சமீபத்திய பதிவுகள்

இந்த வார டவுண்லோட்-ஆடியோ, வீடியோ பைல்களை எடிட்டர்

>> Saturday, November 20, 2010

 
 

மல்டி மீடியா தேவைகளுக்கு
கம்ப்யூட்டரில் இன்று ஆடியோ, வீடியோ பைல்களைப் பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நாள்தோறும் ஏதேனும் ஒரு ஆடியோ, வீடியோ பைலைப் பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் தொகுப்பாகும். ஆனல் ஒரு நிலையில் நம் தேவைகள் அதிகமாகி,வேறு மீடியா பிளேயர் உள்ளதா என்று தேட ஆரம்பிப்போம். குறிப்பாக ஆடியோ, வீடியோ பைல்களை எடிட் செய்திடவும், கட் செய்திடவும் நமக்கு புரோகிராம்கள் தேவைப்படும். இந்த செயல்பாடுகளுக்கு நாம் வேறு தர்ட் பார்ட்டி புரோகிராம்களைத்தான் நாட வேண்டியுள்ளது. 
அண்மையில் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் தரக்கூடிய புரோகிராம் ஒன்று இலவசமாகக் கிடைப்பது தெரியவந்தது. அதன் பெயர் மீடியா கோப் (Media Cope). இந்த புரோகிராமினை http://www.media cope.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 
இந்த புரோகிராமில் மீடியா பைல்கள் குறித்த நம் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். இதில் ஆடியோ/வீடியோ பிளேயர், ஆடியோ/வீடியோ கட்டர் மற்றும் ஆடியோ/வீடியோ கன்வர்டர் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றுடன் போட்டோக்களை தேவையான பகுதியை கட் செய்து அமைக்கவும், பார்மட் மாற்றவும் மற்றும் அளவினை மாற்றவும் போட்டோ கட்டர் என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. இதனைக் கொண்டு நூறு இமேஜ் பைல்களைக் கூட சில நிமிடங்களில் கையாளலாம். 
மேலும் படங்களுடன் இசையை இணைத்து ஒரு மூவி போல அமைத்திட Movie Like Real Time Slide Show Viewer என்னும் புரோகிராம் பிரிவு உதவுகிறது. 
மீடியா கோப் புரோகிராம் mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv மற்றும் vob என அனைத்து பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களைக் கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி jpg, bmp, gif, tiff, png, emf and wmf ஆகிய இமேஜ் பார்மட் பைல்களையும் கையாள்கிறது.
இன்னும் போனஸாக, சில இன்டர்நெட் டூல்ஸ்களும் தரப்பட்டுள்ளன. இணைய இமேஜ்களை முழுத் திரையில் காண்பதற்கு Web Image Full Screen Viewer தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இணைய தளத்தில் காட்டப்படும் எந்த ஒரு இமேஜையும் விரித்து காணலாம். 
Speak Text என்னும் டூல் மூலம் இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் ஒன்றைப் பேச்சுக் குரலில் கேட்கலாம்.
இதனை இன்ஸ்டால் செய்தவுடன் மிக எளிதாகப் பயன்படுத்தலாம். தொடக்கத்திலிருந்தே ஒரு எக்ஸ்பர்ட் போல இதனைக் கையாளலாம். பிரச்னைகள் இருந்தால் அல்லது தெளிவு தேவைப்பட்டால், ஹெல்ப் பட்டனை அழுத்தினால் பல தலைப்புகளில் தெளிவுரைகள் வழிகாட்டிகளாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான இது போன்ற ஹெல்ப் பைல்கள் ஒரு சில புரோகிராம்களில் மட்டுமே கிடைக்கும்.
இத்தனை பாராட்டுக்கும் இது உரியதுதானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். புரோகிரமினை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்த்தால் இது உண்மை எனத் தெரியும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP