சமீபத்திய பதிவுகள்

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்

>> Thursday, September 16, 2010


இணையப் பயன்பாடு மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கான கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தருவதற்காகவே ஓர் தளம் இணையத்தில் இயங்குகிறது.Lab Pixies  என்ற பெயரில் உள்ள இந்த தளத்தில், பேஸ்புக், மை ஸ்பேஸ், ஹை 5, ஆர்குட், ஆண்ட்ராய்ட், ஐ போன், ஐ கூகுள் என்பவற்றுக்கான கூடுதல் வசதி புரோகிராம் களையும் இந்த தளம் கொண்டுள்ளது. கேம்ஸ், செய்யவேண்டிய பணிகள் கொண்ட பட்டியல், காலண்டர், கடிகாரம் என வழக்கமான வசதிகளைத் தரும் புரோகிராம் களும் உள்ளன. இந்த தளத்தில் உள்ள என்பதில் கிளிக் செய்தால் இவை அனைத்தும் கொண்ட பட்டியல் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கிறது.  எடுத்துக்காட்டாக, பேஸ்புக் தளத்தில் கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் பெற வேண்டுமென்றால்  Facebook என்பதில் கிளிக் செய்தால் போதும். இங்கு கிடைக்கும் சில லிங்க்குகளை கிளிக் செய்தால், அவை உங்களை யு–ட்யூப் தளத்திற்கு எடுத்துச் சென்று, சில அப்ளிகேஷன்களை எப்படி இயக்குவதென்ற வீடியோக்களைக் காட்டும்.  இந்த தளத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் சின்னஞ்சிறு வசதிகளைத் தருவதாகவே உள்ளன. இவை பற்றி பெரிய அளவில் எதுவும் கூற முடியாதென்றாலும் நாம் கொண்டுள்ள சிறிய அளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. சிறிய அளவிலான எரிச்சல்களைப் போக்குகின்றன.  நாம் கம்ப்யூட்டரைத் திறந்து வீடியோக்கள், இமெயில், செய்திகள், சீதோஷ்ண நிலை தகவல்கள், கேம்ஸ் மற்றும் பல தகவல்களைத் தேடி அறிவதை நம் தினப்படி வேலைகளாக வைத்துள்ளோம். இவற்றை அறிய, அவற்றிற்கான ஐகான் அல்லது இலச்சினைகளைத் தேடி, கிளிக் செய்து, பின் மெனுவைத் தேர்ந்தெடுத்து எனப் பல கிளிக் செயல்களுக்குப் பின்னரே அறிய முடிகிறது. இந்த சிறிய புரோகிராம்கள் மூலம் ஒரே கிளிக்கில் இவற்றை அறிய முடிகிறது.  2005 ஆம் ஆண்டில் கூகுள் தளத்தில் கூடுதல் வசதிகளுக்காக இந்த தளம் ஐ கூகுள் (iGoogle) என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உருவாக்கித் தரப்படுகின்றன.  இந்த தளம் குறித்த சிறப்பு செய்தி என்னவென்றால், இதனை அண்மையில் கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கி தனதாக்கிக் கொண்டது. எனவே நமக்குக் கூடுதல் வசதி அளிக்க, இனி அதிக புரோகிராம்களை இந்த தளத்தில் எதிர்பார்க்கலாம்.  இந்த தளத்தின் முகவரிhttp://www.labpixies.com/ 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பெண்களுடன் கும்மாளம் நித்யானந்தா நண்பர் ஆத்மானந்தா ஆசிரம அந்தரங்கம்! அம்பலப்படுத்தும் சிவசொரூபானந்தா                                   ம்மை நமது நண்பர்கள் மூலம் தொடர்புகொண்ட சந்நியாசி சிவசொரூ பானந்தா... ஒரு ஆன்மீக வி.ஐ.பி. மீது ஏகத்துக்கும் பகீர் மற்றும் சீச்சீ குற்றச் சாட்டுகளை அடுக்கி... நம்மைத் திகைக்க வைத்தார்.  அவரால் புகார் கூறப் படுபவர் வேறு யாருமல்ல; கல்வி மற் றும் ஆன்மீகத்தொண்டு புரிந்துவரும் சுவாமி ஆத்மானந்த மகராஜ்தான்.

ஸ்ரீ சாரதா நிகேதன் என்ற ஆசிரமத்தை அமைத்து காரைக்குடியில் மகளிர் கல்லூரி நடத்திவரும் ஆத்மா னந்தா.. தற்போது தனது கல்வி அறக் கட்டளை மூலம் சேலம் கணவாய் புதூரிலும் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமான... கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியை அமைத்து வருகிறார். சென்னையில் அனாதை ஆசிரமத்தையும் நடத்தி வருகிறார். சிறந்த ஆன்மீக சொற் பொழிவாளராகவும் திகழும்... 70 வயதைக் கடந்த இந்த ஆத்மானந் தாதான் தற்போது குற்றச்சாட்டுச் சூறாவளியில்  சிக்கியிருக்கிறார். இவர் இலங்கை அக திப் பெண்பிள்ளைகளை படிக்க வைத்தது குறித்த கட்டுரை யை 2009-ஜூலை 29 தேதியிட்ட நக்கீரன் இதழிலேயே நாம் எழுதியிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஆத்மானந்தா மீதுதான் பகீரூட்டும் புகார்களை அடுக்குகிறார் சிவசொரூபானந்தா.

இனி சிவசொரூபானந்தா வைக்கும் புகார்களை அவரது வாயாலேயே கேட்போம்...

""எனக்கு வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் தொடர்ந்து வர ஆரம்பித்ததால்... நிம்மதிக்காக ஆன்மீகத்தில் ஐக்கியமாக நினைச்சேன். அப்ப குற்றாலத்தில் இருந்த பெருமாள் சாமியார் என்ற மகானிடம் சீடனாக சேர்ந்து அவரிடம் தீட்சை பெற்றேன். இதன்பிறகுதான் மன நிம்மதி எனக்குத் திரும்பக்கிடைத்தது. இந்த நிலையில் எனது ஆன்மீக நண்பர்கள் மூலம் ஆத்மானந்தா பற்றி கேள்விப்பட்டு அவரிடம் நட்பை வளர்த்துக்கொண்டேன். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேல் அவரோடு பழகினாலும் ஆன்மீக ரீதியாக அவரோடு ஐக்கியமாக முடியாமல் என்னை ஏதோ தடுத்தது. 

இந்த நிலையில்... அவரது ஆசிரமத்தில் அவரோடு பலகாலம் இருந்த சிவப்பிரியானந்தா என்ற சந்நியாசி.... ஆத்மானந்தாவின் மறுபக்கம் குறித்து என்னிடம் விவரித்தார். முதலில் நான் நம்பவில்லை. ஆனால் அவர் காட்டிய சில ஆதா ரங்களைப் பார்த்த பிறகு...  அவரைக் கூர்மையாகக் கண்காணித்த போது... சிவப்பிரியானந்தா சொன்னது அத்தனையும் உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டேன். மோசடி சாமியா ரான ஆத்மானந்தாவை திருத்த முயன்று தோற்றுப்போன சிவப்பிரியானந்தா... என்னிடம் அம்பலப்படுத்தியது போல்... தமிழகத்தில் இருக்கும் அத்தனை ராமகிருஷ்ணா மடங்களிட மும்.. இந்து அமைப்புகளிடமும் ஆத்மானந்தாவின் அத்தனை ஏடாகூடங்களையும் பகிரங்கப்படுத்தி... என்னை ஆத்மானந்தா கொலை பண்ணிவிடுவதாக மிரட்டுகிறார். ஏற்கனவே அவர் கொலைகளை தைரியமாகச் செய்தவர் என்ற முறையில் என்னையும் அவர் கொல்ல லாம். அப்படி என்னைக் கொன்றால்... என் சாவுக்கு அவர்தான் காரணம் என்று அவரை உள்ளே தள்ள முயற்சி பண்ணுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். 

அப்படி கேட்டுக்கொண்ட சிவப்பிரியானந்தாவை கடந்த 15 நாட்களாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அடிக்கடி லைனில் வந்துபேசும் அவரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே... ஆத்மானந்தா அவரை ஏதாவது செய்திருக்கலாமோ என்று அஞ்சுகிறேன். ஆத்மா னந்தாவால் சிவப்பிரியானந்தாவுக்கு ஏதாவது விபரீதம் உண்டாகியிருக்கலாம்''‘ என்றார் பதட்டமும் கவலையுமாக.

"அவசரப்பட்டு கற்பனை பண்ணாதீர்கள். அந்த சிவப்பிரியானந்தா... அப்படி என்னென்ன ஆத்மானந்தா வின் ஏடாகூடங்களை உங்களிடம் அம்பலப்படுத்தினார்?' என்றோம் அவரை நிதானப்படுத்தி.

""ஆத்மானந்தாவின் ஜாதகத்தையே உங்கக்கிட்ட சொல்றேன். கவனமா கேளுங்க''’என்ற சிவசொரூபானந்தா....

""ஆத்மானந்தாவின் சொந்த ஊர் கோவை பள்ளிப்பாளையம். வேலை வெட்டியில்லாம ஊர் சுத்திக்கிட்டு இருந்த ஆத்மானந்தா... திடீர்னு ஆன்மீகமே என்வழின்னு சொல்லிக்கிட்டு 65 வாக்கில் திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் தன்னை சந்நியாசியாய் இணைத்துக்கொண்டார். இவருக்கு அப்போதிருந்த தபோவனத் தலைவர் சித்பவானந்தர் தீட்சை கொடுக்க... தன் ஆன்மீக வாழ்வை பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்கினார் ஆத்மானந்தா.  இந்த நிலையில் மடத்தில் இருந்த ஒரு இளம்வயசுச் சந்நியாசி... ஆத்மானந்தா தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக ஓரினச்சேர்க்கைப் புகார் வாசித்துக் கண்ணைக் கசக்க... கோபமான சுவாமி சித்பவானந்தர்... ஆத் மானந்தாவைக் கரூர் கிளைக்கு மாற்றினார். அங்க இருந்த ஆட்களைக் கொஞ்ச கொஞ்ச மா வசப்படுத்த முயன்ற ஆத்மானந்தா... சித்பவானந்தர் இறந்ததும்.... ஆசிரமத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துட்டார். அதோட ராமகிருஷ்ண மட விதிகளுக்குப் புறம்பா... பெண் சந்நியாசிகளையும் மடத்தில் சேர்த்துக்கிட்டார். 

ஆத்மானந்தாவின் இதுபோன்ற நடத்தைகளைப் பார்த்த சீனியர் சாமியாரான நித்யானந்தா என்ற பெரியவர் ஆத்மானந்தாவைக் கண்டிச்சிக்கிட்டே இருந்தார். இந்த நிலையில்தான் எனக்கு ஆத்மானந்தாவோடு நட்பு ஏற்பட்டது. அப்ப என்னை லட்சத்தீவுக் கூட்டத்தில் ஒன்றான அன்ரோத் தீவுக்குப் போய்... நான் எழுதிக்கொடுக்குற மருந்துகளை வாங்கிட்டு வான்னு என்னை அனுப்பினார். அந்த மருந்துகளில் ஒண்ணு கரும் பச்சையாகவும் இன்னொன்னு கருப்பாகவும் இருந்தது. அதைக்கொடுத்த ஆதிவாசிகள்.. இது ஆளை மெல்ல மெல்லக் கொல்லும் விஷமாச்சே... இதை எதுக்கு வாங்கறீங்கன்னு கேட்டாங்க. சாமியார் எதற்காகவோ வாங்கச்சொன் னார்னு சொல்லிட்டு வந்தேன். அது அந்த சீனியர் நித்யானந்தாவுக் காகன்னு அப்ப எனக்குத் தெரியாது. இந்த மருந்தைக்கொடுத்துக் கொன்னா... உடம்பில் விஷத்துக்கான எவிடன்ஸ்கூட இருக்காதாம்.அந்த மருந்தை அவர் நித்யானந்தாவுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்ததையும் அதில் அந்த நித்யானந்தா... மனநிலைகெட்டு முடங்கிப் போனதாவும் பின்னால் தெரிஞ்சிக்கிட்டேன். இதேபோல் ஆத்மானந்தாவின் விசுவாச பக்தரான வேதாரண்யம் சுப்பிரமணியம் என்ற சீடர்... ஒரு இல்லீகல் பிரச்சினையில் மாட்டி ஆறுதல் தேடி இவர்கிட்ட வந்தார். ஆத்மானந்தாவோ... அபயம் தேடிவந்த  சுப்பிரமணியை தன் உறவினரான தங்கவேல் என்கிற ஜனேஸ்வரானந்தாவைக் கொண்டு மிரட்டி... சொத்துக்களை எழுதி வாங்கிக்கிட்டு கொலை பண்ணிட்டார்'' என்றார் அழுத்தமாய்.

"இந்த சுப்பிரமணி எப்படி கொல்லப் பட்டார்? அதைப் பார்த்தது யார்?' ’என்றோம் சிவசொரூபானந்தாவிடமே.

இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தவர் ""அவர் எப்படி கொல்லப்பட்டார்ங்கிற விஷயம்... சிவப்பிரியானந்தாவுக்குத்தான் தெரியும். அதை நான் டீட்டெய்லா கேட்கலை.  இதற்கிடையே... கரூர் தபோவனத்தில் இருந்த பெண் சாமியாரிணிகள் சிலர்.. ஆத்மானந்தா தங்களிடம் அசிங்கமாக நடந்துகொண்ட தாக போலீஸிலேயே புகார் கொடுக்க... காசை வாரி இறைச்சி... அதைப் பெரும்பாடுபட்டு சமாளிச்சார் ஆத்மா னந்தா. இந்த நிலையில் ராமகிருஷ்ண மடம் இவரை வெளியேறும்படி சொல்ல... கரூர் மடமும் அதன் சொத்துக்களும் தனக்கு சொந்தம்னு அறிவிச்சார் ஆத்மானந்தா. தபோவனத் தரப்பு சொத்துக்களை மீட்கப் போனப்ப.. துப்பாக்கியைக் காட்டி அவங்களை மிரட்டினார். அப்ப போலீஸ் அவரை தன் கஸ்டடிக்குக் கொண்டுபோச்சு. இந்து அமைப்புகளும்... மறைந்த தி.மு.க.பிரமுகர் வாசுகி முருகேசனும் தலையிட்டதன் பேரில் வெளியே வந்த ஆத்மானந்தா 2 வருசம் தலைமறைவா இருந்தார். தபோவனத்தரப்பு கோர்ட்டுக்குப் போய்... சொத்தையும் மடத்தையும் மீட்டது.

இந்த நிலையில்தான்.. பிரச்சினை இல்லாம மடத்தில் பெண்களை தங்க வச்சிக்கலாம்னு... காரைக்குடியில் சாரதா நிகேதன் சமிதி என்ற ஆசிரமத்தை ஆரம் பிச்சி இளம்பெண்களை அதில் சேர்க்க ஆரம்பிச்சார்.. அங்க ஒரு செட்டியாரை ஏமாற்றி நிலத்தை மோசடியா ஆக்கிரமிச்சி... அங்க மகளிர் கல்லூரியைக் கட்டியவர்... அடுத்து சேலத்திலும் டேரா போட்டு... அங்கும் கல்லூரி கட்ட ஆரம்பிச்சிருக்கார். இப்படி தில்லு முல்லுகளை செய்துவந்த ஆத்மானந்தா கடைசியா சிவப்பிரியா னந்தாக் கிட்ட எப்படி மாட்டினார் தெரியுமா?. தன் நண்பர் பிடதி ஆசிரம ரஞ்சிதா புகழ் நித்யானந்தா பாணியில்தான்''’என்று சஸ்பென்ஸ் வைத்து கொஞ்சம் மினரல் வாட்டரை வாயில் சரித்துக் கொண்டார்.

நாம் ஆர்வம் தாங்காமல் ’எப்படி?’ என்றோம்.

""பிடதியில் ஆசிரமத்தை ஆரம்பிக்கும் முன் சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் ரெண்டு வருசம் நித்யானந்தா இருந்ததும்... அப்ப புகாரின் பேரில் நீக்கப்பட்டதும் ஏற்கனவே உலகம் அறிஞ்சதுதான். அந்த நித்யானந்தா.. தனியா ஆசிரமம் அமைக்க முயற்சி செஞ்சப்ப... தபோவனத் தரப்பில் யாரும் ஆதரவு காட்டலை. அப்ப.. இந்த ஆத்மானந்தாவைத் தேடிவந்து ஆதரவு கேட்டார் நித்யானந்தா. அவருக்கு 5 ஆயிரம் ரூபாயும் கொடுத்து ஆசிர்வாதமும் பண்ணினார் ஆத்மானந்தா. இந்த நட்பில் போன டிசம்பரில் பிடதியில் நடந்த துறவிகள் மாநாட்டுக்குக் கூட ஆத்மானந்தாவை அழைச்சிருந்தார் நித்தி. முதல் ரெண்டு நாள்... வடநாட்டு துறவிகளும்.... அடுத்து ரெண்டுநாள் கர்நாடகத் துறவிகளும் அடுத்ததா தமிழகத் துறவிகளும் கலந்துக்கிட்டாங்க. அதில் இந்த ஆத்மானந்தாவும் கலந்துக்கிட்டு பேசினார். இந்த நிலையில்.... ரஞ்சிதா சி.டி.வெளியாகி.. நித்தியின் இமேஜ் முழுக்க ஸ்பாயில் ஆனது. 

அப்ப... நித்தி ஆத்மானந் தாவைத் தொடர்புகொண்டு... "என்னை ஆதரிச்சி பேசுங்க. என்னைத் தூக்கிப்பிடிங்க. உங்க ளுக்கு என்ன உதவிகள் வேணும்னாலும் செய்யறேன்'னு சொல்லிய தோடு.. ஆத்மானந்தாவுக்கு 3      கோடி கொடுப்பதாச் சொல்லி 30 லட்சம் அட்வான்ஸும் கொடுத் தார். பணத்தை வாங்கியபோதும்... நித்தியை ஆதரிச்சிப் பேசினா... தன் கல்லூரியில் படிக்கும் பெண்கள் மத்தியில் அதிருப்தி உருவாகும்னு நினைச்ச ஆத்மானந்தா என்னைக் கூப்பிட்டு ஆதரிச்சி பேசச்சொன்னார். நான் மறுத்துவிட்டேன். ஆனா என் படத்தைப் போட்டு நான் ஆதரிப்பதுபோல ஒரு செய்தியையும் வரவழைச்சார் ஆத்மானந்தா. இதற்கிடையில்  இந்த ஆத்மானந்தாவின் ஆபாச அட்டகாசம் அதிகமானது. 

எப்படின்னா? காவி கட்டிக்கிட்டு இருக்கும் எனக்கு சொல்லவே சங்கடமாத்தான் இருக்கு. இந்த ஆத்மானந்தா.. தினமும் இரவு 6-ல் இருந்து 8 மணிவரை தன் கல்லூரி மாணவிகளுக்கு டி.வி., டெக்கில் மகாபாரதம் போட்டுக்காட்டுவார். அது முடிஞ்சதும்.. தனியா இளம் சாமியாரிணிகள் புடைசூழ உட்கார்ந்துக்கிட்டு... ஆபாசப் படத்தைப் போட்டுப்பார்ப்பார். 

சாமியாரிணிகள் வெட்கத்தோடு தவிக்கத் தவிக்க... அவங்களிடம் சில்மிஷம் பண்ணுவார், அப்புறம்.. தன் உறவினரான ஜனேஸ்வரானந்தாவை அந்தப் பெண் சாமியாரிணிகளுடன் இருக்க வைத்து பக்கத்தில் இருந்து ரசிப்பார். இந்த அசிங்கத்துக்கெல்லாம் சரியான ஆதாரம் இருக்கவேண்டிய இடத்தில் ரகசியமா இருக்கு. இப்படி கொலைகள்.. நிலமோசடிகள்... பாலியல் ஆபாசக் கூத்துக்கள்னு திரைமறைவில் ஆட்டம்போடும் ஆத்மானந்தா... வெளி உலகில் ஞானிபோலவும் துறவிபோலும் நாடகம் ஆடறார். அதுக்கு தன் வயது திரையா இருக்கும்னு நம்பறார். இப்ப இந்த உண்மைகளை வெளிப்படுத்த ஆரம்பித்த தன் சீடரான சிவப்பிரியானந்தா வையும் ஏதோ பண்ணியிருக்கார். இவரைப் பத்திய அத்தனை முகத்திரைகளும் விரைவில் ஆதாரப்பூர்வமாகக் கிழியத்தான் போகிறது'' என்றார் பலமான நம்பிக்கை யோடு சிவசொரூபானந்தா.

நித்யானந்தா நண்பர்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்?
source:nakkheeran

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP