சமீபத்திய பதிவுகள்

வன்னேரிக்குளம் மோதலில் 85 படையினர் பலி - 280பேர் காயம் - புதிய தகவல் வெளியாகின

>> Saturday, September 6, 2008

   
 
 
03_001.jpgவன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 85க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 280க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பை ஆதாரங்காட்டி 'தமிழ்நெற்'செய்திவெளியிட்டுள்ளது.
கொழும்பு பொரளையில் ஜயரடனம் மலர் சாலையிலும் இன்னுமொரு மலர்சாலையிலும் 56 படையினரின் சடலங்கள் அஞ்சலிக்கா வைக்கப்பட்டு நல்லக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த இணைத்தளம் இதன் பின்னர் 29 சடலங்கள் விடுதலைப்புலிகளினால் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் முறிடிப்பு தாக்குதலையடுத்து படுகாயமடைந்த நிலையில் தென்னிலங்கையில் உள்ள இராணுவ வைத்தியசாலைகள் நிரம்பிய நிலையில் உள்ளதாகவும் படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி தமிழ் நெற் செய்திவெளியிட்டுள்ளது.
இந்த மோதலில் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பதுங்குகுழிகளை அழிப்பதற்கு பயன்படுத்திய தாங்கியெதிர்ப்பு துப்பாக்கிகள் கைகொடுக்காத நிலையில் அவை தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகளில் சிக்கியது குறித்து கடும் அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

மதவெறியர்களால் 50 ஆயிரம் கிறிஸ்துவர்கள் ஒரிசா காடுகளில் மறைந்து தவிக்கின்றனர்

புவனேஸ்வர், செப். 5- ஒரிசாவில் சங் பரிவார அமைப்புகளின் தாக் குதல்களையடுத்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களில் 50 ஆயிரம் பேர் தப்பியோடி, உயிருக்குப் பயந்து காடுகளில் ஒளிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிலர் மிகக் குறைந்த அள வில் உள்ள அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். 4 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வீடுகள் முழு மையாக இடித்து நொறுக்கப் பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தேவால யங்கள் எரிக்கப்பட்டுள்ளன. சிறிஸ்தவர்களைக் கொன்று குவித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்ற வலியுறுத்தி வரும் கொலைகாரக் கும்பல் களிடமிருந்து தப்பித்த கிறிஸ் தவர்கள் காடுகளுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து வாழ்கின்றனர். இந்த வன்முறை ஒரிசா மாநிலத்தில் மட்டுமல்லாது, தற்போது அண்டை மாநில மான மத்தியப் பிரதேச மாநி லத்திலும் பரவியுள்ளது.

இந்நிலையில் பொதுமக் கள் குழு ஒன்று திங்கள் கிழ மையன்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தது. திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மகேஷ் பட் தலைமையிலான அந்தக் குழுவில் ஜாமியத் உலேமா தலைவர் மவுலானா மஹ்மூத் மதானி, தேசிய ஒருமைப்பாட் டுக் குழு உறுப்பினர் டாக்டர் ஜான் தயால், ஒரிசா ஆர்ச் பிஷப் ரேபேல் சீனால், டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் கான் செசாவ், அனைத்திந்தியக் கிறிஸ்தவக் குழுச் செயலாளர் மது சந்திரா, டில்லி மற்றும் மும்பை கத்தோலிக்கர் மற்றும் மஹாராஷ்டிர மாநில சிறுபான் மையினர் ஆணையத் தலைவர் டாக்டர் ஆப்ரகாம் மத்தாய் ஆகியோர் இடம் பெற்றிருந் தனர்.

இந்திய அரசியல் சட்டப் பிரிவு 355 இன் கீழ் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிந் துத்துவ வன்முறையாளர்களிட மிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கப் போதிய நடவ டிக்கை எடுக்க 355 ஆவது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக் குழு வினர் குடியரசுத் தலைவரைக் கோரினர். இம்மனுவில் ஒரிசா நிலைமை பற்றி விவரிக்கப் பட்டிருக்கிறது. விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த லட்சும ணானந்த சரசுவதி, மாவோ யிஸ்டுகளால் கொல்லப்பட்டி ருக்கலாம் என்று கூறப்பட் டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தாக் கப்பட்டதைப் போலவே இப் போதும் கந்தமால் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படவேண்டும் என்று குழு கூறியுள்ளது.

 

 

source: http://idhuthanunmai.blogspot.com/2008/09/blog-post_1382.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP