|
சமீபத்திய பதிவுகள்
என்ன பிழை செய்தோமடி தாயே ? மனதை கலங்க வைக்கும் பாடல்
என்ன பிழை செய்தோமடி தாயே
என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
வெடி விழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காய்ந்த குளம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி படிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை
தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய………………சம்மதமோ…………..
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
விளக்கேற்றிய மாடமெல்லாம்
வீழ்ந்தே போனதோ…………..
ஊஞ்சலாடிய கம்பு இல்லை
நீந்தி பழகிய ஆறு இல்லை
என் தோப்பினுள் அடைந்த
பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற
தாய்பூனை என்ன ஆனதோ
முற்றம் தெளித்திட
விடியல் வருமோ
யுத்த சாமத்தில்
வாழ்வு முடியுமோ?
source:pachaitamilan.blogspo
லேபிள்கள்:
என்ன பிழை செய்தோமடி தாயே
புதுவகையான பல்குழல் எறிகணைத் தாக்குதல் பொது மக்கள் உடல் கருகிச் சாவு
புதுவகையான பல்குழல் எறிகணைத் தாக்குதல் பொது மக்கள் உடல் கருகிச் சாவு |
|
Subscribe to:
Posts (Atom)