சமீபத்திய பதிவுகள்

இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

>> Wednesday, December 31, 2008

 
 
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பெண் உறுப்பினர் போல தோன்றும் ஒரு பெண், போர் முனையில் கொல்லப்பட்டபின், அவரது உடலை பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத் தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிர்ச்சி தரும் ஒளிப்படமானது கடந்த 4 நாட்களாக இணையத்தில் உலாவருகின்றபோதும் அதனை பிரசுரிக்க முடியாத அளவு கேவலமாக இருப்பதால் அதனை பிரசுரிக்க முடியவில்லை.
இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்கள் முகத்தை ஒளிப்படங்களில் எவ்வித அச்சமும் இன்றி காட்டுவதன் மூலம் இவர்கள் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்பது நிரூபணமாகிறது.
பெண்களைத் தாயாக, சகோதரியாக, தெய்வமாக கருதும் தமிழ் பண்பாட்டில் வளர்ந்த எவரும் இத்தகைய ஈனச்செயலை மன்னிக்கமாட்டார்கள்.
புலம்பெயர் வாழ்மக்களே!!
மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை
இலங்கையில் நடந்த சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.மன்றம் விசாரணைகளை நடத்தவேண்டும் என ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கபடுபவர்களுக்காக வழக்குகளில் வாதாட முன்வந்துள்ள வழக்குரைஞர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்சொன்ன புகார்கள் குறித்து ஐ.நா மன்றம் விசாரிக்கவேண்டும் என்று ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஆசிய மனித உரிமை இயக்கம் ஐ.நா மன்ற தலைமைச்செயலரிடம் கோரியுள்ளன.

 

 

StumbleUpon.com Read more...

செல்போனில் அதிக நேரம் பேசுகிறீர்களா?

>> Tuesday, December 30, 2008

 

 

lankasri.comசெல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறது.
 

StumbleUpon.com Read more...

ஈராக்கில் 98 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

 

 

அமெரிக்கா ஈராக் மீது போர் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 98 ஆயிரத்து 400 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமை குழுவினர் தெரிவத்துள்ளனர்

2008ம் ஆண்டில் மாத்திரம் ஒருநாளைக்கு 25 பேர் விகிதம் சுமார் 8300 தொடக்கம் 9 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் 2006 மற்றும் 2007ம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் 48 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டள்ளார்கள்.

 

இதேவேளை 2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது போர் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் சுமார் 4200 அமெரிக்க துருப்பும் 175 இங்கிலாந்து துருப்பினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

StumbleUpon.com Read more...

எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை” - தமிழீழ தேசியத் தலைவர்

 

 

"நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை" என தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார். லக்பிம நியூஸ் ஆங்கில பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செவ்வியின் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

"உங்கள் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்தி உலவுகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?" என கேட்கப்பட்டபோது "இவை அனைத்தும் இலங்கை அரச ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள் மாத்திரமே. நாம் ஒரு போதும் எமது மண்ணைவிட்டு செல்லமாட்டோம். மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக இறுதிவரை போராடுவோம்" என பிரபாகரன் பதிலளித்துள்ளார்.

நீங்கள் நாளுக்கு நாள் வயதாகி வருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபாகரன், எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாகும். எமது சுதந்திர போராட்டத்திற்கு கால எல்லையோ வயது எல்லையோ கிடையாது எனக் கூறியுள்ளார். கிளிநொச்சியை சில தினங்களில் இராணுவம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து தொடர்பாக பதிலளிக்கையில் "எமது போராட்ட வரலாற்றில் இதைவிட பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம்.

நாம் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய இராணுவமாக செயற்பட முடியாது என இலங்கை அரசுபெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத்தீவு, ஆனையிறவு மன்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம். தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்துவிடுவோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.

எவ்வாறெனினும் கடந்த சில நாட்களில் கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை இராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது " எனக் கூறியுள்ளார்.

உங்கள் பயங்கரவாத செயற்பாடுகளை விரும்பாததால்தான் சர்வதேச சமூகம் உங்களை கைவிட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் அனைத்தையும் உங்களால் தோற்கடிக்க முடியாது அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. மக்களை இலக்கை வைத்து விமான குண்டுவீச்சுகளை மேற்கொள்வது மற்றும் அவர்களுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையென்றால் மக்களை பாதுகாப்பதற்காகவும் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளாகுமா என சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொள்ளுமாறு சிங்கள மக்கள் உட்பட முழு சர்வதேச சமூகத்தையும் நாம் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கத்தன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியமை குறித்து தற்போது என்ன நினைக்கிறீர்கள். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் அத்தேர்தலை பகிஷ்கரித்தீர்கள் எனக் கூறப்படுகிறது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மக்கள் தாமாகவே தேர்தலை பகிஷ்கரித்தனர். மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். மக்கள் தேர்தலை பகிரஷ்கரித்தமை தொடர்பாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது விடுதலைப் போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், லஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

புலிகள் பலமிழந்துவிட்டதாக சர்வதேச ஊடகங்களும் கூறுவது குறித்து கேட்கப்பட்டபோது, நாம் பலமிழந்து விடவில்லை. எமது பலம் மக்கள்தான். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சண்டை இதற்கு பதிலளிக்கின்றது. எமது எதிர்கால போராட்டங்கள் மூலம் எமது பலம் குறைந்துவிடவில்லை என்பது தெரியவரும் என பதிலளித்துள்ளார்
 
 

StumbleUpon.com Read more...

வன்னி களமுனையில் இதுவரை 10,000 படையினர் பலி: படைத்தரப்பு வட்டாரம்

 

 

வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்பில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவை தவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே தற்போது படை பலத்தை தக்க வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு படைத்தரப்பு வட்டார தகவல்கள்

தெரிவிக்கின்றன.
வன்னியில் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கையில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா படைத் தலைமையகத்தைச் சேர்ந்த விடயமறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னி நோக்கி சிறிலங்கா படை நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து படைத்தரப்பு பாரிய ஆட்பல இழப்புக்களை சந்தித்துள்ளது. இருந்தாலும், இந்நடவடிக்கையை மிகுந்த சிரமத்துடன் அரசாங்கம் தொடர்ந்து வருகின்றது.
இக்காலப்பகுதியில் படையினர் புதிதாக எட்டு படையணிகளை உருவாக்கியுள்ளதுடன் பல களமுனைகளையும் திறந்துள்ளது.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் எதிர்ச் சமர்களில் படையினர் என்றுமில்லாத அளவுக்குப் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
வன்னியை கைப்பற்றும் படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்குள் இதுவரை 10,000 படையினர் உயிரிழந்துள்ளதுடன் 25,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் உடல் அவயவங்களை இழந்துள்ளனர்.
இதே காலப்பகுதியில் 25,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் மட்டும் 11,000 பேர் வரை தப்பியோடிவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெரும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றி வரும் படையினர் அதனை தக்க வைப்பதற்கான படை பலத் தேவையில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
அதனை ஈடு செய்யும் முகமாக படைகளில் இளைஞர்களை சேர்க்கும் பொருட்டு தென்பகுதியில் உள்ள ஒவ்வொரு செல்லிடத் தொலைபேசிகளுக்கும் படையில் இணைந்து கொள்ளுமாறு தகவல்களை அரசாங்கம் அனுப்பி வருகின்றது.
மேலும் கிழக்கில் இருந்தும் யாழ். குடாநாட்டில் இருந்தும் வன்னி நோக்கி படையினரை நகர்த்தி வருவதுடன் சிறுவர்களையும் பெண்களையும் கூட படையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பு முடுக்கி விட்டுள்ளது.
இவை தவிர படையில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், தப்பியோடுவோர் மீதான தண்டனைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தப்பியோடி மீளக் கைதாகும் படையினரை தண்டிப்பதற்கு என புதிதாக தானியங்கி தண்டனை இயந்திரங்களைக் கூட அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.
கைதாகும் தப்பியோடிய படையினர் இந்தத் தண்டனை இயந்திரத்துடன் பிணைக்கப்பட்டு இரு நாட்கள் தொடர்ச்சியாக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட பின்னர் உக்கிரமான மோதல்கள் நடைபெறும் முன்னணி களமுனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
படையில் இருந்து சிங்கள இளைஞர்கள் தப்பியோடாது இருப்பதற்கு என படைத்தரப்பு பிரத்தியேகமாக கையாண்டு வரும் ஒரு கடுமையான முறை எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

 

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவில் புலிகளால் கைப்பற்றப்பட்ட கனரக ஆயுதங்கள்

 

 

முல்லைத்தீவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முறியடிப்புச் சமரில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட கனரக ஆயுதங்களின் நிழல்படங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தனர். 

அதில் ஆர்.பி.ஜி., ஏ.பி. லோ, மற்றும் பாகிஸ்தான் மொழியில் (உருது) அடையாளப்படுத்தப்பட்டு தாக்குதலுக்குத் தயாராகவுள்ள கைக்குண்டு மற்றும் கனரக துப்பாக்கிகள் என்பன அடங்கியுள்ளன.

 
 
 

StumbleUpon.com Read more...

ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா
lankasri.comமெல்பர்னில் நடந்து வந்த 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி.16 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்ட்ரேலியா தொடரை இழந்துள்ளது.தென் ஆப்ரிக்கா அணி ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வந்தது. பூவா தலையா வென்ற ஆஸ்ட்ரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கேட்டிச் 54 ரன்னும், அணித் தலைவர் பாண்டிங் அபாரமாக விளையாடி 101 ரன்னும், கிளார்க் 88 ரன்னும் பிராட் ஹட்டின் 40 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 394 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிடினி 2, காலிஸ், மோர்கெல், ஹரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது தென் ஆப்ரிக்கா அணி. அந்த அணியின் தொடக்க வீரர் மெக்கன்ஸி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணித் தலைவருமான ஸ்மித் அபாரமாக விளையாடி 62 குவித்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து விளையாட வந்த அம்லா (19), காலிஸ் (26), டிவில்லியர்ஸ் (7) ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் டும்னிக்கின் அபார ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 459 ரன்கள் குவித்தது. இது ஆஸ்ட்ரேலிய அணியை விட 63 ரன்கள் அதிகம் ஆகும்.

ஆஸ்ட்ரேலியாவின் பந்து வீச்சை சிதறடித்த டும்னிக் 166 ரன்கள் குவித்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த ஸ்டெய்ன் 76 ரன்கள் குவித்தார்.

பின்னர் தனது 2வது இன்னிங்சைத் தொடர்ந்த ஆஸ்ட்ரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹைடன் 23, கேட்டிச் 15 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் அணித் தலைவர் பாண்டிங்கின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்ட்ரேலியா அணி ஓரளவு ரன்கள் எடுத்தது. 99 ரன் எடுத்திருந்தபோது பாண்டிங் மோர்கெல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பந்து வீச்சாளர் ஜான்சன் 43 ரன்கள் குவித்தார். ஆனால் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது அணியை பாதாளத்துக்கு கொண்டு சென்றது. முடிவில் ஆஸ்ட்ரேலியா அணி 247 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

தென் ஆப்ரிக்கா பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோர்கெல், காலிஸ் தலா 2 விக்கெட்டும், நிடினி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் ஆஸ்ட்ரேலியா அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 183 ரன்கள் நிர்ணயித்தது.

தொடக்க வீரர் ஸ்மித் அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் மெக்கன்ஸி 59 ரன்னும், அம்லா 30 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 விக்கெட் வீழ்த்திய ஸ்டெய்ன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணிலேயே ஆஸ்ட்ரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

பா.ஜனதா அலுவலகத்தில் ரூ.2 கோடி மாயம்

 


டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ரூ. இரண்டரை கோடி மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி அசோகா சாலையில் பாரதீய ஜனதா தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் அலுவலகம் உள்பட பல்வேறு நிர்வாகிகளின் அலுவலகங்கள் செயல் படுகின்றன. தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு அறையில் கட்சிக்கு சொந்தமான பணம் ரூ.2 கோடியே 60 லட்சம் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பணம் திடீர் என்று மாயமாகி விட்டது. கட்சியின் தேர்தல் செலவுக்காக இந்தப் பணம் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது பற்றி போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் கடந்த  அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

அப்போது தான் இந்தப்பணம் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக கட்சி ஊழியர்கள் சிலரிடம் தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் விசாரணை நடக்கிறது. கட்சி அலுவலகத்தில் பணம் மாயமாகியுள்ளதால் பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=1532

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் தாக்குதல் : பலி எண்ணிக்கை 345

 

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியான நெசவ் மீது பாலஸ்தீனம் தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சரவை முடிவெடுத்தது.

அதன்படி பாலஸ்தீன நாட்டின் காசா கடற்கரையோர பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.போலீஸ் தலைமையகம் உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் மீது இந்த தாக்குதல் நடந்தது.

 இத்தாக்குதலில் 155 பேர் பலியாகியுள்ளதாக அன்று இரவு தகவல் வந்தன.  மறுநாள் பலியானோர் எண்ணிக்கை 230ஆக உயர்ந்தது.  இத்தாக்குதலில் ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.

பலியானோர் எண்ணிக்கை இன்று 345ஆக உயர்ந்துள்ளது.  மேலும் இன்றைய தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இன்று தாக்குதல் நடந்த இடத்தில் மீட்பு பணிக்காக ஆம்புலன்சுகள் சென்றன. அவற்றின் மீதும் குண்டு வீசப்பட்டன.இதில் 5 ஆம்புலன்சு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=1540

StumbleUpon.com Read more...

பெண்கள் கல்வி கற்பது இஸ்லாம் மதத்திற்கு விரோதமானது

>> Friday, December 26, 2008

சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான்கள் தடை:பாகிஸ்தான் எல்லையில் அட்டூழியம்
 
lankasri.comபாகிஸ்தானில் சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.தங்களின் உத்தரவை யாராவது மீற முற்பட்டால்,அவர்கள் கொல்லப்படுவர் என்றும் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க,தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.

அதே பாணியை தற்போது பாகிஸ்தானின் வடமேற் குப் பகுதியிலும் அமல்படுத்தி வருகின்றனர்.சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என எச்சரித்துள்ள தலிபான்கள், "மீறுவோர் மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.மேலும்,பள்ளிகளும் குண்டு வைத்து தகர்க்கப்படும் அல்லது தீ வைத்து எரிக்கப்படும்" என,எச்சரித்துள்ளனர்.இது தொடர்பாக பாகிஸ்தான் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியின் தலிபான் உதவி கமாண்டர் ஷா தவ்ரன் மேலும் கூறியுள்ளதாவது:

சிறுமிகளை பள்ளிக்கு அனுப்புவதை ஜனவரி 15ம் தேதிக்குள் நிறுத்தி விட வேண்டும்.மேலும்,அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் சிறுமிகளை பள்ளியில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.இல்லையெனில்,அனைத்து பள்ளிகளும் குண்டு வைத்து தகர்க்கப்படும் அல்லது தீ வைத்து எரிக்கப்படும்.இவ்வாறு ஷா தவ்ரன் கூறியுள்ளார்.

இந்த தடை உத்தரவை வெளியிடும் முன்னர்,சுவாத் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு சிறுமிகள் செல்ல விடாமல் தலிபான்கள் தடுத்தனர்.மேலும்,பள்ளிக்கு வரக்கூடிய ஆசிரியைகளும் பர்தா அணிந்து வர வேண்டும் என,கடும் உத்தரவிட்டனர்.

சுவாத் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக பாக்.,படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினாலும்,தலிபான்களின் கெடுபிடி காரணமாக இப்பகுதியில் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"பெண்கள் கல்வி கற்பது இஸ்லாம் மதத்திற்கு விரோதமானது" என,தெரிவித்துள்ள இப்பகுதி தலிபான் கமாண்டர் மவுலானா பாசியுல்லா,பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் பதியப்பட்ட வீடியோ,ஆடியோ "சிடி"க்கள் மற்றும் "விசிடி'க்கள் விற்கும் கடைகள் மீதும்,முடி திருத்தும் கடைகள் மற்றும் சைபர் கபேக்கள் மீதும் தாக்குதல் நடத்தும்படியும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

கி.மு.300-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட எகிப்திய மிருக மம்மிகளை கடத்திய நபர் விமான நிலையத்தில் வைத்து கைது

கி.மு.300-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட எகிப்திய மிருக மம்மிகளை கடத்திய நபர் விமான நிலையத்தில் வைத்து கைது
 
lankasri.comஎகிப்திலிருந்து பண்டைய மிருக மம்மிகளை கடத்த முயன்ற அவுஸ்திரேலியர் ஒருவர்,அந்நாட்டு கெய்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்துவுக்கு முன் 300-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பூனையொன்றினதும் நீண்ட சொண்டுள்ள "ஐபிஸ்" என்ற பறவையினதும் மம்மிகள் மேற்படி அவுஸ்திரேலியரின் பயணப் பொதியிலிருந்து விமான நிலைய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் பண்டைய எகிப்திய கடவுள்களின் 19-சிறிய உருவச்சிலைகளும் அவர் பயணப் பொதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கடத்தல் குற்றச் செயலுக்காக அந்நபர் 15-வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230301609&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

மெக்ஸிகோ அழகுராணியும் ஏனைய 7-பேரும் கைது-பெருந்தொகையான ஆயுதங்கள்,பணம் மீட்பு

 
 
lankasri.comமெக்ஸிகோவின் அழகுராணியான லோரா ஸுனிகாவும் ஏனைய ஏழு பேரும் பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் பணம் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு மெக்ஸிகோவிலுள்ள குவாடலாஜராவுக்கு அண்மையிலுள்ள சோதனைச்சாவடியில் லோராவும் ஏனைய ஏழு பேரும் பயணம் செய்த கார் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட போதே மேற்படி ஆயுதங்களும் பணமும் கைப்பற்றப்பட்டன.

23 வயதான லோரா கடந்த ஜூலை மாதம் தனது சொந்த மாநிலமான சினாலோவாவில் அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார்.பொலிஸார் காரை பரிசோதிக்க முற்பட்ட போது தான் பொருட் கொள்வனவுக்காக பொலிவியாவிலிருந்து கொலம்பியாவுக்கு பயணம் செய்வதாக லோரா தெரிவித்துள்ளார்.

இரு "ஏ.ஆர்.15" துப்பாக்கிகள்,38 விசேட கைத் துப்பாக்கிகள்,633 துப்பாக்கி ரவைத் தொகுதிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களும் 53,000 அமெரிக்க டொலர் பணமும் லோரா பயணித்த காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி பாதையில் போதைவஸ்து கடத்தல் குழுவொன்று பயணிப்பதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே லோராவின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்,அந்த வாகனத்தில் அவர் இருப்பார் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச அழகுராணிப் போட்டியில் மெக்ஸிகோவை பிரதிநிதித்துவப்படுத்தும்படி லோரா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

சிங்கள ராணுவத்துடன் மோதல் - 43 புலிகள் பலி

சிங்கள ராணுவத்துடன் மோதல் - 43 புலிகள் பலிஇலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது. முல்லைத்துவு அருகே உள்ள குல முரிப்பு என்ற இடத்தில் இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமை ராணுவத்தினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் வயர்லஸ் இணைப்புக்காக இயங்கி வந்த போபுரம் ஒன்றையும், ராணுவம் தங்கள் வசம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் கிறிஸ்துமஸ் நாளில் நடந்த சண்டையில், 28 விடுதலைப்புலிகள் இறந்தனர் என்றும், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி வரையான பகுதிகளில் நடந்த மோதலில், 15 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

StumbleUpon.com Read more...

சிறிலங்கா அரசின் இன அழிப்பை சித்தரித்து வன்னியில் நத்தார் பந்தல்

 

  

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை சித்திரிக்கும் வகையில் வன்னி மறைக் கோட்டத்தில் நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.யாழ். கத்தோலிக்க மறை மாவட்ட மற்றும் வன்னி மறைக்கோட்ட மக்களால் சுதந்திரபுரத்தில் இந்த நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விலங்கிடப்பட்ட கைகளில் குழந்தை யேசு பிறந்திருக்கின்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. பின்பகுதியில் சிலுவையில் தமிழின அழிப்பு ஒளிப்படங்கங்கள் இணைக்கப்பட்டு இந்தப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக் கொடுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

 
 

StumbleUpon.com Read more...

இரத்தத்தால் எழுதப்படும் வெற்றிகளும் - எழுதப்படாமலே அழிந்துபோகும் மனித அவலங்களும்

>> Thursday, December 25, 2008

 

 

நாட்டின் வரலாற்றிலேயே என்று மில்லாதவாறு இரத்தம் தோய்ந்த ஒரு காலகட்டத்தினுள் புலிகளுக்கெதிரான அரசாங்கத்தின் யுத்தம் சென்று கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் அதிகவிலை கொடுத்து மேற்கொள்ளப்படும் இந்த யுத்தம் அனைத்து இளஞ் சந்ததிக்கும் ஒரு மாறாத வடுவாக அமையப் போகிறது.

அதனை காலாநிதி றொகான் எம்.ஜயதுங்க மேற்கொண்ட ஆய்வு வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவ்வாய்வு இராணுவத்துக்குள்ளிருக்கும் பல பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதுவும் குறிப்பாக 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பின்னர் 6 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 1200 படையினர் கொல்லப்பட்டதன் பின்னரான நிலைமைகளை, படையினர் முகங்கொண்ட நெருக்கடிகளை அது வெளிப்படுத்துகிறது. 

விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் Post-Traumatic Stress Disorder (PTSD)  என்கிற உளநெருக்கீட்டு நோய் அவர்களைப் பெருமளவில் பாதித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் மொத்தப் படையினருள் வடக்கு கிழக்கில் மோதலில் ஈடுபட்ட படையினரே இவ்வாறான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

போர் அழுத்தம் தொடர்பான உளவியல் முகாமைத்துவம் என்ற தலைப்பில் இலங்கைப் படையினரிடையே இவ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2001ஆம் ஆண்டு  வரை 17ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் அக்காலப்பகுதிவரை அதேயளவான விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது தான். ஏறத்தாழ ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில்.

மோதலில் 2008 ஆம் ஆண்டு இற்றைவரை 9000 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கிறது. 350 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நான்காவது ஈழப்போரில் இதுவரை 10500 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 25 வருடகால யுத்தத்தில் ஒரே வருடத்தில் ஆகக் கூடுதலானோர் கொல்லப்பட்டது இவ்வருடத்தில் தான்.

இராணுவம் தனது இழப்புக்கள் பற்றிய விபரங்களையும் புலிகளின் இழப்புக்கள் பற்றிய விபரங்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடுவதில்லை என முடிவு செய்த ஒக்ரோபர் மாதம் வரையானவை தான் இந்தப் புள்ளிவிபரங்கள் என்பதை நாங்கள் ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.

எவ்வாறிருந்த போதும் கடந்த மாதம் புலிகளுக்கெதிராக கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக சுற்றிவளைத்து இராணுவம் மேற்கொண்ட கடுமையான மோதலில் இரண்டு தரப்பினரும் பாரிய இழப்புக்களை சந்தித்திருக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. இம்மோதல்கள் கிளிநொச்சியைச் சூழவும் முகமாலையிலும் இடம்பெற்றிருந்தன.

ஒரு குரூரமான சந்தர்ப்பத்தில் நவ.15 தொடக்கம் 18 வரையான மூன்று நாட்கள் மட்டுமே இடம் பெற்ற மோதலில் 200க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாக டிபென்ஸ் வாச்இன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் வேறெந்த மாதத்திலும் 200 மேற்பட்ட படையினரை இராணுவம் இழந்திருந்ததாக அரசாங்கம் அறிவித்திருக்கவி;ல்லை.  

வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்புக்கு வந்ததாலும் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் விதித்த காலக்கெடு பல தடவைகள் தவறிப் போனதாலும் நவம்பர் மாதத்தில் அரசாங்கம் வலிந்து மோதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1994இலிருந்து மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை கிடைக்கக் கூடிய தகவல்களை வைத்துப் பார்க்கும் போது 25 வருடங்களாக நடைபெறும் இந்தப் போரில் இவ்வருடம் தான் இரத்தம் தோய்ந்த காலமாக இருக்கப் போகிறது.

இதற்கடுத்தாக மோசமான காலப்பகுதியாக இருந்தது 1995ஆம் ஆண்டு. அது யாழ்ப்பாணத்தை இராணுவம் மீளக் கைப்பற்றும் போதானதாக இருந்தது. இதன்போது படையினரும் புலிகளுமாக ஏறத்தாழ ஐயாயிரம் பேர் கொல்லப்பட்டனர். நவ 2008இல் மட்டும் இதனிலும் அரைவாசிப் பேர் கொல்லப்பட்டனர். இராணுவத்தின் இழப்புக்கள் ரொக்கெட் வேகத்தில் அதிகரித்தன. ஜனாதிபதி மகிந்த ராஜாபக்சவின் பிறந்த தினமும், அதற்கு சற்றுப் பின்னர் இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.   

போரால் பெண்களும் குழந்தைகளும் இவ்வாண்டு மிகுந்த துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். இதில் முக்கியமானது என்னவென்றால் அரசாங்கம் இந்தப் போரில் ஏற்படும் மனித உயிரிழப்புக்களை மறைத்து ஊடகங்கள் எதை வெளியிட வேண்டும் என்று கட்டுப்படுத்துவது தான்.

எவ்வாறிருந்த போதும் அரசாங்கம் படைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக வெளியிடும் விளம்பரங்களில் உள்ளதைப் போல போர் கவர்ச்சிகரமானதல்ல என்பதை வெளியிடப்படாத அந்த அறிக்கை புலப்படுத்துகிறது.

இந்தப்பிரச்சாரத்துள் தமது அன்புக்குரியவர்களை இழந்து ஏங்கும் குடும்பங்களின் துயரம் அமிழ்ந்து விடுகிறது. அத்தோடு படையினரின் மன அழுத்தங்கள் பற்றியும் ஒருபோதும் அது பேசுவதில்லை. 

அவ்வறிக்கை 32 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரின் அனுபவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு படைவீரன் நிலக்கண்ணிவெடியில் அகப்பட்டுச் சாகிறான். ஒரு சிறு காயமும் இல்லாமல் ஒருவாறு இவர் தப்பி விடுகிறார். தன்னுடைய நண்பன் எவ்வாறு அந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான் என்பதை அவர் நேரடியாகத் தனது கண்களால் கண்டார். பின்னர் அவரிடம் கண்டதெல்லாம் நம்பிக்கையீனம், தன்னைத் தானே வைது கொள்ளல், குற்றவுணர்வு, ஆழ்ந்த துயரம், மரண இழப்பு. அவர் இவற்றால் பீடிக்கப்பட்டவரானார். 

இன்னுமொரு படைவீரர் தனது உற்ற நண்பர் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்படுவதைக் காண்கிறார். அவர் இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் உடலை புதைத்துவிடுமாறு பணிக்கப்படுகிறார். ஆனால் அந்த உடல் தொடும் போது இன்னமும் கணகணப்பாக இருந்தது. அவரால் நண்பனது உடலைப் புதைக்க முடியவி;ல்லை. இருந்தாலும் உயரதிகாரியின் உத்தரவுக்கிணங்க புதைக்கிறார்.

சில வருடங்களுக்குப் பின்னரும் தான் தனது நண்பனை உயிருடன் புதைத்துவிட்டதாக அவர் தர்க்கபூர்வமற்று வருந்திக் கொண்டிருந்தார் என, அந்த அறிக்கை அப்படைவீரரின் உள நெருக்கடியைப் பற்றிச் சொல்கிறது.

இவ்வறிக்கை படையினரின் இவ்வாறான ஏராளமான உளநெருக்கடிகளைக் குறிப்பிடுகிறது. அவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை கீர்;த்தி மிக்கதாக சொல்லப்படுவது போல அறப்போருக்குரியதாக இல்லை.
ஏழு படையினர் எதிரியின் மோட்டார் வந்து விழுந்து வெடித்ததில் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த ஒரு லெப்டினன்ட் மிகவும் உளப்பாதிப்புக்குள்ளானார். ஒரு காலை இழந்த சார்ஜன்ட் மிகுந்த வன்முறையாளனாக மாறினார். 20 வருடங்களாகப் படையில் கடமை புரிந்த ஒரு கப்டன் பின்னர் இந்த சிவில் சமூகத்தில் பொருந்தி வாழ முடியாதவராக ஆளானார்.

இவ்வாறான பல கதைகள் இந்த ஆய்வறிக்கை எங்கும் விரவிக் கிடக்கின்றன. இந்த உதாரணங்கள் எல்லாம் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கானவை. இவை எல்லாமே 2008 ஆம் ஆண்டின் இந்த யுத்தத்தை ஒரு மிக மோசமான யுத்தம் என்று விளக்குபவை. 
களத்தில் படையினர் மிகவும் களைப்புற்றுள்ளனர். நீடித்த யுத்தம் பாரிய அளவில் உள நெருக்கடியால் அவர்களை அவதியுற வைக்கிறது. வடக்கு கிழக்கில் கடமையாற்றும் அல்லது கடமையாற்றிவிட்டு வந்த படையினரே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இறந்தவர்களின் உடலைக் கையாளுதல், களத்தில் நண்பர் ஒருவரை இழத்தல், நன்கு தெரிந்தவர் கொல்லப்படுவதைப் பார்த்தல் போன்ற பல காரணங்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன. இது மனநலப்பிரச்சினைகளை அதிகரித்து விடுகிறது.

இது தெற்கில் என்றால் வடக்கில் இந்த 2008 ஆம் ஆண்டில் மட்டும் 14000 கிலோ தொன்கள் நிறையுடைய குண்டுகள் விமானத்திலிருந்து போடப்பட்டுள்ளன என்கிறார் டிபென்ஸ் வாச் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் போரால் உடல் ஊனமானோர் 2100 பேர் இருப்பதாக அரசாங்க செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

உடல்சிதறிப் பலியாகும் மரணங்களையும் தமது அன்புக்குரியவர்களின் இழப்புக்களையும், எந்த நேரமும் வானிலிருந்து குண்டு வந்து விழலாம் என்று அச்சத்துள் வாழ்ந்திருப்போரையும் எதிர்காலமே நிச்சயமற்று ஏங்கும் மக்களையும் உள நெருக்கடி எப்படிப் பாதித்திருக்கும்? எவ்வாறு அவர்களது உள நலம் சிதைந்திருக்கும்?

காணாமல்போன தமது கணவனையொ மகனையோ மகளையோ தேடி அந்த உள்ளங்கள் எவ்வாறு வருந்திக் கொண்டிருக்கும். அது எவ்வாறான உளநெருக்கடியை அவர்களில் உருவாக்கும்?  குறிப்பாக பெண்களதும் சிறுவர்களதும் உளநெருக்கடி எத்தகையதாக இருக்கும் எதிர்காலச்சந்ததியில் என்னென்ன தாக்கங்களை விளைவிக்கும்?
 

சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தருணமிது!
 

StumbleUpon.com Read more...

தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்? How does God reveal Himself?

 

 

How does God reveal Himself?

இஸ்லாமிய‌ரும் கிறிஸ்தவர்களும் ஆபிரஹாமின் விசுவாசத்தை ஒரே மாதிரியாகக் காத்துக் கொள்கிறார்கள். இவ்விரு பிரிவினரும், தங்கள் தீர்க்கதரிசிகள் மூலமாக தங்கள் தேவன்/அல்லா இறக்கிய வெளிப்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் வெளிப்பாடு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்கின்றனர்? மெய்யான ஒரே தெய்வத்தினை வழிபடுதலையே நாடும் நாம் அனைவரும் கடவுள் தான் தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஒப்புக்கொள்கிறோம். நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் அவரைக் கண்டுகொள்ள முடியாது, அதனால் தம்மை வெளிப்படுத்த அவரே வேண்டும். கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

குர்‍ஆன் 42:51-52 "அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.

(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்."


வெளிப்பாடு குறித்த இஸ்லாமியரின் பார்வை
வெளிப்பாடு குறித்த கிறிஸ்தவ‌ரின் பார்வை
இயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை
சரியான ஒப்பிடுதல்

வெளிப்பாடு குறித்த இஸ்லாமியர்களின் பார்வை

The Islamic View of Revelation

மனோரீதியான தூண்டுதலினாலன்றி(Inspiration) மனிதரிடம் அல்லா நேரிடையாகப் பேசுவதில்லை என சூரா 42:51-52 தெளிவாகச் சொல்கிறது. இக்காரணத்தினாலேயே, "அனுப்பப்பட்டவர்" எனப் பொருள்படும் ரசூல் என்றழைக்கப்படும், நபிகளாக‌ நியமிக்கப்பட்டவர்களின் மூலமாக அல்லா தம்மை வெளிப்படுத்துகிறார். இந்த நபிகள் வெறும் மனிதர்கள் தாம், எனவே ஒரு வரம்புக்கு உட்பட்டவர்களே (சூரா 80:1-3). இஸ்லாமில் வெளிப்பாடு(Revelation) என்பது கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு நபிகள் மூலமாக வருவதே. இஸ்லாமின் படி, இறுதி வெளிப்பாடு என்று இஸ்லாமியர்களால் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வெளிப்பாடே குர்‍ஆன் என்பது. இது முஹம்மதுவிற்கு கி.பி. 610 - 632 ல் காபிரியேல் தூதன், வார்த்தைக்கு வார்த்தை இறங்குதல் என்பதாக, Nazil எனப்படும் (கீழிறங்கி வரும் Tanzil) முறையில் வெளிப்படுத்தப்பட்டது.

சொர்க்கத்தில் இருக்கும் கற்பலகைகளை (சூரா 85:21-22) பற்றி கவனிப்போம். குர்‍ஆன் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இப்பலகைகள், உண்டாக்கப்பட்டவை அல்ல, இவைகள் நிரந்தரமானவைகள். அல்லா, அளவிட முடியாதவரும் அற்புதமானவருமாய் இருப்பதினால், அவருடைய வார்த்தையும் வெளிப்பாடுகளும் அளவிட முடியாதவையும் அற்புதமானவையுமாய் இருக்கின்றன. முகமதுவின் மூலமாகக் கொடுக்கப்பட்ட இந்த இறுதி வெளிப்பாடு தெய்வீகமானது; எனவே மனிதர்களின் மதிப்பீட்டிற்கும் சர்ச்சைக்கும் அப்பாற்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால், இப்பொழுது நம் கையில் இருக்கும் குர்‍ஆன், இன்றும் என்றும் ஒரு எழுத்தும் மாறக்கூடாதபடி அசலாயும் இறுதியாயும் இருக்கும் என்பதே.

நாம் அல்லாவின் குர்‍ஆனுக்கு, அத‌ன் வாச‌க‌ங்க‌ளைப் ப‌ற்றிக் கேள்வியேதும் கேட்காம‌ல் அடிப‌ணிய‌ வேண்டும். ஒரு அடிமை, த‌ன் எஜ‌மானிட‌ம் கேள்வி கேட்க‌ முடியுமா? முடியாதல்லவா, அதுபோன்றே, ஒரு முஸ்லிம் குர்‍ஆனைப் ப‌ற்றி வின‌வ‌ முடியாது.

இந்தக் கட்டத்தில், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைப் பார்த்து, "உங்களுடைய புத்தகம் எப்படி?" எனக் கேட்கிறார்கள். நாமும் குர்‍ஆனையும் பைபிளையும் ஒப்பிடுவோம்.

வெளிப்பாடு குறித்த கிறிஸ்தவர்களின் பார்வை

The Christian View of Revelation

துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயம், தவறான அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், வெளிப்படுத்துதல் தொடர்பான‌ அவர்களின் கருத்தில் இருந்து பைபிள் மற்றும் குர்‍ஆனின் ஒப்பீடு சற்றுக் குறைவுபடுகிறது.

கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டுள்ளபடி, தேவன் ஒரே ஒரு வழியின் மூலமாக அல்லாமல், பல வழிகளில் பேசியிருக்கிறார்:

1. படைத்தல்(Creation): இயற்கை, இது தெய்வீக வேலைப்பாட்டின் வெளிப்பாடு.

2. கிரியைகள்(Action): அதிசயப்படத்தக்க அற்புதங்க‌ள் மூலமாக பல வழிகளில் தேவன் மனித காரியங்களில் நேரடியாக இடைபட்டிருக்கிறார்.

3. தீர்க்கதரிசிகள்(Prophets): அவர்களுக்கு அருளப்பட்ட வார்த்தைகள் மூலமாக‌.

நாம் இந்த வெளிப்படுகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், ஏதேன் தோட்டத்தில் ஆதாமின் கீழ்படியாமையினால் நாம் பாவிகளானோம். இது நம் மனதினைக் குருடாகி, தேவனை நாம் காணக்கூடாதபடி செய்தது.(2 கொரிந்தியர் 4:4). இவ்விதமாய், மனுக்குலம் முழுவதும் தொடர்ந்து தேவனைப் புரிந்துகொள்ளத் தவறியது. இந்தப் பாவத்தினாலே விக்கிரக ஆராதனை ஆரம்பித்தது. மெய்யான ஒரே தேவனைப் பற்றிய அறிவினை நாம் ஒருபோதும் பற்றிக் கொள்ளவில்லை.

இதன் காரணமாக, தேவன் இறுதியான வழியினைத் தெரிந்துகொண்டார். அவர் நம்மில் ஒருவராகி, தமக்காகத் தாமே பேசினார். அவர் தேவனாய் இருப்பதினால், அவரே அவரை நமக்கு வெளிப்படுத்த முடியும். தேவன் ஒருவரே தேவனுக்காய்ப் பேச முடியும். தேவன் யார் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முயன்றால் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நானும் ஒன்றும் பெரிதாய்ச் சொல்லிவிட முடியாது, ஏனெனில், பாவியான ஒரு சாதாரண மனிதனால் தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதில் திரித்தே தான் கூற முடியும். அவரைப் பற்றி அவரே தான் வெளிப்படுத்த வேண்டும்; ஏனெனில் இடையிலுள்ள அனைவரும் அவர் போன்ற அளவிட முடியாத பரிசுத்த ஞானத்தில் மிகவும் குறைவு பட்டவர்களே. எனவே அவர் பேசிய நான்காவது வழி இதுவே:

4. தேவ‌னின் அப்ப‌ழுக்க‌ற்ற‌ ப‌ரிபூர‌ண‌மான‌ வார்த்தையாகிய இயேசு தேவ‌ன் யார் என்ப‌தை ந‌ம‌க்குக் காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை

Jesus Christ, the Word of God

தாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து தேவனுக்குக் கீழான‌வர் அல்ல, அவ‌ர் தேவனுக்கு சமமானவர். அனைவரையும் ஒதுக்கிவிட்டு தேவ‌னே த‌ம‌க்காக‌ப் பேசுகிறார். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே அவ‌ர் அறிய‌ப்ப‌டுகிறார்.

இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் பிலிப்பு ஒருமுறை தேவனை அறிய விரும்பினார். அதற்கு இயேசு,

பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்." என்றார் (யோவான் 14:9-10)

இப்போது நாம் இயேசுவின் வெளிப்பாடினை கடவுளின் ஏனைய வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுவோம்.

1. படைப்பு தேவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆனால் விக்கிரக ஆராதனைக்காரர்களும், இதர தெய்வங்களை வணங்குகிறவர்களும்(Pagans) கூட இதைச் சொல்கிறார்கள்! இவர்கள், "தேவன்/இறைவன் யார்" என்று அறிந்துகொண்டார்கள் என நாம் கூற முடியுமா? இல்லை, தேவனைப் பற்றி அறிந்துகொள்ள வெறும் இயற்கையை விட அதனினும் மேலானவையும் தேவை(No, they need more than just nature to tell them what God is like).

2. அற்புதங்கள், ஒரு தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ஆனால், கள்ளத் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களைப் பாருங்கள், அவர்கள் அனேகம் தேவர்கள் உள்ளார்களென்றும், சில வேளைகளில் தாங்க‌ளே தேவர்களென்றும் அறிக்கை செய்கின்றனர்! இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினரின் தீர்க்கதரிசிகள், அற்புதங்க‌ள் செய்து, நம்பாதவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஆனால், இத்தகைய அதிசயங்கள் தேவனைப் புரிந்துகொள்ளப் போதுமானவையா? இல்லை, நமக்கு அற்புதங்களைக் காட்டிலும் அதிகம் தேவை.

3. பைபிள், தீர்க்கத்தரிசிகளின் மற்றும் தூதர்களின் செய்திகளின் தொகுப்பாகும். அது எள்ளளவும் தவறே இல்லாத, தவறவே முடியாத தேவனின் வார்த்தையாகும். இயேசு கிறிஸ்துவில் தேவனின் வெளிப்பாடு அது. முழு பைபிளும் தேவனைப் பற்றிப் பேசுவதாகவே இயேசு போதித்தார். "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; ... என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே" (யோவான் 5:39), பைபிள் ந‌ம‌து புரிந்து கொள்ளுத‌லின் முடிவ‌ல்ல‌. அது ஒரு ஆர‌ம்ப‌ இட‌மே, அதாவ‌து, அது இயேசு கிறிஸ்துவை நோக்கிச் சுட்டிக்காட்டும் ஓர் கைகாட்டி. எனினும், ந‌ம்முடைய‌ ம‌னித‌ மூளையினால், மிக‌வும் ப‌க்தியோடும், அதிக‌ அக்க‌ரையோடும் நாம் என்ன‌ தான் ஆராய்ச்சி செய்தாலும், தேவ‌னைப் ப‌ற்றி முழுவ‌துமாக‌ நாம் அறிந்துக் கொள்ள‌முடியாது.(Yet our human minds cannot discover God by any investigation of a book, no matter how devout, serious or religiously committed that investigation is). எனவே, தேவ ஆவியின் (ruh-allah) மூலம் இயேசு கிறிஸ்துவை பைபிளின் வார்த்தைகளில் நாம் கண்டுபிடிக்கிறோம்.

இது இஸ்லாமியருக்குக் குழப்பமாகத் தோன்றலாம்; அல்லது பயமுறுத்துவது போன்றும் இருக்கலாம். இவ்வுண்மையை அவர்களுக்கு விளக்க, நமக்கு ஒரு வித்தியாசமான கோணம் தேவைப் படுகிறது. பலர் ஆராய‌ முனைவது போல குர்‍ஆனை பைபிளுடன் ஒப்பிடாமல், அதனை இயேசுவுடனாக ஒப்பிடுவது அதிக பலனுள்ளதாய் இருக்கும். ஏனெனில் இரண்டும் கடவுளின் வார்த்தை என்பது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குக் கடவுளின் உண்மையான வெளிப்பாடாகவும் நிலை நிற்கின்றன‌.

சரியான ஒப்பிடுதல்

Better Comparisons

கால‌ங்காலமாக, பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும், முஹம்மதுவை இயேசுவோடும், மற்றும் கு‍ர்‍ஆனை பைபிளோடும் ஒப்பிட்டு வந்துள்ளனர். (கீழேயுள்ள பட்டியலைப் பார்க்கவும்)

முந்தய ஒப்பீடுகள்

ஏனெனில் இவை இரண்டும் (இவர்கள் இருவரும்)

கு‍ர்‍ஆன்-பைபிள் ஒப்பீடு

...புத்தகங்கள்

முஹம்மது-இயேசு ஒப்பீடு

...மனிதர்கள்

ஆங்கிலத்தில்:

OLD COMPARISONS

Because both are...

Qur'an compared to Bible

...books

Muhammad compared to Jesus

...men

இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் சிறப்பான முறையில், ஒருசில விவாதங்களையே நடத்தியுள்ளனர் என்பதில் ஆச்சரியம் இல்லை! இஸ்லாமின் மற்றும் கிறிஸ்துவத்தின் பொதுவான தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவைகளை நன்முறையில் விளங்கிப் புரிந்து கொள்ள ஏதுவாகும். ஒப்பிடுவ‌த‌ற்கேதுவான‌ இத்த‌ன்மைக‌ளின் பிரிவுக‌ள் (1) குர்‍ஆனும், இயேசுவும், (2) முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்த‌ல‌ரும், ம‌ற்றும் (3) பைபிளும், ஹ‌தீஸ்க‌ள்/தரிக்ஹ், சீராக்க‌ள் ம‌ற்றும் உரைக‌ள் இவைக‌ளும் ஆகும், (ப‌ட்டிய‌லைப் பார்க்க‌வும்).

முன்னிலும் சிறந்த ஒப்பீடு

ஏனெனில் இவை இரண்டும் இவ்வாறாகக் கருதப்படுகின்றன‌ ...

குர்‍ஆனும், இயேசுவும்

...க‌ட‌வுளின் நித்திய‌ வெளிப்பாடு

முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்த‌ல‌ரும்

...வெளிப்பாட்டின் செய்தியினை அறிவித்த‌வ‌ர்க‌ள்

பைபிளும், ஹ‌தீஸ்க‌ள்/தரிக்ஹ், சீராக்க‌ள் ம‌ற்றும் உரைக‌ள் ஆகிய‌ இவைக‌ளும்

...வெளிப்பாட்டின் வ‌ர‌லாறும் போத‌னைக‌ளும் செய்திக‌ளும்


ஆங்கிலத்தில்

BETTER COMPARISONS

Because both are regarded as...

Qur'an compared to Jesus

...the eternal revelation of God

Muhammad compared to Jesus' Apostles

...messengers of the revelation

Hadith, Tarikh, Sira and Tafsir compared to the Bible

...the history and teachings of the revelation and messengers

இது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும் என்ற அதே வேளையில், நாம் ஒன்றினைக் கவனமாக மனதிற் கொள்ள வேண்டும். அதாவது, புதிய ஏற்பாடு இயேசுவைப் பற்றியே பிரதானமாகப் பேசினாலும், அவருடைய வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி அதில் அதிகம் சொல்லப்படவில்லை. மாறாக, ஹதீஸ்களும் சூராவும், முகமதுவின் வாழ்க்கை முறைகளை அவர் என்ன செய்தார் என்பன போன்றவற்றை அவர் கூறியவற்றின் விளக்கங்களுடன் விவரமாகச் சொல்கின்றன‌.

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்குள்ளான இறைவனின் வெளிப்பாடு தொடர்பான ஒரு விவாதத்தில் நாம் ஈடுபடுவோமேயானால், அதில் இயேசு கிறிஸ்துவையும் குர்‍ஆனையும் மட்டுமே ஒப்பிடுதல் வேண்டும், பைபிளையும் குர்‍ஆனையும் அல்ல. அதாவது, நாம் பைபிளை அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவையே நிச்சயமான தேவனின் வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். இயேசு தான் தேவனின் இறுதி வார்த்தை. தேவனின் ஆவி மூலமும் பைபிளின் எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் நம் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாகவும் இன்றும் நாம் காணக்கூடியவர் அவரே.

இக்காரணத்தினாலேயே, நாம் பைபிளை, தேவனால் அருளப்பட்ட பிழையற்ற‌ தேவ வார்த்தை எனவும், இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் சரித்திரம் முழுவதிலும் அது செயலாற்றுகிறது எனவும் மதிக்கிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் அவரை அணுகும்போது தேவனை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். தேவன், மனிதர்களின் வார்த்தைகட்கு மிகவும் அப்பாற்பட்டவர். அவரின் வார்த்தையினாலன்றி எதினாலும் அவரை வெளிப்படுத்த முடியாது.

தேவ ஆவியானவர் தாமே தேவனைத் தேடுபவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த இயேசு கிறிஸ்துவிடமே அழைத்துச் செல்கிறார். வெறும் மனிதர்களின் வார்த்தைகளில் மட்டுமே போலியான கடவுளின் வெளிப்பாட்டைக் கண்டு திருப்தி அடைவோர் வீண் நம்பிக்கையை வளர்க்கட்டும், தடையில்லை, ஆனால் தாமே சுயமாக வெளிப்படுத்தும் தேவனைச் சந்திப்பதைத் தவிர நாம் வேறெதிலும் திருப்தியடைய மாட்டோம்.

இப்புதிய ஒப்பிடுதலின்படி, இயேசு மற்றும் குர்‍ஆன் இரண்டிற்கும் எந்த விதப் பொருத்தமும் இல்லை. குர்‍ஆன் என்பது ஒரு சாதாரணப் புத்தகம் தான். அதன் ஆதாரம் ஒரு அநித்தியமான பாவமுள்ள மனிதனின் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ளது(சூரா 80:1-3). இது இஸ்லாமியராலும் கிறிஸ்தவராலும் ஒரு மனதாய்ப் பாவமற்றவர் எனக் கருதப்படும் இயேசுவுக்கு எவ்வகையிலும் நிகராகாது. அவரின் வார்த்தையின் படியே அவர் தேவன் தான் என்பது பூரணமான வெளிப்பாடு.

In light of these new comparisons, there is no match between the two revelations, Jesus and the Qur'an. The Qur'an is merely a book whose authenticity rests solely on the shoulders of one finite and sinful man (Sura 80:1-3). It is no match against Jesus, revered by Muslims and Christians alike as sinless, who, according to His word, is God Himself, the perfect revelation.

"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."(எபிரெயர் 1:1-2)


Source: http://debate.org.uk/topics/trtracts/t08.htm

This pamphlet was compiled by an interdenominational group of evangelical Christians concerned with Muslim-Christian dialogue.


பைபிள் பற்றிய கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

StumbleUpon.com Read more...

அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்ற விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல் மாயம்: அதிர்ச்சியில் சிறிலங்கா படைத்தரப்பு

 

முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள். அங்கு அவர்கள் ஓரேரா விடுதியில் தம்மை பதிவு செய்து கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளின் பிரதம ஆயுத முகவரான கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் அப்போது சுகவீனம் காரணமாக தாய்லாந்தில் தங்கியிருந்தார்.

எனினும் அவர் இந்த குழுவின் இருந்த பிரதி தலைவருடன் தொடர்பில் இருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி தொடர்பும் அவருக்கு உள்ளது. இளங்கோ என்பவரே இந்த கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கே.பியின் உத்தரவுக்கு அமைவாகவே கனடாவில் இருந்து மூவர் வந்திருந்தனர். எனினும் அவர்களை வெளிநாட்டு உளவு அமைப்புக்கள் தீவிரமான பின்தொடர்ந்தன.

மறுநாள் அவர்கள் உக்ரேனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படை அதிகாரி ஒருவரை சந்தித்து கொள்வனவு செய்ய வேண்டிய ஆயுதங்கள் தொடர்பாக பேசினார்கள்.

இவர்களின் ஆயுத பட்டியலில் 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் என்பன இருந்தன.

மேலும் 60 மற்றும் 70 குதிரைவலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்களையும் கொள்வனவு செய்திருந்தனர்.

ஆயுத விநியோக மையத்திற்கு சென்று அவர்கள் ஆயுதங்களையும் பார்வையிட்டனர். உக்ரேனிய படை அதிகாரி கொள்வனவுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் விடுதலைப் புலிகள் இரண்டு தவணைகளில் பணத்தை செலுத்தியிருந்தனர்.

கொள்வனவு உறுதியானதும், அதனை கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

இந்த தகவலை படையினரின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

முதலில் விடுதலைப் புலிகள் வானூர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தவே முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது கைகூடாததனால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டனர். அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாகக் கூட இருக்கலாம்.

உக்ரேனில் உள்ள ஆயுத விநியோக மையத்திற்கு செல்வதற்கு ஏற்றது போல கப்பல் மறுசீரமைக்கப்பட்டு ஆயுதங்கள் ஏற்றப்பட்டு அது சிறிலங்கா நோக்கி புறப்பட்டது.

சிறிலங்கா நோக்கிய பயணத்தின் போது கப்பல் பல தடவைகள் கொடிகளையும், பெயரையும் மாற்றி கொண்டது.

கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும் அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான றோலர்களில் இறக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.

அதன் பின்னர், சிறிலங்கா கடற்படையினரும், வான் படையினரும் மேற்கொண்ட இணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது றோலர் கண்டறியப்பட்டது.

விடுதலைப் புலிகள் சிறிய படகுகளிலும் பொருட்களை இறக்கியிருந்தனர். எனினும் கடற்படையினரின் புலனாய்வுத்துறையின் பலவீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் பிரதான கப்பலை கண்டறிய முடியவில்லை.

ஆனால், அதனை கண்டறிவதே முக்கியமானது, அது தவறவிடப்பட்டது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

StumbleUpon.com Read more...

என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

>> Tuesday, December 23, 2008

 

 

ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

ஒரு விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டது அல்ல.

நிலப் பகுதிகளை இழப்பதும் மீளக் கைப்பற்றுவதும் பொதுவானதுதான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும்.

அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற மகிந்த ராஜபக்சவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று கோரிவரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம் அல்ல.

போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் சிறிலங்காவின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை சீர்குலைப்பதே எமது இலக்காகும்.

எமது தற்காப்பு தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி- சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கப்படுவதும் ஆகும். சிறிலங்காவின் பொருளாதாரம் சீர்குலைக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்காவின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

கிளிநொச்சி போர்க்களத்தில் சிறிலங்கா படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம். எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவதற்கு உரிய காலம் இடத்துக்காக காத்திருக்கிறோம்.

2008 ஆம் ஆண்டில் 2,250 போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

ஆயுதங்களை பெற்றுக்கொள்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார் பா. நடேசன்.
 
 

StumbleUpon.com Read more...

இஸ்ரோவின் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பயணம் வெற்றி

 
 
lankasri.comஇஸ்ரோவின் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் டபிள்யூ2-எம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.வர்த்தக ரீதியில் பயன்படுத்தத்தக்க இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனமும் ஐரோப்பாவின் ஈட்ஸ் ஆஸ்ட்ரியம் நிறுவனமும் கூட்டாகத் தயாரித்திருந்தன.

இச் செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் உள்ள கெளரூ ஏவுதளத்தில் இருந்து ஐரோப்பிய ஏரியான்-5 ஏவுகலன் மூலம் காலை 4.05 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் ஏவப்பட்ட 32-நிமிடங்களில் டபிள்யூ2-எம் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவி இணை இயக்க வட்டப் பாதையை அடைந்தது.இதில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதாக ஹாஸனில் உள்ள இஸ்ரோவின் தலைமைக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செயற்கைக்கோளின் சாதனங்களும் சிறப்பாக இயங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செயற்கைக்கோளை ஏவும் திட்டத்திற்கான உடன்பாடு 2006-பிப்ரவரி 20-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இந்தியா வந்திருந்தபோது கையெழுத்தானது.இது வர்த்தக ரீதியில் பயன்படக்கூடிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எடை மொத்தம் 3463-கிலோ.

இஸ்ரோ தயாரித்துள்ள செயற்கைக்கோள்களில் அதிகமான எடை கொண்டது இது.சுமார் 15-ஆண்டுகள் தடையின்றி செயல்படும் திறன் உடையது.இதில் உள்ள சூரிய மின்விசைப் பகுதி அதிகபட்சமாக 7-ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1229968871&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அதிகாரி மரண சர்ச்சை சந்தேகம் தீர்ந்தது : அந்துலே

 

மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் அதிகாரி கார்கரே கொல்லப்பட்டார்.  இந்த மரணத்தில் சதித்திட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் அந்துலே குற்றஞ்சாட்டினார்.

இது சம்பந்தமாக விசாரணை நடந்தது.  விசாரணை முடிந்த பின் ,அதிகாரி கார்கரே மரணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து தனது முடிவை மாற்றீக்கொண்டிருக்கிறார் அந்துலே.  அது சமபந்தமாக அவர்,

''சதித்திட்டம் இருப்பதாக நான் சொல்லவில்லை.  விசாரனை செய்ய வேண்டும் என்றுதான் சொன்னேன்.  இப்போது விசாரனையும் முடிந்து விட்டது.

விசாரணை அறிக்கையை மத்திய அமைச்சர் சமர்ப்பித்திருக்கிறார்.  இனி அதிகாரி மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை.  இந்த பிரச்சனை இத்தோடு முடிந்து விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=1295

StumbleUpon.com Read more...

நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன.

>> Sunday, December 21, 2008

நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.

 


நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.

 


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.

 


மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

 


விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்

 


பயிற்சி - தந்திரம் - துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.

 


சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.

 


நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.

 


கேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு

 


இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

 


மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

 


விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

 


விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.

 


இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.

 


எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.

 


எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

 


மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.

 


சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

 


மலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.

 


மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

 


எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.

 


இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

 


உழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.

 


நாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

 


சான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.

 


எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.

 


அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்

 


மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

 


ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

 


கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

 


எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

 


நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.

 


எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

 


ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.

 


தமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.

 


ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.

 


எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.

 


குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.

 


தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

 


எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.

 


தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.

 


விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.

 


இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்
 
 

StumbleUpon.com Read more...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே!

Merry Christmas to Muslims!


وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آَيَةً لِلْعَالَمِينَ

இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)

And (remember) her who guarded her chastity: We breathed into her of Our spirit, and We made her and her son a sign for all peoples. (Surah Al Anbiyaa 91)


ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.


எனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது, "கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்" என்பதாகும். இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1). கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், "பைபிள் இதை போதிக்கிறது" என்பதால் தான். தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற "அதிர்ச்சி தரும்" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான். உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் "கடினமான பகுதிகளை" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் "நம்புவதற்கு கடினமான" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் (The fact that they always have been contained in God's Word makes it very unlikely that it was changed. Surely evil people would take out the difficult parts and definitely not add 'hard-to-believe' things).

கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக "அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும், அதற்கு பதிலாக, "ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை" அவர்கள் கவனிப்பதில்லை. இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கையுள்ளவர்கள்) "இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், "ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்" என்பதல்ல (Therefore, it is more important to focus on explaining why God became a man in Jesus rather than how he managed to do so).கிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்

First reason for the Christmas season: The seriousness of sin
நாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன், ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம். பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.

பாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய "ஷிர்க் - SHIRK" என்ற பாவம் "நியாயத்தீர்ப்பு நாளில்" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, "பெரிய பாவங்கள்(Major Shirks)" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து, அதாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.

இதே போல, "சிறிய‌ பாவ‌ங்க‌ள்(Mijor Shirks)" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து, ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து, ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும். இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள்(Major and Minor Shirk) மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.

இறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம். இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம். குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் "இறைவனைப் பற்றி" விவரிக்கும் போது, "அவர் பார்க்கிறார், அறிகிறார்" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார், ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா? ஆகாது, இப்போது "பாவத்தை" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.

நீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் "அமீர்" என்று தெரியவருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா? அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு "தந்தை மகன்" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா? அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா? இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள். இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான். இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள். அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள், ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.


கிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு

Second reason for the Christmas season: The greatness of God's love for us
இப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர். நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார். அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம்? அதன் விளைவு என்ன? என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் "ஏன் செய்தாய்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை. இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள். இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும். இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா?

தேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும். சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும்(The cross is the place on which God has fulfilled both characteristics.). நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார். இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார். பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).

தேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார்! எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு. இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான். இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவை பின்பற்றுகிறவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது. எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான். தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் "உலகத்தின் இரட்சகர்" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,

மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக …

"Glory to God in the heavenly heights,

Peace to all men and women on earth who please him." (லூக்கா 2:14)அன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை(Freedom of Choice) என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம். இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது "பொதுவாக இறைவன்" பற்றிய போதனைக்கு எதிரானதாகும். உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும். இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம். இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான்! என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்து ஆனந்தம் அடைவீராக.

ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்

Source: http://www.answering-islam.org/tamil/authors/oskar/merry_christmas.html

StumbleUpon.com Read more...

பதவியிலிருந்து விலக மாட்டேன்;ஜிம்பாப்வே அதிபர் முகாபே பிடிவாதம்

 
 
lankasri.comஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இந்த நிலையில் அந்நாட்டில் பரவியுள்ள காலரா நோயால் கடந்த 3-மாதங்களில் மட்டும் 1,200-க்கும் மேலானோர் பலியாகி விட்டனர்.

20-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதனால் சர்வதேச நாடுகள் முகாபே பதவி விலகவேண்டும் என்று தீவிரமாக வற்புறுத்தி வருகின்றன.

எனினும், "ஜிம்பாப்வே எனக்குத்தான் சொந்தம்.எனவே,அதிபர் பதவியில் இருந்து விலகுவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.வேண்டுமென்றால் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் பதவி தரத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் முகாபேயின் இந்தக் கோரிக்கையை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் டிவாங்கிரை மறுத்துவிட்டார். "ஆளும் கட்சியினரால் கடத்தப்பட்ட எங்களது 40-தலைவர்களையும் விடுவிக்காதவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

StumbleUpon.com Read more...

சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு

 

   

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் மூலம் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.     

விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் அவர்கள் கைப்பற்றியிருந்த அரண் பகுதியை கைவிட்டு ஓடினர். 

இதன் பின்னர் அந்த இரண்டு கிலோ மீற்றர் நீளமான முன்னரண் பகுதி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.

இந்த பகுதியிலிருந்து படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடைப்பட்ட களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.

இந்த அதிரடித் தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்
 

StumbleUpon.com Read more...

கிளாலி மோதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிப்பு

 

  

யாழ். வடபோர்முனையான கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.

கிளாலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர்.

இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார். 

ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

களத்தில் காயமடைந்த நிலையில் படையினரால் நான் கைவிடப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட படையினரின் மத்தியில் கிடந்த என்னை விடுதலைப் புலிகள் மீட்டு சிகிச்சைகளை வழங்கி என்னை காப்பாற்றினர்.

படையில் சம்பளம் அதிகம் என்பதாலும் இரண்டு ஆண்டுகளுக்கு களத்தில் விடப்பட மாட்டடார்கள் என வாக்குறுதி தந்ததாலும் நான் படையில் சேர்ந்தேன். ஆனால், அதற்கு மாறாக குறுகிய நாட்களில் யாழ்ப்பாணத்துக்கு என்னை கொண்டு வந்து ஆறு நாட்களில் இக்களத்தின் காவலரணில் நிறுத்தினர்.

என்னைப் போன்று இவ்வாறு பெருமளவு சிங்கள இளைஞர்கள் ஏமாந்து படையில் சேர்கின்றனர்.

என்னுடன் 35 பேர் ஒரு அணியாக தாக்குதலில் களமிறக்கப்பட்டனர். படையில் சேர்ந்த பின்னர்தான் எனக்கு இந்த நிலைமை தெரியும்.

கடந்த 9 ஆம் நாளில் தான் முகமாலை களத்துக்கு நாம் கொண்டு வரப்பட்டு 13 ஆம் நாள் அதிகாலையில் காவலரண் ஒன்றில் நான் உட்பட்ட நால்வரும் நிறுத்தப்பட்டோம்.

35 பேர் அணியில் என்னுடன் நான்கு பேர் நின்றனர். தாக்குதல் வேளையில் என்னுடன் நின்ற ஏனைய மூவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

பாடசாலைக் கல்வியில் 7 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற எனக்கு தற்போது வயது 22 என்றார் அவர்.
 

StumbleUpon.com Read more...

ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்(முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும் )

>> Friday, December 19, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்(முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும் )
ஏகத்துவத்திற்கு பதில்சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும்

 
முன்னுரை: பொதுவாக இஸ்லாமியர்கள் "கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து அல்ல, பவுல் தான், இவர் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டார், சிலுவை, மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்ற கோட்பாடுகள் எல்லாம் பவுல் கண்டுபிடித்தது தான்" என்று மிகப் பெரிய பொய்யை ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

 
ஏகத்துவம் தளத்தில் வெளியான கட்டுரைகளுக்கு கீழ் கண்ட பதில்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இயேசுவின் செய்தியும், பவுலின் செய்தியும் ஒன்று தான், வெவ்வேறானது அல்ல என்பதை புதிய ஏற்பாட்டின் துணையோடு எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது சிலுவை மரணம், மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவரங்களை பவுல் தான் புகுத்தினார் என்று முஸ்லீம்கள் சொல்வது பொய், இயேசுவே பல சந்தர்பங்களில் இவைகளைப் பற்றி பேசியுள்ளார். கீழ் கண்ட நான்கு கட்டுரைகளில் இயேசுவின் போதனைக்கும், பவுலின் போதனைக்கும் இடையே உள்ள 133 ஒற்றுமைகளை நான்கு பகுதிகளாக காட்டியுள்ளோம்.
 
 
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்

பாகம் - 1 | பாகம் - 2 | பாகம் - 3 | பாகம் - 4
 
 
பவுலின் மனந்திரும்புதல் பற்றிய பதிலை கீழ் கண்ட இரண்டு தலைப்புகளாக பிரித்து நாம் காண்போம்.

 
1. சவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடுகள் இல்லை

 
2. முஹம்மதுவும் "குர்‍ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்


 
1. சவுலின் மனந்திரும்புதல் நிகழ்ச்சியில் முரண்பாடுகள் இல்லை
 
 
தமஸ்குவிற்கு போகும் வழியில் இயேசு சவுலை சந்தித்த நிகழ்ச்சியைப்