யூரோ கால்பந்து போட்டி: காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்
>> Sunday, June 15, 2008
யூரோ கால்பந்து போட்டி: காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின் | |
| |
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் `டி' பிரிவில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின். ஆட்டம் தொடங்கிய 15 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டோர்ரல் முதல் கோல் அடித்தார். 34 வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் இப்ராகிமோவிச் பதில் கோல் திருப்பி சமனுக்கு கொண்டு வந்தார். இதன் பின்னர் ஆட்டம் முடியும் தருவாயில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா கோல் அடித்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில், தனது 2 -வது வெற்றியை பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. | |
(மூலம் - வெப்துனியா) |