சமீபத்திய பதிவுகள்

இந்தியாவுக்கு சீனா மூக்கறுப்பு : தன்னிச்சையாக நில நடுக்க ஆய்வு மையத்தை நிறுவியது

>> Tuesday, October 20, 2009

 

Top world news stories and headlines detail 

புதுடில்லி: இந்திய, திபெத்திய எல்லையில் நிலநடுக்க ஆய்வு மையத்தை சீனா தன்னிச்சையாக அமைத்துள்ளது. நீண்ட காலமாக இந்தியாவுடன் இது குறித்து கலந்து பேசி இணைந்து அமைப்பதாக எடுத்த முடிவுக்கு எதிராக சீனா தற்போது அதிரடியாக தனியாக அமைத்து கொண்டது. இது தொடர்பாக சீனாவில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய குழுவின் துணை இயக்குநர் ஷாங்ரோங்போ கூறியிருப்பதாவது: திபெத்தில் உள்ள திங்கிரி கிராமத்தில் இருந்து 14 ஆயிரம் அடி தொலைவில் எவரெஸ்ட் மலை பகுதியில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சீனா- நேபாள எல்லையில் அவ்வப்போது மாறுகின்ற கால நிலை மாறுபாடுகள் உடனுக்குடன் சேட்டிலைட் மூலம் தகவல்களை தந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். 

இமாலய மலையையொட்டியுள்ள சீன பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் இதனை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக நில நடுக்க மையம் அமைக்க சீனா முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக இந்தியாவிடம் பல முறை ஆலோசித்து, இந்தியாவுடன் இணைந்து இந்த மையத்தை அமைத்து கொள்வதாக ஏற்கனவே பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் சீனா தன்னிச்சையாக அமைத்துள்ளது. இது சீனாவுக்கு இந்தியா மீது உள்ள அலட்சியத்தையே காட்டுகிறது. 

அருணசாசல பிரதேச விவகாரம், காஷ்மீர் விசா உள்ளிட்ட விவகாரங்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சீன மையம் சீனாவின் முன்னெச்செரிக்கை முன்னோட்ட நடவடிக்கை என்ற யூகம் கூட கிளம்புகிறது. 

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் இந்தியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடத்தினாலும் இது சீனாவுக்கு தகவல் கொடுத்துவிடும் என்பது நமது வாசகர்களுக்கு கூடுதல் தகவல் ஆகும்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

1.2லிட்டர் தண்ணீரில் குளியல் : தர்மபுரி வாலிபர் சாதனை

  





 

தர்மபுரி : தர்மபுரி அருகே, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டர் தண்ணீரில் குளித்து வாலிபர் சாதனை புரிந்தார். தர்மபுரி அருகே நாய்க்கன்கொட்டாய் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டையன்; விவசாயி. இவரது மகன் கோவிந்தசாமி(26) ஐந்தாம் வகுப்பு வரை படித்து, ஆடு மேய்த்து வருகிறார். ஆடுகளை ஓட்டிச் செல்லும் போது, நிலத்தின் தேவை போக பாசன தண்ணீர் வீணாவதைக் கண்டு, தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க, விவசாயிகளிடம் சிறு பிரசாரத்தை மேற்கொண்டார்.



ஆடுகளுக்கு போதிய குடிநீர், காட்டுப்பகுதிக்குள் கிடைக்காததால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார். ஆடுகள் குடித்தது போக, மீதமுள்ள தண்ணீரை வீணாக்காமல், தன் உடலில் ஊற்றிக் கொள்வார். ஐந்து லிட்டர் தண்ணீரில் துவங்கிய குளியலை படிப்படியாகக் குறைத்து, மூன்று லிட்டரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 16 ஆண்டாக, இவர் மூன்று லிட்டர் தண்ணீரில் குளித்து வருகிறார். தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்து சாதனை படைக்க விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, ஊர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.



இதைத் தொடர்ந்து, நேற்று நாயக்கன் கொட் டாய் அரசு துவக்கப்பள்ளியில், இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். ஒன்றரை லிட்டர் தண்ணீர் தரப்பட்டதில், இரு முறை ஷாம்பூ, இரு முறை சோப்பு போட்டு குளித்து, சோப்பு நுரையில்லாமல் சுத்தமாகக் குளித்ததுடன், 300 மி.லி., தண்ணீரை மீதம் செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோவிந்தசாமி.



இது குறித்து கோவிந்தசாமி கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தவே, இது போன்ற சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டரில் குளித்துக் காட்டினேன். இன்னும் அளவைக் குறைத்து, பெரிய அளவில் சாதனை படைக்க முயற்சி செய்வேன். இவ்வாறு கோவிந்தசாமி கூறினார்.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈரானில் தற்கொலைப் படை தாக்குதல்: சாவு 29


 

 


தெஹ்ரான், அக். 18:  ஈரானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், பழங்குடியினத் தலைவர்கள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்தனர்.

   பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பலூசிஸ்தான் மாகாணத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  பிஷீன் பகுதியில் ஈரான் ராணுவ சிறப்புப் பிரிவு அதிகாரிகளின் கூட்டத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

   இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் நாடாளுமன்றத் தலைவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

source:dinamani
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

“ஹீரோ” பிரபாகரன்

[18_10_2009_104_003_003.jpg]

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பெண் கொடுமையின் மாநிலமாகும் கடவுளின் சொந்த நாடு

பெண் கொடுமை அதிகரிப்பு: கேரளாவுக்கு இரண்டாமிடம்
 

கொச்சி: மூன்று நிமிடங்களுக்கொரு பெண் வீதம், நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருகின்றன. இதில், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தையும், கேரளா இரண்டாம் மற்றும் ஆந்திரா மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளது.



 நாட்டில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கொரு பெண் வீதம், கொடுமைக்கு ஆளாக நேரிடுகிறது. ஒவ்வொரு 29 நிமிடத்திற்கொரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். மேலும், 77 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறக்க நேரிடுகிறது. இவை எல்லாம் நம்ப முடியாத தகவல்கள் என்று தானே யோசிக்கிறீர்கள்? அல்ல.


General India news in detail

இவை அனைத்தும் நம் நாட்டில் நடந்தவையாக பதிவாகி உள்ள உண்மைத் தகவல்கள். இத்தகவல்கள் அனைத்தும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் என, கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஆர். பண்ணூர் மட் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக்கான கருத்தரங்கம், கேரள ஐகோர்ட் வளாகத்தில் நடந்தது.



மாநில சட்ட சேவை ஆணையம் மற்றும் சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கை, தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பண்ணூர்மட் துவக்கி வைத்து பேசுகையில், "வீட்டிலும் வெளியிலும் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். "இவ்வாறு இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி இறக்க நேரிட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் 3,440ம், கேரளாவில் 1,028ம், ஆந்திராவில் 731ம் டில்லியில் 607ம் என உள்ளது' என்றார்.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி: இலங்கை அதிர்ச்சி


இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் அந்நாட்டு அரசு அடைத்து வைத்துள்ளது. 
 
உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 
முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். 
 
நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் 59 தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.

source:nakkheeran
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP