சமீபத்திய பதிவுகள்

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா தலைத்துணிகளின் மருத்துவப் பிரச்சினை

>> Wednesday, August 28, 2013

 

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று சில இஸ்லாமிய ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

குறைந்தது ஹிஜாப் (தலைத்துணி) அணியுங்கள் என்று அடுத்த நிலை ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

கூடவே பெற்றோர்களும் தன் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்கள் இந்த பர்தாவையோ ஹிஜாபையோ அணிவதில்லை. அப்படி அணிவதுதான் அராபிய வாழ்க்கைப் பழக்கம். காரணம் பாலைவனச் சூரியன் மற்றும் கொடு மணல் காற்று என்று பலரும் அறிவார்கள்.

இது இப்படி இருக்க, பர்தா ஹிஜாப் அணிவதால் ஏற்படும் மருத்துவத் தொல்லை என்ன என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கனடா போன்ற குளிர் நாடுகளில், சூரிய ஒளி மிகவும் குறைவு. சூரிய ஒளி குறைவு என்பதால், விட்டமின் டி உடலில் குறையும். இதனால் மன அழுத்தம், மன உளைச்சல், அவசியமற்ற துக்கம், கண்ணீர் என்பவையெல்லாம் பீடிக்கும்.

கனடாவில் சுத்தமாகவே சூரிய ஒளி இல்லை என்று இல்லை, தமிழ்நாட்டை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 25 விழுக்காடு சூரிய ஒளி உண்டு.

ஆனால் அந்த சூரிய ஒளி உடம்பில் படவிடாமல், முஸ்லிம் பெண்கள் ஆடை அணிந்தால் என்னாகும்? விட்டமின் குறைவினால் பாதிக்கப்படுவார்கள்.

மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு, எரிச்சல், துக்கம், கண்ணீர் காரணமாக குடும்பத்தில் சண்டை வரும். பெண்கள் சிடுசிடுவென்றும், எதிர்ப்பு காட்டும் மனோ நிலையிலும், அன்பை இழந்தவர்களாகவும் காணப்படுவார்கள்.

இதனால் குடும்பப் பிரச்சினை விவாகரத்து வரை செல்லவும் வாய்ப்புகள் உண்டு.

எந்த உடை எங்கே சரியோ, அந்த உடையைத் தேர்வு செய்து அணிவதே அறிவுடைமை.

உலகில் பெரும்பாலானோர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே ஆடை அணிவார்கள். அப்படித்தான் முஸ்லிம் ஆண்கள் ஆடை அணிகிறார்கள்.

ஆனால் பாவம் முஸ்லிம் பெண்களுக்குத்தான் அந்த உரிமை கொடுக்கப் படுவதில்லை.

அவர்கள் இந்த மருத்துவக் குறைபாட்டுக் ஆளாகிறார்கள். அதில் அவர்கள் மட்டுமே கஷ்டமும் நஷ்டமும் படவில்லை, குழந்தைகள் கணவன் குடும்பம் என்று எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் நஷ்டப்படுகிறார்கள்


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

நபிவழியை உண்மை படுத்தும் உலக நடப்புகள்

>> Tuesday, August 27, 2013

http://iraiyillaislam.blogspot.in/2012/12/blog-post_27.html


முத்துக்குளிக்க வாரீகளா…! முத்ஆ செய்ய வாரீகளா..!


சிறுமிக்கு நிகழ்ந்த அநீதி: கேரளா முழுவதும் அதிர்ச்சி


திருவனந்தபுரம்:கேரளாவைச் சேர்ந்த, 17 வயது முஸ்லிம் சிறுமியை, அரபு ஷேக் ஒருவன் மணந்து, 17 நாட்களில் புறக்கணித்த விவகாரம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் தடுக்க, தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.





17 நாள் குடித்தனம்:



கோழிக்கோடு பகுதியில் செயல்படும், முஸ்லிம் அனாதை இல்லத்தில், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறுமி, 4 வயது முதல் தங்கியிருந்தார். தற்போது, 17 வயதாகும் அந்தச் சிறுமியை, கடந்த ஜூன் மாதம், 13ம் தேதி, அரபு ஷேக் ஒருவர், முஸ்லிம் முறைப்படி மணந்து, சவுதி அரேபியா அழைத்துச் சென்று, 17 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.மாநில குழந்தைகள் கமிஷனை நேற்று முன்தினம் அணுகிய அந்தச் சிறுமி, தன்னை வலுக்கட்டாயமாக, ஷேக்குடன் திருமணம் செய்து வைத்த, அனாதை இல்ல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலீசில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.நீண்டகாலமாகவே இத்தகைய கொடுமையான சம்பவங்கள், அந்தப் பகுதியில் நடைபெற்று வருவது, இந்தச் சம்பவம் வெளியானதை அடுத்து பலருக்கும் தெரிய வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் இது போன்றதொரு சம்பவம், பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. படித்தவர்கள் நிறைந்த கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில், குறிப்பாக, மலபார் பகுதியில், இதுபோன்ற கொடுமைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு, அம்மாநில சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

படித்தவர் நிறைந்த மாநிலம் :



மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.ஸ்ரீமதி இது குறித்து கூறுகையில், ""படித்தவர்கள் நிறைந்த கேரளாவில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை, ஏற்றுக் கொள்ளவே முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரும், தண்டிக்கப்பட வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர், பிந்து கிருஷ்ணா கூறும் போது, ""தொண்டு நிறுவனங்களும், அனாதை இல்லங்களும் கருணையோடு நடந்து கொள்ளும் என, பொதுவான கருத்து நிலவும் நேரத்தில், பணத்திற்காக, அப்பாவி சிறுமி, வெளிநாட்டைச் சேர்ந்தவனுக்கு திருமணம் செய்யப்பட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ளதை ஜீரணிக்கவே முடியாது,'' என்றார்.இதுபோல், பல சமூக அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், கோழிக்கோடு அனாதை இல்ல சிறுமி திருமண விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


--
http://thamilislam.blogspot.in

StumbleUpon.com Read more...

சிறுமியர் பலாத்காரம் -முஸ்லீம் மதகுரு கைது

>> Saturday, June 29, 2013

StumbleUpon.com Read more...

நபிவழியை உண்மை படுத்தும் உலக நடப்புகள்

இந்து மதத்தில் இருந்த பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் திடீர் என்று முஸ்லீமாக மாறிவிட்டார்.அவர் இஸ்லாமின் தூய்மையை அறிந்துவிட்டார் என்று பீலாவிடும் ஜிஹாதிகள் உண்மையை மறைப்பதில் கெட்டிக்காரர்கள்.முகமதுவின் வழியில் முஸ்லீம் சாஹாக்கள் செயல்பட்டு கமலாவை கரைட்பண்ணிய விவரம் இப்பொழுது கசிய ஆரம்பித்து உள்ளது...

StumbleUpon.com Read more...

மதரசாக்களில் சிறார் துஷ்பிரயோகம்

>> Friday, April 19, 2013


குர்- ஆன் புத்தகம்
குர்- ஆன் புத்தகம்
பிரிட்டனில் வாழும் முஸ்லிம் மாணவர்கள் குர்-ஆன் படிக்கச் செல்லும் மதராசா பாடசாலைகளில் அவர்கள் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான 400 சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளன.
பிரிட்டனின் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேர் தினந்தோறும் குர்- ஆன் பயில மதரசாக்களுக்கு செல்கின்றனர்.
இங்கே குழந்தைகளின் முதுகில் குத்தப்படுவதாகவும், அவர்களின் தலைமுடி ஆசிரியர்களால் பிடித்து இழுக்கப்பட்டதாகவும் சில நேரங்களில் மாணவர்கள் உதைபட்டதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் இந்த விடயம் குறித்து வெளியே வந்துள்ளது எள்முனையளவுதான் என்று வழக்குத் தெடுனர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பல நேரங்களில் இது குறித்து நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அழுத்தங்களை சந்திப்பதாக முன்னணி முஸ்லீம் பிரமுகர்கள் கூறுகின்றனர்.
அவசர விடயமாக இதனைக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மசூதிகள் மற்றும் இமாம்களுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார்

பிரிட்டனில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி அமைப்புக்களிடம் இது குறித்த விபரங்களை பிபிசி கேட்டது. இதில் 191 அமைப்புக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 421 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தன. ஆனால் இதில் பத்து வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்துக்கு சென்றுள்ளன. இதில் இரண்டு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது என்று பிபிசியின் விசாரணையில் தெரியவருகிறது.
உடல்ரீதியான துன்புறுத்தல்கள் தவிர பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக 30 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக நான்கு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தும் ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் 12 வயதான சிறுவனை வன்புணர்ச்சி செய்தமைக்காகவும், 15 வயதான மற்றொறு சிறுவனை பாலியல் ரீதியாக தாக்கியதற்காகவும் ஸ்டோக் ஆன் டிரன்ட் என்ற இடத்தில் இமாமாக பணிபுரிந்த முகமது ஹனிவ் கான் என்ற நபருக்கு 16 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

source:BBC 
--

StumbleUpon.com Read more...

தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்

உரிமைக்குப் போராட‌ பொங்கியெழுந்த த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்க‌ள்.


உல‌க‌நாடுக‌ளிலுள்ள‌ முஸ்லீம்க‌ளின் பிரச்ச‌னைக‌ளைப் ப‌ற்றி எல்லாம் நாம் அடிக்க‌டி முஸ்லீம் வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் வ‌லைப்ப‌திவுக‌ளிலும்  இணைய‌த்த‌ள‌ங்களிலும் வாசிக்க‌ முடிகிற‌து ஆனால் உள்ளூரில் அதுவும் த‌மிழ்நாட்டில் முஸ்லீம் பெண்க‌ள் த‌ம‌து உரிமைக்காக‌ப் போராடியதைதுணிச்ச‌ல் மிக்க‌வொரு த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்ணின் தலைமையில் போராடினார்கள் என்பதையும் எந்த வலைப்பதிவிலும் காணவில்லை.. எத்த‌னை எதிர்ப்புக்க‌ளின் ம‌த்தியில் த‌மிழ்நாட்டுப் பெண்களின், அதிலும் குறிப்பாக‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்களின் அவ‌ல‌த்தைஆண்களின் க‌ட்டுப்பாட்டிலுள்ள‌ இஸ்லாமிய‌ ஜாமாத்துக்க‌ளில் முஸ்லீம் பெண்களுக்கு இழைக்க‌ப்ப‌டும் அநீதிக‌ளை எதிர்த்துப் போராடியது  ம‌ட்டும‌ல்ல‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்க‌ளுக்காக‌ ஒரு ஜ‌மாத்தையே தொட‌ங்குமளவுக்கு ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடியிருப்பது வியப்பை அளிக்கிறது. அந்தப் பெண் செல்வி. தாவுத் சரீபா கானம்,அவரைப்பற்றிக்  எத்தனை பேருக்குத் தெரியுமோ எனக்குத்  தெரியாது. இது வரை நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை.


மேலைநாடுக‌ளிலேயே பெண்களின் உரிமைக‌ளுக்காக‌ பாடுப‌டும் பெண்க‌ள் எத்த‌னையோ எதிர்ப்புக்க‌ளைச் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். அப்ப‌டியிருக்க‌ த‌மிழ்நாட்டில் அதுவும் முஸ்லீம் பெண்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌ப் போராடிய தமிழ்நாட்டு முஸ்லீம் பெண் செல்வி. ச‌ரீபா தாவூத் கான‌ம் அவ‌ர்க‌ளைப் பற்றியும், கீழேயுள்ள காணொளியையும் பார்த்த‌ பின்புஅவ‌ர் மீது ம‌திப்பு மேலும் அதிக‌ரிக்கின்ற‌து. பெண்க‌ளின் விடுத‌லையைபெண்ணுரிமையை ம‌திக்கும் எவ‌ருக்குமே அப்ப‌டியான‌ உண‌ர்வு இந்த‌க் காணொளியைப் பார்த்த‌தும் நிச்ச‌ய‌மாக‌ ஏற்படும். அத‌னால் அத‌னை இங்கு பதிவு செய்கிறேன்.

 

"அடிமைத்த‌ளை முறித்திட‌வே புற‌ப்ப‌டுங்க‌ள் தோழி,
 
ம‌த‌வெறியால் ஒடுக்க‌ப்ப‌டும் பெண்ணின‌த்தைக் காப்போம்,
 
உட‌லால் ம‌ன‌தால் இழைக்க‌ப்ப‌டும் வ‌ன்முறையை ஒழிப்போம்
 
உல‌கெங்கும் ஒன்றுப‌ட்டு ஒற்றுமையை வ‌ள‌ர்ப்போம்
 
ஒற்றுமையின் ஆற்ற‌லினால் ச‌ம‌த்துவ‌த்தைக் காண்போம்"


இந்தக் காணொளி தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகளைப் ப‌ற்றி பேசுகிறது

த‌மிழ்நாட்டுக் கிராம‌ங்க‌ளிலிருந்து உருவாகிய‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌ப் போராடும் ஒரு இய‌க்க‌த்தைப் ப‌ற்றிய‌து இந்த‌க் காணொளி. ப‌ல‌ த‌டைக‌ளையும் தாண்டி பெண்களுக்கெதிரான‌ வ‌ன்முறைவ‌றுமைபெண்ணுரிமை போன்ற‌ விட‌ய‌ங்க‌ள் எவ்வாறு த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்களைப் பாதிக்கின்ற‌ன‌ என்ப‌தைக் காட்டுகின்ற‌து. த‌மிழ்நாட்டு ந‌க‌ர‌ங்க‌ளிலும் கிராம‌ங்க‌ளிலும்த‌மிழ்நாட்டில் அர‌பு ம‌ய‌மாக்க‌ல் அல்ல‌து த‌மிழ்முஸ்லீம்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ இஸ்லாம் அர‌புக்க‌லாச்சார‌ம‌ய‌ப்ப‌டுத்த‌ப் படுவ‌தானால்இன்று இஸ்லாமிய‌ ச‌மூக‌ங்க‌ளில்  க‌றுப்பு நிற‌ப் ப‌ர்தாக்க‌ளின் பின்னால் ஒழிந்திருக்கும் அந்த‌ப்பெண்க‌ளுக்கும் க‌வ‌லைக‌ள்உரிமை ச‌ம்ப‌ந்த‌மான‌ போராட்ட‌ங்க‌ள்ஆண்கள் த‌ம‌க்கெதிராக‌ இழைக்கும் அநியாய‌ங்க‌ள் எல்லாவ‌ற்றையும் ப‌ற்றி எல்லாம் பிர‌ச்ச‌னைக‌ள் உண்டென்ப‌தையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்ப‌தில்லை. ஏனென்றால் இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலுள்ள் முஸ்லீம் எழுத்தாள‌ர்க‌ள் அவ‌ற்றைப் ப‌ற்றி எல்லாம் மூச்சு விடுவ‌தில்லை.  ஆனால் இந்த‌க் காணொளியில் அவ‌ர்க‌ளின் அவ‌ல‌ங்க‌ள் ஒர‌ளவாவ‌து வெளிப்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ள் இன்று ஆண்கள் ம‌ட்டும் ப‌ங்குப‌ற்றி பெண்க‌ளைப் பாதிக்கும் விடய‌ங்க‌ளுக்குபெண்களின் வாக்குமூல‌த்தைக் கேட்காம‌லே தீர்ப்ப‌ளிக்க‌ப‌டும் அநியாய‌த்தைத் த‌டுப்ப‌த‌ற்காக‌ ஜ‌மாத்துக்க‌ளின் பெண்க‌ளுக்கும் அங்க‌த்துவ‌ம் கேட்டு அத‌ற்கு வாய்ப்ப‌ளிக்க‌ப்ப‌டாமையாலும்முஸ்லீம் பெண்க‌ளுக்கு விவாக‌ம்விவாக‌ர‌த்து,சீதன‌ம்சொத்துரிமை போன்ற‌ விட‌யங்க‌ளில் இழைக்க‌ப்ப‌டும் அநீதிக‌ளைத் த‌டுக்க‌வும்த‌ம‌க்கென‌ பெண்க‌ள் ஜமாத்தைத் தொட‌ங்கியது ம‌ட்டும‌ல்ல‌பள்ளிவாச‌ல்க‌ளில் தொழுவ‌த‌ற்கு பெண்க‌ள் அனும‌திக்க‌ப்ப‌டாத‌தால் பெண்களுக்காக‌ ஒரு ப‌ள்ளிவாச‌லையும் க‌ட்டியிருக்கிறார்கள்.

 காணொளியின் சில‌ப‌குதிக‌ள்:
 
பெண்க‌ளின் உரிமைக்கும் ம‌த‌த்துக்கும் உள்ள‌ தொட‌ர்பு என்ன‌ம‌த‌த்தின் பெயரால் ஏன் பெண்கள் இர‌க்க‌மின்றி அட‌க்கிஒடுக்கப்படுவது ம‌ட்டும‌ல்ல‌ இழிவுப‌டுத்த‌வும் ப‌டுகிறார்க‌ள். இதற்குகே காரணம் ம‌த‌ம் பெண்களைக் கீழ்மைப்ப‌டுத்துவதாலாஅல்ல‌து ச‌மூக‌ம் ஆண்-பெண் ச‌ம‌வுரிமை என்ற‌ விட‌ய‌த்தில் நாட்ட‌ம் காட்டுவ‌தில்லை என்ப‌தாலா?


மெள‌லான‌ ஆர்சாத் ம‌தானி (Darul Uloom, Deoband U.P):

க‌ட‌வுள் ஆண்க‌ளுக்கு சில திற‌ன்க‌ளையும் பல‌த்தையும் கொடுத்திருக்கிறார்பெண்க‌ள் த‌ம‌து உட‌ல‌மைப்பின் கார‌ண‌மாக‌ ஆணைப்போன்ற‌ ப‌ல‌த்தையும்திற‌னையும் கொண்டிருப்ப‌தில்லை அத‌னால் பெண் ஆணுக்குச் ச‌மமாக‌ இருக்க‌ முடியாது.


Dr. அஸ்க‌ர் அலி (பொறியிய‌லாள‌ர்இஸ்லாமிய‌ அறிஞ‌ர்):

பாலின‌ ச‌ம‌த்துவ‌ம் குரானிலும் உண்டு ஆனால் ச‌மூக‌த்தில் பெண்கள் அந்த‌ ச‌ம‌த்துவ‌த்தை இழ‌ந்துவிட்டார்கள். அத‌னால் குரான் பெண்க‌ளுக்கெதிரான‌து என்று க‌ருத்த‌ல்ல‌ ஆனால் ஆணாதிக்க‌ம் நிறைந்த‌ ச‌மூக‌த்தால் அதிலும் நில‌ப்பிர‌புத்துவ‌ ச‌முதாய‌த்தால் குரானுக்கு விள‌க்க‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌து தான் கார‌ண‌மாகும்.


பேராசிரிய‌ர் ந‌ஸ்னீன் ப‌ர்க்க‌த் (ம‌துரைத‌மிழ்நாடு)

நீ ஒரு பெண்பெண் என்றால் இப்ப‌டித்தான் இருக்க‌ வேண்டும். சொல்வ‌தைக் கேட்டுக்கொண்டு அத‌ன்ப‌டி நீ ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும்.


தம‌து விருப்ப‌த்துக்கேற்ப‌‌ குரானுக்கு அர்த்த‌ம் க‌ற்பித்துக் கொண்ட‌ கார‌ண‌த்தால்ம‌த‌த்தால் ஒடுக்க‌ப்ப‌ட்டுஅநீதிக‌ள் இழைக்க‌ப்ப‌ட்ட‌தால் ஏற்பட்ட க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ங்க‌ளுட‌ன் இந்த‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ தமிழ்நாட்டின் கிராம‌ப்புற‌ங்க‌ளைச் சேர்ந்த‌ முஸ்லீம் பெண்க‌ள்செல்வி தாவூத் ச‌ரீபா கான‌ம் அவ‌ர்க‌ளின் த‌லைமையில் த‌ங்க‌ளின் நீண்ட‌ கால‌ மெள‌ன‌த்தைக் குலைத்துக் கொண்டு த‌ம‌து வீடுக‌ளில் ம‌றைந்திராம‌ல் வெளியே வ‌ந்திருக்கிறார்க‌ள். த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்க‌ள் தம‌து போராட்ட‌த்தைத் தொட‌ங்கிய‌து ம‌ட்டும‌ல்ல‌த‌ம‌து போராட்ட‌மும் சுய‌ம‌ரியாதை இய‌க்க‌ம் போன்றதே என்கிறார்க‌ள் அவ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளின் கோரிக்கைக‌ள் திட‌மான‌து,நேர்மையானதும்நியாய‌மான‌துமாகும்.


மூன்று முறை த‌லாக் என்ற‌ வார்த்தைக‌ளைச் சொல்வ‌தால் ம‌ட்டும் விவாக‌ர‌த்து செய்யும் முறையை நிறுத்த‌ வேண்டும்.

சீத‌ன‌ம் கொடுக்கும் வ‌ழ‌க்க‌த்தை இல்லாம‌ல் செய்ய‌ வேண்டும்.

ஜ‌மாத்துக்க‌ளில் பெண்க‌ளையும் ப‌ங்குப‌ற்ற‌ அனும‌திக்க‌ வேண்டும்

மாத் என்ப‌து முஸ்லீம் ச‌மூக‌த்தின் செய‌ல்பாடுக‌ளைக் க‌ட்டுப்ப‌டுத்தும் ஆண்களை ம‌ட்டும் உறுப்பின‌ர்க‌ளாக‌க் கொண்ட‌ அமைப்பு. த‌மிழ்நாட்டு முஸ்லீம் பெண்க‌ள் கேள்விக‌ள் கேட்க‌ ம‌ட்டும‌ல்ல‌ த‌ம‌து அடிப்ப‌டைம‌னித‌ உரிமைக‌ளை உறுதிப்ப‌டுத்த‌ தொட‌ங்கி விட்ட‌ன‌ர்.
 

செல்வி. ச‌ரீபா கான‌ம்:

ஜ‌மாத்தில் ஆண்க‌ள் பெண்க‌ள் ச‌ம்ப‌ந்த‌மான‌ விட‌யங்க‌ள்பிர‌ச்ச‌னைக‌ள் ப‌ற்றிப் பேசுவார்க‌ள் ஆனால் அந்த‌ப் பேச்சுவார்த்தைக‌ளில் பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்க‌ அனும‌திக்க‌ மாட்டார்க‌ள்.எனது க‌ண‌வ‌ன் என்னை விவாக‌ர‌த்துச் செய்தால்என் க‌ண‌வ‌னை ம‌ட்டும் ஜ‌மாத்துக்கு அழைப்பார்க‌ள். பெண்க‌ளைப் ப‌ள்ளிவாச‌லுக்குள் அனும‌திக்க‌ முடியாது என்கிறார்க‌ள். என்னை (ம‌னைவி) அழைப்ப‌த‌ற்குப் ப‌திலாக‌ என்னுடைய‌ த‌ந்தையை அல்ல‌து ச‌கோத‌ர‌னை அழைத்து என் சார்பில்என்னுடைய‌ முறைப்பாடுக‌ளைப் பேச‌ச் சொல்வார்க‌ள். ஆனால் அவ‌ர்க‌ளால் எப்ப‌டி என‌து உள்ள‌க்கிட‌க்கைக‌ளை,உண‌ர்வுக‌ளைப் ப‌ற்றிப் பேச‌முடியும். அவ‌ர்க‌ளால்  என்னுடைய‌ உண‌வுஉடை ச‌ம்ப‌ந்த‌மாக‌ வேண்டுமானால் பேச‌முடியும். ஆனால் என்னுடைய‌ வாக்குமூல‌ம் இல்லாம‌லே, ஜ‌மாத்தில் உள்ள‌வ‌ர்க‌ள்  என்னுடைய‌ வாழ்க்கைப்பிர‌ச்ச‌னைக்குத் தீர்ப்புக் கூறுவார்க‌ள்.


ஜ‌மாத் என்ப‌து பொதுவாக‌ ப‌ள்ளிவாச‌லில் வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளைக் கொண்ட‌ ஒரு குழு.  இது உண்மையில் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ அமைப்பு அல்ல‌. ஆனால் த‌மிழ்நாட்டில் த‌னித்துவ‌மான‌ ஒரு வ‌ழ‌க்க‌ம் உண்டு. அங்கு ச‌மூக‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ளைக் கொண்ட‌ ஜ‌மாத் குழு அந்த‌ ச‌மூக‌த்தின் விவாக‌ம்குடும்ப‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ பிர‌ச்ச‌னைக‌ள்விவாக‌ர‌த்துகுழ‌ந்தைக‌ளின் பாதுகாப்புகாணி,நில‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ பிண‌க்குக‌ள் என்ப‌வ‌ற்றை ஜ‌மாத் விசாரித்து தீர்ப்பு  சொல்கிற‌து. ஜ‌மாத்தின் க‌ட்ட‌ளைக‌ளுக்கு ம‌க்க‌ளிட‌ம் ம‌திப்பும்பய‌மும் உண்டு. பெண்க‌ள் ஜ‌மாத்தில் ப‌ங்குப‌ற்ற‌ முடியாது அவ‌ர்க‌ளுக்கு ஜமாத்தில் அங்க‌த்தினாராகும் உரிமை இல்லை.


பேராசிரிய‌ர் ந‌ஸ்னீன் ப‌ர்க்க‌த் (ம‌துரைத‌மிழ்நாடு):

ஜ‌மாத்துக்க‌ள் அனைத்திலும் பெண்க‌ளும் உறுப்பின‌ராக‌ வாய்ப்ப‌ளிக்க‌ வேண்டும் ஏனென்றால் அது ம‌ட்டும் தான் இப்பொழுதுள்ள‌ பிர‌ச்ச‌னைக‌ளைத் தீர்க்கும். சினிமாவுக்குப் போன‌த‌ற்காகக் கூட‌ பெண்க‌ளை விவாக‌ர‌த்து செய்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுமுண்டு. வெறும் ந‌கைப்புக்கிட‌மான‌ விட‌ய‌ங்க‌ளுக்குக் கூட‌ த‌லாக் செய்த‌ வ‌ழ‌க்குக‌ளுமுண்டு.

 
"சுய‌ம‌ரியாதையே பெண்விடுத‌லையின் முத‌ல் ப‌டி
அல்லாவின் ப‌டைப்பில் ஆணும் பெண்ணும் ச‌ம‌மே
இஸ்லாம் என்ற‌ பெயரைச் சொல்லி இருட்ட‌றைக்குள்
                                                               ங்க‌ளைப் பூட்டுவ‌தேன்
வெளிச்ச‌த்தைத் தேடி வெளியே வ‌ந்தோம்
விடிய‌ல் காணும் வ‌ரை ஓய‌மாட்டோம்.."

த‌ற்போதைய‌ ஜமாத் க‌மிட்டிக‌ளில் எங்க‌ள் வ‌ழ‌க்குக‌ளை நாங்க‌ள் இன்றி விசாரிக்கின்ற‌ன‌ர். எங்க‌ளைப் ப‌ற்றி நாங்க‌ள் இன்றிப் பேசுகிறார்க‌ள். நாங்க‌ள் இல்லாம‌ல் எங்க‌ளைப் ப‌ற்றிய‌ நீதியை வ‌ழ‌ங்குகிறார்க‌ள். 


--
http://thamilislam.blogspot.com

StumbleUpon.com Read more...

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 22

>> Tuesday, April 2, 2013

 


சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்

முஹம்மது நபி அவர்களுக்கு தேனை மிக விரும்பி உண்பார். தினமும் ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை. ஜைனப்   அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார்

(புகாரி 4912, 5267, 5268).

புகாரி ஹதீஸ் -4912
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், அவர்களது (வீட்டில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு செய்து கொண்டோம் தேன் சாப்பிட்ட பின்) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விடவேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசிவைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை (பிசின் சாப்பிட வில்லை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (வீட்டில்) தேன் குடித்தேன். (இனிமேல்) நான் ஒரு போதும் அதைக் குடிக்கமாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.

மனைவியர்களின் செயலால் வருத்தமடைந்த முஹம்மது நபி ஒரு மாத காலம் எந்த மனைவியர்களின் வீட்டிற்கும் செல்லாமல் இருக்கிறார்.

புகாரி ஹதீஸ் :  5203  
அபூ ய அபூர் அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது

நாங்கள் அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள். ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். நான் (மஸ்ஜதுந் நபிவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச் சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) சொன்னார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும சலாம் சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை (தாங்கள்) விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்தவிட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்

Bukhari Volume 3, Book 43, Number 648:
The Prophet did not go to his wives because of the secret which Hafsa had disclosed to 'Aisha, and he said that he would not go to his wives for one month as he was angry with them when Allah admonished him.

(அல்லாஹ் அவரை (நபியை) எச்சரிக்கை செய்த நிகழ்ச்சியில், ஹஃப்ஸா ரகசியத்தை ஆயிஷாவிடம் தெரிவித்ததால் கோபமடைந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு மாதகாலம் அவர்களிடம் (மனைவியர்களிடம்) செல்ல மாட்டேன் என்று கூறினார்)

 இவ்விஷயத்தில் ஹஃப்ஸா மீது மனவருத்தம் கொண்டு அவரை விவாகரத்து செய்ய நாடினார். இந்த விஷயங்கள் அல்லாஹ்வின் கவனத்திற்கு வருகிறது, அவ்வளவு எளிதில் விடுவானாஜிப்ரீலை உடனே அனுப்புகிறான். ஜிப்ரீல் தலையீடு காரணமாக தலாக் சொல்வது தடுக்கப்பட்டது. நபிக்கு எதிராக செயல்பட்ட மனைவியர்களை கடுமையாக எச்சரித்தான்உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு உணவை எப்படி நீங்கள் ஹராமாக்கலாம்என்று உடனே வஹி அனுப்பி தேன் சாப்பிட வைத்தான்.

1. நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.

2. (இத்தகைய) உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ் உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ் உங்களுடைய எஜமான் – அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

3. இன்னும் நபி, தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகச் சொல்லிய நேரத்தை (நினைவு கூர்க) அதனை அவர் (அம்மனைவி மற்றொரு மனைவிக்கு) அறிவித்து, அல்லாஹ் அவருக்கு (நபிக்கு) வெளியாக்கிய போது, அவர் (நபி) அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர் அதனை அவருக்கு (தம் மனைவியரில் ஒருவருக்கு) அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று (மனைவியரான) அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் (எல்லாவற்றையும்) தெரிந்தவனாகிய (அல்லாஹ்) எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.

4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் (தவ்பா செய்து) மீண்டால் (அது உங்களுக்கு நன்மையாகும்) ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து விட்டன; நீங்கள் இருவரும் (நபிக்கு) எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.

(குர்ஆன் 66:1-4)

நபியிடம், அல்லாஹ் கொண்ட அன்பை சொல்லில் விளக்க முடியாது. ஆனால் அல்லாஹ்விற்கு அந்த சக்களத்தி சண்டையை நிறுத்தத் தெரியவில்லை. அல்லாஹ்வை இதை விட வேடிக்கையாக சித்தரிக்க முடியாதுதேன் அனுமதிக்கப்ட்ட உணவாக இருப்பினும் கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையேநபி தேன் அருந்த மாட்டேன் என்று கூறுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?

நபி தேன் அருந்த மாட்டேன் எனக் கூறியது வெளியானால், நபியின் செயல் முறைகளை பின்பற்றிவரும் சஹாபாக்களும் தேன் அருந்தாமல் விட்டுவிடுவார்களோ என அஞ்சியே இந்த செய்தியை ரகசியமாக பாதுகாக்குமாறு நபி கூறினார் என்று விளக்கமளிக்கின்றனர்.

தேன் கெட்ட வாசனையுடையது அல்ல என்பது அனைவரும் மிக நன்றாக அறிந்த செய்தி. மக்ஃபிர் என்பது கருவேல மரத்தின் பிசின் என்கிறார்கள் சில அறிஞர்கள் பேரீச்சை மரத்தில் உருவாக்கப்படும்  'கள்' வகை மது என்கிறார்கள். எப்படியிருந்தாலும் தேனின் வாசனைக்கும் (Maghafir) மக்ஃபிர் -ன் வாசனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மக்ஃபிர்  மிக மோசமான வாசனையுடையது. மனைவியர்கள் மக்ஃபிர் -ன் வாசனை வருகிறது என்று முஹம்மது நபி அவர்களிடம்பொய்யுரைத்தவுடன் அதை அப்படியே நம்பி தேன் அருந்துவதை கைவிடுவதாக முஹம்மது நபி  கூறினாராம். அல்லாஹ்வும் வஹீ அனுப்பி தேன் அருந்தச் செய்தானாம். அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் சிறிதும் பகுத்தறிவிற்கு பொருந்தவில்லை. தேனின் வாசனைக்கும் மக்ஃபிர்-ன் வாசனைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவரா முஹம்மது நபி? அல்லது மக்ஃபிர் சாப்பிட்டு இருந்தாரா?

மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்ச்சியின் அடிப்படையான விஷயம் என்னவென்றால் முஹம்மது நபி  அவர்களை, ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்குவதைத் தடுப்பது மட்டுமே நபியின் மற்ற மனைவியர்களான ஆயிஷா மற்றும் ஹப்ஸா ஆகியவர்களின் நோக்கம்தேன் அருந்துவதை வெறுக்கச் செய்வது அல்லஅதாவது கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் (Possessiveness) என்று எண்ணிய அப்பாவி மனைவிகளின் அன்பினால் ஏற்பட்ட சக்களத்திச் சண்டையே இந்நிகழ்ச்சி. இதில் வேறு எந்த சதித் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அல்லாஹ், மேற்கூறிய அடிப்படைக் காரணத்திற்கு சிறிதும் தொடர்பில்லாமல் மனைவியர்கள் சதி செய்து விட்டதாக கூறி, ஆயிஷா மற்றும் ஹப்ஸாவை எச்சரிக்கிறான். நபிக்கு உதவி செய்வதற்கு ஜிப்ரீல், முஃமின்களில் ஷாலிஹானவர்கள், மலக்குகள் என நிறைய பேர் உள்ளனர் என்றும் பட்டியலிடுகிறான். இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட "தேன் குடித்த" சம்பவத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அல்லாஹ்வே வஹீயின் மூலம் நபியின் மனைவியர்களை எச்சரிக்கை  செய்கிறான் என்றால், நிச்சயமாக வலுவான வேறு காரணம் இருக்க வேண்டும்.

நாம் முதலில் பார்த்த ஹதீஸில், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். இதை விரும்பாத ஆயிஷாவும் ஹப்ஸாவும் சதி செய்ததாக கூறியது. பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்…

புகாரி ஹதீஸ்  :  5268   
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.…

தன்னுடைய வீட்டில், முஹம்மது நபி அதிக நேரம் தங்கி தேன் அருந்தியது ஹஃப்ஸாவிற்கு பிடிக்கவில்லையா? முஹம்மது நபி தன்னுடைய வீட்டிற்கு வருவதை ஹஃப்ஸா விரும்பவில்லையா? (என்னய்யா…குழப்பம் இது?)   66 : 1–4 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கண்டிப்பது யாரை?

புகாரி ஹதீஸ் -4913
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ் முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ்) ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக அராக் மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில்) கூடிப்பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள். ….

...பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக* அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்களின் உரிமைகள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்குதனைஅவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது). (ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, நீங்கள் இப்படிச் செய்யலாமே என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், கத்தாபின் புதல்வரே (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள் என்று சொன்னார். உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, என் அருமை மகளே, நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே (உண்மையா?) என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, அல்லாஹ்வின் மீதாணையாக (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு என்றhர். அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி வந்துவிட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலக் கட்டத்தில் ஷாம் நாட்டு) ஃகஸ்ஸான் வம்ச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். திறங்கள், திறங்கள் என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான் ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா? என்று கேட்டேன். அதற்கவர், அதைவிடப் பெரியது நடந்து விட்டது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள் என்றார். உடனே நான், ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு…

ஹஃப்ஸா செய்த விவாதத்தால், முஹம்மது நபி கோபமடைந்து ஒரு மாத காலம் மனைவியர்களை விட்டு விலகி இருந்ததுடன் அவர்களை விவாகரத்து கூறுமளவிற்கு   சென்று விட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.

தேன் குடித்ததற்கு இவ்வளவு  பெரிய பிரச்சினையா? மற்ற மனைவியர்களையும்  எதற்காக விலக்கி  வைக்க வேண்டும்?

தன்னுடைய மகள் உட்பட நபியின் மனைவியர்கள் அனைவரும் தவறு செய்து விட்டதாக நினைத்து அறிவுரை கூறச் சென்ற உமர் அவர்களை, "அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார்" என்று கூறுமளவிற்கு உம்மு சல்மா என்ன பதில் விளக்கத்தைக் கூற முடியும்?

ஒரு ஹதீஸ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள் என்று கூறுகிறது. மற்றொன்று ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக கூறுகிறது. இன்னொரு ஹதீஸ், ஹஃப்ஸாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறது.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்கிவிடுவார்கள் என்று அறிவிப்பதும், ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக அறிவிப்பதும் ஆயிஷாதான். ஏன் இந்த ஆள்மாறட்ட குழப்பம்?

இதில் நமது வாதத்திற்கு சாதகமான ஒரு செய்தி மறைந்திருக்கிறது
66 : 1–4 வரையுள்ள குர்ஆன் வசனத்திற்கு உண்மையை தேடிய பொழுது இன்னொரு விளக்கமும்  கிடைத்தது. முஹம்மது நபி குடித்த தேன் எது? எங்கிருந்து வந்தது? இப்ன் ஸாத் –ன் தபாகத் தரும் விளக்கத்தைக் காண்போம்.

Reported by Ibn Sa'd in Tabaqat:
Waqidi has informed us that Abu Bakr has narrated that the messenger of Allah (PBUH) had sexual intercourse with Mariyyah in the house of Hafsah. When the messenger came out of the house, Hafsa was sitting at the gate (behind the locked door). She told the prophet, O Messenger of Allah, do you do this in my house and during my turn? The messenger said, control yourself and let me go because I make her haram to me. Hafsa said, I do not accept, unless you swear for me. That Hazrat (his holiness) said, by Allah I will not contact her again. Qasim ibn Muhammad has said that this promise of the Prophet that had forbidden Mariyyah to himself is invalid ? it does not become a violation (hormat). [Tabaqat v. 8 p. 223 Publisher Entesharat-e Farhang va Andisheh Tehran 1382 solar h (2003) Translator Dr. Mohammad Mahdavi Damghani]



(நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறையன்று, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புவதாக கூறுகிறார்.ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா (கதவு அடைக்கப்பட்டிருந்ததால்) வாயிலில் காத்திருக்கிறார், நடந்த நிகழ்ச்சியை உணர்ந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், "அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?"  ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக்கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது  என்கிறார். வேறுவழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது)

இதைக் கேள்விப்பட்ட மற்ற மனைவியர்களின் ஏளனப் பார்வையை முஹம்மது நபியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய மனைவியர்களுக்கு புத்தி புகட்டவே ஒரு மாத காலம் விலகியிருந்தார். விவாகரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இந்த ஹதீஸைக் கூறிய வாகிதி ஒரு பொய்யர். எனவே இந்த ஹதீஸ் ஏற்புடையது அல்ல. தேன் குடித்த சம்பவமே சரியானது, அதுவே அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம். 66:1-4 வரையுள்ள குர்ஆன் வசனங்களை சற்று கூர்ந்து கவனித்து அதன் பொருளைத் தெளிவாக உணர்ந்த பின், ஹஃப்ஸா வீட்டில் அதிக நேரம் தங்கியதாகக் கூறும் புஹாரியில் பதிவு செய்யப்பட்ட நம்பகமான ஹதீஸையும், அறிஞர்களால் பொய்யர் என புறந்தள்ளப்பட்ட வாகிதியால் கூறப்பட்ட ஹதீஸுடன் இணைத்து ஒப்பிட்டு பாருங்கள்ஹஃப்ஸா உட்பட மனைவியர்கள் அனைவரையும் மணவிலக்கு செய்யுமளவிற்கு வலுவான காரணம் எதனுடன் பொருந்துகிறது?

தேனாமரியத்துல் கிப்தியாவா? நீங்களே  சிந்தித்துப் பருங்கள். "தேன்" எனக் குறிப்பிடப்படுவது சங்கேத வார்த்தையே என்பதை நீங்களே அறியலாம்இருப்பினும் எங்களால் சங்கேத வார்த்தைகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது என்று கூறுபவர்களுக்காக, ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புஹாரி ஹதீஸ் தமிழ்மொழிபெயர்ப்பில்  2468 ஆம் ஹதீஸின் 15 ஆம் அடிக்குறிப்பு மரியத்துல் கிப்தியா உடனான "ஜல்ஸா" நிகழ்ச்சியை உறுதி செய்கிறது என்பது கூடுதல் தகவல்.

source:http://www.iraiyillaislam.blogspot.in/


--
http://thamilislam.blogspot.in

StumbleUpon.com Read more...

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21


இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் - 21

சில Instant வேதவெளிப்பாடுகள்

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், 'தண்ணீரைத் திறந்து ஓடவிடு" என்று கூறினார். ஸுபைர் (ரலி) 'தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு முஹம்மது நபியிடம் பஞ்சாயத்திற்கு வந்ததுமுஹம்மது நபி கூறிய தீர்ப்பு ஸுபைருக்கு சாதமாக இருந்தது. தீர்ப்பில் அதிருப்த்தியடைந்த அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, 'உங்கள் அத்தை மகன் என்பதால் அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறி சிவந்து விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, 'உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகைளச் சென்றைடயும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்" என்றுகூறினார்கள்.
அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை உடனே இறக்கிவிட்டான் வஹீயை!

புகாரி ஹதீஸ்- 2359
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது
'இறைவன் மீதாணையாக! '(முஹம்மேத!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்'
(குர்ஆன் 04:65)

திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்" என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

***

முஹம்மது நபி அவர்களின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளியில் வருவதை உமர் அவர்கள்  காண்கிறார்எந்தக் காரணத்திற்காகவும் பெண்கள் வெளியில் வருவதை அவர் விரும்பவில்லைஅப்படியே வந்தாலும் அப் பெண்கள் தங்களை இனம் காண முடியாதவாறு  கடுமையாக மறைத்துக் கொள்ள வேண்டுமென்று  விரும்பினார்

புகாரி ஹதீஸ்- 4795
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ச்வதா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.
(புகாரி 146,4795).

பெண்களைப் பர்தாவுக்குள் மூடிவைக்கப்பட வேண்டிய பொருள் என்ற உமர் நச்சரித்துக் கூறிய  கருத்துக்களையே அல்லாஹ், முஹம்மது நபி அவர்களிடம் வஹீயாக அனுப்பினான் (குர்ஆன் 33:33,59). அதன் காரணமாகவே சவ்தா பர்தாவுடன் கழிப்பிடத்திற்கும் செல்கிறார். அங்கும் விடாது பின்தொடர்ந்து வந்து பர்தாவைப்பற்றி கூறுவதிலிருந்து உமர் அவர்களின் நச்சரிப்பின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இவரது வேறு சில நச்சரிப்புகளும் உடனடியாய் வஹீயாக வெளிப்பட்டுள்ளது. அவைகளிலிருந்து ஒன்றைக் காணலாம்,

***

புஹாரி ஹதீஸ் : 1269
இப்னு உமர் (ரலி ).அவர்கள் கூறியதாவது
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான்.அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்கேள! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்" என்று கூறினார். உடேன நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்" என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடிய போது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்கைளத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெதடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத்  தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமேம! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்கைள மன்னிக்கப் போவதே இல்லை"என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே "(ந்நய)(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்" என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

எனக்கு பிறகு ஒருவரை அல்லாஹ் நபியாக தேர்வு செய்தால், அது நிச்சயமாக உமராகத்தான் இருப்பார் என முஹம்மது நபி அவர்களும் பெருமை பாராட்டுகிறார்.

புஹாரி ஹதீஸ் : 2831
அல்பராஉ பின் ஆஸிஃப்  (ரலி ) கூறியதாவது.
"இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப் போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், றைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…" என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை  அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) தம் கண்பார்வையில்லாத நிலை குறித்து முறையிட்டார்கள். அப்போது, '…. தகுந்த  காரணமின்றி .." என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (திருக்குர்ஆன் 04:95)அருளப்பட்டது.
பார்வையற்ற ஒருவர் தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே அல்லாஹ்விற்கு போருக்கு வராமலிருப்பதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கிறதென்று தெரிந்ததா?
***

புஹாரி ஹதீஸ் : 4517
அப்துல்லாஹ் பின் மஃகல் (ரலி )கூறியதாவது.
நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், 'உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை" என்று கூறிவிட்டு, 'உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், 'மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை 'ஸாவு' உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்" என்று கூறினார்கள்.

மனிதர்களின் தலைகளில் பேன்களால் ஏற்படும் சிரமத்தைக்கூட அல்லாஹ் அறியவில்லையா? அவனது தூதர் பேன்களின் தொல்லையைப் பற்றி தகவல் கூறியவுடன் முடியை மழித்துக் கொள்ள அனுமதி. என்னுடைய கேள்வி என்னவென்றால் அல்லாஹ்விற்கு எதுவும் தெரியாதா? மிகச் சாதாரணமான இந்த மனிதர்கள் சொல்வதை மறுஒலிபரப்பு  செய்ய அல்லாஹ் எதற்கு? அற்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வேதவாக்குகள் வெளிப்படுகிறேதே என்று நினைக்க வேண்டாம் அருவருப்பான அனுமதிகளும் வேதவாக்குகளான அற்புதங்களும் உண்டு

source:http://www.iraiyillaislam.blogspot.in/
--
http://thamilislam.blogspot.in/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP