சமீபத்திய பதிவுகள்

தடை செய்யப்பட்ட டிவிடி(DVD)கள்

>> Sunday, April 12, 2009

இலங்கை பிரச்னை குறித்த டிவிடிக்கள் காவல்துறையின் தடையை மீறி விநியோகம்

தூத்துக்குடியில் காவல்துறையின் தடையை மீறி பெரியார் தி.கவினர் இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு ஆதரவான 'டிவிடி'களை விநியோகித்துவருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இலங்கை தமிழர்கள் பிரச்னையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டிவருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள்,இயக்குநர் சீமானின் பேச்சுக்கள், கொழுவை நல்லூர் முத்துக்குமரனின் இறுதிநிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவி தைகள் கொண்ட 'டிவிடி'யைதயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது.


இதனை வெளியிட காவல்துறைஅனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவதுசேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த 'டிவிடி'யின் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழுவதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்


StumbleUpon.com Read more...

கடந்த 5 ஆம் தேதி புதுக்குடியிருப்பில் புலிகளின் தளபதிகள் கொல்லப்பட்டது உண்மையா?

போர் நிறுத்த காலத்தில் சிறீலங்காவின் படை கட்டமைப்புக்களை பலப்படுத்தி அமைதி உடன்பாட்டை சீர்குலைத்ததில் மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் பங்களிப்புக்கள் ஏராளம். எனவே போரை தூண்டிய அவர்களுக்கு தான் அதனை நிறுத்தும் கடமையும் உள்ளது என படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசு வாரஏட்டிற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு:

கேள்வி: கடந்த 5 ஆம் நாளன்று ஆனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற சமர் தொடர்பாக பல முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன அது தொடர்பாக உங்களின் பார்வை என்ன?

பதில்: ஆனந்தபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களை நோக்கும் போது இரு தரப்பும் தமது பலத்தை பரீட்சித்து பார்த்த களம் அது என கூறினாலும் தவறில்லை. இராணுவம் விடுதலைப்புலிகளை ஒரு பெட்டிவடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்து விட்டதாக எண்ணியிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அவர்களை ஒரு பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தனர்.

இந்த முற்றுகையை பயன்படுத்தி இராணுவத்தின் போரிடும் வலு கொண்ட எஞ்சிய படையினரையும் அழிப்பதே விடுதலைப்புலிகளின் உத்தி. அவர்கள் அதனை சாதித்துள்ளதாகவே களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

அங்கு கடந்த 2 ஆம் நாளில் இருந்து மோதல்கள் நடைபெற்ற போதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) அதிகாலை படைத்தரப்பு பரியதொரு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளின் அணிகள் சனிக்கிழமை நள்ளிரவு தாக்குதலை ஆரம்பித்து விட்டன. தாக்குதல் ஏறத்தாள 6 மணிநேரம் உக்கிரமாக நிகழ்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவத்தின் முற்றுகையை உடைத்துக்கொண்ட விடுதலைப்புலிகளின் பெருமளவான அணிகள் தளம் திரும்பிவிட்டன. இராணுவத்தரப்பில் இந்த மோதலில் 1450 மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 2000 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சமரின் பின்னர் இராணுவம் எடுத்துவரும் ஓய்வும் அதனையே காட்டுகின்றது.

இராணுவத்தின் இலத்திரனியல் தகவல்களை விடுதலைப்புலிகள் இடைமறித்து கேட்பதன் மூலம் இந்த தகவல்களை பெற்று வருகின்றனர். மோதல் என்னும் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்படுவதுண்டு. அதிலும் தற்போதைய மோதல்கள் உக்கிரமானவை. இந்த மோதலில் இராணுவம் ஆறு மணிநேரத்தில் 100,000 இற்கு மேற்பட்ட எறிகணைகளை ஏவியதாக விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் இருந்து களமுனயின் உக்கிரத்தை நீங்கள் கணிப்பிட்டுக்கொள்ளலாம். எனினும் இந்த தாக்குதல் பூரண வெற்றி அளித்துள்ளதாகவே விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேள்வி: இந்த சமரில் பெருமளவான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அரசு தெரிவிக்கும் கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை?

பதில்: சிறீலங்கா அரசுகளை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் விடுதலைப்பேராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறிய காலப்பகுதியில் இருந்து தற்போது வரை பரப்புரை போரை அதிகப்படியாக முன்னெடுத்து வருவது நாம் அறிந்தைவையே.

ஆனால் தற்போதைய அரசு இதனை மிகவும் பாரிய அளவில் மிகுந்த பொருட் செலவில் நடாத்தி வருகின்றது. எத்தனையே தென்னிலங்கை ஊடகங்களை தனக்கு சார்பாக விலைகொடுத்து அரசு வாங்கியுள்ளது. ஏனைய ஊடகங்களை வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு அடக்கியுள்ளது.

எனவே தற்போதைய நிலையில் அரசு கூறும் தகவல்கள் தான் தென்னிலங்கையை மட்டுமல்லாது அனைத்துலக ஊடகங்களையும் அதிகளவில் கவர்ந்து வருகின்றன. ஆனால் களமுனையின் யதார்த்தம் அத்தகையது அல்ல. சிறீலங்கா அரசு கூறுவது போல இராணுவத்தினாரின் முற்றுகைக்குள் விடுதலைப்புலிகளின் அணிகள் முற்றாக சிக்குண்டு அழிவை சந்தித்திருந்தால் களமுனைகளில் சடலங்கள் சிதறிக்கிடப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.

தப்பியோடும் ஒரு சில போராளிகளால் சடலங்களை புதைக்கவே அல்லது எடுத்துச் செல்லவோ முடியாது. அவ்வாறான ஒரு துன்பமான நிகழ்வுகளை நாம் இடிமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமர், கொக்குத்தொடுவாய் படை தளங்கள் மீதான தாக்குதல்களின் போது 1995 களில் சந்தித்திருந்தோம்.

ஆனால் கடந்த வார சமரில் களமுனைகளில் கொல்லப்பட்டு கிடந்த 15 இற்கும் குறைவான சடலங்களை தான் ஆரம்பத்தில் அரசு காண்பித்திருந்தது. பின்னர் உருக்குலைந்த சடலங்கள் பலவற்றை காண்பித்திருந்தது. படையினர் காண்பித்த மொத்த சடலங்களும் 100 இற்கும் குறைவானவை. மேலும் தற்போதைய சமர்களில் மரணத்தை தழுவும் தமது உறுப்பினர்களை களமுனைகளில் புதைத்துவிட்டே விடுதலைப்புலிகள் தளம் திரும்புகின்றனர். சிறீலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்களால் கொல்லப்பட்ட பல பொதுமக்களின் சடலங்களும் ஆனந்தபுரம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன.

சிறீலங்கா படையினர் காண்பித்த சடலங்களில் பெரும்பாலனவை புதைக்கப்பட்ட பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட அடையாளங்களை கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. எனவே போலியான பிரச்சாரங்களின் மூலம் சிறீலங்கா அரசு ஒரு உளவியல் போரை மேற்கொண்டு வருகின்றது என்பது தான் உண்மை.

கேள்வி: இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த விடுதலைப்புலிகளின் அணிகளை மீட்பதற்கு கடற்புலிகள் முயன்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன?

பதில்: மோதல் நடைபெற்ற பகுதியின் பூகோள அமைப்பை கருதினால் இந்த தகவலின் உண்மை தன்மை புரியும். ஆனந்தபுரம் எல்லாபக்கமும் நிலத்தினால் சூழப்பட்ட பிரதேசம் அங்கு கடற்புலிகள் தரையிறங்க முடியாது. இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கடற்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் அது அலம்பில் கடற்பரப்புக்கு அண்மையாக நிகழந்துள்ளது. அலப்பில் முல்லைத்தீவில் இருந்து 10 கி.மீ தென் திசையில் உள்ளது. மேலும் விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தின் முற்றுகையை உடைத்துகொண்டு தப்பியோட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் இராணுவத்திற்கு ஒரு முற்றுகையை ஏற்படுத்தும் முகமாக இந்த முற்றுகையை ஏற்படுத்தியவர்களே அவர்கள் தான். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

மேலும் வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP