சமீபத்திய பதிவுகள்

21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது - தமிழீழ விடுதலைப் புலிகள்

>> Friday, February 13, 2009

  
 
21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது.

 
அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள் மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.

 
சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது.

 
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர்.

 
அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

 
எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர். போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 
மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர். 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 
இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும்.

 
ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 
நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம்.

 
இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத் தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்கா அரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1908&cntnt01origid=52&cntnt01returnid=51

StumbleUpon.com Read more...

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ? - ஒரு தமிழனின் தவிப்பு

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ? - ஒரு தமிழனின் தவிப்பு
நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !
இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்அதையே, அதை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈர்த்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???


குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???


வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.


உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.


உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?


உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.


உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".


உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".


உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".


உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".


உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".


உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".


உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".


உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".


உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".


உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".


உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".


உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".


உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".


உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".


அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.
உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.
அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.
மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.
உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

இலங்கை:ஒரு தீவு,இரண்டு தனி நாடுகள்:தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள்

Sri Lanka : One Island, Two NationsStumbleUpon.com Read more...

நக்கீரன் இணையம் வெளியிட்டுள்ள தீக்குளித்து இறந்த முருகதாசன் எழுதிய கடைசிக்கடிதம்

தீக்குளித்து இறந்த முருகதாசன் எழுதிய கடைசிக்கடிதம்

இலங்கை பிரச்சனைக்காக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் முருகதாசன்  நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

இறப்பதற்கு முன்பு முருகதாசன் எழுதிய கடிதம்:

                                       
                                     
                                       

                                       

                                       

                                       

                                       

                                       
 

StumbleUpon.com Read more...

கடைசியாக வந்த செய்தி:ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி இறுதிக்குரல்

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி எறிகணை வீச்சில் மரணம் !

சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர். தயாகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகளாலும் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு தொடர்பாக தற்போது புலம் பெயர் ஊடகங்களில் தொடர் உணர்வலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார்.
வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர்.
மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்ட இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். வன்னியில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் “மக்கள் காப்பு வலய” பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகள் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர்.
நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக தெரிவிக்கின்றார். இதில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 358 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தளன் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 10 பேர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகையிலேயே உயிரிழந்து விட்டனர்.
காயமடைந்த ஏனையவர்களின் நிலைமையும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் இறுதியாக புலம்பெயர் மக்களுக்காக வழங்கிய ஆய்வைக் கேட்க இங்கே அழுத்துங்கள்
http://eurotvlive.com/download/20090124/20090124_Saththiyamoorthy.mp3

http://www.alaikal.com/news/?p=12271

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP