சமீபத்திய பதிவுகள்

My conversion was not a change of religion; it was a change of heart

>> Tuesday, October 21, 2008

Illustration by Sorit
OPINION
I, The Convert
My conversion was not a change of religion; it was a change of heart
Anand Mahadevan
e-mail | one page format | feedback: send - read |
I was born a Brahmin and am the grandson of a priest whom I dearly loved. I am educated and my current professional standing indicates that I am reasonably intelligent. I am also affluent and my income would put me distinctly in the upper middle class bracket. I guess that would make me high-caste, rich and smart. In other words, I am not a tribal, or poor or dim-witted. And yet, I chose to become a follower of Jesus Christ.

The world would call me a convert to Christianity. I have no problems with that, though I see my faith more as a relationship with God through Jesus Christ than as a religion. And for the record, I can truthfully claim that no one financially induced or threatened or deceived me into converting to Christianity.

I am fiercely proud of my national identity as an Indian and I am completely at peace with my cultural identity as a Hindu. I retain the name my parents gave me. My wife, who also shares my faith, continues to go by her Hindu name. We have two children and we have given both distinctly Hindu names. In fact, many of my colleagues and acquaintances who may happen to read this column are likely to be surprised. They have no inkling about my faith, for I generally don't go about announcing it. But if someone does ask me the reason behind the joy and hope that is everpresent in my life, I am always delighted to share it with them.

I write this piece to make one point—that my conversion was not a change of religion but a change of heart. To explain this, I need to go back to my childhood in Chennai, similar to that of so many other Tamil Brahmin boys like me. My grandfather, every bit the virtuous priest, had enormous influence over me. I absolutely adored him and as a toddler, always clung to him. He too loved me to a fault. There was no wish of mine that he would not rush to fulfil. But even in my early, formative years I was unable to relate to the religion he fervently practiced. Later, in my school days, I once spent my summer holidays with him in Trichy. Memories of dawn walks with him, for the ritualistic dip in the Cauvery river, cow in tow, are still fresh in my memory. I learnt many shlokas, some of which I still remember. But I never understood any of it and none of it helped me connect with God.

When I was 19, a Christian friend with whom I used to play cricket invited me to his house for prayer. If he had invited me to a pub, or party, I would have gone too. At his home, he and his sister prayed for me. It was a simple yet delightful conversation with God that lasted all of five minutes. I don't remember it verbatim, but they articulated a prayer of blessing on my life, future, career and family. It was a simple affair—no miracles, no angels visiting. All they did was utter a deep human cry out to the creator God and His only son Jesus Christ. When they said Amen, I felt in my heart a desire to follow Jesus.

It was a faith encounter with God that I shall not even attempt to understand, rationalise or explain. I simply accept it. It is my faith. It is what I choose to believe. That evening I did not change my religion, for in reality I had none. Hinduism was my identity, not my religion. It still is.

The Christianity I acquired that evening is not a religion. On the contrary, it is an intensely intimate relationship with Jesus. Over the past fifteen years, I have come to know this Jesus even closer. I know Him as the pure and sinless Son of a Holy God. And I know Him as a dear friend to whom I pray and talk to every day—about my career, my dreams, successes, failures, finances and even my sexuality.

If I read a good book, watch a good movie (Rock On is terrific, mate), or eat a good meal at a new restaurant, I would naturally tell my friends about it.In Jesus, I have discovered a truly amazing friend, guide, leader, saviour and God. How can I not tell all my friends about Him? And if anyone does listen and he too comes to believe in Jesus, I am delighted. The world would call it a conversion; I call it a change of heart, like mine.

But I would never force anyone to listen to me, leave alone financially induce, coerce or con him into believing. That to me is pointless and against the very grain of my faith. But I do have a constitutional right to practice my faith and to preach it without deception, force or bribery. It pains to see such basic rights of mankind being cruelly violated every day in this great Hindu nation.

God bless India.
http://www.outlookindia.com/full.asp?fodname=20081027&fname=Conversions+(F)&sid=5

StumbleUpon.com Read more...

ஒரிசா கலவரம்: விசாரிக்க துணைத் தலைவரை அனுப்பியது தேசிய சிறுபான்மை ஆணையம்

 

புதுதில்லி, செப். 8: ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் விஎச்பி தலைவர் லட்சுமனானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதையடுத்து கலவரம் மூண்டது தொடர்பாக விசாரிக்க துணைத் தலைவரை அனுப்பியுள்ளது தேசிய சிறுபான்மை ஆணையம்.

ஆணையத்தின் துணைத் தலைவர் மைக்கேல் பி.பின்டோ, ஒரிசா கலவர நிலைமையை நேரில் ஆராய்ந்து விரிவான அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்வார்.

விஎச்பி தலைவர் கொல்லப்பட்டதையடுத்து கிறிஸ்தவ தேவாலயங்கள், பழங்குடி கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து நேரில் விசாரித்து அவர் அறிக்கை கொடுப்பார். அதற்காக அவர், ஒரிசாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டார்.

தனது பயணத்தை முடித்துக் கொண்டு பின்டோ திரும்பியதும், ஆணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களான பேராசிரியர் ஜோயா ஹாசன், திலிப் பட்கோங்கர் ஆகியோர் ஒரிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார்கள்.

ஒரிசாவில் அண்மையில் நடந்த வகுப்பு கலவரம் தொடர்பான முழு அறிக்கை ஒரு வாரத்தில் தயாராகிவிடும் என்றார் ஆணையத்தின் தலைவர் ஷபி குரேஷி.

அவர் கூறியதாவது: கலவரத்தின்போது தீவைப்பு, சூறையாடல் நடந்த பகுதிகளுக்கு ஆணைய உறுப்பினர்கள் செல்வார்கள். மக்களிடம் நேரடியாக பேசி உண்மையில் என்ன நடந்தது என்பதை கேட்டறிவார்கள். அரசுத் தரப்பில் தரப்படும் அறிக்கை மீது எங்களுக்கு விருப்பம் இல்லை. சரஸ்வதி கொல்லப்பட்டதையடுத்து மூண்ட வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை தரும்படி, தலைமைச் செயலரிடம் கேட்டோம். ஆனால் இதுவரை ஆணையத்துக்கு மாநில அரசின் அறிக்கை வந்து சேரவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது; பதற்றம் மிக்க பகுதிகளில் படைகளை நிறுத்தியுள்ளோம் என்பது போன்ற தகவல்களை வெறும் வார்த்தை அளவில் எங்களிடம் அரசு தரப்பு தெரிவித்தது என்றார் ஆணையத் தலைவர் குரேஷி. 
 

 

StumbleUpon.com Read more...

மொகாலி டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா இமாலய வெற்றி 320 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை நொறுக்கியது




மொகாலி, அக்.22-

மொகாலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 320 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பந்தாடியது.

மொகாலி டெஸ்ட்

ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே பெங்களூரில் நடந்த முதலாவது டெஸ்ட் `டிரா' ஆனது. அதை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 469 ரன்களும், ஆஸ்திரேலியா 268 ரன்களும் எடுத்தன.

இதன் பின்னர் 201 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. துணை கேப்டன் மைக்கேல் கிளார்க் 42 ரன்களுடனும், ஹேடின் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜாகீர்கான் அசத்தல்

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தியாவின் தாக்குதலில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் எஞ்சிய 5 விக்கெட்டுகளும் சரிந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹேடினை (37 ரன்) சாய்த்த, ஜாகீர்கான் தனது அடுத்த ஓவரில் கேமரூன் ஒயிட் (1 ரன்), பிரெட்லீ (0) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஜாகீருக்கு ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக ஸ்லிப்பில் 4 பீல்டர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் அவரது `ஹாட்ரிக்'வாய்ப்பை ஜான்சன் தடுத்து விட்டார்.

9-வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் கிளார்க்-ஜான்சன் ஜோடி இந்தியாவின் வெற்றியை சிறிது நேரம் தாமதப்படுத்தியது. இறுதியில் இவர்களை புதுமுக சுழற் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, காலி செய்தார். ஜான்சன் 26 ரன்னிலும் (44 பந்து, 4 பவுண்டரி), மைக்கேல் கிளார்க் 69 ரன்னிலும் (152 பந்து, 9 பவுண்டரி) வெளியேற, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்களில் சுருண்டது.

இந்தியா அபார வெற்றி

இதனால் இந்திய அணி 320 ரன்கள் வித்தியாசத்தில் பிரமிப்பான வெற்றியை ருசித்தது. டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை தவிர்த்து, அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு கிடைத்த இமாலய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பாக 1996-ம் ஆண்டு கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே, இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

2-வது இன்னிங்சில் இந்திய தரப்பில் ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து அதிரடியாக 170 ரன்கள் (92, 68) குவித்த இந்திய பொறுப்பு கேப்டன் டோனி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

லாராவின் சாதனையை முறியடித்து டெஸ்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய சச்சின் தெண்டுல்கருக்கும், மொகாலியில் தனது கடைசி டெஸ்டில் ஆடிய சவுரவ் கங்குலிக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.





இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 29-ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 469

ஆஸ்திரேலியா 268

2-வது இன்னிங்ஸ்

இந்தியா-314/3 டிக்ளேர்

ஆஸ்திரேலியா

ஹைடன் எல்.பி.டபிள்ï (பி) ஹர்பஜன்சிங் 29

கேடிச் (சி) தெண்டுல்கர் (பி) ஹர்பஜன்சிங் 20

பாண்டிங் (பி) இஷாந்த் 2

ஹஸ்ஸி எல்.பி.டபிள்ï (பி) ஹர்பஜன்சிங் 1

மைக்கேல் கிளார்க் (சி) ஷேவாக் (பி) மிஸ்ரா 69

வாட்சன் எல்.பி.டபிள்ï (பி) இஷாந்த் 2

ஹேடின் (பி) ஜாகீர்கான் 37

ஒயிட் (சி) டோனி (பி) ஜாகீர்கான் 1

பிரெட்லீ (பி) ஜாகீÖகான் 0

ஜான்சன் (சி) அண்ட் (பி) மிஸ்ரா 26

சிடில் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 8

மொத்தம் (64.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 195

விக்கெட் வீழ்ச்சி: 1-49, 2-50, 3-52, 4-52, 5-58, 6-142, 7-144, 8-144, 9-194

பந்து வீச்சு விவரம்

ஜாகீர்கான் 15-3-71-3

இஷாந்த் ஷர்மா 13-4-42-2

ஹர்பஜன்சிங் 20-3-36-3

அமித் மிஸ்ரா 11.4-2-35-2

ஷேவாக் 5-2-7-0

பாக்ஸ் செய்தி

சாதனை துளிகள்

*இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இந்த டெஸ்டில் 106 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுக டெஸ்டிலேயே 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது இந்திய வீரர் அமித் மிஸ்ரா ஆவார்.

*ஜாகீர்கான் நேற்று பந்து வீசுகையில், 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். டெஸ்டில் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது இந்திய வீரர் ஜாகீர்கான் ஆவார். இதற்கு முன்பாக ரவி சாஸ்திரி, கபில்தேவ், கும்பிளே ஆகியோர் இந்த சிறப்பை பெற்றிருக்கிறார்கள்.

*கும்பிளே காயமடைந்ததால் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தற்காலிகமாக ஏற்ற டோனி தலைமையில் இந்தியா வரலாற்று வெற்றியை சுவைத்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டிலும் டோனி தலைமையில் இந்தியா வென்றிருக்கிறது. கேப்டன் பொறுப்பில் முதல் 2 டெஸ்டிலேயே வெற்றியை தேடித்தந்த 3-வது இந்திய கேப்டன் டோனி ஆவார். முன்னதாக தெண்டுல்கர், கங்குலி தலைமை ஏற்ற போதும் முதல் 2 டெஸ்டுகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.

*டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற 3-வது விக்கெட் கீப்பர் கேப்டன் டோனி ஆவார். இதற்கு முன்பாக ஜிம்பாப்வே வீரர்கள் ஆன்டி பிளவர் (பாகிஸ்தான் எதிராக, 1994-95), தைபு (வங்காளதேசம் எதிராக, 2004-05) ஆகியோர் மேற்கண்ட பெருமைக்குரியவர்கள்.

*இந்திய மண்ணில், இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 38 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா 12 வெற்றி பெற்றிருக்கின்றன. 13 ஆட்டம் `டிரா'வும், ஒரு டெஸ்ட் `டை'யிலும் முடிந்துள்ளன. பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் இதுவரை 3 டெஸ்ட் விளையாடி உள்ளது. இதில் 2-ல் தோற்று உள்ளது. மற்றொன்று `டிரா' ஆகியிருக்கிறது.

அதிக ரன்கள் வித்தியாசத்தில இந்தியாவின் வெற்றிகள்

வெற்றி ரன் எதிரணி மைதானம் ஆண்டு

320 ஆஸ்திரேலியா மொகாலி 2008

280 தென்அப்பிரிக்கா கான்பூர் 1996

279 இங்கிலாந்து லீட்ஸ் 1986

272 நிïசிலாந்து ஆக்லாந்து 1968

259 இலங்கை ஆமதாபாத் 2005

255 வெஸ்ட் இண்டீஸ் சென்னை 1988

235 இலங்கை கொழும்பு 1993

222 ஆஸ்திரேலியா மெல்போர்ன் 1977

216 நிïசிலாந்து சென்னை 1976

212 பாகிஸ்தான் டெல்லி 1999
 
 

StumbleUpon.com Read more...

கிளிநொச்சியை மேலும் நெருங்கியது, சிங்கள ராணுவம் கூடுதலாக ஒரு கி.மீ. பகுதியை கைப்பற்றியதாக அறிவிப்பு


 


கொழும்பு,அக்.22-

சிங்கள ராணுவம் கிளிநொச்சியை மேலும் நெருங்கி வருகிறது. கூடுதலாக ஒரு கி.மீ. நிலப்பரப்பை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.

மேலும் முன்னேற்றம்

விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர் தாக்குதல் மற்றும் மழையையும் மீறி, கிளிநொச்சியை மேலும் நெருங்கி விட்டதாக இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி அருகே வன்னேரிகுளம் தெற்கு பகுதியில் மேலும் ஒரு கி.மீ. நிலப்பரப்பை கைப்பற்றி இருப்பதாகவும் அது கூறியுள்ளது.

மேலும், நாச்சிகுடா, அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ராணுவம் ஊடுருவி சென்று இருப்பதாக கூறியுள்ளது.

தாக்குதல் முறியடிப்பு

வன்னேரிகுளத்தில் விடுதலைப்புலிகளின் 2 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் முயற்சியை ராணுவத்தின் 59-வது படைப்பிரிவு முறியடித்தது. அங்குள்ள ஆண்டான்குளத்தில் விடுதலைப்புலிகளின் 3 பதுங்கு குழிகளும், பீரங்கி மேடையும் அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மந்தன் பகுதியில் அதிகாலை நேரத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். கிளிநொச்சியின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் தீவிர சண்டை நடந்து வருகிறது. இது ஜெயபுரம் மற்றும் மண்ணியன்குளம் பகுதிகளுக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணிவெடிகள் அகற்றம்

இதற்கிடையே, முல்லைத்தீவில் ஆண்டான்குளம் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 310 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து ராணுவம் அகற்றியது. அக்கராயன்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன 3 ராணுவ வீரர்களின் உடல்கள் நேற்று சிக்கின. அதே பகுதியில் 2 விடுதலைப்புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. பல்லவராயன்காடு பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு விடுதலைப்புலி உடலும், ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.

கொக்கடிச்சோலை என்ற இடத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 சிங்கள தொழிலாளர்களை ஒரு மர்ம கும்பல் சுட்டுக் கொன்றது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=445831&disdate=10/22/2008

StumbleUpon.com Read more...

கருப்பு&வெள்ளை

StumbleUpon.com Read more...

தனியொரு மனிதனுக்கு உண‌வில்லையெனில்

StumbleUpon.com Read more...

ஈராக்கில் போலீஸ் முகாம் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்த மனித வெடிகுண்டு பெண் சுட்டுக் கொலை

lankasri.comதற்கொலை படை தாக்குதலில் இப்போது இளம் பெண்ணும் சிறுவர்களும் கூட ஈடுபடுத்தப்படுகிறார்கள்.சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரிக் அருகே போலீசார் சிறப்பு முகாம் மற்றும் சோதனை சாவடி அமைத்து இருந்தனர்.

இந்த சோதனை சாவடி அருகே ஒரு இளம் பெண் வேகமாக வந்தார். போலீசார் சற்று தூரத்திலேயே நிற்கும் படி அந்த பெண்ணை எச்சரித்தனர்.ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அந்த 20வயது பெண் முகாம் அருகே வந்தார்.

இதை அடுத்து போலீசார் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.மனித வெடிகுண்டாக வந்த அந்த பெண் தனது இடுப்பில் பயங்கர வெடி குண்டை மறைத்து வைத்து கட்டியிருந்தார். முகத்தையும் முக்காடு போட்டு மூடியிருந்தார்.

போலீசார் சுட்டதை தொடர்ந்து அந்த பெண் மறைத்து வைத்திருந்த வெடி குண்டு வெடித்தது.இதில் அந்த பெண் உடல் சிதறி பலியானார்.அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு வரும் இதில் காயம் அடைந்தார்.

சற்று தூரத்திலேயே அந்த பெண் மனித வெடிகுண்டை போலீசார் சுட்டுக் கொன்றதால் போலீஸ் முகாமும் சோதனை சாவடியும் தப்பியது. ஏராளமான போலீசார் உயிர் தப்பினார்கள்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224517847&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஆப்கானிஸ்தானில் பஸ்சை சிறைபிடித்து 30பேர் வெட்டிகொலை:தலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம்

lankasri.comஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும்,அரசுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

தீவிரவாதிகள் இப்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.

கந்தகார் அருகே பயணிகள் மற்றும் ராணுவத்தினரை ஏற்றிச் கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

மேலான்டு பகுதியில் அந்த பஸ் சென்று கொண்டிருந்த போது தலிபான் தீவிரவாதிகள் அந்த பஸ்சை சுற்றி வளைத்தனர்.பஸ் நின்றதும் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள்,வாள்ஆகியவற்றுடன் பஸ்சுக்குள் சென்றனர்.

பஸ்சுக்குள் சாதராண உடையில் இருந்த ராணுவ வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியே இழுத்து வந்தனர்.அவர்களை தீவிரவாதிகள் வாளால் வெட்டி கொன்றனர்.

மொத்தம் 30பேரை தீவிர வாதிகள் வெட்டி கொன்றனர்.இவர்களில் 27பேர் ராணுவத்தினர்.தீவிரவாதிகளை எதிர்த்த 3பயணிகளும் வெட்டி கொல்லப்பட்டனர்.பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் தப்பினர்.

தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் 1300பேர் பலியாகி இருக்கிறார்கள்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224517847&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

320ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி:ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

 
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 469ரன்னும்,ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 268ரன்னும் எடுத்தன.இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3விக்கெட் இழப்புக்கு 314ரன்னில் டிக்ளேர் செய்தது.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 516ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்து.2-வது இன்னிங்சை விளையாடிய அந்த அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 141ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.மைக்கேல் கிளார்க் 42ரன்னுடனும்,ஹாடின் 37ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (செவ்வாய்க் கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.தோல்வியை தவிர்க்க மேலும் 374 ரன் தேவை கைவசம் 5விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

ஜாகீர்கானின் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன.முதல் ஓவரின் கடைசி பந்தில் ஹாடின் (37 ரன்) போல்டு ஆனார்.

அவரது அடுத்த ஓவரில் 2-வது பந்தில் ஒயிட் (1 ரன்) அவுட் ஆனார். 3-வது பந்தில் பிரெட் லீ போல்டு ஆனார்.அடுத்தடுத்து 2 பந்தில் 2 விக்கெட் கைப்பற்றியதால் ஜாகீர்கானுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் ஜான்சன் அதை முறியடித்து விட்டார்.3ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது.

144 ரன் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்தது. 9-வது விக்கெட்டான கிளார்க்- ஜான்சன் ஜோடி சிறிது தாக்கு பிடித்து ஆடியது. குறிப்பாக கிளார்க் மட்டுமே இந்திய பந்து வீச்சை சமாளித்தார். அமித் மிஸ்ரா இந்த ஜோடியை பிரித்தார். ஜான்சன் 26ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 194 ஆக இருந்தது.

கடைசியாக கிளார்க் 69ரன்னில் மிஸ்ரா பந்துக்கு வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 64.4ஓவரில் 195ரன்னில் சுருண்டது.

இதனால் இந்திய அணி 320ரன்னில் அபார வெற்றி பெற்றது. ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும்,இஷாந்த் சர்மா,அமித் மிஸ்ரா தலா 2விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் 4டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியா 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் "டிரா"ஆனது. 3-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் 29-ந்தேதி தொடங்குகிறது

 

 

StumbleUpon.com Read more...

வட இந்தியர்கள் மீது தாக்குதல்:ராஜ் தாக்கரே கைது-ஆதரவாளர்கள் கலவரம்-தீ வைப்பு

lankasri.comமராட்டியத்தில் வாழும் வட மாநில மக்களுக்கு எதி ராக மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வன்முறையை தூண்டும் வகையில் பேசி வந்தார்.இதனால் அந்த கட்சியினர் வட மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

ராஜ்தாக்கரேவின் பேச்சை எதிர்த்து ஜார்க் கண்ட் மாநிலம் ஜாம் ஷெட்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அவரை கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதனால் கோர்ட்டு அவருக்கு கடந்த 30-ந்தேதி ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்டு பிறப்பித்தது.இதை ஜாம்ஷெட்பூர் போலீசார் நேற்று மும்பை போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ரெயில்வே ஊழியர் தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது.அதில் கலந்து கொள்ள வந்த வட மாநிலத்தவரை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்து உதைத்தனர். இதனால் ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனவே கோர்ட்டு பிடி வாரண்டு மற்றும் மும்பை தாக்குதல் தொடர்பாக ராஜ் தாக்கரே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.இது பற்றி அரசு ஆலோசித்து வந்தது.

இதனால் ராஜ் தாக்கரே கடும் கோபம் அடைந்தார்."என்னை கைது செய்து பாருங்கள்,என்னை கைது செய்தால் மராட்டிய மாநிலமே பற்றி எரியும்"என்று சவால் விடுத்தார்.

ராஜ் தாக்கரே நேற்று தெற்கு மராட்டிய மாநில பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வந்தார்.இரவு ரத்னகிரியில் உள்ள அரசு சுற்றுலா விடுதியில் தங்கி இருந்தார்.இன்று அதிகாலை 3.45மணிக்கு போலீசார் விடுதிக்கு சென்றனர்.அங்கு தூங்கி கொண்டிருந்த அவரை எழுப்பி கைது செய்தனர்.

அவரை அங்கிருந்து மும்பை கொண்டு வந்து பாந்த்ரா கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.இதற்காக அவரை ரத்னகிரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வருகின்றனர்.இன்று மாலை அவரை ஆஜர்படுத்த உள்ளனர்.பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ் தாக்கரே கைதான தகவல் இன்று காலை மராட்டியம் முழுவதும் பரவியது.உடனே மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சியினர் வன்முறையில் இறங்கினார்கள்.

நி#2990;ும்பையில் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள்.மும்பையில் ஜோகேஸ்வரி சென்ட்ரல்,போரிவெலிவில் பார்லே பகுதியில் தொண்டர்கள் சாலைகளில் திரண்டு மறியல் செய்தனர்.சாலைகளில் ஓடிய கார்-ஆட்டோ போன்ற வாகனங்களை தாக்கினார்கள்.கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடந்தது.அங்கு அமைக்கப்பட்டிருந்த சுங்க சாவடியில் பணம் வசூலிக்கும் கவுண்டருக்கு தீ வைத்தனர்.நிலைமை மோசமாகாமல் தடுக்க மும்பை மற்றும் மராட்டியம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புனாவில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.இதில் ஈடுபட்ட 100பேரை போலீசார் கைது செய்தனர்.நாசிக் அருகே ஒரு லாரிக்கு தீ வைத்தனர். மற்றொரு லாரி சேதப்படுத்தப்பட்டது.அங்கு 70பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜ்தாக்கரேவை ஆஜர் படுத்த உள்ள பாந்த்ரா கோர்ட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.அவர்கள் திடீரென போலீ சார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.கலவரம் வெடித்து இருப்பதை அடுத்து மும்பையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ் தாக்கரே கைது குறித்து மராட்டிய நவநிர் மான் சேனா செய்தி தொடர்பாளர் சிரீஸ் பார்கர் கூறும் போது,"ராஜ் தாக்கரேயை கைது செய்யும் அளவுக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை.மத்திய அரசின் வற்புறுத்தலால் அவரை கைது செய்து இருக்கிறார்கள்.இதில் அரசியல் பழி வாங்குதலும்,மாநில அரசின் சதியும் இருக்கிறது"என்றார்.

இதுபற்றி மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் கூறும்போது,"எந்த வற்புறுத்தலாலும் ராஜ் தாக்கரேவை கைது செய்ய வில்லை. சட்டம் தனது கடமையை செய்துள்ளது.அவர் சட்டத்தை தனது கையில் எடுத்ததால் கைதை சந்தித்து இருக்கிறார்"என்றார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224578052&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP