|
சமீபத்திய பதிவுகள்
சிங்கள இனவாதிகள் சூழ்ச்சி அம்பலம்: அதிர்ச்சி தகவல்
இத்தாலி மிலான் நகரில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பல சிங்கள இனத்தவர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள சிங்களவர் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கவும், தமிழர்கள் பக்கம் அவர்கள் கவனத்தை திசை திருப்பவும், நேற்றைய தினம் பல இடங்களில் வினோதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக இத்தாலி நிருபர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அமைப்பு என்ற பெயரில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதோடு, மகிந்தவுக்கு தமிழர்கள் வாழ்த்து தெரிவிப்பது போலவும் இது அமைந்துள்ளது.
இத்தாலியில் சரத்பொன்சேகா ஆதரவாளர்களும் தமிழர்களுக்கும் இடையே மோதல் ஒன்று வெடிக்கவேண்டும் என்ற காரணத்திற்க்காவும், ஆதரவாளர்களைத் திசை திருப்பவுமே இவ்வாறான சுவரொட்டிகளை சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதியில் விஷமிகள் ஒட்டியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இத்தாலியில் தமிழ் மக்கள் அமைப்பு என்று ஒன்றும் கிடையாது என்பதே உண்மையாகும்.
source:athirvu Read more...