நட்பு முறிவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை : இந்திய குழந்தைகளின் மிகப் பெரிய கவலை இது
>> Sunday, April 25, 2010
பெங்களூரு : இந்தியாவில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோரின் மிகப்பெரிய கவலை எது தெரியுமா? உயிருக்கு உயிராக பழகும் நண்பர்கள் பிரிந்து செல்வது தான். நாட்டின் முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் தான், இந்த தகவல் தெரியவந்துள்ளது.
எஜுமீடியா இந்தியா பி. லிட்., என்ற நிறுவனம், சமீபத்தில் பெங்களூரு, மும்பை, பாட்னா, நாக்பூர், ஆக்ரா, மதுரை ஆகிய நகர்களில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 532 குழந்தைகளிடம், ஒரு ஆய்வு மேற்கொண்டது. அனைத்து குழந்தைகளையும் நேரில் வரவழைத்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தனித்தனியாக, 'உங்களின் மிகப்பெரிய கவலை எது? எந்த ஒரு பிரச்னை உங்களுக்கு மிகவும் மனவேதனையை அளிக்கும்?' என கேள்விகள் கேட்டது. தோல்வி, கோபத்தை அடக்க முடியாதது, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, பொறாமை, ஆண், பெண் சமத்துவம் இன்மை, நட்பு முறிவு, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவை உள்ளிட்ட 20 முக்கிய பிரச்னைகள் அவர்கள் முன் வைக்கப்பட்டு, இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும்படி, அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இதில், பெரும்பாலான குழந்தைகள், 'ஏதாவது ஒரு பிரச்னையால் நட்பு முறிவு ஏற்பட்டு, நண்பர்கள் பிரிந்து செல்வது தான்,எங்களுக்கு மிகவும் மன வேதனை அளிக்கும் விஷயம்' என, கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தோல்வியால் ஏற்படும் பயம், தங்களுக்கு மிகப் பெரிய கவலையை அளிப்பதாக 10.4 சதவீதம் குழந்தைகள் கூறியுள்ளனர். மூன்றாவதாக கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது, தங்களுக்கு பெரியவருத்தம் அளிப்பதாக 9.5 சதவீதம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
source:dinamalar
--
http://thamilislam.tk
Read more...