|
சமீபத்திய பதிவுகள்
சூங் சான் வனப்பூங்கா
பெய்ஜிங்கின் சுற்றுப்புறத்திலுள்ள ஒரேயொரு நாட்டு நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலமான சூங் சான் வனப்பூங்கா பற்றி கூறுகின்றோம். சூங் சான் வனப்பூங்கா, பெய்ஜிங்கின் யான் ச்சிங் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பெய்ஜிங்கின் நகரப் பகுதிக்கான தூரம், சுமார் 90 கிலோமீட்டர் ஆகும். 4660 ஹெக்டர் பரப்பளவுடைய இந்தக் வனப்பூங்காவைச் சேர்ந்த, கடற்மடத்திலிருந்து 2199 மீட்டர் உயரமான ஹெய் தோ மலை, பெய்ஜிங்கில் 2வது உயரமான மலையாகும். 1986ம் ஆண்டு, சூங் சான் வனப்பூங்கா, சீன அரசவையால், நாட்டு நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலமாக கருதப்பட்டது. பெய்ஜிங்கின் பின் பூங்கா என பெயர்ப்பட்டுள்ளது. இப்பூங்காவில் நுழைந்த பயணிகள், பச்சை மலையையும் நீரையும் சூங் சான்னில், ஒரு பழங்குடி காட்டுப் பகுதி இருக்கிறது. இது, சீனாவின் வடபகுதியில் செவ்வனே பேணிக்காக்கப்படும், பரப்பளவு மிகவும் பெரிய Chinese pine காடு ஆகும். திரு மா கூறிய இந்த பழங்குடி Chinese pine காடு, சூங் சான் இயற்கை காட்சி பிரதேசத்தில் மிகவும் வரவேற்கப்பட்ட இடம் ஆகும். இயற்கைக் காட்சிகளை முக்கியமாக கொண்ட சூங் சான்னின் சுற்றுலா மண்டலம், தனிச்சிறப்பியல்புடையது. இதில், பழங்குடிக் காடு ஒப்பீட்டளவில் செவ்வனே பேணிக்காக்கப்பட்டது. பல்வகை வன விலங்குகள், இங்கு வாழ்கின்றன. இதில், leopard, goral முதலிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு வன விலங்குகள் இடம்பெறுகின்றன. பழங்குடிக் காட்டில் நடந்த போது, பயணிகள், காட்டிலும், ஊற்றுப்பக்கத்திலும் வானிலும், பறவைகளையும் விலங்குகளையும் அவ்வப்போது பார்க்கலாம். சூங் சான் மலையில், ஒரு தூய்மையான ஊற்று, மலைச் சிகரத்திலிருந்து உருவாகி ஓடுகின்றது. பயணிகள், இவ்வூற்றின் பாதையில் நடந்து, ஊற்றின் தோற்றுவாய் இடமான BAI BU ஊற்றுக்குச் சென்றடைவார்கள். உயரமான மரங்களால், பெரும்பாலான சூரிய ஒளி மறைக்கப்படுகிறது. அமைதியான காட்டில், பல்வேறு விலங்குகள் மற்றும் நீரின் ஒலியை கேட்கலாம். பயணிகள் சூங் சான் மலை வந்த பிறகு, இந்தப் பழங்குடிக் காட்டிற்குச் சென்று நடந்து, நகரத்தை விட வேறுபட்ட அமைதியான உணர்வை உணர வேண்டும். காட்டில் நடந்து போகும் போது, திரு மா, செய்தியாளரிடம், சூங் சான் மலையிலுள்ள பல்வேறு இயற்கைக் காட்சிகளை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது: சூங் சான் மலையில், பழங்குடி காடு, BAI BU ஊற்று, YUAN YANG YAN, SAN DIE SHUI, TING YUE TAN ஆகியவை, பெரிய இயற்கைக் காட்சிகளாகும். தவிர, சில சிறு இயற்கைக் காட்சிகளும் உள்ளன என்றார் அவர். நேயர்களே, இந்த அழகான இயற்கைக் காட்சியினால் நீங்கள் ஈர்க்கப்பட்டீர்களா? ஆனால், ஆழகான இடத்தில் சென்ற போது, சுற்றுலா பயணம் தவிர, தங்குமிட வசதியும் உணவும் இன்றியமையாதவை. இவை, பயணிகள் மிகவும் கவனம் செலுத்திய துறைகளாகும். பயணிகள், சூங் சான் மலையில் தங்கியிருக்க விரும்பினால், உள்ளூரின் விவசாயிகளின் இல்லங்களில் சென்று தங்கி இருக்கலாம். இரவில், சீனாவின் வடபகுதியில் தனிச்சிறப்பியல்புடைய ஒரு வகை படுக்கையில் தூங்கலாம். அதாவது, விவசாயக் குடும்ப உணவைத் தவிர, சூங் சான்னில், தனிச்சிறப்பியல்பான உணவுகளைச் சாப்பிடலாம். பெய்ஜிங் யேன் ச்சிங் மாவட்டத்தின் சுற்றுலா பணியகத்தின் அதிகாரி திரு HE, எமது செய்தியாளரிடம் பேசுகையில், சூங் சான்னில், பல சிறப்பு மிக்க உணவுகளைச் சுவைக்கலாம். இவை, உள்ளூரின் பாரம்பரிய திருமணப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையவை. பயணிகளுக்காக, நாங்கள் பாரம்பரிய அடிப்படையில் இவற்றைச் சீர்திருத்தம் செய்துள்ளோம் என்றார் அவர். மர்மமான பழங்குடிக் காட்டைப் பார்வையிட்டு, உள்ளூரின் தனிச்சிறப்பான உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, வெப்ப ஊற்று செல்லலாம். சூங் சான் மலையிலுள்ள வெப்ப ஊற்று மிகவும் புகழ்பெற்றது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன், கட்டியமைக்கப்பட்ட வெப்ப ஊற்றை, அப்போதைய பிரபுக்கள் அனுபவிக்கத் தொடங்கினர். அதன் நீரில் பல்வகை பொருட்கள் உண்டு. மனித உடலின் நலனுக்கு பயன் மிக்கது. இங்கு அடிக்கடி குளித்தால், மனபாரம் நீங்குவது மட்டுமல்ல, சில நோய்களுக்கும் சிகிச்சையாக அமையலாம் |
சாங் லாங் திங் தோட்டம்
புகழ்பெற்ற 4 பழங்காலத் தோட்டங்களில் ஒன்றான சாங் லாங் திங் தோட்டம், சீனாவின் சூ ச்சோ நகரின் தெற்குப் பகுதியில் உள்ளது. அது, சூ ச்சோவில் மிகப் பழம் பெரும் தோட்டமாகும். சோங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்ட அதன் பரப்பளவு, 1.08 ஹெக்டராகும். சாங் லாங் திங் தோட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோட்டக் கலை வடிவம் சிறப்பாக இருக்கிறது. தோட்டத்தின் வாயிலுக்கு முன், சிறிய பசுமையான கால்வாய் வட்ட வடிவில் சுற்றி ஓடுகின்றது. இத்தோட்டத்துக்குள், மலைகளும் கற்களும் அடுத்தடுத்து அமைந்து அழகிய நில அமைப்பை உருவாக்குகின்றன. வாயிலில் நுழைந்ததுடன், மலை கண்பார்வையில் எதிர்படுகின்றது. புகழ்பெற்ற சாங் லாங் விதான மண்டபம் அங்கு இருக்கிறது. இம்மலையின் அடி வாரத்தில், குளம் காணப்படுகிறது. மலையையும் குளத்தையும், சுற்றி வளைத்தபடி ஒரு தாழ்வாரம் இணைக்கிறது. இத்தாழ்வாரத்தின் ஜன்னலிலிருந்து வெளியே பார்த்தால், தோட்டத்தின் உள்புற மற்றும் வெளிப்புறத்திலான மலை மற்றும் நீர், உயற்கைக்கு நன்றாக பொருந்தி காட்சியளிக்கின்றன. Mingdaotang என்ற மண்டபம், இத்தோட்டங்களில் உள்ள முக்கியக் கட்டிடமாகும். அங்கு, Wubaimingtangci கோயில், Kanshanlou மாளிகை, Cuilinglongguan மண்டபம், Yangzhiting விதான மண்டபம் முதலியக் கட்டிடங்களும் காணப்படுகின்றன. சாங் லாங் திங் தோட்டம், சியாங் சூ மாநிலத்தின் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அது, யூனேஸ்கோ அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பண்பாட்டு மரபு செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. |
சி சியா அரசர் கல்லறை கூட்டம்
நீங்சியா ஹுவே தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான யீன்சுவான், சீனாவின் வடமேற்கு பகுதியில் ஹெலான் மலையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தனிச்சிறப்பான சுற்றுலா மூலவளங்களால், கடந்த சில ஆண்டுகளில் யீன்சுவான், பயணிகளை ஈர்த்து வருகிறது. இன்று, நாம் அனைவரும் இணைந்து சென்று, அங்குள்ள சி சியா அரசர் கல்லறைகள், ஹெலான் மலை பாறைகளிலுள்ள ஓவியங்கள் ஆகியவற்றைப் பார்த்து, பல இரகசியங்கள் வெளிப்படாமல், புதிதாகவுள்ள சி சியா வம்சத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் உணர்ந்துகொள்வோம். 11ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரையான இரண்டு நூற்றாண்டுகளில், நாடோடிகளாக மேய்ச்சல் நிலத்தை தேடும் ஆயர்களின் வாழ்வைக் கொண்ட சியாங் இனத்தின் கிளையான தாங் சியாங் இனத்தவர்கள், தற்போதைய நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தை மையமாக கொண்ட சீனாவின் வடமேற்கு பகுதியில் சி சியா வம்சத்தை நிறுவினர். அப்போதைய ஜின் மற்றும் தெற்கு சூங் வம்சங்களுடன் சேர்ந்து ஒரே காலக்கட்டத்தில் இது நிலவியது. பிறகு, மங்கோலிய இராணுவப்படையால் சி சியா வம்சம், தோற்கடிக்கப்பட்டு, சீனாவின் ஹன் இனத்திலும் இதர இனங்களிலும் படிப்படியாக கலந்துள்ளது. சீனாவில் இதுவரை ஒப்பிட முடியாத, மிக பெரிய அளவிலான, தரையிலுள்ள சிதிலங்கள் மிகவும் முழுமையாக உள் பேரரசர் கல்லறைக்களில் ஒன்றானது, கிழக்கு பிரமிடு என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயர், சி சியா கல்லறை என்பதாகும். இந்த கல்லறை கூட்டம், 1972ம் ஆண்டில் கண்டறியப்பட்டன. அதற்குப் பிந்திய 30 ஆண்டுகளில், அறிவியலாளர்கள் இங்கே அகழ்வு மேற்கொண்டு, ஆய்வு செய்தனர். அதில், சி சியா வம்சத்தின் மிக அரிய தொல்பொருட்களைக் கண்டறிந்துள்ளனர். இதில், சி சியாவின் கை எழுத்துக்கள், சி சியா மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்ற ஓவியங்கள், பல்வேறு வகை சிற்பங்கள், பல்வேறு காலங்களின் காசுகள் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. இங்குள்ள ஏராளமான வடிவங்களிலான மிக தனிச்சிறப்பு மிக்க கற் சிலைகள், மண் சிலைகள் குறிப்பிடத்தக்கவை. சி சியா பண்பாட்டின் ஆய்வுக்கு, இந்த தொல்பொருட்கள் மதிப்புமிக்க உண்மையான பொருட்களாகும். சி சியாவின் பண்டைகால பண்பாட்டின் ஆய்வில் ஈடுபடுகின்ற சி சியா ஆய்வகத்தின் தலைவர் தூ சியான் லூ பேசுகையில், பல இரகசியங்கள் வெளிப்படாமல் மர்மமான சி சியா பேரரசர் கல்லறைகள், ஹெலான் மலையின் அடிவாரத்திலுள்ள பண்பாட்டு முத்துக்கள் ஆகும். சீன நடுப்பகுதியிலிருந்து வேறுபட்ட சி சியா தொல்பொருட்கள், ஈர்ப்பு ஆற்றல் மிக்கவை. சுற்றுலா பயணிகள், சி சியா பண்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ளும் சுற்றுலா இடமாக, இது உள்ளது. அவர் கூறியதாவது: சி சியா அரசர் கல்லறைகள், யீன்சுவானின் மேற்கு புறநகரத்திலுள்ள ஹெலான் மலையின் கிழக்கில் அமைந்துள்ளன. அதன் பரப்பளவு சுமார் 50 சதுர கிலோமீட்டராகும். மொத்தம் 9 பேரரசர் கல்லறைகளும், அரசர்களோடு இணைத்து புதைக்கப்பட்ட 100க்கு மேலான கல்லறைகளும், இங்கு உள்ளன. பொதுவாக கூறின், இந்தக் கல்லறைகளில், தமது இனத்தின் தனிச்சிறப்பியல்பு மட்டுமல்ல, ஹன் இனத்தின் சில பழக்கவழக்கங்களும் உள்ளன என்றார் அவர். சி சியா வம்சத்தின் தொல்பொருள் ஆய்வகத்தின் ஆய்வாளர் நியூ தாசெங், சி சியா பேரரசர் கல்லறைகளைக் கண்டுபிடித்த அதிர்ச்சியை உணர்பூர்வமாக நினைவு கூர்ந்து கூறியதாவது: மிகவும் பெரியதாகவும் தரிசாகவும் பல இரகசியங்களை வெளிப்படாமல் மறைத்திருக்கும் புதிராகவும், அவை இருப்பதை உணர்ந்து கொண்டேன். அவற்றில், எத்தனை பொருட்கள் உள்ளதென்று தெரியாது என்றார் அவர். சி சியா கல்லறைகளின் மூன்றாவது கல்லறையின் பரப்பளவு, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். இங்குள்ள ஒன்பது பேரரசர் கல்லறைகளில், மிக பெரியதான மிக பாதுகாக்கப்பட்ட கல்லறை, இதுவாகும். இந்தக் கல்லறை மீதான அகழ்வு மற்றும் ஆய்வு, முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தூ சியான் லூ கூறினார். சீனாவின் பேரரசர் கல்லறை அமைப்பு முறை வரலாற்றில், சிங் வம்சத்தின் அரசர் கல்லறைகளை தவிர, சி சியா அரசர் கல்லறைகள் சிறுப்பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த அரசர் கல்லறைகளாகும். சி சியா கல்லறைகளில், வண்ண கண்ணாடிகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடப் பொருட்கள், சீனாவின் கட்டுமான வரலாற்று ஆராய, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு கண்டறியப்பட்ட வெண்கல மாடு, கல் குதிரை உள்ளிட்ட தொல்பொருட்கள், சி சியாவின் கைத்தொழில் துறை மற்றும் அப்போதைய உற்பத்தி தொழில் நுட்பத்தை ஆராய, முக்கியத்துவம் வாய்ந்தது என்று தூ சியான் லூ தெரிவித்தார் |
ஈரானின் மீதான Barrack Obama அரசின் கொள்கை
ஈரான்-அமெரிக்க உறவைக் கையாள்ளும் பிரச்சினையில், நடப்பு அமெரிக்கா அரசுத் தலைவர் Barrack Obama, புஷ் அரசின் முன்னாள் கொள்கையைச் செய்யக்கூடாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Hasan Qashqavi 12ம் நாள் கூறினார். புதிய அமெரிக்க அரசின் நடவடிக்கையின் படி, ஈரான், உரிய காலதாமதமில்லாத நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்று Hasan Qashqavi கூறினார். ஈரானைக் கையாள்ளும் பிரச்சினையில், அமெரிக்கா புதிய முறையை மேற்கொள்ளும் என்று Barrack Obama 11ம் நாள் கூறினார். தூதாண்மை முறையின் மூலம், ஈரானுடனான முரண்பாட்டைத் தீர்க்கின்றது என்று அமெரிக்கா விரும்புகின்றது. ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்பைப் பொறுத்த வரை, ஈரான், உண்மையான அச்சுறுத்தலாகும் என்று Barrack Obama கூறினார் |
மாபெரும் கையெழுத்து வேட்டையில் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்': ஒன்றுதிரண்டு ஆதவளிக்குமாறு உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்
தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். "உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால் ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்." என்று 'ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின்' ஊடகத் தொடர்பாளர் புதினத்திடம் தெரிவித்தார். |
துணிச்சலான கேப்டன் ஸ்மித் : பாண்டிங் பாராட்டு
|
காயம் ஏற்பட்ட நிலையிலும் துணிச்சலாக பேட் செய்த தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித்தை, பாண்டிங் வெகுவாக பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியா சென்ற தென் ஆப்ரிக்கா அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. முதலிரண்டு 2 டெஸ்ட்டில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. முதல் இன்னிங்சில் கைவிரல் காயத்தால் பாதியில் வெளியேறிய தென் ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித், இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் விழுந்த நிலையில் கடைசி விக்கெட்டாக களமிறங்கினார். ஆட்டத்தை எப்படியும் டிராவில் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினார். ஆனாலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் கூறியது: சிட்னியில் இறுதி நாளில் கடைசி சிலமணி நேரம் குறித்து மிகவும் வருத்தப்பட்டேன். ஏனெனில் மழை வரும் போல இருந்தது தான் காரணம். இன்னும் எத்தனை ஓவர்கள் வீசப்படும் என எண்ணிக் கொண்டு இருந்தேன். இந்த டெஸ்டில் எல்லோரும் கடினமாக போராடினோம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அதனால் தான் வெற்றி பெற்றுள்ளோம். ஸ்மித்துக்கு பாராட்டு: சிட்னி டெஸ்டில் ஸ்மித் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். இதனை அனைத்து அணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். காயம் ஏற்பட்டு, சோர்வான நிலையிலும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் மீண்டும் களமிறங்கிய அவர், தனது வேலையை சரியாக செய்தார். அவரது உறுதியான போராடும் குணத்தை நேரில் பாராட்டினேன். போட்டியில் ஸ்மித்தின் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன். இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார். |
பகலில் உள்ள பசு மாடு இவர்களின் கண்ணுக்கு தெரியவில்லையாம். அதனால் இரவில் எருமை மாட்டை தேடி அலையப்போகின்றனர்.
இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்றால் அதற்கு அகராதியில் உள்ள மென் மையான சொற்களையும் பல வித அர்த் தங் கள் கொண்ட சொற் பதங்களையும் தேடிப்பிடித்து பயன்படுத்தி வந்த மேற்குலம் தற்போது வர்த்தக வரிச்சலுகையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு யாரும் எதிர்பார்க்காத கோணத்தில் இருந்து ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்ததுடன், அந்த நிபந்தனையை சாதகமாக்கி வரிச்சலுகையை 2011 ஆம் ஆண்டு வரை வழங்கியுமுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் அரசுக்கு பாதகமானால் வரிச்சலுகை நிறுத்தப்படும் என்று இலங்கை அரசுக்கு சார்பான தனது கொள்ளைகளுக்கு விளக்கங் களை தேடிப்பிடி த்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், சாட்சியங்கள் கிடைத்தால் விசாரணை விரைவில் நிறைவு பெறும் என கூறியுள்ளது. பகலில் உள்ள பசு மாடு இவர்களின் கண்ணுக்கு தெரியவில்லையாம். அதனால் இரவில் எருமை மாட்டை தேடி அலையப்போகின்றனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் விசார ணைகளின் தரம் என்ன? அதன் நம்பகத்தன்மை எவ்வளவு? அதன் காலநீட்சி என்ன? என்பவற்றை நாம் அறிய வேண்டும் என்றால் அதற்கு சிறந்த உதாரணமாக 2006 ஆம் ஆண்டு மூதூரில் தொண்டர் நிறுவன பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலையும் அதன் மீதான விசாரணைகளும் ஒரு சிறு உதாரணம். அதாவது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் அதிக செலவு மிக்க போரில் ஐரோப்பிய ஒன்றியம் தனது பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது தான் அவர்கள் மேற்கொண்ட இந்த சலுகை நீடிப்புக்கான ஒரு வரி செய்தி.உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகள் தென் ஆசிய பிராந்தியத்தை எதிர்வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கலாம் என்பது உலக வங்கியின் கணிப்பு.
இந்த பாதிப்புக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளிலும் கடுமையானதாக இருக்கலாம் என்பதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4வீதம் ஆக வீழ்ச்சி காணலாம் என அது எச்சரிக்கையும் விடுத் துள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் நடை பெற்று வரும் போரானது நேரடியாக பொரு ளாதாரத்துடன் தொடர்பு கொண்டது.கடந்த கால படை நடவடிக்கைகளை விட தற்போதைய படை நடவடிக்கை விழுங்கி வரும் பொருளாதார செலவுகள் பல மடங்கு அதிகம். இராணுவம், களமுனைகளில் அதிகளவில் கொல்லப்படும் மற்றும் காயப்படும் படையினருக்கான செலவுகள், பயன்படுத்தப்படும் அதிகளவு வெடி பொருட்களுக்கான செலவுகள், தினமும் வான் தாக்குதலை நடத்தி வரும் விமானங்களின் பராமரிப்பு செலவுகள் என போரின் செலவுகள் மிக மிக அதிகம்.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச்சலுகை மீதான அழுத்தம் இலங்கை அரசுக்கு மேலதிக பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதனால் படை நடவடிக்øகயிலும், அரசின் போர்க் கொள்கைகளிலும் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கரு தப்பட்டது. எனினும் தமிழ் மக்களின் மீதான போரை தணிப்பதற்கு விரும்ப வில்லை என்ற கசப்பான உண்மையை மேற் குலகம் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.மேலும் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் அலையும் அமெரிக்கா தற்போது மேலும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளது. "ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப்புலிகளை மேலும் பலவீனப்படுத்த முடியும் என" இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார்.
அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப்புலிகளை அவர் எவ்வாறு தனிமைப்படுத்த எண்ணியுள்ளார் என்பதை தற்போது அவர் ஏற்படுத்தி வரும் துணைஇராணுவ குழுக்களினுடனான உறவுகள் இலகுவாக உணர்த்தி நிற்கின்றன.இலங்கை அரசிற்கு மேற்குலகமும், பாகிஸ் தான், சீனா போன்ற நாடுகளும் கொடுத்து வரும் வலிமையான ஆதரவுகள் போரை தீவிரப்படுத்தி வருவதுடன் இலங்கை அரசு இந்தியாவை புறம்தள்ளவும் முனைந்துள்ளது.
இலங்கையின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தமிழக அரசியல் தலைவர் கள் தொடர்பாக தெரிவித்த கருத்தின் காரண மும் அதுவே.வன்னி மீதான படை நடவ டிக்கை உக்கிரமடைந்து வரும் அதே சமயம் பல நாடுகளின் போலியான முகத்தி ரைகளும் மெல்ல மெல்ல அகன்று வருகின்றன. ஆனால் ஒன்றுபட்டு வரும் தமிழ் இனம் என்ற எழுச் சிக்கு முன்னால் அவர்களின் அழுத்தங்கள் ஒன் றும் செய்துவிடப்போவ தில்லை.கடந்த மாதம் ஏற்பட்ட அசா தாரண பருவமழையுடன் வன்னி களமுனை ஒரு தேக்க நிலையை அடைந்த போதும், ஆங்காங்கே பல மோதல்களும் இடம்பெற்று வந்திருந்தன.
இராணுவத்தரப்பும் பல பகுதிகளை கைப்பற்றி வருவதாக தொடர்ந்து அறிவித்து வருகின்றது. புதிய படை அணி களும் களமிறக்கப்பட்டு வருகின் றன. அதன் இறுதி வரவாக நடவடிக்கை படையணி நான்கு அல் லது 64 ஆவது டிவிசனை குறிப் பிடலாம்.மூன்று பிரிகேட்டுக்களை கொண்ட இந்த படையணியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நட வடிக்கையில் ஈடுபடும் நோக்கத் துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையணியுடன் வன்னி படை நடவடிக்கைக்கு என இராணுவம் உரு வாக்கியுள்ள படையணிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏழு படைய ணிகளும் சுமார் 50,000 படையினரை கொண் டுள்ளதாக இலங்கை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித் துள்ளதும் இங்கு குறிப் பிடத்தக்கது.
இவற்றிற்கு ஆதரவாக ஏனைய படையணிகளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் நாம் அறிந்தவையே. இந்த ஏழு படையணிகளிலும் நான்கு பிரிகேட்டுக்களை கொண்ட 57 ஆவது படையணி அதிக படையினரை கொண்டதாகும். 57 ஆவது படையணியின் 4 ஆவது பிரிகேட் கொக்காவில் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதே சமயம் ஏனைய மூன்று பிரிகேட்டுக்களும் கிளிநொச்சியை நோக்கிய நகர்வுகளை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக முனைப்பாக்கி வருகின்றன.இந்த நடவடிக்கையில் 58 ஆவது படையணி கிளிநொச் சிக்கு வடமேற்குப்புறம் இருந்து உதவி நகர்வுகளை மேற்கொண்டு வரும் போதும் இந்த இரு படையணிகளும் கடுமையான இழப் புக்களை சந்தித்தும் வருகின்றன.
கிளிநொச்சி நோக்கிய நகர்வின் தொடர்ச்சியாக கடந்த புதன் கிழமை காலை 57 ஆவது படையணி யின் துருப்புக்கள் கிளி நொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளால் மேற்கொண்ட நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன. புதுமுறிப்பு அடம்பனுக்கு தெற்காக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இந்த மோதல்களின் போது படைத்தரப்பு பல்குழல்உந்துகணை செலுத்திகள், எறிகணை வீச்சுக்கள் என சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் படையணிகளை வழிமறித்து தாக்கியுள் ளன. சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற கடுமையான மோதல்களில் படைத்தரப்பு கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது. தமது தரப் பில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் 60 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரி வித்துள்ளது.
எனினும் 40 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்ட துடன், 75க்கு மேற்பட்ட படையினர் காயம டைந்துள்ள தாகவும், 12 படையினரின் உடல்களையும், ஆயுத தளவாடங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதா கவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கிளிநொச்சிக்கு தெற்காக முறிகண்டிக்கு வட மேற்குப்புறம் நடைபெற்ற மோதல்களில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 40 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் வன்னிப் பகுதி யில் ஏற்பட்டுவரும் மோதல்களில் இராணு வம் கணிசமான இழப்புக்களை சந்தித்து வரு கின்றது. விடுதலைப்புலிகளின் எறிகணைத்தõக்குதல்களினால் இராணுவம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருவதாகவும், கடந்த கால மோதல்களில் விடுதலைப்புலிக ளின் எறிகணைத் தாக்குதல்களில் 16,000 படையினர் காயமடைந்துள்ளதாகவும் அண் மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர் காணலில் இராணுவத்தளபதி தெரிவித்திருந் ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.எறிகணைகள் மட்டுமன்றி பொறிவெடிகள், மிதி வெடிகள் என்பனவும் படைத்தரப்புக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இராணுவம் அதிக சுடுவலுவுடனும், அதிக படைவலுவுடனும் வன்னி நடவடிக்கையை திட்டமிட்ட போதே விடுதலைப்புலிகளும் பாரிய இராணுவத்தின் உளவுரணை பொறி வெடிகளை கொண்டு தகர்த்துவிடும் உத்திகளை கடைப்பிடிக்க தீர்மானித்து விட்டதாகவே தோன்றுகின்றது.பொறிவெடிகள் இரு வழிகளில் படையினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அவர்களின் நடவடிக்கைகளில் கால தாமதங்களை ஏற்படுத்தும், இரண்டாவது படையினரின் உளவுறுதியில் கடுமையான தாக்கங் களை அது ஏற்படுத்தலாம். வியட்நாம் போரின் போது அமெரிக்கா கூட்டணி படை அதிக சுடுவலு, படைவலு கொண்டு வியட்னாம் கிராமங்களை முற்றுகையிட்ட போது வியட்கொங் கெரில்லாக்கள் அதனை எதிர்கொள்ள தேர்ந்தெடுத்த ஆயுதம் பொறிவெடிகள் தான்.
சாதாரண மூங்கில் குச்சிகளில் இருந்து அமெரிக்க படையினரால் வானில் இருந்து கொட்டப்பட்டு வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டுகள் வரையிலும் எதிரிக்கான பொறி வெடிகளாகவும், மரணக்கிடங்குகளாகவும் மாற்றம் பெற்றிருந்தன. ஒட்டுமொத்த வியட்நாம் போரில் அமெரிக்க இராணுவம் 58 ஆயிரம் படையினரை இழந்ததுடன், பல இலட்சம் படையினர் காயமடைந்திருந்தனர். இந்த தொகைகளில், 15 வீத மரணங்களும், 17 வீத காயங்களும் பொறிவெடிகளினால் ஏற்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.வன்னி களமுனைகளை பொறுத்தவரையில் ஜொனி மிதிவெடிகள் அதிக சேதங்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்பட்டுவரும் இந்த மிதிவெடிகள் சில சமயங்களில் 60 மி.மீ எறிகணைகளுடன் பொருத்தப்பட்டு தொடர் வெடிப்பதிர்வுகளையும் ஏற்படுத்துவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய படை நடவடிக்கைகளில் 500 க்கு மேற்பட்ட படையினர் ஜொனி மிதி வெடிகளினால் கால்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி, வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் பொறிவெடிகளுடன் போராட வேண்டியு ள்ளதாக தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவம் பல்வேறு விள ம்பரங்கள் மூலம் பல ஆயி ரம் படையினரை சேர்க்க முற்பட்டு வருகின்ற போதும், களமுனைகளில் இருந்து தொடர்ச்சியாக பெருமள வான படையினர் அகற்றப் பட்டு வருவதாகவே படைத்தரப்பு தெரிவித்துள் ளது.இதனிடையே புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தமது பகுதிகளை தக்கவைப்பதில் இராணுவம் பாரிய நெருக்கடிகளை சந் தித்து வருவதாக தெரிவிக்கப் படுகின்றது. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளின் ஊடுருவல்களை தடுக்கும் நோக்கத்துடன் தலா 10 பேர் அடங்கிய 60 வரையிலான இராணுவத்தின் சிறப்பு அணி களை தொடர்ச்சியான சுற்றுக் காவல் நடவ டிக்கையில் தாம் ஈடுபடுத்தி வருவதாக படைத் தளபதி தெரிவித்துள்ளார். மேலும் கைப்பற்றப் பட்ட பகுதிகளை பாதுகாப் பதற்கு மேலும் 50 தொடக் கம் 60 பற்றாலியன் படையி னர் தேவை என்ற கருத்துக்களும் தோன்றியுள் ளன.
வன்னிக் களமுனை மெல்ல மெல்ல தனது உக்கி ரத்தை காட்ட ஆரம்பித்துள் ளது. பல முனைகளை திறப் பதன் மூலம் வேகமாக பல கிராமங்களை கைப்பற்ற முனைந்த படைத்தரப்பு தற்போது அவற்றை தக்க வைப்பதற்கு அரும்பாடுபட்டு வருகின்றது. படை நட வடிக்கையை பொறுத்த வரையில் அதன் நீள அதிகரிப்பு நடவடிக்கையில் ஈடு பட்டுவரும் தரப்பிற்கு எதிர்மறை யான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது போரி யல் ஆய்வாளர்களின் கருத்துக்கள். இது வன்னி களமுனைக்கும் சரியாக பொருந்தக் கூடியதொன்றே.
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா முப்படையினரும் கூட்டுத்தாக்குதல்: பெண் பலி; 60 பேர் காயம்
|
|
|
வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா வான், கடல் மற்றும் தரைப்படையினர் கூட்டாக இணைந்து பொதுமக்களை இலக்கு வைத்து செறிவான தாக்குதலை நடத்தினர். இதில் 40 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கல்லாறு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு தேராவில் பகுதியில் பொது மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பத்து பேர் காயமடைந்தனர். ரமேஸ்குமார் சஞ்சீவன் (வயது இரண்டரை) செல்வராசா தர்சிகா (வயது 15) ஆ.பிரமிலன் (வயது 17) மரியதாஸ் அந்தோனி (வயது 85) பொன்னம்மா (வயது 75) ம.சண்முகலிங்கம் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும், நான்கு பேரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. காயமடைந்தவர்கள், தற்போது தர்மபுரத்தில் இயங்கிவரும், கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மற்றைய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரம் தெற்குப் பகுதியில் இன்று காலை முதல் சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த மற்றும் நிலையான பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். வட்டக்கச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். சுண்டிக்குளம் பகுதியில் இன்று முற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலிலும் வான்குண்டுத் தாக்குதலிலும் பொதுமக்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
http://www.puthinam.com/full.php?2b1VoKe0dAcYA0ecAA4o3b4C6DD4d2f1e2cc2AmS3d424OO2a030Mt3e
மறைவுக்குப் பின்னரும் புகழ்!
மறைவுக்குப் பின்னரும் புகழ்!
"சுவாமி பிறரை அழிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், நாமே அழிவோம் என்றீர்களே, அதில் ஒரு சந்தேகம்!" சொன்ன சீடனை, "என்ன?" என்பது போல் நோக்கினார் குரு.
"தேய்வதும் அழிவதும் எல்லோருக்கும் உண்டுதானே. பிறருக்குத் தீங்கு நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் அது உறுதிதானே...பிறகு ஏன் பகை கூடாது?"
குரு மவுனமாகச் சென்று, ஒரு சந்தனக் கட்டையையும் சிறு ரப்பர் துண்டையும் எடுத்து வந்தார். இரண்டையும் சீடனிடம் தந்து கல்லில் உரசித் தேய்க்கச் சொன்னார்.
அப்படியே சீடனும் செய்தான்.
சிறிது நேரத்துக்குப் பின்பு சீடனிடம் குரு கேட்டார்.
"இப்போது உன் கையில் என்ன இருக்கிறது?"
"இரண்டுமே தேய்ந்து கரைந்து விட்டன குருவே"
"நன்றாகப் பார்... ரப்பர் மட்டும்தான் அழிந்து விட்டது. சந்தனக்கட்டை கரைந்தாலும் அதன் மணம் இன்னும் வீசுகிறது. அரைத்த சந்தனமாகவும் அது பயன்படும். இப்படித்தான் , எல்லோருக்கும் இறுதி உறுதி என்றாலும் பிறருக்குத் தீங்கு செய்யாமலிருப்பவர். அவரது மறைவுக்குப் பின்னரும் புகழ் மணக்க இருப்பார்." என்றார் அந்தக் குரு.