சமீபத்திய பதிவுகள்

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்

>> Tuesday, November 16, 2010

 
 

ஹெடரும் புட்டரும்:
நீங்கள் தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் ஒவ்வொரு ஸ்லைடிலும் சில தகவல்களைக் காட்ட விரும்பலாம். எடுத்துக்காட்டாக குறிப்பு, சிறு தகவல்,நேரம், ஸ்லைட் எண் போன்றவற்றைத் தர விரும்பலாம். இதனை எப்படி மேற்கொள்வது என இந்த டிப்ஸில் பார்க்கலாம். ஹெடர் மற்றும் புட்டர்களை எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டால் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கான வழிகளை அறிந்து கொள்ளலாம். 
பிரசன்டேஷனைத் திறந்து கொண்டு View  மெனு செல்லவும். அங்கு'Header and Footer' என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். 'Header and Footer' என்ற தலைப்பில் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் 'Slide'  என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் என்ற ஆப்ஷன்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது 'Update automatically Date and time'  என்ற ஆப்ஷனையும் மேற்கொள்ளலாம். இது 'Include on slide'  என்ற பிரிவில் கிடைக்க வரும். ஸ்லைடில் நம்பர் சேர்த்திட'Slide number'  என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். புட்டரில் சேர்த்திட 'Footer' என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பாக்ஸில் என்ன டெக்ஸ்ட் இணைத்திட வேண்டுமோ அதனை டைப் செய்திடவும். அடுத்து ஸ்லைட் டேப் செட்டிங்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட Apply  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.  'Notes and Handouts'  என்ற டேப்பின் கீழ் 'Header'  என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் 'Date and time' என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் 'Apply to All'  என்பதில் கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி ஹெடர் புட்டர் இடங்களில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் மற்றும் எண்கள், தேதிகள் தெரியவரும். எதனையாவது மாற்ற வேண்டும் என எண்ணினால மேலே சொன்ன வகையில் மீண்டும் செயல்பட்டு முடிக்கவும். 
இன்டர்நெட் இன்ஸெர்ட்:
இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர்நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.
இணையத்தில் காட்ட:
வேர்ட் பைலை எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்து வெளியிடுவது போல பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பிரசன்டேஷன் பைலாக இயக்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் காட்ட கீழ்க்காணும் படி செயல்படவும். 
1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும். 
2. அடுத்து பைல் மெனுவில் 'Save as Web Page' என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். . 'Save As'  என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். 'File name' என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும். 
3. இந்த 'Save As'  டயலாக் பாக்ஸில் 'Publish' என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். 
4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை'Browser support' என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் 'Web Options' என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம். இணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினையும் வரையறை செய்திடலாம். பின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish  பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பிரசன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP