ் மக்கள் ஐநா வளவை நோக்கி அணி திரண்டு நிற்கின்றனர்.

ஜெனீவாவைச் சேர்ந்த சுபாஸ் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஐநா வளவில் அணிதிரண்டிருக்கும் மக்கள் தமது கரங்களில் தாயக அவலத்தை வெளிப்படுத்தும் பதாதைகள், மக்கள்  தாங்கி நின்றனர். ஐநா முன்றலை நிறைத்து நின்ற தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் எழுச்சியுடன் காணப்பட்டனர். தமது கோரிக்கைகளை உலகின் உச்சிக்குக் கேட்கும் வண்ணம் தமது குரல்களை உயர்த்தி உரக்கக் குரல் எழுப்பிக் கொண்டு நின்றனர். 

கடந்த 28.01.2009 புதன்கிழமை ஏழு இளையோருடன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இளையோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று இளையோருக்கு நாளை 05.02.2009 அன்று சாதகமான பதிலை அளிப்பதாக உறுதி கூறியதை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தி இருந்தனர். தொடர்ந்து 02.02.2009 திங்கள், 03.02.2009 செவ்வாய் ஆகிய இருதினங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி இருந்தனர். நாளை வியாழன் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தும் இளையோர் சாதகமான பதிலை ஐநா சமூகம் தராத பட்சத்தில் தொடர்ந்து தமது உண்ணாநிலைப் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

StumbleUpon.com Read more...

வன்னியில் தொடரும் பாரிய மோதல் ! வெளிவராத செய்திகள்

வன்னியில் தொடரும் பாரிய மோதல் ! வெளிவராத செய்திகள் ! இரு தரப்பும் தொடர்ந்தும் மௌனம்.
 
 
 
வன்னிப் போர்க்கள முனைகளில் படையினரின் விநியோக இலக்குகளை வைத்து விடுதலைப்புலிகளால் அணை;மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் படைத்தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளின் ஆயுதவலுவை மேம்படுத்தும் நோக்கில் படையினரின் விநியோக மையத்தளங்களை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை முதல் பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் நேற்றும் கரும்புலிகள் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தமது தளங்களுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் வெடி பொருட்களைக் கைப்பற்றுவதை இலக்கு வைத்தே கூடிய கவனம் செலுத்துவதாக படைத்தரப்பு அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது பெருமளவான வெடிபொருட்களும் ஆயுத தளபாடங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் புலிகள் தரப்பில் இது தொடர்பில் மௌனமே காக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சனிக்கிழமை முதல் வன்னிக் களமுனைகளில் தொடர்ச்சியான விடுதலைப்புலிகளின் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியான போதிலும் விடுதலைப் புலிகள் இது தொடர்பில் எதுவுமே பிரஸ்தாபிக்கவில்லை. இதேவேளை படைத்தரப்பும் விடுதலைப் புலிகளிடம் இருந்து செய்திகள் வராத நிலையில் மௌனம் காத்து வருகின்றது. 
 
இந்த நிலையிலேயே நேற்று முன் தினம் இரவும் நேற்றும் இடம்பெற்ற தாக்குதல்களின் போது விடுதலைப்புலிகளின் இரண்டு கரும்புலிகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது கணிசமான அளவில் ஆட்லறி உட்பட ராணுவத் தளபாடங்கள் விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
ஆயினும் படைத்தரப்பு அதிகாரிகள் இது தொடர்பில் மௌனமே காத்து வருகின்றனர். புதுக்குடியிருப்புச் சந்தியை நோக்கி இலக்கு வைத்து முற்படுகின்ற படையினரை தொடர்ந்தும் பின்னோக்கித் தள்ளுவதிலேயே விடுதலைப் புலிகள் முனைப்புக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
படைத்தரப்பு இத் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கேப்பாபுலவு எனும் பகுதியில் கணிசமான அளவு பின்னகர்ந்திருப்பதாக சுயாதீன அவதானிப்புச் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் நேற்று முன்தினம் இரவு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியான போதிலும் இரு தரப்பிலும் இது தொடர்பில் மௌனமே  பேணப்பட்டு வருகின்றது. 
 
வன்னிப் பெருநிலப்பிரப்பில் சுயாதீன ஊடகவிலாளர்கள்  எவருமே அற்றதொரு சூழலில் இந்தத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாதிருந்தது. தற்போது விடுதலைப்புலிகளினால்  முன்னணிப் போர்நிலைகளுக்கு விநியோகிப்பதற்கென படைத்தரப்பால் பேணப்படுகின்ற ஆயுதக் களஞ்சியங்கள் இலக்கு வைத்து தாக்கப்படுவதான செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

 

http://www.athirvu.com/oneadmin/newspublish/home.viewdetails.php?news_id=87

StumbleUpon.com Read more...

அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்
StumbleUpon.com Read more...

போரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் வேண்டுகோள்

 
 
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வத்திக்கானில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் பாப்பரசர் கூறியதாவது:
சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.
மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.puthinam.com/full.php?2b34OO44b33M6Dhe4d45Vo6ca0bc4AO24d2ISmA3e0dq0Mtbce03f1eW0cc3mcYAde

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போராட்ட வீரர் ! மோண்ஸ் லுக்கரொப் புகழாரம் !

 

February 4, 2009

 ur-dk.jpg

 இன்று டென்மார்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டப் பேரணியில் சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். டென்மார்க்கின் வரலாறு காணாத பேரணியில் பேசிய பிரபல டேனிஸ் அரசியல் தலைவர் மோண்ஸ் லுக்கரொப் சிறப்புரையாற்றினார். அத்தருணம் கருத்துரைத்த அவர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல சுதந்திரப் போராட்ட வீரர் மோண்ஸ் லுக்கரொப் புகழாரம் சூட்டினார். அத்தருணம் கரகோஷம் வானைப் பிளந்தது.

dk-urvalam.jpg 

     டென்மார்க் நகரசபை முன்றலில் பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் அங்கிருந்து நகர்ந்து பாராளுமன்றத்தை அடைந்தது. போகும் வழியில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்தோடு மகிந்தவின் பிரேத ஊர்வலமும் ஒப்பாரியும், பறையோசையும் ஊர்வலத்தில் கேட்டது. பாராளுமன்ற முன்றலில் டென்மார்க்கின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள். அத்தருணம் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தார்கள். உலக சமுதாயம் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

 இலங்கைக்கு 1948 ம் ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது பிரிட்டன் அரசு இழைத்த வரலாற்றுத் தவறு இன்று உலக வீதிகளில் தமிழரை உரிமை கோரி இறக்கியுள்ளது. குடியேற்றவாதம் தோல்வியடைந்த கதை தென்னாசியாவில் அரங்கேறுகிறது.

 இலங்கையில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படும் அவலங்களை நிறுத்தவும், புதிய பேச்சுக்களை ஆரம்பித்து அமைதி வழியில் தீர்வு காணவும் கோரி இன்று ஐரோப்பா உட்பட உலக நாடுகள் எல்லாம் தமிழர்கள் பேரெழுச்சி கொண்டனர்.

 ஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்று வேலைகளை புறக்கணித்து நீதிகோரி வீதியில் இறங்கினார்கள். இதுவரை தமிழர் புலம் பெயர்ந்த 25 ஆண்டு கால வரலாற்றில் இல்லாதளவிற்கு பெருந்தொகையான மக்கள் அணி திரண்டு போராடினார்கள். சகல நாடுகளிலும் வன்னியில் கொல்லப்படும் மக்களின் உயிர்களை காக்கும்படி மகஜர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 அவுஸ்திரேலியாவில் கொதிக்கும் வெய்யிலிலும், இங்கிலாந்தில் கொட்டும் பனியிலும் இரு முரண்பட்ட காலநிலையின் தாக்கங்களை சந்தித்து போராடினார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம் ராஜ்ஜியம் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட இங்கிலாந்து விட்ட தவறு இன்று சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் போல பரவியிருக்கும் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.

 ஒவ்வொரு நாடுகளின் பாராளுமன்றங்கள், இந்தியத் தூதரகங்கள், சிறீலங்கா தூதராலயங்களை நோக்கி மக்கள் சாரி சாரியாக புறப்பட்டார்கள். இளையோர் இந்த ஊர்வலங்களில் முக்கிய பங்கேற்று நடாத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

 பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சுமார் 50.000 தாண்டிய மக்கள் பெரு வெள்ளம் காணப்பட்டது. டென்மார்க்கில் இதுவரை வரலாற்றில் இல்லாதளவிற்கு பெருந்தொகையான மக்கள் திரண்டு பேரணி நடாத்தினார்கள். சுமார் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் தொகை காணப்பட்டதாக அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். டென்மார்க் நகரசபை முன்றலில் பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்த ஊர்வலம் அங்கிருந்து நகர்ந்து பாராளுமன்றத்தை அடைந்தது. போகும் வழியில் மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்தோடு மகிந்தவின் பிரேத ஊர்வலமும் ஒப்பாரியும், பறையோசையும் ஊர்வலத்தில் கேட்டது. பாராளுமன்ற முன்றலில் டென்மார்க்கின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்றினார்கள். அத்தருணம் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தார்கள். உலக சமுதாயம் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

 இதுபோல இங்கிலாந்தில் சிறீலங்கா தூரகத்திற்கு முன்னால் சிறீலங்கா தேசியக் கொடி எரிப்பு இடம் பெற்றதாக ஐ.பி.சி தெரிவித்தது. கறுப்பு உடை அணிந்து பிரிட்டனில் மக்கள் அணி திரண்டிருந்தனர். அதேபோல உலகத்தின் சகல பாகங்களிலும் இந்த ஆர்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன. தமிழகத்தில் வரலாறு காணாத உணர்வலை பொங்கிப் பிரவாகித்திருக்கிறது.

 சுமார் 61 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டன் அரசு சிறீலங்காவிற்கு சுதந்திரம் வழங்கியபோது அங்குள்ள தமிழரை அடியோடு புறக்கணித்து பாராபட்சமான சுதந்திரத்தை வழங்கிய காரணத்தால் இன்று இந்த அவலம் ஏற்பட்டிருக்கிறது. சகல சிக்கல்களினதும் கதாநாயகனான பிரிட்டன் இன்று மௌனம் காக்கிறது. அதேபோல இந்தப் பிரச்சனையின் இன்னொரு கதாநாயகனாக இந்திய நடுவண்அரசும் தனது கடமைகளை தவறாகவே நிகழ்த்துவதாக கூறப்படுகிறது.

 சர்வதேச சமுதாயம் ஒரு தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல தமிழ் மக்களின் மரணத்தில் சிங்கள அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மகிந்த கொடும்பாவி எரிக்கப்படுவதை காண வேண்டின் இங்கே அழுத்துக- டென்மார்க்

 

StumbleUpon.com Read more...

DEEPAM TV NEWS 4 2 09

StumbleUpon.com Read more...

தமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ!

இலங்கைத்தமிழர் விடயத்தில் தற்போதய ஆளும் காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யப்போவதில்லை. தமது சொந்த பகைக்காக நடத்தும் யாகத்தில் ஒரு இனத்தையே போட்டு எரிக்கின்றனர்.

எவ்வளவு கண்ணீர் விட்டாலும், தீக்குளித்தாலும், உண்ணாவிரதம் இருந்தாலும், காந்திய வழியில் அறப்போராட்டம் செய்தாலும் - காந்தியின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்பவர்கள் காது கொடுத்து கேட்கப்போவது இல்லை.

எனவே இந்தியா உட்பட (காங்கிரஸ் அரசாங்கம்) அனைவரின் தலையிலும் குட்டக்கூடிய ஒரு பராக்கிரமசாலிதான் இலங்கைத்தமிழருக்கு இப்போது வேண்டும்.
அந்த பராக்கிரமசாலி அமெரிக்கா!

உங்கள் போராட்டங்கள் மெல்ல உத்வேகம் பெறும் இவ்வேளை நேரத்தை கடத்தாமல் பராக்கிரமசாலியை பலவழிகளில் அணுகுங்கள்.

இதோ ஒரு வழி…

அமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம்.

உதாரணத்திற்கு:

" Please stop the Genocide of TAMILS in Sri Lanka "
" Please help to Srilankan Tamils"
"Please help to Srilankan Tamils Freedom"

இவ்வாறு இன்னும் பல நீங்களாகவே எழுதி அனுப்புங்கள். (யாராவது நல்ல நல்ல வசனங்களை எழுத இங்கு உதவுங்கள்)
நாம் கோரிக்கையை வைக்கும் உலகில் அதி உயர் அதிகாரம் உள்ள இடம் இது என்பதை மறந்துவிட்டதீர்கள்.

சரி வாருங்கள் இங்கு கிளிக் பண்ணி - வெள்ளைமாளிகைக்கு 

http://www.whitehouse.gov/contact/ 

StumbleUpon.com Read more...

இன்றைய மக்கள் செய்தி மணி பத்து 4.2.2009

StumbleUpon.com Read more...

தனித்தமிழ் ஈழப்பிரகடனம் தமிழினம் செய்ய வேண்டிய நேரம் இதுவே!

   
[ ஆய்வு:த.எதிர்மனசங்கம் ]   

இன்று சர்வதேச சமூகம் இத்தனை துயர் படும் தமிழ் மக்கள் துயர் கண்டு எதுவும் செய்யாமல் இருக்கும் காரணம் என்ன? இதற்கான விடைகளைக் காண்பது மிக எளிது. இதுவரை காலமும் திரை மறைவில் இந்தியா செய்த சதி வேலைகள் வெளிவராமல் இருந்தன. இந்தியாவின் கைக் கூலிகளும், கபடம் அறியாத பேர்களும், வரலாற்றைப் படிக்காதவர்களும், வெளியே பேசமுடியாது இராசதந்திர முறையில் பேசியவர்களும் இந்தியாவால் மட்டுமே எமது பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனப் பேசி காலத்தைப் போக்கடித்து வந்தனர்.

 
பிராந்திய  வல்லரசாக இருக்கிறதாகக் காட்டிக் கொண்டாலும்  இந்தியாவால், இனவெறிச் சிந்தனை மேலாதிக்கம் பெற்றுவிட்ட சிங்கள மக்களின் மனங்களை தமிழின வெறுப்பில் இருந்து விலக்கி விட முடியவில்லை. இந்த உண்மையை சர்வதேச சமூகமும் அனுபவ வாயிலாகக் காணும் காலம் இது. வெளி நாட்டு அரசுத் தூதுவர்களும் பிற வெளிநாட்டுப் பிரமுகர்களும் நேர்மையான விமர்சனங்களை வெளியிட்டால் அவர்களை இலங்கை வெளிநாட்டு அமைச்சினால் அழைத்துக் கண்டிக்கப்படுவது வழமையாகிவிட்டது.
 
 
அரச பதவி சார் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காது சாதரண ஏனைய பிற அரசியல் வாதிகளும் கேவலமான வகையில் அறிக்கைகளும் கண்டனங்களும் தெரிவிக்கும் மூன்றாந்தர அரசியல் அரங்கு ஏறுவதையும் காணலாம். இத்தகைய பின்னணியில் இந்தியா இலங்கையின் நல்ல பிள்ளையாகி மாறி அதன் அனுதாபத்தைப் பெற்று இலங்கையின் வர்த்தக, வணிக, கனிம, வளங்களைச் சுரண்டுவது இலாபகரமானது எனத் தீர்மானித்து விட்டது.
 
ஆய்வு:முரசத்திற்காக த.எதிர்மனசங்கம்.
 
ஊரான் வீட்டு நெய்யா? என் பெண்டாட்டி கையா? என்ற வகையில் ஈழத் தமிழ் இனத்தைப் பலி கொடுக்க இந்தியா தீர்மானித்து விட்டது. இதில் தமிழகத் தமிழனைப் பற்றியோ அவர்களின் பாரம்பரிய தொடர்புகள் பற்றியோ இந்திய மத்திய ஆட்சியில் இருக்கும் ஆரிய மற்றும் பரதேசிகளுக்கு கரிசனை எழுவதில்லை. அறிஞர் அண்ணா பேசி வந்த வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்ற குற்றச்சாட்டு இன்றும் உண்மையாய் இருப்பதைக் காணலாம்.
 

இலங்கையைப்; போன்றே வெளிநாட்டவர் வரும் வரை ஒரு தேசம் ஒரு இனம் ஒரு அரசு என இந்தியா இருந்த வரலாறே கிடையாது. இமயத்தை வென்ற தமிழ் மன்னரும் உண்டு குமரியை வென்ற வடக்கத்திய அரசர்களும் உண்டு. எனவே முழு இந்தியக் கண்டத்தையும் வளைத்துப் போட முயன்ற வட இந்திய உயர் தரக் குடும்பமான நேருவின் தந்தையாரான மோதிலால் குடும்பத்துக்கு ஆங்கிலேய வைசராய் குடும்பத்துடன் இருந்த நட்பு வசதி அளித்தது.
 
 
இலங்கையிலும் இதே சமாச்சாரம்தான்.தமிழர் பிரதேசங்களை யாழ்பாணத் தமிழ் வாலிபர் சங்கத்தின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிங்களப் பிரபுத்துவக் குடும்பங்களான பாரோன் ஜயத்திலகா, டி.எஸ் சேனநாயக்கா, எப்.ஆர்.சேனநாயக்கா, பண்டார நாயக்கா சேர் ஜோன் கொத்தலாவலை போன்றோரின் வெள்ளைக்கார ஆட்சியாளர்களின் நட்பையும் மதிப்பையும் பெற்றுத் தமது இனத்தின் மேலாதிக்க நலன்களை வளர்த்துக் கொண்டனர்.
 
சோல்பரிப் பிரபு இலங்கை அரசமைப்பை வரைந்த போது தமிழர் தரப்பு அச்சங்களையும் எதிர்ப்பையும் கவனிக்காது எதேச்சையாக நடந்து முடிவுpல் 29(2) உபவிதிகளின் படி சிறு பான்மை யோருக்கான பாதுகாப்பை வழங்கி விட்டதாக நம்பிக் கொண்டார். தமிழருக்காகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜீ.ஜீ. பொன்னம்பலம் இலண்டன் சென்று குடியேற்ற அலுவலகத்தில் போராடிக் கொண்டிருந்த வேளையில் டி.எஸ். சேனநாயக்கா இரு தமிழ் பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கி அரசமைப்பை ஏற்கச் செய்துவிட்டார்.
 
 
இதே போன்ற வகையில் முகம்மது அலி ஜின்னாவை நேரு கையாள முற்பட்டு அதனால் இந்தியா, பாக்கிஸ்தான் கிழக்கு, மேற்கு என மூன்று பிரிவுகளாக்கிய வரலாறு இடம்பெற்றது. அதன்போது தொடங்கிய காஷ்மீரப் பிரச்சனை இன்று வரை தீர்வு காணமுடியாது மக்கள் இலட்சக் கணக்கில் துயரப் பட்டும் கொல்லப் பட்டும் வருகின்றனர். இலங்கையிலும் இந்தியாவிலும் ஆளும்; வர்க்கம் ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள்தான்.
 
 
இவ்வளவும் தமிழ் மக்களை இந்த இரு நாட்டின் ஆளும் தரப்பும் எவ்வாறு பார்க்கின்றன என்பதைக் காட்டுவதற்கே. இந்தியா காஷ்மீரப் பிரச்சனையில் ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்று மக்களின் வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணக் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக எதிர்த்து வருகிறது. அங்கும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையற்றது எனப் பிடிவாதமாக இருக்கிறது.
 
 
இந்தியாவின் வரட்டுப் பிடிவாதத்துக்கு இன்று ஒபாமாவும் வேறு வழியின்றி இருநாடுகளும் சமரசமாகப் பேசித் தீர்வு காண வேண்டும் என்கிறார். இலங்கையில் இனப் பிரச்சனையும் சிங்கள  இலங்கையின் உள்வீட்டு விவகாரம் அதில் எவரும் தலையிடக் கூடாது என்பதே இந்தியாவின் பிரச்சாரம். ஆனால் அயல்நாடு என்ற வகையில் தனக்கு உரிமை உள்ளது எனக் காட்டி இன்று நேரடியாக இராணுவ டாங்கிகள் படையினருடன் முல்லைத் தீவை நோக்கிய தனது தமிழின மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அழிப்பதில் முன்னிற்கிறது.
 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தனைதான் நேர்மையுடன் நடந்தாலும் இரண்டு சதிகார அரசுகளின் பிரச்சார மற்றும் அரச இராச தந்திர இயந்திரத்துக்கு ஈடு கொடுக்க முடியாது இருப்பது அது ஒரு ஆயுத இயக்கமாகப் பார்க்கப் படுவதேயாகும். எத்தனைதான் முயன்றாலும் அதன் வரலாற்று நடவடிக்கைகளை மூடி மறைத்து விட முடியாது. இந்நிலையில் பலஸ்தீனத்தில் எப்படி ஹமாஸ் இயக்கம் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த நிலையிலும் இஸ்ரவேலின் தூண்டுதலால் உலக நாடுகள் அனைத்தும் ஹமாஸின் நிதி வளமும் கட்டுப் படுத்தப் பட்டு ஆட்சி செய்ய முடியாமலும் பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்ற முடியாமலும் தடுக்கப் பட்டதோ அது போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலையும் இன்று உள்ளது.
 
 
எனவே இனிமேலும் தமிழ் மக்களைத் தாங்கும் முழுப் பொறுப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல் போட்டு விட்டுத் தமிழினம் சவாரி செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நாம் எவரும் கற்பனை செய்ய முடியாத அவலங்களைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டிவரும். அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் ஆனாலும் பிரபாகரன் போன்ற ஒரு சிறந்த தலைவரையோ தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஒரு தலைசிறந்த அமைப்பையோ தமிழினம் காண முடியாதவாறு ஆகிவிடும். இலங்கை இந்திய அரசுகள் தமிழினம் தலை எடுப்பதை அனுமதிக்கப் போவதில்லை.
 
 
இவற்றைக் கணக்கில் எடுத்து தமிழினம் தனது அடுத்த நடவடிக்கை பற்றிச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. தமிழிர் தரப்பில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற அமைப்பாக இருப்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது. அவர்களை தமிழ் மக்கள் முன்னிறுத்தாது தமிழீழ விடுதலைப் புலிகளே மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற எமது கூப்பாடு  சர்வதேச அரங்கில் ஒரு ஆயுத அமைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அஞ்சப் படுகிறது.
 
 
மேலும் புலிகள் எதிர்ப்புச் சக்திகளின் தீவிர பிரச்சாரமும் இலங்கை இந்திய அரசுகளின் நிலைப்பாடும் தமிழ் மக்களுக்கு அனுகூலமான நிலைப் பாடட்டைப் பெற்றுத் தரமுடியாது உள்ளன. எனவேதான் இலஙகையரசின் கொடூரமான பொது மக்கள் மீதான தாக்குதலும் பாரிய மனித உரிமை மீறல்களும் உலக நாடுகளால் தடுத்து நிறுத்தப்படாது தொடருகின்றன.
 
 
தமிழினத்தின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் ஒரே உறுதியான அமைப்பு தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இப்படிக் கூறும் போது நாம் ஆனந்த சங்கரி கருணா பிள்ளையான் டக்லஸ் போன்ற சந்தர்ப்ப வாதிகளைக் கருத்தில் எடுக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஏனென்றால் இப்படியானவர்கள் ஒரு போதும் தமது அபிலாசைகளைத் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகள் சார்ந்து வெளிப் படுத்தியது கிடையாது.
 
 
எனவே சர்வதேச அரசியலில் எமது ஒரே ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடியதாக இருப்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. ஆனால் இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத்தின் காலம் முடிவiயும் நிலையும், வரும் ஜுலையில் அது கலைக்கப்படும் சேதிகளும் வருகின்றன. எப்போ இவர்களைப் பாராளுமன்றத்திலிருந்து அகற்றி விடலாம் எனச் சிங்களத் தரப்பும் தமிழின விரோதக் குழுக்களும் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.
 
மகிந்தருக்கும் - இப்போதைக்குத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இருப்பது - ஜாதிக ஹெல உறுமய, ஜே.வீ.பீ. ஆகியோரின் தமிழின வெறுப்பை எரியூட்டத் தீனியாக இருக்கும் என்பது முதல் காரணம். இரண்டாவது காரணமாக இருப்பது உலக நாடுகளுக்கு இலங்கையில் ஜனநாயகம் இருக்கிறது என்பதையும், தான் ஒரு ஜனநாயகவாதி எனச் சொல்லிக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பதே.
 
இனறு உலகம் எங்கும் தமிழ் மக்களின் உணர்வு அலையும் அனுதாபமும் உச்ச நிலையில் உள்ளன. இந்த அலை நெடுநாளைக்கு நிலைக்கும் என எதிர்பார்ப்பது இயலாத காரியம். எனவே இத்தகைய தருணத்தைத் தமிழினம் பயன் படுத்துவதே புத்திசாலித்தனம் ஆகும். இன்று இலங்கை அரசு தனது முட்டாள்தனங்களால் சுவிஸ் யேர்மன் போன்ற நாடுகளின் சினத்துக்கு ஆளாகி இருக்கிறது வெளிப் படையான உண்மை.
 
 
ஐரோப்பிய ஒன்றியமும் ஈழத் தமிழர் பற்றிய ஒரு சிறு அனுதாபத்தோடு உள்ளது. தமிழ் மக்களின் தொடரான உண்ணா விரதங்கள் கண்டனப் பேரணிகள் உலக நாடுகளின் கவனத்தை தமிழர் பக்கம் இழுத்து வருகின்றன. வன்னிக் களமும் அங்குள்ள மக்களும் வரலாறு காணாத வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளனர். அவர்களின் அவலத்துக்கு அவசரமாக முடிவு காணப்பட வேண்டும்.
 
 
எனவேதான் எமது அரசியல் தலைமையாக இருக்க வேண்டிய சகல தகுதியும் அங்கீகாரமும் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் குறுகிய கால கட்டத்தில் புலம்பெயர்  நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று, உடனடியாகத் தனித் தழிழ் ஈழப் பிரகடனம் செய்து உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கலாம். இதன் மூலம் வன்னிக் களத்திலும் மக்கள் மீதும் உள்ள அழுத்தம் வெளிநாடுகளின் பக்கம் திரும்பும் சாத்தியமும் ஏற்படலாம்.
 
 
இனியும் போர் நிறுத்தம் அமைதித் தீர்வு என்ற மாய மான்களின் பின்னால் தமிழினம் ஓடிக் காலத்தை விரையம் செய்வது பயன் அற்றது. இப்பொழுது இந்தியா மகிந்த தரப் போகும் 13ம் சட்ட திருத்தத்துக்கு அமைய வடக்கிலும் கிழக்கிலும் இரு வேறு மாகாண சபைகளே ஈழத் தமிழருக்கான தீர்வு எனக் கூறத் தொடங்கிவிட்டது. இனிமேலும் இந்தியாவால் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு ஒரு போதும் கிட்டாது. இந்த நிலையில் இருந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பு தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்கான ஒரே வழி தமிழீழப் பிரகடனம் ஒன்றேயாகும். செய்வார்களா?
http://www.swissmurasam.net/artikel/11834-2009-02-03-22-16-19.html

StumbleUpon.com Read more...

தமிழக முதல்வருக்கு அல்வா கொடுத்த சிறிலங்கா விமானப்படை

தமிழக முதல்வரை ஏமாற்றிய சிறிலங்கா விமானப்படை
 
நேற்று, சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக வந்த 8 சிங்கள விமானப்படையைச் சேர்ந்த சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது.

 

 
இவர்கள் அனைவதும், தாம்பரம் பயிற்சி முகாமில் மூன்று மாத பயிற்சிக்காக இவர்கள் வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.

 
இதனையடுத்து  எட்டு சிறிலங்கா விமானப்படையினரும் உடனடியாக அங்கிருந்து மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை திருப்பியனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால், இந்த எட்டு சிங்கள விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது, பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இச்செய்தியை அடுத்து, பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள், ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

Breaking News:சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் பெங்களூரில் இறக்கம்! மக்கள் கொந்தளிப்பு

சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் பெங்களூரில் இறக்கம்! பெங்களூரில் மக்கள் கொந்தளிப்பு


சிறிலங்காவுக்க திருப்பி அனுப்பிய சிப்பாய்கள் சிறிலங்காவுக்கு செல்லவில்லை பெங்களூரில் இறங்கியுள்ளனர். பெங்களூரில் மக்கள் கொந்தளிப்பு பெங்களூரில் தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

 

சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக சென்ற 8 சிங்கள விமானப்படையைச் சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது.

 

ஆனால் இந்த எட்டு சிங்கள விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இச்செய்தியை அடுத்து பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள் ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சிப்பாய்கள் திருப்பி அனுப்பும் விடயத்தில் இந்திய அரசு, தமிழக முதல்வருக்கு உறுதிமொழி ஒன்றைக் கொடுத்துவிட்டு, தான் தோன்றித்தானமாய் செய்து வரும் காரியங்களினால் தமிழகம் முழுவதும் கொதித்திப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

StumbleUpon.com Read more...

Breaking News:புலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் பலி!

 


புலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில், புதுக்குடியிருப்புக் களத்தில் பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிங்கள தேசத்தின் சுதந்திர நாளாகிய இன்று, புதுக்குடியிருப்பு நகரில் வாளேந்திய சிங்கக் கொடியை ஏற்றும் திட்டத்துடன், பெரும் படையெடுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த சிறீலங்கா   படைகள் மீது, கடந்த 1ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் மின்னல்வேக ஊடறுப்புத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இதில், பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டு, மேலும் பன்மடங்கு படையினர் படுகாயமடைந்து களமுனைகளை விட்டு அகற்றப்பட்டிருப்பதோடு, பெரும் எண்ணிக்கையிலான படையினரின் சடலங்கள், களமுனைகளில் சிதறுண்டு கிடக்கின்றன.

இதுவரை, யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் பதினைந்து படைய ஊர்திகள், தமிழீழ       விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டிருப்பதோடு, பெரும்      தொகையான போர்க் கருவிகள், புலிவீரர்களின் வசம் வீழ்ந்துள்ளன.

யுத்த வெற்றிகளின் மமதையில் சுதந்திர நாளை சிங்கள தேசம் கொண்டாடும் நிலையில், பல நூற்றுக்கணக்கான சிறீலங்கா படையினரின் புதைகுழியாக புதுக்குடியிருப்புக் களம் மாறியுள்ளது.

இதனிடையே, கடந்த வெள்ளி - சனி ஆகிய நாட்களில் மட்டும், வன்னிக் களங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில், இருநூறுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.
 
 

StumbleUpon.com Read more...

Breaking News:தமிழ்நாட்டில் ஐந்து இலட்சம் வணிக நிறுவனங்கள் மூடப்பட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டம்

 


இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்தும் போர் நிறுத்தம் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஆதரவு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழர்களைக் காக்க வலியுறுத்தி பொது வேலை நிறுத்தப் போராட்டம் தமிழ் நாடு முழுவதும்  இடம்பெற்றுவருகின்றது.  இதில் பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

 

திராவிட விழிப்புணர்வுக் கழகத்தின் தலைவர் பி.டி. அரசகுமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். துரைசாமி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் நேற்று சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் :

"இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை இந்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் போரை நிறுத்தாவிட்டால் இலங்கையுடனான உறவை முறித்துக்கொள்வோம் என்று எச்சரிக்கை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

டீ கடைகளும் அடைப்பு

இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் சென்னை உணவு தானிய வியாபாரிகள் சங்கம், டீக்கடை வியாபாரிகள் சங்கம், அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கம், தையல் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு சுப்பர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் உட்பட பல சங்கங்கள் கலந்துகொள்கின்றன.

 

தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் கடைகள் இன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அடைக்கப்பட்டு இருக்கும். மருந்து உயிர் காக்கும் பொருள் என்பதால் மருந்துக்கடைகள் மாலை 4.00 மணிக்கு மேல் திறக்கப்படும்.

சட்டரீதியாக சந்திக்கத் தயார்

இலங்கை தமிழர்களுக்காக வணிகர்கள் ஒருநாள் இழப்பைப் பற்றிக்கூட கவலைப்படாமல் கடைகளை அடைக்கும் வணிகர்களுக்கு காவல்துறையும் பொது மக்களும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்" என்றார்.

வேலைநிறுத்தத்துக்கு வழக்கறிஞர்கள் முழு ஆதரவு

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் : இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக் கோரி வழக்கறிஞர்கள் செய்துவரும் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நாளை 5ஆம் திகதி வரை நீடிக்கப்படுகிறது.

5ஆம் திகதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இலங்கைப் பிரச்சினையில் மௌனம் காக்கும் இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்த முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தொடர் உண்ணாவிரதம் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இலங்கைப் பிரச்சினைக்காக நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தின்போது தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஜே. முகோ பாத்யாய முன்னிலையில் வழக்கறிஞர்கள் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. "இளம் வழக்கறிஞர்கள் இலங்கைப் பிரச்சினைக்காக உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டனர். நீதிபதிகள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படும்" என்று நீதிபதிகளிடம் தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் தெரிவித்தார். இதுகுறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் தீர்மானங்களாக நிறைவேற்றி அளிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கறுப்புப் பட்டி அணிந்து டாக்டர்கள் போராட்டம்

இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது கறுப்புப் பட்டி அணிந்து பணிபுரிய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. மருத்துவ வசதியும் மருந்துகளும் இன்றி தமிழர்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு வரவேற்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டித்தும் போரை நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரச மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் இன்று புதன்கிழமையன்று கறுப்புப் பட்டி அணிந்து பணிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

பொலிஸார் எச்சரிக்கை

இன்று முழு அடைப்புப் போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று பொலிஸ் டி.ஜி.பி. ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்ட அறிவிப்பை ஒட்டிஇ தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். மேலும்இ மாநிலம் முழுவதும் காவல் சட்டம் பிரிவு 30(2) மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் 41இன் படி ஒழுங்குமுறை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம்

அன்றைய தினம் ரயில் மற்றும் வீதி போக்குவரத்தை தடைசெய்தல்இ அலுவலங்கள் மற்றும் இதர பணிகளுக்குச் செல்வோரைத் தடுத்தல்இ கடைகள்இ அங்காடிகள்இ பெற்றோல் நிரப்பு நிலையங்கள்இ திரையரங்குகள் முதலியவற்றை மூட வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முழு அடைப்பு அறிவிப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வீதி மறியல்களில் ஈடுபடுதல்இ உருவ பொம்மைகளை எரித்தல்இ அரசு பஸ்கள் மற்றும் பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல்இ தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.pathivu.com/news/150/54//d,view.aspx

StumbleUpon.com Read more...

சிறிலங்காவின் அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை - ஜேர்மனி

 
 
ஜேர்மனியத் தூதுவரும் அரச சார்பற்ற சில நிறுவனங்களும் ஏனைய வெளிநாட்டவர்கள் சிலரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களாக தென்படுவதாகவும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளரிடமிருந்து வெளியிடப்பட்ட அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை என்று பேர்லின் தெரிவித்துள்ளது.

 
"சாத்தியமான தப்பபிப்பிராயங்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மிரட்டல்களால் அல்ல' என்று பேர்லினிலுள்ள வெளிவிவகார அமைச்சுப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 
பயங்கரவாதிகளுக்கு இரண்டாவது உயிர்மூச்சைக்கொடுக்க முயற்சிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமோ, இராஜதந்திரியோ அல்லது நிருபரோ முயற்சித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று "ஞாயிறு ஐலன்ட்' இதழுக்கு சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

 
அண்மையில் செய்திப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அவரை அழைத்து விளக்கம் கேட்டிருந்தது குறிப்படத்தக்கது.

 
ஜேர்மனிய தலைநகர் பேர்லினில் உள்ள சிறிலங்காத் தூதரகம் மீது நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 
இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே பொறுப்பு என வெளியுறவுத்துறை செயலாளர் பாலித கோஹன குற்றம் சுமத்தியுள்ளார்.

StumbleUpon.com Read more...

ஹிலாரி கிளிண்டனும் பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்டும் போர் நிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு.

 
Published on 04-02-2009 
  அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டனும், பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்டனும் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப் படவேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
வைத்தியசாலை மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறும், மற்றும் நோயாளர்கள் வெள்யேற உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப் படவேண்டுமெனவும் அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

 

http://www.athirvu.com/

StumbleUpon.com Read more...

பயிற்ச்சி பெற சென்ற இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

ற்ச்சி பெற சென்ற இலங்கை விமானப்படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்
Published on 04-02-2009 
சென்னை,தாம்பரத்திலுள்ள விமானப்படை பயிற்சி முகாமுக்குப் பயிற்சிக்கென அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை விமானப் படையைச் சேர்ந்த எட்டு விமானப்படையினர் இன்று (03) திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் பயிற்சி முகாமில் மூன்று மாத பயிற்சிக்காக இவர்கள் வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். இதனையடுத்து இலங்கையைச் சேர்ந்த எட்டு விமானப்படையினரும் உடனடியாக அங்கிருந்து மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.
 

http://www.athirvu.com/

 

StumbleUpon.com Read more...

பாதுகாப்பு வ‌ட்ட‌த்துக்கு வெளியே பாதுகாப்பு இல்லை" கோத்த‌ப‌ய‌ (என்ன‌ " ப‌ய‌ ?")ராஸ‌ப‌க்ஸே("ஷ‌" எனும் க‌ம்பீர‌மான‌ எழுத்தைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ விருப்ப‌மில்லை..!) கொக்க‌ரிப்பு

பாதுகாப்பு வ‌ட்ட‌த்துக்கு வெளியே பாதுகாப்பு இல்லை"
கோத்த‌ப‌ய‌ (என்ன‌ " ப‌ய‌ ?") Twisted Evil ராஸ‌ப‌க்ஸே
("ஷ‌" எனும் க‌ம்பீர‌மான‌ எழுத்தைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ விருப்ப‌மில்லை..!) கொக்க‌ரிப்பு..! Twisted Evil


ஏற்க‌ன‌வே செஞ்சிலுவைச் ச‌ங்க‌த்துக்கு Embarassed அனும‌தியில்லை;
செய்தியாள‌ர்க‌ளுக்குத் த‌டை; Sad
'நார்வே' போன்ற‌ ந‌டுநிலை நாடுக‌ளை நெருங்க‌விடுவ‌தில்லை;Arrow


இன்று (03/02/2009) காலை ஒரு சில‌ துண்டுப் ப‌ட‌ங்க‌ளை தொலைக்காட்சி செய்தியில் காண‌ நேர்ந்து
"bed cofee"-யிலிருந்து(!?) க‌ண்ணீருட‌னே Sad எழுந்தேன்;


"என்று த‌ணியும் இந்த‌ சுத‌ந்திர‌ தாக‌ம்" என‌ப் பாடி ந‌ம்மைத் தூண்டி விட‌ த‌லைவ‌ன் இல்லாத‌தாலோ என்ன‌வோ த‌மிழ‌ன் Question தூங்கிக் கொண்டிருக்கிறான்;

சில‌ ம‌ணித் துளிக‌ள் துண்டுப் ப‌ட‌ங்க‌ளே இத்த‌னைக் கொடூர‌மாக‌ இருக்கிற‌தே உண்மை நில‌வ‌ர‌ம் எத்த‌னை மோச‌மாக‌ Exclamation இருக்கும்?


இர‌ண்டுக் கைக‌ளும் "ஷெல்" போட்டு துண்டான‌ பாதி உட‌ம்புட‌ன் இளைஞ‌ன் Mad ஒருவ‌ன் த‌ன் த‌ம்பி த‌ங்கை நிலை எண்ணிக் க‌த‌றுகிறான்;

அதே போல‌ மூளியாகிப் போன‌ உட‌லுட‌ன் ஒரு குடும்ப‌த் த‌லைவ‌ன் Wink க‌த‌றுகிறார்;

ஒரு தாயின் வ‌ல‌து காலையும் இட‌து கையையும் காண‌வில்லை;

கைக்குழ‌ந்தைக‌ளின் கையும் காலும் துண்டாகி...கொடூர‌ம்..கொடூரம்..!இதைப் பார்த்துக் கொண்டிருந்த‌ என் ம‌னைவி அப்பாவித்த‌ன‌மாக‌க் கேட்டாள்,"அவ‌ர்க‌ள் எப்ப‌டியாவ‌து இராமேஸ்வ‌ர‌ம் வ‌ந்து இங்கே பாதுகாப்பாக‌ இருக்க‌லாமே" என‌..!

'குடும்ப‌ங்க‌ளைப் பிரிந்து இங்கே வ‌ந்து அடிமைக‌ளைப் போல‌ ச‌ரியான‌ வேலை வாய்ப்போ க‌ல்வியோ சுத‌ந்திர‌மோ இல்லாம‌ல் கூட்ட‌ம் கூட்டமாக‌ 'நாளை என்ப‌து என்ன‌' என்று தெரியாம‌ல் இருப்ப‌தை அவ‌ர்க‌ள் விரும்ப‌வில்லை',என்று நான் சமாளிப்பாக‌ எதையோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே க‌ச்ச‌த்தீவு அருகே த‌மிழ‌க‌ மீன‌வர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அவ‌மான‌ப்ப‌டுத்தப்ப‌ட்டு கொள்ளையிட‌ப்ப‌ட்ட‌தாக‌ச் செய்தி..!

எல்லையைத் தாண்டி இந்திய‌ எல்லைக்குள் வ‌ரும்‌ அவ‌னைத் த‌டுக்க‌ ந‌ம்மிட‌ம் (ரோந்துப்)ப‌டைக‌ள் இல்லையா?

டில்லியிலிருப்போர்க்கு தென்ன‌க‌த்தின் மீது அக்க‌றையில்லையா?

ஏற்க‌ன‌வே "வ‌ட‌க்கு வாழ்கிற‌து, தெற்கு தேய்கிற‌து" என்ற கோஷ‌ம் எழும்பி ச‌ற்று அட‌ங்கி இருக்கிற‌து..,
கோஷ‌த்தை எழுப்பிய‌வ‌ர்க‌ள் வாழ‌ வாய்ப்பு கிடைத்த‌தால்..!


த‌மிழ‌க‌த்திலும் ' தெற்கு வாழ்கிற‌து,வ‌ட‌க்கு தேய்கிறது ' என்ற‌ கோஷ‌ம் அடிக்கடி எழும்பி எழும்பி ம‌றைகிற‌து;

இந்த‌ க‌ட்ட‌த்திலாவ‌து ம‌த்திய‌ அரசு விழித்துக் கொள்ளாவிட்டால் த‌மிழீழ‌ம் இல‌ங்கையில் அல்ல‌;
இந்தியாவில் அமைய‌க் கேட்டுப் பிரிவினைவாதிக‌ள் எழும்பும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிற‌து;


த‌மிழ‌ர்க‌ளுக்கு நேரிட்ட‌ கொடுமைக‌ள் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ந‌ட‌ந்திருந்தால் இந்தியா அண்டை நாடு என்ற ‌முறையில் என்ன‌ செய்திருக்குமோ அத‌னைச் செய்தாலும் போதும்;

விடுதலைப்புலிகள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தை எதிர்க்க‌ த‌ம‌து எல்லையிலிருந்து செய்த யுத்த‌த்தை த‌ர்ம‌ நியாய‌த்தினை மீறி எதிரியின் எல்லையில் புகுந்து ந‌ட‌த்தியிருந்தால் (ம‌ட்டுமே ப‌யங்க‌ர‌வாத‌ம்,,!) இல‌ங்கை தேச‌ம் முழுவ‌துமே த‌மிழ‌ர் வ‌ச‌மாகியிருக்கும்;

"உயிர்க‌ளை ப‌லி கொடுத்து உயிர்வாழ‌ உரிமை கேட்கும்"
அவ‌ல‌ நிலையிலுள்ள‌ த‌மிழ‌னைக் காக்க நாளைய‌ தின‌ம் {04/02/2009} பொது வேலைநிறுத்தத்துக்கு த‌மிழ‌க‌ எதிர்க‌ட்சிக‌ள் அழைப்பு விடுத்திருக்கிற‌து;
க‌ல்லூரிக‌ள் விடுமுறை விட‌ப்ப‌ட்டுள்ள‌து;
ச‌ன‌நாய‌க‌ முறையிலான‌ இந்த‌ உண‌ர்வையும் குறுகிய‌ ம‌னப்பான்மையுட‌ன் அர‌சாங்கம் தடுக்க நினைக்கிறது.


தர்மம் வெல்லுமா..?
 
 

StumbleUpon.com Read more...

ஈழம் பற்றிய விவரணப் படம் தமிழ் கண்ணொளியில்
StumbleUpon.com Read more...

முல்லைத்தீவு முற்றுகைச் சமரில் முக்கிய களமாக மாறியுள்ள கடல் - சுபத்திரா

  

முல்லைத்தீவு முற்றுகைச் சமர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் கடற்புலிகளின் தாக்குதல்களும், அவர்கள் பயன்படுத்தும் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பமும் கடற்படைக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் கடற்பரப்பில், கடற்புலிகளின் கரும்புலித்தாக்குதல் படகு ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

 

உடனடியாக அதன் மீது ஒன்று குவிக்கப்பட்ட பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அந்தக் கரும் புலித் தாக்குதல் படகு வெடி த்துச் சிதறியது. அதிலிருந்த இரண்டு கடற்கரும்புலிகள் உயிரிழந்திருப்பதைப் புலிகள் உறுதி செய்திருக்கின்றனர்.

இதன்பின்னர் முல்லைத்தீவுக் கடலில் அன்று காலை 10 மணியளவில் மற்றொரு கடற்சண்டை நடந்திருக்கிறது. இந்தச் சண்டை கடற்படையின் முதலாவது தடுப்பு வலயத்துக் குள் இடம்பெற்றிருக்கிறது. முல்லைத்தீவில் வட்டுவாகலுக்கும் சுண்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட சுமார் 20 கி.மீ வரையான கடற்பகுதி மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து கடற்புலிகள் விநியோகங்களைச் செய்ய முடியாத வகையிலும் தப்பிச் செல்ல முடியாதவாறும் கடற்படையினர் நான்கு கட்டப் பாதுகாப்பு வியூகத்தை அமைத்திருக்கின்றனர். முதலாவது கட்டத்தில் கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட விசேட படகுப் படையணி (Special Boat Squadron -SBS) மற்றும் துரித நடவடிக்கை படகுப் படையணி (Rapid Action Boat Squadron -RABS) என்பன பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது கட்டத்தில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகள் (Fast Attack Crafts - FACs) நிறுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாவது கட்டத்தில் அதிவேகப் பீரங்கிப் படகுகள் (Fast Gun Boats- FGBs) காவலில் ஈடுபட்டிருக்கின்றன. இதையும் கடந்து சென்றால் அடுத்த கட்டமாக தடுத்து நிறுத்த ஆழ்கடல் ரோந்துப் படகுகள் (Offshore Patrol Vessels - OPVs) நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

50 இற்கும் குறையாத கடற்படைப் படகு களைக் கொண்டு இந்த கடற்தடுப்பு வல யத்தை கடற்படை அமைத்திருக்கிறது. இதை உடைத்துக் கொண்டு கடற்புலிகள் அவ்வப்போது ஆழ்கடல் நோக்கிய பயணங்களைச் செய்வதாகவும் சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. கடந்த வெள்ளியன்று காலை 10 மணியளவில் கடற்படையின் 15 வரையான கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட அணி மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்தச் சண்டையில் கடற்படையின் சிறப்புத் தாக்குதல் படையணியின் கொமாண்டோக்கள் பயன்படுத்தும் "அரோ' வகைப் படகுகள் இரண்டை தாம் தாக்கி மூழ்கடித்ததாகவும் புலிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் கடற்படையினர் தரப்பில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து இப்பத்தி எழுதப்படும் வரையில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

கடற்புலிகள் குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதும் கடற்படையினர் மீதான தாக்குதல்களை அவர்கள் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த 19ஆம் திகதி இரவு முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுண்டிக்குளம் கடற்பகுதியில் P 434 இலக்கத்தைக் கொண்ட கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகான "சுப்பர் டோறா' ஒன்றை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்திருந்தனர்.

இரவு 11.28 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் கடற்புலிகளால் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களைக் கொண்ட கரும்புலிப் படகை மோத வைத்தே நிகழ்த்தப்பட்டிருந்தது. லெப்.கேணல் நிதி உள்ளிட்ட இரண்டு கடற் கரும்புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் புலிகள் அறிவித்திருந்தனர். தாக்குதல் நடந்த மறுநிமிடமே கடற்படைப் படகு முற்றாக நீரில் மூழ்கி விட்டது. இந்தத் தாக்குதல் நடந்தது கடற்படையின் இரண்டாவது கட்ட தடுப்பு வலயத்துக்கு வெளியே கரையில் இருந்து 9 கடல் மைல் தொலைவிலாகும்.

இதேவேளை புலிகளுடனான கடற்சண்டையின் போது கடற்புலிகளின் 4 படகுகளை மூழ்கடித்திருப்பதாக கடற்படையினர் கூறியி ருந்தனர். அத்துடன் கடற்படைப் படகு சிறியளவில் சேதமுற்றதாகவே கூறப்பட்டிருந்தது. ஆனால் கடற்படைப் படகு முற்றாக ÷சதமாகிவிட்டது. இந்தப் படகில் இருந்த முக்கிய அதிகாரிகள் சிலரும் காணாமற் போய்விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் உள்ள கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகமான "டொக்யார்ட்'டின் கீழ் அதிவேகத் தாக்குதல் படகுகளின் அணியொன்று இயங்கி வருகிறது. இதற்கு 4ஆவது அதிவேகத் தாக்குதல் படகு அணிக்கு (4th Fast Attack Flotilla (aka Dvora Squadron) என்று பெயர். இந்த அணி யைச் சேர்ந்த அதிவேகத் தாக்குதல் படகு தான் சுண்டிக்குளம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தப் படகு அணியின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் லெப்.கொமாண்டர் என்.எல். அபேசிங்க. இவரது உதவியாளர் லெப்டினன்ட் பெரேரா. இவர்கள் இருவரும் P 434 இலக்க டோறாப் படகில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது தான் கடற்புலிகளின் தாக்குதல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் அவர்கள் இருவரும் P 434 இன் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் சம்பத் உள்ளிட்ட 19கடற்படையினரும் காணாமற் போய்விட்டனர்.

இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரேயொரு கடற்படைச் சிப்பாய் மட்டும் இந்தத் தாக்குதலின் பின்னர் உயிர் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலுக்குக் கடற்புலிகள் நீருக்கடியில் பயணிக்கக் கூடிய தாக்குதல் படகைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கடற்படை சந்தேகிக்கிறது, கடற்புலிகள் நீருக்கடியில் பயன்படுத்தும் படகுகளை வைத்திருப்பதை கடந்த வாரம் படையினர் உறுதிசெய்திருக்கின்றனர்.

உடையார்கட்டுப் பகுதியில் புலிகளின் படகு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் "கோகுலன் 2008′ எனப் பெயரிடப்பட்ட 35 அடி நீளமான நீர்மூழ்கிப் படகு ஒன்றை படையினர் கைப்பற்றினர். இது நீருக்கடியில் பயணிக்கும் திறனுடன் இருக்கிறதா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதும் கடற்புலிகள் நீர்மூழ்கிகள் குறித்து அதிக கவனம் செலுத்துவது உறுதியõகியிருக்கிறது.

அத்துடன் இப்போது அவர்கள் கடல் மட்டத்தோடு பயணிக்கின்ற விநியோகப் படகுகளை வடிவமைத்தே ஆழ்கடல் விநியோகங்களை மேற்கொள்வதாகவும் கடற்படை கூறுகின்றது. நீர்மூழ்கிகளை சொந்தமாக வடிவமைத்துக் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் அந்தப் பட்டியல் மிகவும் சிறியது. இலங்கை வடிவமைப்பில் மட்டுமல்ல பயன்பாட்டைக்கூட கொண்டிராத ஒரு நாடு.

ஆனால் புலிகள் இயக்கம் தனிப்பட்ட ரீதியில் நீர்மூழ்கிகளை வடிவமைத்து இயக்குகின்ற ஒரு அமைப்பாக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடற்புலிகளிடம் இன்னும் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கின்றனவோ தெரியாது. அவர்களின் பலத்தை பெருமளவில் அழித்து விட்டதாக அரசாங்கத்தால் கூறமுடியாதுள்ளது.

கைவிடப்பட்ட பட குகள் சிலவற்றையும் நீர்மூழ்கியையும் கைப்பற் றியிருப்பதன் மூலம் கடற்புலிகளை முடக்கி விட்டதாக கூறிவிட முடியாது. இந்தநிலையில் கடற் புலிகளின் தாக்குதல்கள் அண்மையில் அதிக ரிக்க ஆரம்பித்திருப்பது அவர் கள் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்படுவ தையே காட்டுகிறது.

குறுகலான கடற்பிரதேசத்துக்குள் கடற்புலிகள் மீது கடற்படை தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று குவித்திருக்கின்ற நிலையில் அடுத்து வரும் காலத்தில் கடற்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதல்களில் இறங்கலாம் என்று எதிர்பார்க் கிறது கடற்படை. முல்லைத் தீவு முற்றுகைக் சமரின் முக்கிய களமாக இந்தக் கடற்பகுதி மாறியிருக்கிறது.

 

[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

 

http://www.tamilmann.com/2009/02/02/831

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 3 நாட்களாக தொடர் பீரங்கித் தாக்குதல்: "அது ஒரு இராணுவ இலக்கு" என்கிறார் கோத்தபாய

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்கு வைத்து கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினர் கடுமையான பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் சிறிலங்கா தாக்குதல்களில் படுகாயமடையும் வன்னி மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழலை ஏற்படுத்தி, தனது இனப் படுகொலை போரை விரிவுபடுத்துகின்றது சிறிலங்கா. அதேசமயம்,  புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடத்தும் இந்த தொடர் தாக்குதலை, அது ஒரு இராணுவ இலக்கு என்று நியாயப்படுத்தி இருக்கின்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் அது கடும் சேதத்திற்குள்ளானது.
புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணிமனையினை இலக்கு வைத்து நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில், அனைத்துலுக செஞ்சிலுவைச் சங்கத்தினதும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினதும் பணியாளர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கடும் பீரங்கித் தாக்குதலில் மருத்துவமனையின் பெண் நோயாளர் பகுதியில் பெருமளவிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்து 9 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனை வளாகப் பகுதியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியகங்களும் இருக்கின்றன என்பதும், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதேவேளை, பிரித்தானிய "ஸ்கை" ஒலிபரப்பு நிறுவனத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் - "புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயபூர்வமான இராணுவ இலக்கு" என்றும், அதன் நடத்தப்படும் தாக்குதல்கள் சரியானதுதான் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, பொதுமக்கள் அங்கு இல்லை இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தான் என்றார். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் புலிகள் தான் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் அங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும் என்ற தேவை இல்லை" என்று தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, படையினரின் தாக்குதல் இலக்கு ஒருபோதும் தவறியது கிடையாது எனவும் கூறினார்.
இதேவேளை, கடந்த வாரம் உடையார்கட்டு மருத்துவமனை தாக்கப்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானயக்கார, புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்கு போக வேண்டும்? எனக் கேட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

இலங்கையை அடித்து நொருக்கிய இந்திய வீரர்கள்

தொடரை வென்றது இந்தியா! யுவராஜ், சேவக் அதிரடி சதம்
lankasri.com கொழும்புவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் யுவராஜ், சேவக்கின் அதிரடி சதம் கைகொடுக்க இந்திய அணி, இலங் கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 3-0 என சூப்பராக கைப்பற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. மிக முக்கியமான மூன்றாவது போட்டி(பகலிரவு) இன்று கொழும்புவில் நடந்தது.

இதில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற உற்சாகத்தில் இந்தியா களமிறங்கியது. இலங்கையை பொறுத்தவரை இது வாழ்வா...சாவா போட்டி. துஷாரா நீக்கப்பட்டு, பெர்னாண்டோ வாய்ப்பு பெற்றார். இந்திய வெற்றி கூட்டணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

காம்பிர் பரிதாபம்: பெர்னாண்டோ வீசிய 2வது ஓவரிலேயே அதிர்ச்சி. முதல் பந்தை இவர் "நோ-பாலாக' வீச, "பிரி-ஹிட்' வாய்ப்பில் சச்சின் "சூப்பராக' சிக்சர் அடித்தார். 6வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் வெறும் 7 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருக்கு அதிர்ஷ்டம் இல்லை. முதலில் இவர் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை கண்டம்பி நழுவிட, கண்டம் தப்பினார். சிறிது நேரத்தில் சேவக் அடித்த பந்தை பெர்னாண்டோ லேசாக தொட்டு விட, "கிரீசை' விட்டு வெளியே நின்ற காம்பிர்(10) பரிதாபமாக ரன் அவுட்டானார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து இருந்தது.

சாதனை ஜோடி: இதற்கு பின் சேவக், யுவராஜ் இணைந்து தூள் கிளப்பினர். இவர்களது அதிரடியில் முரளிதரன், மெண்டிஸ் உள் ளிட்ட அனைத்து இலங்கை பவுலர்களும் திணறிப் போயினர். குலசேகரா வீசிய 9வது ஓவரில் சேவக் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தன் பங்குக்கு மகரூப் வீசிய 16வது ஓவரில் யுவராஜும் "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் எகிறியது. இருவரும் சதம் கடந்து அசத்தினர். ஒரு நாள் அரங்கில் 11வது சதம் அடித்த யுவராஜ் 117 ரன்களுக்கு(17 பவுண்டரி, 1 சிக்சர்) முரளிதரன் சுழலில் வீழ்ந்தார். தனது 10வது சதம் கடந்த சேவக் 116 ரன்களுக்கு(17 பவுண்டரி) ரன் அவுட்டானார். ரெய்னா(9) ஏமாற்றினார்.

யூசுப் அதிரடி: கடைசி கட்டத்தில் தோனி, யூசுப் பதான் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப் புக்கு 363 ரன்கள் எடுத்தது. யூசுப் 59(4 பவுண்டரி, 3 சிக்சர்), தோனி 35 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை திணறல்: மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஜெயசூர்யா(0), பிரவீண் குமார் வேகத் தில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். தில்ஷன்(30), கேப்டன் ஜெயவர்தனா(30), கண்டம்பி(10), கபுகேதரா(2) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சங்ககரா அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார்.

இலங்கை அணி 41.4 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1233683786&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கறுப்பு நாள் _ பத்திரிகை அறிக்கை

 
பெப்ரவரி - 4 கரிநாள்

பெப்ரவரி - 4 இல் சிங்கள தேசம் தனது 61 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த இறுமாப்புடன் கொண்டாடி வருகையில், தமிழ் மக்கள் தமது இறைமை சிங்கள தேசத்திடம் தாரை வார்க்கப்பட்ட 61 ஆவது ஆண்டு நிறைவை கவலையுடனும், அவமானத்துடனும் நினைவு கூருகின்றனர்.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைக் கோரிக்கைகள் எவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கணக்கில் எடுக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டதோ, அதேபோன்றே தற்போதும் தமிழர்களின் கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தினால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப் படுவதைக் காண முடிகின்றது.
தாம் பிறந்த மண்ணிலே, தாயாதி காலமாக வாழ்ந்த மண்ணிலே உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ முடியாத நிலை உருவான போதில்தான் தமிழ் மக்கள் போராடும் சூழல் உருவானது. அகிம்சைப் போராட்டங்கள் உதாசீனப் படுத்தப்பட்டு ஆயுதமுனையில் நசுக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் ஆயுதத்தை ஏந்தினர்.
இந்த நியாயம் சிங்கள தேசத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நன்கு தெரிந்த போதிலும் கூட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதைத் தடுத்து விடுவதில் அவை இணைந்து செயற்பட்டு வருவது போன்று தெரிகின்றது.
சிங்களம் விரும்புகின்றதோ இல்லையோ, சர்வதேசம் விரும்புகின்றதோ இல்லையோ தமிழ் மக்கள் உரிமையோடு வாழ்வதற்கான உரிமையை எவரும் மறுக்க முடியாது. அதை அடைவதற்கு ஆயுதப் போராட்ட வடிவம் தான் சாத்தியமான ஒரே வழிமுறை என்றால் அதனையும் கூட எவரும் நிராகரிக்க முடியாது.
இன்று தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கைகளை முற்றாக ஒழித்துக் கட்டிவிட கூட்டுச் சேர்ந்துள்ள சக்திகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


சிங்களம் சுதந்திரம் பெற்ற இந்த 61 வருட காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்தவை என்ன? பாரபட்சம், அவமானம், திட்டமிட்ட இனப்படுகொலை, பலவந்தமான இடப்பெயர்வு, கைது, காணாமற் போதல், பாலியல் வன்முறை என அடிமைச் சமூகம் ஒன்றின் மீதான அத்தனை ஒடுக்குமுறைகளையும் தவிர தமிழ் மக்கள் அனுபவித்தவை வேறு எவையும் இல்லை.
தம்மைத் தமிழர் என அழைத்துக் கொள்ளும் ஒரு சில கைக்கூலிகளை உடன் வைத்துக் கொண்டே சிங்கள தேசம் இவை அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றது. மனித உரிமைகள் பற்றிப் பேசும் சர்வதேசம், சிங்களத்தை ஒப்புக்குக் கண்டித்துக் கொண்டே, இன அழிப்புக்கு மறைமுக ஆதரவைத் தெரிவித்து வருகின்றது.
இன்று வன்னியில் உருவாகியுள்ள மிகப் பெரிய மனித அவலம் இதற்குச் சிறந்ததொரு உதாரணம். இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில், சர்வதேசச் சமூகத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு தனது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை சிங்கள தேசம் வெகு கச்சிதமாகச் செய்து வருகின்றது.
அதேவேளை, தாமே தாலாட்டிச் சீராட்டி வளர்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை இன்று சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக போர் நிறுத்தம் கோரியவர்களுக்கு முகத்திலடித்தால் போல் பதில் சொல்லப் பட்டிருக்கின்றது. ஒரு சில நாடுகளின் தூதுவர்களை நாட்டை விட்டே வெளியேற்றப் போவதாக அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.
இவை, சர்வதேச சமூகத்துக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கலாம். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கைகளை அனுபவ ரீதியில் தெரிந்து வைத்துள்ள தமிழ் மக்களுக்கு அல்ல.
இந்த நிலையிலாவது சர்வதேச சமூகம் உண்மை நிலையை உணர்ந்து தமது நியாய பூர்வமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாதா என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
எமது நியாயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதேவேளை, எமக்கான உரிமையை நாமேதான் போராடிப் பெற வேண்டும். அதற்காக ஓரணியில் திரள்வதே இன்று தமிழர் முன்னுள்ள பணி!

சண் தவராஜா தம்பிப்பிள்ளை நமசிவாயம்
உப தலைவர் செயலாளர்
 

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails