சமீபத்திய பதிவுகள்

சவூதிக்கு முஷாரப் ஓட்டம்?

>> Thursday, August 21, 2008

சவூதிக்கு முஷாரப் ஓட்டம்?
.
.
இஸ்லாமாபாத், ஆக.18: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து விலகி சவூதி அரேபியாவில் தஞ்ச மடைய முஷாரப் முடிவு செய்துள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
.
முஷாரப்புக்கு புகலிடம் அளிக்க அமெரிக்கா மறுத்து விட்டதை தொடர்ந்து அவர் சவூதி செல்ல ராவல்பிண்டியில் விமானம் ஒன்று தயாராக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதாக தெரிகிறது.

இன்று பிற்பகல் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் முஷாரப் அதிபர் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபராக உள்ள முன்னாள் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்புக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முஷாரப் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்; அல்லது அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  இன்று காலை முஷாரப் தனது அரசியல் ஆலோசகர்கள் மற்றும் சட்ட நிபுணர் களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து முஷாரப் இன்று மதியம் 1 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்று கிறார். அப்போது அவர் தான் பதவி விலகுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

ஆனால் முஷாரப் பதவி விலக மாட்டார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே முஷாரப்புக்கு புகலிடம் அளிக்க அமெரிக்கா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முஷாரப் சவூதி அரேபியா சென்று தஞ்சமடைவார் என்று கூறப்படுகிறது.

ராவல்பிண்டி விமான நிலையத்தில் சவூதி நாட்டின் விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. முஷாரப் பதவி விலகியவுடன் அந்த விமானத்தில் அவர் சவூதி புறப்பட்டுச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

 

http://www.maalaisudar.com/newsindex.php?id=18056%20&%20section=1

StumbleUpon.com Read more...

ஸ்பெயினில் விமான விபத்து : 153 பேர் பலி

ஸ்பெயினில் விமான விபத்து : 153 பேர் பலி
ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.

இதனை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த அந்நாட்டின் மேம்பாட்டு அமைச்சர் மக்தேலனா அல்வாரெஸ், இந்த விபத்தில் 19 பேர் உயிர் பிழைத்தனர் என்றும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தில், மொத்தம் 172 பேர் பயணம் செய்ததாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்ரிட்டிலுள்ள பராஜஸ் விமான நிலையத்தில் இருந்து எம்.டி.-82 விமானம் நேற்று மாலை புறப்பட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, பின்னர் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

விமானம் நொறுங்கியது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இது விபத்து தான் என உறுதியாக தெரியவந்துள்ளதாக, ஸ்பெயின் அமைச்சர் மக்தேலனா மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

காஷ்மீர் எல்லையில் பாக்.மீண்டும் அத்துமீறல்

காஷ்மீர் எல்லையில் பாக்.மீண்டும் அத்துமீறல்
ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ந்திய நிலைகள் மீது பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.

நவ்ஷேரா பிரிவை குறி வைத்து பீரங்கியால் பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக சுட்டது.

ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பிரிவில் உள்ள ஜன்கார் பகுதியில் இன்று காலை 6.40 மணியிலிருந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் எஸ்.டி. கோஸ்வாமி ஜம்முவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலினால் இந்திய தரப்பில் உயிர்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு,இந்திய ராணுவம் பதில் தாக்குதல் ஏதும் நடத்தாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2003 ம் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் எல்லைப் பகுதியில் போர் நிறுத்தத்தை கடை பிடிக்கும் ஒப்பந்தம்,இரு நாடுகளுக்கும் இடையே அமலில் உள்ளது.ஆயினும் அதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

StumbleUpon.com Read more...

பின்னடைவு: புலிகள் ஒப்புதல்

 
.
 
.
கொழும்பு, ஆக.20: இலங்கை ராணுவம் நடத்தி வரும் அதிரடி தாக்குதலில் தாங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
.
ராணுவத்தின் தாக்குதல் காரணமாக இலங்கையின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலி களுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தொடர்ந்து புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி அவற்றையும் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

ராணுவத்தின் இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், இந்த தாக்குதல் காரணமாக தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ராணுவத்தின் இந்த நடவடிக்கை காரணமாக அப்பாவி மக்கள் தங்களது வசிப்பிடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள தாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தங்களது இருப்பிடத்திலிருந்து வெளியேறி ஒரு பகுதியில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் தாக்குதல் அதிகரிப்பதன் காரணமாக அங்கிருந்தும் கிளிநொச்சிக்குள் தப்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு ஏராளமானோர் பல்வேறு இடங்களிலிருந்து உயிருக்கு பயந்து தப்பிச் செல்ல வேண்டியிருப்பதால் அவர்களுக்கு உரிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க இயலாத நிலை உள்ளது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக தங்குமிடங்கள் கூட அமைக்க முடியாததால் மக்கள் மரங்களுக்கு அடியில் தங்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் இந்த கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. பாதிக்கப்படும்
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் வழங்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

தங்கம் வெல்வேன்: விஜேந்தர்

தங்கம் வெல்வேன்: விஜேந்தர்
.
.
 பெய்ஜிங், ஆக.21: நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்வேன் என்று குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்திய வீரர் விஜேந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் நேற்று நடைபெற்ற மோதலில் இக்விடார் நாட்டை சேர்ந்த கார்லோஸ் கோங்கோரோவை 75 கிலோ எடை பிரிவில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து அவர் குறைந்தது வெண்கல பதக்கத்தை வெல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் விஜேந்தர் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். உலகின் மற்ற குத்துச் சண்டை வீரர்கள் சண்டையிடுவதை வீடியோவில் பார்த்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு தூரம் வந்து விட்டு தங்கப் பதக்கத்தை வெல்லாமல் விட மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதியில் மிகுந்த உத்வேகத்தோடு தான் சண்டையிட்டதாகவும், அகில் குமார் மற்றும் ஜிதேந்தர் தோல்வி அடைந்த பிறகு ஏதாவது செய்ய வேண்டும் எனும் மனஉறுதியோடு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரையிறுதியில் அவர் கியூபா வீரர் எமிலியோ கோரியாவோடு மோதுகிறார். நாளை அரையிறுதி மோதல் நடைபெறுகிறது.

இந்த மோதலில் அவர் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் தோல்வி அடைந்தார். அவர் ரஷ்யாவின் பால்ஷின்னிடம் போராடி தோற்றுப் போனார்.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP