சமீபத்திய பதிவுகள்

2010 ல் உலகிலேயே மிகவேகமான 10 பைக்(இருசக்கர வாகனம்) படங்கள்:Top 10 Fastest Bikes 2010

>> Monday, November 29, 2010

உலகிலேயே மிகவேகமான 10 பைக்(இருசக்கர வாகனம்) படங்கள் கண்டிப்பான 
< இளைஞர்களை கவரும் என்று நம்புகிறேன்.
Top 10 fastest bikes, hopefully we'll be impressing the boys with this post.
 Here is an exhaustive list of top 10 fastest superbikes. We have tried our level best
 to gather information from various sources, and inter-tallied them. This
seems to be a viable answer. Top speed would be considered here under testing driving
conditions. If you're about own anyone please do let us know how it feels to ride them.
 Here goes top 10 fastest bikes in the world.

10. Ducati 848 Engine: 849 cc (51.8 cu in), 4 valves per cylinder desmodromic liquid cooled L-twin
Top speed: 159 miles per hour (256km/h)
Power: 100 kW (134 hp) @ 10,000 rpm
Transmission: 6-speed, wet clutch

Replacing the Ducati 749, the 848 weighs 370 pounds and was announced in 2007.
 The 2009 model was available in Red and Pearl White color. The 848 shares
more features with 1198 than its predecessor, the 749, like single-sided swingarm,
same rake and trail and same valve angles among many. 9 more after the break...

09. Aprilia RSV4
Engine: 999.6 cc V4
Top speed: 175 miles per hour (281km/h)
Power: 132 kW (178 hp) @ 12,500 rpm
Transmission: 6-speed, wet clutch

This is the successor to the Aprilia RSV 1000 R motorcycle which began
manufacturing in 2004. The RSV4 was unveiled at the International Piaggio
 Group Convention in Milan, Italy. During its first full season of World Superbike
 racing, Max Biaggi aboard the RSV4 reached the podium 9 times, and won one
race at the Brno Circuit.

08. Suzuki GSX-R750
Engine: 4-stroke, liquid-cooled, DOHC
Top speed: 190 miles per hour (306km/h)
Power: 110.3 kW (150 hp) @ 13,200 rpm
Transmission: 6-speed constant mesh

Introduced in 1985, the Suzuki GSX-R750 features a 750 CC 4-stroke
 engine and weighs 437 pounds. It easily goes to 300+ km/h and is
priced at $12,000. It has an excellent body work and is the most powerful,
efficient and cleanest running production engine Suzuki has ever produced.

07. Yamaha YZF R1Engine: Forward Inclined Parallel 4-cylinder, 20 valves, DOHC, liquid-cooled
Top Speed: 186miles per hour (297 km/h)
Power: 128.2 horsepower (95.6 kW) at 10000 rpm
Transmission: Constant mesh 6-speed

Lets discuss 7th position in the list of top 10 current fastest bikes in the world.
Yamaha launched the YZF-R1 after redesigning the Genesis engine to offset the
 crankshaft, gearbox input and output shafts and this "compacting" of the engine
 yielded a huge dividend in that the total engine length was now very short.
 The Yamaha YZF-R1 motorcycle, introduced in 1998, was the first significant
motorcycle in the true liter class (1,000 cc) "handling arms race" between
the Japanese Big Four motorcycle manufacturers (Honda, Kawasaki, Suzuki and Yamaha).
When introduced, it took the class closer to a true racing motorcycle, and increased the
 handling capabilities. May be some more improvements it might push it further to
the top among the top 10 fastest bikes in the world.

06. Ducati 1198R
Engine: 90° V-twin cylinder, 4-valve per cylinder Desmodromic, liquid cooled
Top speed: 185 miles per hour (299km/h)
Power: 134 kW (180 hp) @ 9,750 rpm
Transmission: 6-speed
Introduced in 2009, the Ducati 1998 is a successor to the Ducati 1098. The
1198R from the Italian manufacturer is available in red, black and white.

05. Kawasaki Ninja ZX-14 – Electronically limited to 299 km/h


Engine: 1352 cc four-stroke, liquid-cooled,DOHC, four valve per cylinder,inline-four
Top speed: 185 miles per hour (299km/h)
Power: 142 kW (190 hp) @ 12,500 rpm
Transmission: 6-speed

This is Kawasaki's most powerful current bike. Introduced in Tokyo 2005 show,
the ZX-14 does 0–60 mph in 2.5 seconds. Also known as ZZR1400, it was also
featured in Fifth Gear. It can cover one-fourth of a mile in 9.783 seconds.

04. Kawasaki Ninja ZX-10REngine: 998 cc, 4-stroke, 4-cylinder, liquid-cooled, DOHC, 4-valve cylinder head
Top speed: 186 miles per hour (300km/h)
Power: 147 kW (197 hp) @ 12,500 rpm
Transmission: 6-speed

With the highest theft and damage loss claim rate of any registered motorcycle,
 the Ninja ZX-10R is at number four. It is a successor to the ZX-9R sport bike.
 It boasts ultra-narrow chassis, low weight, and radial brakes.

03. Suzuki HayabusaEngine: 1340 cc (82 cu in), 4-stroke, four-cylinder, liquid-cooled, DOHC, 16-valve
Top Speed: 188 miles per hour (303 km/h)
Power: 197 horsepower (147 kW) @ 6750 rpm
Transmission: 6-speed, constant mesh
Standing 3rd in the list of top 10 fastest superbikes the name Hayabusa,
 translates directly from the Japanese as Pergerine Falcon, the bird commonly
attributed of achieving speeds of over 180 mph (290 km/h) and predator of the
common blackbird. The name Suzuki Hayabusa is a subtle reference to
Honda's competing Hawk models. When introduced in 1999, Suzuki Hayabusa
overtook the Honda CBR1100XX Super Blackbird as the fastest production motorcycle.
 The first generation of the Hayabusa was called the GSX1300R and was powered by
a 1299 cc (79.2 cu in) inline-4 liquid-cooled engine. In the US, the 2008 suzuki
 hayabusa will boast a price tag of $11,999 and stands still in the list of top 10 fastest bikes.

02. Suzuki GSX-R1000Engine: 999 cc four-cylinder 4-stroke, DOHC, 16-valve, TSCC
Top speed: 185 miles per hour (299km/h)
Power: 142 kW (191 hp) @ 12,000 rpm
Transmission: 6-speed, constant mesh, Back-torque limiting clutch

Introduced in 2001, the YZF R1 is powered by a liquid-cooled 999 cc inline
four-cylinder 4-stroke engine. It too tops at 185 miles per hour. It features
dual hydraulic disc brakes at the front and single ones at the rear.

01. MTT Turbine Superbike Y2K


Engine: Rolls-Royce 250-C20 turbo shaft
Top Speed: 227 miles per hour (365 km/h)
Power: 320 horsepower (239 kW) @ 52,000 rpm
Transmission: 2-speed automatic

MTT Turbine Superbike, also known as Y2K Turbine Superbike, is the
world's second wheel driven motorcycle powered by a turbine engine,
created by Ted McIntyre of Marine Turbine Technologies Inc and it appears
 just below Suzuki GSX-R750. Powered by a Rolls Royce Allison 250
series turboshaft engine, producing 238kW (320hp), this motorcycle has
 a recorded top speed of 227 mph (365 km/h), with a price tag of US$150,000.
 It is recognized by Guinness World Records as the "Most powerful production
 motorcycle" and the "Most expensive production motorcycle". Unlike other
contemporary motorcycles (such as the Hayabusa), 2001 and later models of
MTT Turbine SUPERBIKE do not have the 300 km/h speed limit self-imposed
by Japanese manufacturers. MTT has achieved the 1st rank among the top 10 fastest bikes.

source:realitypod

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கணவர்களை உளவு பார்க்கும் பெண்கள்!

>> Sunday, November 28, 2010

கட்டார் நாட்டில் தங்கள் கணவர் மீது சந்தேகப்படும் பெண்கள் அவர்களை உளவு பார்ப்பதற்காக அவர்களது சட்டைப்பையில் கமரா பொருத்தப்பட்ட பேனாக்களை செருகிவிடுவது. சிகரெட் லைட்டர்களை வைத்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

சில பெண்களின் கணவர்கள் கொடுக்கும் இதுபோன்ற அன்பளிப்புகளை கணவர்கள் ஏற்க மறுப்பதால், சில பெண்கள் கார்களில் உளவு பார்க்கும் சாதனங்களை பொருத்தி வைத்து விடுகிறார்கள்.

 

கட்டார் நாட்டு பெண்களிடம் நடத்திய ஆய்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவரை வேவுபார்ப்பதாக ஒப்புக் கொண்டனர்.

 

ஒரு பெண் தன் தந்தையின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததால், அவரை வேவு பார்ப்பதற்காக ஒரு மினி கமராவை பொருத்தி விட்டார். அப்போது தான் அவர் வேறு ஓரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது.

 

உளவு பார்ப்பதற்கு பயன்படும் மினி கமராக்கள் பொருத்தப்பட்ட பேனாக்கள், சிகரெட் லைட்டர்கள் கத்தார் மார்க்கெட்டில் தாராளமாக கிடைக்கின்றன..


source:tamilcnn--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் தலைமை யார் யார் தப்பிச் சென்றனர்? (படங்கள் இணைப்பு)

>> Friday, November 26, 2010


மே 2009 ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது பல அழிவுகள் நடந்ததுஎன்னவோ உண்மைதான் ! புலிகளின் பல முக்கிய களமுனைத்தளபதிகள் கொல்லப்பட்டதும் உண்மைதான், ஆனால் நாம் அழிந்துவிட்டோமா ? அதற்கு அப்பால் யார் யார் அங்கிருந்து தப்பிச்சென்றார்கள் ? எவர் எவர் இடம் மாறினார்கள் ? இன்னும் புரியாதபுதிராகவே உள்ளதா ? சுமார் 23 படகுகள் முள்ளிவாய்க்காலில் இருந்துஇந்துமா கடலின் தெற்கு திசை நோக்கிப் புறப்பட்டதாக தகவல்கள் சொன்னாலும், அந்தநடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் சில செய்திகள் இருக்கின்றதே என்றுசொல்லும்சிலர்.... பலர் பலவகையான கருத்துக்களைக் கூறிவந்தாலும் இது தொடர்பானஆதாரங்கள் எவரிடமும் இருக்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்கத் துடித்தசெய்திகள் சிலவும் வெறும் ஊகமாகவே இருந்து வந்துள்ளது. உண்மை நிலை தான் என்னஎன பலரும் யோசிக்கும் தருணம் இது.
ஆனால் உண்மை வெகுநாள் உறங்குமோ?

பல காலமாக புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்து, இன்று கயவர்கள் கைகளில் சிக்கித்தவிக்கும் வன்னி நிலப்பரப்பில் இருந்து, சில புகைப்படங்களும் ஒரு சில தகவல்களும்உற்சாகம் தரக்கூடிய செய்திகளைச் சுமந்து வந்துள்ளன,,,,,,, அதுதான் என்ன ? பலநாட்களாக இருந்துவரும் கேள்விகளுக்கு அது விடைதருமா ? வெறுமனவே ஒரு சுரங்கப்பாதையைக் காட்டி ஒரு செய்தி சொல்வதாக எண்ணவேண்டாம். ஏன் எனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இருந்த பல முக்கிய தளபதிகளுக்கும்போராளிகளுக்கும் நாம் இங்கு காண்பிக்கும் படம் நன்கு புரியும். அது போன்றசுரங்கங்களைக் கிண்டிய போராளிகள் கூட இன்னும் உயிரோடு இருக்கலாம் !அவர்களுக்கு இது எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களும் தெரிந்திருக்கும்.

ஆம்! நீங்கள் இங்கே பார்ப்பது புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் சில களமுனைத்தளபதிகளும் தங்கியிருந்த இடத்தில் காணப்படும் சுரங்கப் பாதை. ஆனால் அவைதற்போது கடல் நீரால் நிரப்பப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. அதாவது இச் சுரங்கப்பாதை நேரடியாக கடலோடு தொடர்புடையதாக இருந்ததாகவும், அதனூடாக தப்பிச்சென்ற பின்னர் அச் சுரங்கப்பாதையை யாரோ வெடிவைத்துத் தகர்த்து விட்டதாகவும்இலங்கை இராணுவமே தன் வாயால் கூறியுள்ளது. சுரங்கம் தகர்க்கப்பட்ட காரணத்தால்கடல் நீர் அங்கு புகுந்துள்ளது.அப்பாதை எங்கே செல்கிறது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை என்கிறதுஇராணுவம். அப்பாதை எங்கே செல்கிறது என்று சுழியோடிப் போய் பார்ப்பதற்கு எவரும்தயார் இல்லை. காரணம் அங்கே நீருக்கு அடியில் மேலும் கண்ணிவெடிகள் அல்லதுபொறிவெடிகள் இருக்கலாம், அவை வெடித்தால் உயிரோடு திரும்பமுடியாது என்றுஎல்லோரும் அஞ்சுவதே காரணம் ஆகும்.

இவ்வாறானதொரு நிலையில் இச் சுரங்கம் காணப்படுவதாகவும், அங்கே விட்டுச்செல்லப்பட்ட பொருட்களைப் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் மூத்தஉறுப்பினர்கள் அங்கே இருந்திருக்கக் கூடும் எனவும் இராணுவமே ஒத்துக்கொள்கிறது.இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிச் சமரின்போது,பல இடங்களைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கே காணப்பட்ட சில அதிசயஇடங்களையும் புகைப்படம் பிடித்து வைத்துள்ளனர். அவற்றில் இவையும் அடங்கும்.போர்க்களத்தில் நின்ற இராணுவத்தினர் இச் சுரங்கத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர்.

எமக்கு கிடைக்கப்பெற்ற இச் செய்திகளை நாம் வெளியிட்டுள்ளோம். தமிழீழ மக்கள்மட்டுமல்ல உலகத் தமிழர்கள் மனதிலும் ஒரு உற்சாகம் பிறக்கும் செய்தியாக இதுஇருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எங்கள் மனதை நிரப்புகிறது. அதை நாம் உணர்கிறோம்!

ஆயிரம் ஆயிரம் போராளிகள் எதற்காகப் போராடினார்களோ, ஏன் வீர மறவர்களாகிக்களமாடினார்களோ அவர்கள் கனவுகள் பலிக்கவேண்டும் ! எதை எமது தேசிய தலைவர்விரும்பினாரோ, எந்த விடுதலைக் காற்றை அவர் சுவாசிக்க நினைத்தாரோ அதனை நாம்தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்! தமிழீழம் எங்கள் மூச்சு! தமிழீழம் எங்கள் பேச்சு!தமிழீழம் எங்கள் உயிர்! என ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்திடவேண்டும!

"தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் நாங்கள் விடுதலைப் புலிகள்""என்றான் ஒரு கவிஞன் ! அதன் உயிர் நாடியாம் எம் தேசிய தலைவர் பிறந்த நாளில் நாம்ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்! எங்கு வாழ்ந்தாலும் எத்தகைய துயர் வந்தாலும்எமது ஈழவிடுதலை என்னும் தீ ஓயாது ! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும்தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் நாம் இருக்கமாட்டோம் என்பதேயாகும். போராடும்இனம் தோற்றதாக வரலாறு இல்லை ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் எமதுஇலக்கை எட்டும்வரை விடுதலைப் போர் ஓயாது என்னும் உறுதிமொழியைஎடுத்துக்கொள்வோம்!

எம்மோடு போகாமல் எம் சந்ததிக்கும் விடுதலை உணர்வைக் கற்றுக்கொடுப்போம் !புலத்தில் பிறந்தாலும் எம் பிள்ளைகளுக்கு விடுதலை என்னும் தீ இன்னும் அணைந்துவிடவில்லை என்பதை கூறிக்கொள்வோம் ! இனி வரும் வரலாறு எம் கதைகளைசரித்திரமாக எழுதட்டும்!. அதில் ஒவ்வொரு தமிழனும் இடம்பெறட்டும்!

அதிர்வின் ஆசிரியபீடம்

இச் செய்தி அதிர்விலிருந்து...

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அண்ணனின் பிறந்தநாள் 26/11 புதிய காணொளி


StumbleUpon.com Read more...

திருமணமாகாத பெண்கள் மொபைல் போனில் பேச தடை!

>> Wednesday, November 24, 2010

தகவல் தொழிநுட்ப யுகத்தில் இப்படியும் ஒரு உத்தரவா என்று? தலைப்பைப் பார்த்தவுடன் பயந்து விடாதீர்கள். உண்மைதான் இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் காதல் திருமணத்தை தடுக்கும் வகையில், திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

 

வட மாநிலங்களில் உள்ள கிராமங்களில் காதல் திருமணம், ஒரே கோத்திரத்தில் திருமணம் ஆகியவைக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. காதல் திருமணம் மற்றும் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யும் தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பஞ்சாயத்துகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம், லங்க் கிராமத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் கூடி, கிராமத்திலுள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர்.

 

இதுகுறித்து பஞ்சாயத்து செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

 

"மொபைல் போன் இளைஞர்களிடத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமாகாத பெண்கள் காதல் திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன், இதே மாவட்டத்தில் உள்ள சோரம் கிராமத்தின் அனைத்து காப் பஞ்சாயத்தில், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதை தடுக்க, 1955ம் ஆண்டு இந்து திருமண சட்டத்தில் மாறுதல் கொண்டு வர வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


source:tamilcnn--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உயிரோடு இருப்பவருக்கு சிலை வைக்கும் அறியாமை

உயிரோடு இருக்கும் இயேசுவுக்கு ஒரு சிலை வைத்து அதில் தங்க கிரீடம் வைக்கும் அறியாமையை நினைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

உலகின் மிக உயரமான புதிய யேசு கிறிஸ்த்துவின் சிலை போலந்தில் திறக்கப்பட்டுள்ளது.
இச்சிலையின் அறிமுக விழாவுக்காக சுமார் 15,000 யாத்திரிகள் போலந்தின் ஸ்வெய்பாட்ஷின் நகரின் பாலிஸ் டவுன் எனும் இடத்தில் குவிந்தனர்.

இது தொடர்பில் போலந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், யேசு கிறித்தவை பெருமைப்படுத்தும் விதத்தில் மாபெரும் விழாவாக இந்நிகழ்வு கொண்டாடப்படுவதாகவும், 'இப்பிரபஞ்சத்தின் மாமன்னர் கிறிஸ்த்து' என பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை யாத்திரிகர்கள் ஏந்தியவண்ணம் இவ்விழாவில் கலந்துகொண்டதாகவும் கூறியுள்ளன.
33 வருடங்கள் யேசு கிறிஸ்த்து பூமியில் வாழ்ந்ததன் அடையாளமாக 33 மீற்றர் உயரத்தில் இச்சிலை கட்டப்பட்டுள்லது.

இதுவரை உலகில் மிக உயரமான யேசு கிறிஸ்த்துவின் சிலையாக இருந்து வந்த பிரேஸிலின் ரியோ டி ஜனேரியோ, ரெடிமீர் கிரிஸ்த்து சிலையிலும் பார்க்க, போலந்திலுள்ள இச் சிலை மூன்று மீற்றர் உயரம் கூடியதாகும்.

இச்சிலை 33 மீற்றர் உயரம் என்ற போதும், 3 மீற்றர் உயரத்தில் தங்கக்கிரீடம் பொருத்தப்பட்டிருப்பதால் இச்சிலையின் மொத்த உயரம் 36 மீற்றர் ஆகும். இதன் மொத்த எடை 440 டொன் ஆகும்.

போலந்துக்கு வரும் கத்தோலிக்க யாத்திரிகள் மத்தியில் இச்சிலை மாபெரும் வரவேற்பை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.


source:uyir

StumbleUpon.com Read more...

சமையல் குறிப்புகள்

>> Tuesday, November 23, 2010வெனிலா பர்பி

தேவையானவை:

முந்திரிப் பருப்பு  - 100 கிராம், தேங்காய்ப்பூ - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் -  50 கிராம், வெனிலா எசென்ஸ் - சில துளிகள்.

எப்படிச் செய்வது?

முந்திரிப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்பு தேங்காய் பூ, முந்திரிப் பருப்பு இரண்டையும் நைஸôக அரைக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டுத் தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரை நன்றாக கரைந்து கொதிக்கும்போது அரைத்த விழுதைப் போட்டுக் கிளற வேண்டும்.

தீயைக் குறைவாக எரிய விட வேண்டும். நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பர்பி பதமாக வரும்போது இறக்கி, எசென்ஸ் விட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். ஆறிய உடன் தேவையான அளவுக்கு வில்லைகளாக வெட்டிச் சுவைக்க வேண்டும்.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி டவுன்.

தக்காளி தோசை

மசால் தோசையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தக்காளி தோசையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தேவையானவை:

தக்காளி - 500 கிராம், உளுந்து - 100 கிராம், புழுங்கல் அரிசி    - 400 கிராம், மிளகாய் வற்றல்   -  50 கிராம், பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன், எண்ணெய் - 50 கிராம்

வெட்டப்பட்ட வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவுக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்தைக் கழுவி ஊற வைத்து பின் உளுந்தைக் கிரைண்டரில் போட வேண்டும். அதனுடன் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு அரைக்க வேண்டும். தேவையான உப்பு, பெருங்காயத்தையும் அதில் போட வேண்டும். 4 மணி நேரம் கழித்து மாவில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து எண்ணெய் ஊற்றி பொன்னிறத்தில் தோசை சுட வேண்டும். பிடித்தமான சட்னியைச் செய்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.source:dinamani
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட் - பயர்பாக்ஸ் பிரவுசரில் கால்குலேட்டர்

>> Monday, November 22, 2010


நமக்கு கால்குலேட்டர் எப்போதெல்லாம் தேவைப் படும் என்று முன்கூட்டியே கணக்கிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் தேவைப்  படலாம். இன்டர்நெட்டில் உலா வருகையில், இது தேவைப்பட்டால், பிரவுசரை மூடி, பின்னர், புரோகிராம்ஸ் சென்று, கால்குலேட்டரை இயக்க நேரம் வீணாகிவிடும். இதற்கெனவே, பயர்பாக்ஸ் பிரவுசரில், அதன் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் ஒரு கால்குலேட்டர்   தரப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சயின்டிபிக் கால்குலேட்டராக உள்ளது என்றால், அனைவருக்கும், குறிப்பாக மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மைதானே.  இந்த பயர்பாக்ஸ் டாஸ்க்பார் சயின்டிபிக் கால்குலேட்டர் ஓர் ஆட் ஆன் தொகுப்பாக, புரோகிராமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற   https://addons.mozilla.org/enUS/firefox/addon/6521/   என்ற முகவரிக்குச் செல்லவும். அடுத்து, அங்குள்ள   "Add to Firefox"  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். 
உடனே "Software Installation"  டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.  இதில் கிடைக்கும்  "Install Now"   பட்டனில் கிளிக் செய்திடவும்.  டாஸ்க் பார் சயின்டிபிக் கால்குலேட்டருக்கான புரோகிராம், உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் பதியப்படும். அடுத்து "Restart Firefox" பட்டனில் கிளிக் செய்திடவும்.  இப்போது கம்ப்யூட்டர் நீங்கள் மேற்கொள்ள இருப்பதைப் புரிந்து கொண்டு, விண்டோஸ், டேப்ஸ், பிரவுசர் ஆகிய அனைத்தையும் புதிய இணைப்பு களுடன் தொடங்கும்.  பிரவுசர் மீண்டும் கிடைத்தவுடன், கால்குலேட்டர் ஐகானில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் ஏரியாவில் நீங்கள் என்ன கணக்குகளைப் போட விரும்புகிறீர்களோ, அவற்றை என்டர் செய்திடவும். இந்த கால்குலேட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, உங்கள் எண் அடிப்படையை மாற்றிக் கொள்ளலாம். 

 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

குரான் எரிப்பு நாள்-Original Burn the Quran Day (tamil)

StumbleUpon.com Read more...

ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்


திண்டுக்கல் : நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் வாழலாம். ஆனால் மூச்சுகாற்று இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது. 3 நிமிடங்களுக்கு மேல் ஆக்சிஜன் செல்வது தடைபட்டால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

சுவாசம்: மூச்சுகுழல், நுரையீரல், உதரவிதானம், காற்று நுண்ணறைகள், மூச்சுகிளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம்.
* உதரவிதானம் சுருங்கி விரியும் போது சுவாசம் நிகழ்கிறது. உதாரவிதானம் சுருங்கி ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுகிறது. விரியும்போது கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.
* ஒரு நுரையீரலில் 30 ஆயிரம் சிறு மூச்சுகுழல்கள் உள்ளன.
* 600 மில்லியன் காற்று நுண்ணறைகள் உள்ளன.
* வல நுரையீரல் எடை 620 கிராம், இட நுரையீரல் 560 கிராம்.
* நுரையீரல்களில் தசைகள் இல்லை. மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகிறது.
* சுவாசத்தின் போது காற்று உள்சென்று வெளிவரும் அளவை ஸ்பைரோ மீட்டரால் கணக்கிடலாம்.
* நுரையீரல்களின் மொத்த காற்றின் கொள்ளளவு 4.5 லிட்டர். சுவாசத்தின் போது அரை லிட்டர் காற்று உள்ளே செல்கிறது.
*முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.


பாதிப்பு: நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும். புகை பிடித்தல், வீட்டிற்கு வெளியே, உள்ளே மாசு, நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகியன இதற்கு காரணம்.


தடுக்க வழி: புகைப்பதால் வரும் புகையில் மூன்றில் ஒரு பங்கு புகைபிடிப்போரையும், 2 பங்கு சுற்றியுள்ளோரையும் பாதிக்கிறது.நாம், நம்மை சுற்றியுள்ளோர் புகைக்காமலும் தடுப்பது அவசியம்.
* தொற்று வியாதிகளில் 80 சதவீதம் கைகளால் பரவுகிறது. எனவே கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* கார் என்ஜினை தேவையின்றி ஓட்டக்கூடாது.
* திறந்த வெளியில் பொருட்களை எரிக்க கூடாது.
* மாசு தடுப்பு குறித்த சட்டங்களை பின்பற்ற வேண்டும்.
* புகையில்லா அடுப்பை பயன்படுத்தவும், மின் உபகரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
* வீட்டை சுற்றிலும் கழிவுநீர் தேங்க விடக்கூடாது.
* சோபா, மிதியடி, மெத்தை, நாற்காலிகளில் தூசி படிய விடக்கூடாது.
* உடன் பணிபுரிபவருக்கு ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் இருந்தால் நாம் முக மூடியும், தடுப்பு உடையும் அணிவது அவசியம்.


வேண்டாம் சிகரெட்: சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதை பொருள் உண்டு. ரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்கது நிகோடின். புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிபொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது. மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிருமிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.ஆழ்ந்த சுவாசம்: மனிதன் ஒரு நிமிடத்தில் 14-15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும் போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட்-ஆடியோ, வீடியோ பைல்களை எடிட்டர்

>> Saturday, November 20, 2010

 
 

மல்டி மீடியா தேவைகளுக்கு
கம்ப்யூட்டரில் இன்று ஆடியோ, வீடியோ பைல்களைப் பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நாள்தோறும் ஏதேனும் ஒரு ஆடியோ, வீடியோ பைலைப் பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் தொகுப்பாகும். ஆனல் ஒரு நிலையில் நம் தேவைகள் அதிகமாகி,வேறு மீடியா பிளேயர் உள்ளதா என்று தேட ஆரம்பிப்போம். குறிப்பாக ஆடியோ, வீடியோ பைல்களை எடிட் செய்திடவும், கட் செய்திடவும் நமக்கு புரோகிராம்கள் தேவைப்படும். இந்த செயல்பாடுகளுக்கு நாம் வேறு தர்ட் பார்ட்டி புரோகிராம்களைத்தான் நாட வேண்டியுள்ளது. 
அண்மையில் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் தரக்கூடிய புரோகிராம் ஒன்று இலவசமாகக் கிடைப்பது தெரியவந்தது. அதன் பெயர் மீடியா கோப் (Media Cope). இந்த புரோகிராமினை http://www.media cope.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 
இந்த புரோகிராமில் மீடியா பைல்கள் குறித்த நம் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். இதில் ஆடியோ/வீடியோ பிளேயர், ஆடியோ/வீடியோ கட்டர் மற்றும் ஆடியோ/வீடியோ கன்வர்டர் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றுடன் போட்டோக்களை தேவையான பகுதியை கட் செய்து அமைக்கவும், பார்மட் மாற்றவும் மற்றும் அளவினை மாற்றவும் போட்டோ கட்டர் என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. இதனைக் கொண்டு நூறு இமேஜ் பைல்களைக் கூட சில நிமிடங்களில் கையாளலாம். 
மேலும் படங்களுடன் இசையை இணைத்து ஒரு மூவி போல அமைத்திட Movie Like Real Time Slide Show Viewer என்னும் புரோகிராம் பிரிவு உதவுகிறது. 
மீடியா கோப் புரோகிராம் mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv மற்றும் vob என அனைத்து பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களைக் கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி jpg, bmp, gif, tiff, png, emf and wmf ஆகிய இமேஜ் பார்மட் பைல்களையும் கையாள்கிறது.
இன்னும் போனஸாக, சில இன்டர்நெட் டூல்ஸ்களும் தரப்பட்டுள்ளன. இணைய இமேஜ்களை முழுத் திரையில் காண்பதற்கு Web Image Full Screen Viewer தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இணைய தளத்தில் காட்டப்படும் எந்த ஒரு இமேஜையும் விரித்து காணலாம். 
Speak Text என்னும் டூல் மூலம் இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் ஒன்றைப் பேச்சுக் குரலில் கேட்கலாம்.
இதனை இன்ஸ்டால் செய்தவுடன் மிக எளிதாகப் பயன்படுத்தலாம். தொடக்கத்திலிருந்தே ஒரு எக்ஸ்பர்ட் போல இதனைக் கையாளலாம். பிரச்னைகள் இருந்தால் அல்லது தெளிவு தேவைப்பட்டால், ஹெல்ப் பட்டனை அழுத்தினால் பல தலைப்புகளில் தெளிவுரைகள் வழிகாட்டிகளாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான இது போன்ற ஹெல்ப் பைல்கள் ஒரு சில புரோகிராம்களில் மட்டுமே கிடைக்கும்.
இத்தனை பாராட்டுக்கும் இது உரியதுதானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். புரோகிரமினை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்தால் இது உண்மை எனத் தெரியும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கொடுவாளில் முடிவெட்டும் சலூன்

>> Friday, November 19, 2010
இது சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது.இந்த முடி திருத்துபவர் உபயோகிக்கும் கத்தி மிக பயங்கரமாகவும் கொடுரமாகவும் உள்ளது.ஆனால் இந்த கிராமத்தில் இதுதான் வாடிக்கையான பழக்கமாக உள்ளது.கீழே உள்ள புகைப்படங்களை கண்டிப்பாக பாருங்கள்.இந்த பதிவை நிச்சயமாக விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.விரும்பினால் ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க.கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் இன்னும் அதிக படங்களை காணலாம்.

In Liang Qi, Dong village or southeast DongZhai, the barber use a sickle to give haircuts. The scene looks very horrible and scary. But it is an ancient custom of this village. Must see the wonderful photos given below. If you like this post please feel free to drop your comments. More images after the break...லிங்க்

StumbleUpon.com Read more...

தாய், தந்தையை கொல்லும் தமிழர்கள்!

>> Thursday, November 18, 2010

Death do us apart After her friend's son turned mercy killer, Maariyamma left her village


தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மகன் வீட்டை விட்டு வெளியேறினார். "நான் என் காலில் நிற்குமளவுக்கு உறுதியாக இல்லை: ஆனால் என் குழந்தைகளால் கொல்லப்படுவதைவிட இது மேலானது!"

அவர் குரலில் கோபமோ, கசப்புணர்வோ இல்லை. "அவர்களுடைய குழந்தைகளை பராமரிக்கவே அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்!" என மகன்களைப் பற்றி அவர் கூறுகிறார். அவருடைய இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் விவசாயக்கூலி வேலை செய்கின்றனர். ஒவ்வொரு நடவுக்கும், அறுவடைக்கும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கூலிவேலை செய்வது அவர்களின் தொழில். அவரது பிள்ளைகள் குடும்பத்தை நடத்தவும், பேரக்குழந்தைகளை படிக்கவைத்து பராமரிக்கவும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது மாரியம்மாவிற்கு தெரியும். அதில் தானும் அவர்களோடு இருப்பது அவர்களுக்கு கூடுதல் சுமை என்பதும் புரிந்தது. எனவே அவர்களை விட்டுவிலகாவிட்டால் அது எங்கு போய் முடியும்? என்பது மாரியம்மாவிற்கு தெரிந்திருந்தது.

மாரியம்மாவின் வயதை ஒத்த மற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் நடந்ததை அவர் பார்த்தார். அவரது அண்டை வீட்டிலிருந்த 76 வயதான பார்வதிக்கு பக்கவாத நோய் இருந்தது. "பார்வதிக்கு ஒரே மகன். சென்னையில் கூலிவேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் எப்படி படுத்தப்படுக்கையாக இருக்கும் அவனுடைய தாயை பார்த்துக் கொள்ள முடியும்?" என்கிறார் மாரியம்மா. "ஒரு நாள் பார்வதியின் மகன் சென்னையிலிருந்து வந்து, "அதை"ச் செய்துவிட்டு சென்றுவிட்டான். அவனால் வேறு என்ன செய்யமுடியும்?" என்று கேட்கிறார், மாரியம்மா. அந்தக் குரலில் கோபமோ, பயமோ இல்லை: உதவி செய்ய யாருமற்ற நிர்க்கதியான உணர்வே அந்தக் குரலில் இருக்கிறது. கொலையை திட்டமிட்டு செய்பவர்கள் மீது பச்சாதாபம்!

இருள் விலகி பொழுது புலரும் முன்பே "அந்த முதியவர்"கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கப்படுகின்றனர். பின்னர் நாள் முழுதும் குளிர்ந்த இளநீர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே முதியவர்கள் தங்கள் குழந்தைகளிடம் எண்ணெய் தேய்த்துக் குளித்தவுடன் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடக்கூடாது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருப்பார்கள் என்பது கொடுமை. எண்ணெய்க்குளியல் மற்றும் இளநீரின் குளிர்ச்சி தாங்காமல் வயது முதிர்ந்த பெரியவரோ, மூதாட்டியோ காய்ச்சல் வந்து ஓரிரு நாளில் உயிரை துறப்பார்கள்.

காலப்போக்கில் இவ்வாறான கொலைகளை செய்வதில் பல புதிய முறைகள் உருவாகிவிட்டன. வயதானவர்களின் வாயில் சேற்றைத் திணிப்பது இவற்றில் ஒன்று. மண் பாசம் காரணமாக உயிர் பிரிய மறுப்பதாகக் கூறி இந்த முறை கையாளப்படுகிறது. ஆனால் உண்மையில் மண்ணை செரிக்க முடியாமல் மரணம் ஏற்படும்.

சாத்தூரைச் சேர்ந்த துரைராஜ் என்ற விவசாயி, அவருக்கு தூரத்து உறவினரான முனியம்மாள் வேறோரு முறையில் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டார். 78 வயதான முனியம்மாள் தனக்கு தேவையானதை தானே சம்பாதிக்க முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தார். அவருக்கும் "தலைக்கு ஊத்தல்" நடந்தது. ஆனால் அதிலும் அவர் உயிர் பிரியவில்லை. சில நாட்களில் அவருக்கு "பால் ஊற்றப்பட்டது". இந்த பால் ஊற்றப்படுவதற்கு முன்னதாக அந்த முதியவர்களுக்கு திட உணவு கொடுப்பது நிறுத்தப்படும். பின்னர் அவர்களுக்கு பால் ஊற்றும்போது அவர்களின் மூக்கை யாராவது ஒருவர் மூச்சுவிட முடியாதவகையில் அழுந்தப்பிடித்துக் கொள்வார்கள். பசியால் தவிக்கும் ஒருவருக்கு தொடர்ச்சியாக பால் ஊற்றப்படும்போது, மூக்கையும் மூச்சுவிடமுடியாமல் பிடித்தால், ஊற்றப்படும் பால் அவர்களின் மூச்சுக்குழலில் இறங்கும். சில மணித்துளிகளில் உயிரிழப்பது உறுதி!

சில இடங்களில் விஷம் கொடுப்பதும் நடக்கிறது. பரமக்குடியில் கணேசனுக்கு அதுதான் தொழில்! மருத்துவராக பணியாற்றுவதாகக் கூறும் கணேசன் ஒரு மரணதேவன். தேவைப்படுபவர்களுக்கு விஷமருந்தை ஊசிமூலம் செலுத்துகிறார். "வாழவேண்டிய வயதில் உள்ள யாரையும் நான் கொல்லவில்லை. ஒருவரின் இறுதிக்காலத்தில் அவர் வறுமையில் வாடாமல் இருக்கவே நான் இதைச் செய்கிறேன்!" என்கிறார் கணேசன்.

இவ்விதமான பழக்கங்கள் நடைமுறையில் இருந்தாலும் விருதுநகர், ராமசாமிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற 60 வயது முதியவர் இறந்தபோது இது விவாதத்திற்கு வந்தது. சாலை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த செல்வராஜ் மரணம் அடைந்தபோது அவரது உறவினரான அசோகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜுக்கு விஷ ஊசி போட்டதாக ஜீனத் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆனால் இறந்துபோன செல்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டிருந்ததால் புகாரை நிரூபிக்க முடியவில்லை. ஜீனத் இப்போது பிணையில் இருக்கிறார்.

இந்த செய்தி தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.கே. சண்முகம் கூறுகிறார். இதுபோன்ற சமூக அவலங்களை எதிர்கொள்ள அரசு வழக்கமாக மேற்கொள்ளும் கைது, எச்சரிக்கை, விசாரணை போன்ற நடைமுறைகள் உதவாது என்பது அவரது கருத்து.

தலைக்கு ஊத்தல்! இந்த செயலை குற்றச்செயலா அல்லது வறுமையின் கோரத்தால் நடைபெறும் செயலா என்று தீர்மானிக்க முடியாத ஒரு செயல். இது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்துள்ளது. குடும்பத்தினர் கூடி எடுக்கும் முடிவு. அன்பிற்குரியவர்களை வழியனுப்பி வைக்கும் ஒரு சடங்கு. சில நேரங்களில் பலியாகும் முதியவர்களின் விருப்பம். வறுமையிலிருந்து விடுபட்டு நிரந்தர அமைதிக்கான பாதையாகவும் இது இருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் கூறுகிறார். இதை சட்டம் மற்றும் குற்றச்செயலாக மட்டுமே பார்ப்பது சிரமம் என்றும் அவர் கூறுகிறார்.

தலைக்கு ஊத்தலை குற்றச் செயலாக கருதினால் முழு கிராமமே அதற்கு உடந்தை! கிராமத்தினரும், உறவினர்களும் இதை ஆதரிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தலைக்கு ஊத்தும் நாளுக்கு ஓரிரு நாள் முன்னதாக வந்து அந்த முதியவரையோ, மூதாட்டியையோ "கடைசியாக" ஒரு முறை பார்த்துச் செல்வதும் உண்டு. அந்த முதியவரோ, மூதாட்டியோ இறக்கப்போகிறார் என்பது அனைருக்கும் தெரியும்.

இந்த தலைக்கு ஊத்தும் பழக்கம் எந்த ஜாதிக்கோ, சமூகத்துக்கோ தனி உரிமையானது அல்ல. வறுமையில் வாழும் அனைத்து சமூகத்தினரும், ஜாதியினரும் இதைச் செய்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் கூலி விவசாயிகளாகவோ, ஆடு மேய்ப்பவர்களாகவோ, சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களாகவோ இருக்கின்றனர். அவர்களினஅ வாழ்க்கை நிலை, வயது முதிர்ந்த பெற்றோர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் அளவிற்கு இல்லை.

வறுமை காரணமாக முதியவர்களை கொலை செய்வது கொடுமையான தீர்வுதான், ஆனாலும் அதைத்தவிர வேறு வழியில்லை என்பதே இப்பகுதி மக்களின் கருத்து.

காசியின் வயது அறுபதா அல்லது எழுபதா என்பது அவருக்கே தெரியாது. மனைவி இறந்தபின் மகனின் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அவரது நிறைந்த வாழ்க்கையின் அடையாளமாக நரைத்த தலைமயிரும், மீசைகளும், சுருக்கம் விழுந்த தோலும் இருக்கின்றன. தனக்கு தேவையானதை செய்வதற்கு தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் இந்நேரம் தலைக்கு ஊத்தப்பட்டிருக்கலாம்.

விருதுநகரில் பரவலாக முதியவர்களும், மூதாட்டிகளும் வீட்டிலிருந்து விலகி இருக்கின்றனர். என் மகன் அவன் வாழ்க்கைக்கே கஷ்டப்படுகிறான் என்கிறார் காசி. நான் ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியால் நன்றாகவே இருக்கிறேன் என்கிறார் மாரியம்மா. அவர்கள் பட்டினி கிடக்கின்றனர். கஷ்டப்படுகின்றனர். ஆனால் புகார் கூறவில்லை. தலைக்கு ஊத்தல் என்பது கோழைத்தனமான கொலையாக அவர்கள் பார்க்கவில்லை. வீரமான பிரிவுபசாரமாகவே பார்க்கின்றனர். காசிக்கும், மாரியம்மாவிற்கும் இது கொடுமையான விஷயம் இல்லை. மிஞ்சியுள்ளவர்கள் உயிர் வாழ்தலுக்கான நடைமுறை அன்பாகவே இருக்கிறது.

நன்றி: ஷகினா, டெஹல்கா வார இதழ் - 20.11.2010

source: http://tehelka.com/story_main47.asp?filename=Ne201110Maariyamma.asp 

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP