சமீபத்திய பதிவுகள்

3வது டெஸ்ட்: இந்தியா 249; இலங்கை 14/1

>> Friday, August 8, 2008

3வது டெஸ்ட்: இந்தியா 249; இலங்கை 14/1
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. டா‌ஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷேவாக் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். திராவிட் 10, தெண்டுல்கர் 6, கம்பீர் 72, கங்குலி 35, லக்ஷ்மன் 25, கும்ப்ளே 1, படேல் 13, ஹர்பஜன் சிங் 3 ரன்கள் எடுத்தனர்.

இறுதியாக, இஷாந்த் சர்மாவுடன் ஜாகீர்கான் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் கடைசி நேரத்தில் அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

ஜாகீர்கான் 32 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மா 17 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

80 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் மென்டிஸ் 5 விக்கெட்டுகளையும், பிரசாத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முரளிதரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைதொடர்ந்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. வார்னபுரா 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வான்டோர்ட் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவருடன் வாஸ் ஜோடி சேர்ந்துள்ளார்.

இன்றைய ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 14 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

மீண்டும் இந்தியா திரும்பினார் தஸ்லிமா

மீண்டும் இந்தியா திரும்பினார் தஸ்லிமா
பிரபல சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் ஸ்லிமா நஸ்ரின் இன்று மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில், உடனடியாக ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

தனது சர்ச்சைக்குரிய 'லஜ்ஜா' புத்தகம் மூலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு உள்ளான தஸ்லிமா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

மேற்குவங்கத்தில் தங்கியிருந்த தஸ்லிமாவுக்கு அங்கும் மிரட்டல் வந்ததையடுத்து, அவர் டெல்லியில் மத்திய பாதுகாப்பு ஏஜென்சியினரால் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டார்.

ஆனால் தாம் சிறையிலடைக்கப்பட்டிருப்பது போன்று உணர்வதால், தம்மை வெளியே நடமாட அனுமதிக்க வேண்டும் என தஸ்லிமா மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு, ரகசியமாக தங்கியிருக்க விருப்பமில்லையென்றால் நாட்டைவிட்டு வெளியேறலாம் எனக் கூறியது.

இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஸ்வீடனில் தஞ்சம் புகுந்தார் தஸ்லிமா.

இந்நிலையில், அவர் இன்று மீண்டும் இந்தியா திரும்பினார்.டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய தஸ்லிமாவை, அங்கு தயாராக இருந்த மத்திய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள், உடனடியாக அங்கிருந்து ரகசிய அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

தஸ்லிமாவின் விசா இம்மாதம் 12 ம் தேதியுடன் முடிவடைகிற நிலையில், அவர் தனக்கு நிரந்தர இந்திய குடியுரிமை அளிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஆனால் அது குறித்து அரசு இன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

Muhammad vs. "Locks of Love": Are People who Donate Hair Cursed?

 

My wife recently had most of her (rather long) hair cut off. The hair was donated to "Locks of Love," an organization that makes wigs for children who have lost their hair due to medical problems or treatments (e.g. chemotherapy). These children are often traumatized to learn that they may be dying. Locks of Love helps them in a small way by providing wigs so that people won't stare at the children.

According to Muhammad, my wife is now under Allah's curse, and so is the little girl who gets my wife's hair (and all who give or receive hair).
 
 
 
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5935
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்

ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?' என்று கேட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5936
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் ('அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்' என்று) சபித்தார்கள்.

 

 

StumbleUpon.com Read more...

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடி பற்றிய சிறப்பு செய்திகள் விக்கிப்பீடியாவில் இருந்து

இந்திய தேசியக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
இந்திய தேசியக் கொடி
உயர நீள பாகுபாடு: 2:3

இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.

நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகக் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.

இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.

பொருளடக்கம்

 கொடி உருவாக்கம்

தேசியக்கொடியின் வண்ணங்கள், வெவ்வேறு வண்ணக் குழுக்களின் கீழ், பின்வருமாறு வெளிப்படுத்தப்படும்.

வண்ணம் HTML CMYK துணி வண்ணம் பான்டோன் வண்ணம்
காவி #FF9933 0-50-90-0 சிவப்பு 1495c
வெள்ளை #FFFFFF 0-0-0-0 குளிர் சாம்பல் 1c
பச்சை #138808 100-0-70-30 இந்திய பச்சை 362c
கடற்படை நீலம் #000080 100-98-26-48 கடற்படை நீலம் 2755c

[தொகு] கொடியின் அம்ச பொருள் விளக்கம்

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1921ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.

விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்:

சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.

பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.

[தொகு] வரலாறு

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது. சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்ட பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்தன.

கல்கத்தா கொடி

முதல் மூவர்ணக் கொடி, 7 ஆகஸ்ட் 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப் பட்டது. அக்கொடி பிற்காலத்தில், கல்கத்தாக் கொடி என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தது. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடு பாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் உருக் கொண்டன.

பைக்கஜி காமா அம்மையார் ஏற்றிய கொடி, 1907

பின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா என்ற அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த கொடியில், பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை, பக்கஜி காமா அம்மையார், வீர சவார்கர், சியாம்ஜி கிருட்டின வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்திற்கு பிறகு, பெர்லின் குழுமக் கொடி என பெயர் கொண்டது. முதல் உலகப் போரின் போது, மெசப்படோமியாவிலும், அமேரிக்காவின் காதர் கட்சியிலும், இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது.

1917ல் சுயாட்சி போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட கொடி.

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதை குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும், நட்சத்திர வடிவமும், மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தை கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறவில்லை.

1921ஆம் ஆண்டு தற்காலிகமாக ஏற்கப்பட்ட கொடி.

ஒரு வருடம் கழித்து, 1916ல், மச்சிலிப்பட்டினத்தின் (இன்றைய ஆந்திர பிரதேசம்) பிங்கலி வெங்கய்யா அவர்கள், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளை கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசிய கொடி நெறி அமைப்பை தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தை கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களை கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார்.

அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களை சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேய பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்கு சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப் பட்டது.

ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.

1931ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தை கொண்ட காவிக் கொடி.

இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.

1931ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட இந்தியக் கொடி.

பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.

இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி.

அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.

1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, மற்றும் பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.

[தொகு] தயாரிப்பு முறை

கொடியின் அளவுகள்
அளவு மி.மீ
1 6300 × 4200
2 3600 × 2400
3 2700 × 1800
4 1800 × 1200
5 1350 × 900
6 900 × 600
7 450 × 300
8 225 × 150
9 150 × 100
India's largest flag atop the Mantralaya building in Mumbai.
India's largest flag atop the Mantralaya building in Mumbai.
Closeup of the flag.
Closeup of the flag.

இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.

கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்பட்கிறது.

காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.

StumbleUpon.com Read more...

சீனப் பெருச்சுவரில் கண்ணைக்க்வரும் அழ(கிய)கிகள் அணிவகுப்பு

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP