சமீபத்திய பதிவுகள்

மண்ணின் மழலைகள்

>> Monday, June 2, 2008

மண்ணின் மழலைகள்

 

      மியான்யங்: சீனாவை சமீபத்தில் உலுக்கிய பூகம்பத்தில் சொந்த நாட்டில் அகதிகளாகிப் போனவர்களின் குழந்தைகள் இவர்கள். மியான்யங் நகரின் ஹாங்டூ பகுதியில் ஒவ்வொரு வேளையும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து, விளையாட மனமின்றி பசியோடு காத்திருப்பவர்கள்.

50 ஆயிரம் பேரை பலி வாங்கி அமைதியாகிப் போன சிசியான் மாகாணத்தின் இடிபாடுகளில் இன்னும் தேடுதல் பணி நீடிக்கிறது. பூமியின் கோர தாண்டவம் என்ன என்று தெரியாத பிஞ்சு வயதில், குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்கள் முகாமுக்குத் திரும்பும் மண்ணின் மழலைகள் இவர்கள்.

StumbleUpon.com Read more...

லண்டனிலும் எதிர்ப்பு

லண்டனிலும் எதிர்ப்பு


   லண்டன்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை அரசு வாங்குவதில் இங்கு மட்டுமல்ல, இங்கிலாந்திலும் எதிர்ப்புதான் போலிருக்கிறது. லண்டனின் புகழ்பெற்ற ஹீத்ரூ விமான நிலையத்தில் 3வது ஓடுபாதைக்காக விரிவாக்கம் செய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

அதுபற்றிய அறிவிப்பு வெளியானதும், அந்தப்பகுதியில் நிலம் வைத்துள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஆங்கிலத்தில் ÔநோÕ அமைத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கையில் வாசக அட்டைகளுடன் பங்கேற்றனர்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP