|
சமீபத்திய பதிவுகள்
பழைய செய்திகள் புதிய உண்மைகள்
உண்மை: கொம்புள்ள இது தேரை வகையைச் சேர்ந்தது அல்ல. தேரை போன்ற முகத்தைக் கொண்ட இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. அதற்கு அகண்ட தட்டையான உடலும், கொம்புகளும் இருக்கும். கூர்மையான கொம்பு போன்ற இவை அதன் உடல் மற்றும் தலையிலிருந்து வளரும் ரோமமேயாகும். வடஅமெரிக்காவில் பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கொம்புள்ள தேரைகள் உள்ளன. பயந்து போகும் போது தங்கள் கண்களிலிருந்து ரத்தத்தை 91.44 செ.மீ. தூரத்திற்கு பீய்ச்சி அடிக்க அதனால் முடியும். நம்பிக்கை: பச்சோந்திகள் தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்கின்றன. உண்மை: ஒரு சிவப்புத் துணி மேல் வைக்கப்படும் பச்சோந்தி சிவப்பாக மாறுவதில்லை. புல்லின் மீது வைக்கும்போது அது பச்சையாக மாறுவதில்லை. கட்டம் போட்ட துணி மீது அது நகர்ந்து செல்லும்போது பதற்றமடை வதில்லை. இருக்கும் பதினாறு வகை பச்சோந்தி பல்லி களில், பல தங்களின் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களது வண்ணத்தை மாற்றிக் கொள் கின்றன. மரப்பட்டையைப் போன்று சில இருக்கும் பழுப்பு நிறத்தில் சில இருக்கும். மற்றவை தாவர இலைகள் போன்று பச்சை நிறத்தில் இருக்கும். தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்ள இயன்ற சிறப்பான ஆற்றலை அவை பெற்றிருக்கின்றன. என்றாலும், இதற்கும் அவற்றின் சுற்றுச் சூழல் வண்ணங் களுக்கும் ஏதும் தொடர்பு இல்லை. வெப்ப நில, ஒளி மற்றும் அப்பிராணியின் உணர்வு நிலை ஆகியவையே அவற்றின் வண்ண மாற்றத்துக்கான காரணங்கள். சில பச்சோந்தி களுக்கு கோபம் வரும்போது அவை கறுப்பாக மாறிவிடு கின்றன. மற்றவை உணர்ச்சி வசப்படும்போது, மஞ்சள் புள்ளிகள் கொண்ட பச்சை நிறத் தோலைக் கொண்டிருக்கும். நம்பிக்கை: கண்ணாடிப் பாம்புகள் உண்மையி லேயே பாம்பு வகையைச் சேர்ந்தது உண்மை: இது உண்மையில் கால்களற்ற பல்லி வகை ஆகும். ஆனால் அது நகர்வதைப் பார்க்கும் போது பாம்பைப் போலவே தோற்றமளிக்கும். அவைகளுக்கு காதுகளும் நகரக்கூடிய கண்விழி களும், உண்டு. பாம்புகளுக்கு காதுகளும், நகரக் கூடிய கண்விழிகளும் கிடையாது. எனவே இவை பல்லி இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நம்பிக்கை: முதலைகள் பல நூறாண்டுகள் காலம் வாழ இயன்றவை உண்மை: பார்வையாளர்கள் காணும் முதலையின் வயது நூறு என்று அவர்களுக்கு உலகின் பல்வேறு பகுதி களிலும் உள்ள பாம்புக் காட்சிகளில் சொல்லப்படலாம். அது வியாபாரப் பேச்சே அன்றி, அறிவியல் தகவல் அல்ல. 50 ஆண்டுகளுக்கு மேல் முதலைகள் வாழ்வதில்லை. நம்பிக்கை: பாம்புகள் தங்கள் நாக்குகளால் கொட்டுகின்றன. உண்மை: நச்சுப் பாம்புகள் தங்களின் நச்சுப் பற்கள் மூலமாகவே கொட்டுகின்றனவேயன்றி, நாக்கினால் கொட்டுவதில்லை. அவற்றின் நச்சுப் பைகளில் உள்ள நஞ்சு மேல் தாடையில் உள்ள குழி அல்லது பைகளில் இருந்து நச்சுப் பல் மூலம் பாய்ச்சப்படுகிறது. தங்கள் இரையைத் தேடிச்செல்ல உதவும் பொருள்களின் வாசத்தை தெரிந்து கொள்ள தங்கள் நாக்குகளை அவை பயன்படுத்துகின்றன. நம்பிக்கை: மீனினால் நீரில் மூழ்க முடியாது. உண்மை: மீனினால் நீரில் மூழ்கமுடியும். மற்ற விலங்குகளைப் போல மீன்களும் உயிர்வாழ உயிர்க்காற்றை சுவாசிக்க வேண்டும். தங்களின் செதில்கள் மூலம் நீரிலிருந்து அவை தங்களுக்குத் தேவையான உயிர்க்காற்றைப் பெற்றுக் கொள்கின்றன. போதிய உயிர்க்காற்று இல்லாத தண்ணீரில் ஒரு மீன் நீந்த நேர்ந்தால், விரைவில் அது உயிர்காற்று அதிகம் கொண்ட தண்ணீர் உள்ள வேறு இடத்துக்கு செல்லவேண்டும். இல்லாவிட்டால் அது இறந்து மூழ்கி விடும். தண்ணீரில் உள்ள உயிர்க்காற்று சுற்றுச் சூழலால் மாசுபடுத்தப்படுவதால், ஆண்டுதோறும் கோடிக் கணக்கான மீன்கள் அழிகின்றன. நம்பிக்கை: பன்றி போன்ற மூக்கைக் கொண்ட பாம்புகள் ஆபத்தானவை. உண்மை: பன்றிமூக்கு பாம்பு அச்சம் தரத் தக்கது போன்று தோன்றி னாலும், அது ஆபத்தற்றது. தன் உடலின் முன் பக்கத்தை நாகப் பாம்பு போல் மேலே தூக்கி சீறவும், கடிப்பதுபோன்று பாவனை செய்யவும் அதனால் முடியும். எதிரிகளை அச்சமூட்டி விரட்ட நடத்தப்படும் நாடகமே இது. இவ்வாறு எதிரிகளை பயமுறுத்தும் முயற்சி பலிக்காமல் போனால் அடுத்த தந்திரத்தை அது கையாளும். அதாவது, இறந்து போனது போல் மல்லாந்து கிடப்பதே அது. நம்பிக்கை: நட்சத்திர மீனினால் ஒரு மனிதனை இறுக்கிக் கொன்றுவிட முடியும். உண்மை: நீரில் நீந்துபவர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்துப் பின்வாங்கிச் செல்லவே நட்சத்திர மீன்கள் முயல்கின்றன. பெரும் பாலும் அவை கற்பாறைகள், பொந்துகளில் ஒளிந்து கொள்ளும் அல்லது சுற்றுச் சூழலில் மறைந்து போய் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு நிறத்தை மாற்றிக் கொள்ளும். மக்களை நெருங்காமல் இருக்கச் செய்ய அது ஒரு வகையான மையினைப் பீய்ச்சியடிக்கும். இவை மற்ற கடல் வாழ் உயிரினங்களை நெரித்துக் கொல்வதில்லை. தங்களின் வலிமையான கிளிமூக்கு போன்ற மூக்கு களினால் தங்கள் இரையைத் உண்ணும் போது, அவற்றைப் பிடித்துக் கொள்ள தங்களின் எட்டு கைகளை அது பயன் படுத்திக் கொள்கிறது. source:periyarpinju நம்பிக்கை: கொம்பு உள்ள தேரை தேரை இனத்தைச் சேர்ந்தது
www.thamilislam.co.cc
பெண்கள் பள்ளியை தகர்த்தனர் தலிபான்கள்
பெஷாவர் : பாகிஸ்தானின் கைபர் பழங்குடியின பகுதியில் இருந்த பெண்கள் பள்ளி ஒன்றை, தலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர். பாகிஸ்தானின் கைபர் பழங்குடியின பகுதியில், லண்டி கோட்டல் துணை மண்டல பிரிவில் அமைந்துள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி ஒன்றை, தலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர். இதில், பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் சேதமடைந்தன. ஆனால், யாருக்கும் காயமேற்படவில்லை.பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகள் ஆகியவற்றிற்கு பயங்கரவாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர்கள் நூற்றுக்கணக்கான பள்ளிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் பள்ளிகள்.இதற்கிடையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், லஷ்கர்-இ-இஸ்லாம் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒராக்சாய் பழங்குடியின பகுதியில், நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில், பாக்., ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மற்றும் பயங்கரவாதிகள் பத்து பேர் பலியாயினர். தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் இருந்து தப்பி ஓடிய, தலிபான் பயங்கரவாதிகள், பழங்குடியின பகுதியில் தஞ்சம் அடைந்திருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
--
www.thamilislam.co.cc
சார்லசுக்கு பதில் இளவரசர் வில்லியம்ஸ் மன்னர் ஆகிறார்
--
www.thamilislam.co.cc
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழர் ஒருவர் போட்டி-வேட்பு மனு தாக்கல்
எம் கே சிவாஜிலிங்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதென தீர்மானித்து தமது கட்டுப்பணமான 75 ஆயிரம் ரூபாவை இன்று செலுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிலர் மகிந்தவை ஆதரிப்பது என்றும் வேறு சிலர் ரணிலை ஆதரிப்பது என்றும் கூட்டாக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளை சிவாஜிலிங்கத்தின் இந்த துணிகர முடிவு வரவேற்க்கத்தக்கது. தற்போது தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகிறார். அனைத்துத் தமிழ் மக்களின் வாக்குகளும் அவருக்கே செல்லவேண்டும் . அதுவே தமிழ் தேசியமாகும்.
இந்தநிலையில் நாளை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஒருவரை நிறுத்துமானால் தாம் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இதேவேளை தாமும் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவும் இணைந்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைபில் சில காலமாக சிக்கல்கள் இருந்துவருவது தெரிந்ததே. பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, சிவநாதன் கிஷோர் ஆகியோர் மகிந்தவுக்கு பந்தம் பிடிக்க ஆரம்பிக்கும் இவ்வேளை சிவாஜிலிங்கம் எடுத்திருக்கும் முடிவு வரவேற்க்கத்தக்கது. இத் தேர்தலில் சிவாஜிலிங்கம் வெல்வது அரிது என்பது ஒருபுறம் இருக்க தமிழ் தேசியம் நிலை நாட்டப்படவேண்டும் என்பதே இங்கு முக்கியமான விடையமாகும்.
--
www.thamilislam.co.cc
Read more...
முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா போராடி வெற்றி
212-வது ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 12-வது சதம் ஆகும். இலங்கைக்கு எதிராக 3-வது செஞ்சூரியை அடித்தார்.
அடுத்தடுத்து `அவுட்' ஷேவாக் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் டோனியும் பெவிலியன் திரும்பினார். அவர் 53 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்தார். 5-வது வீரராக களம் இறங்கிய காம்பீர் 11 ரன்னில் `அவுட்' ஆனார்.
எதிர்முனையில் இருந்த தாரங்கா 51 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவருக்கு 10 ரன்னில் கேட்ச் பிடிக்க இந்திய வீரர்கள் தவறினர். இலங்கை அணியின் ஸ்கோர் 24 ஓவரில் 188 ரன் இருக்கும்போது தொடக்க ஜோடி பிரிந்தது. தாரங்கா 60 ரன்னில் ரெய்னா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடரந்து கேப்டன் சங்ககரா களம் இறங்கினார்.
முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 2வது பந்தில் 2 ரன்னும் 3 பந்தில் 2 ரன்னும் எடுக்கப்பட்டது. 4வது பந்தில் மாத்யூஸ் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 5வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை நெக்ரா வீசினார். குலசேகரா எதிர்கொண்டார். கடைசி பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. இதனால் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
--
www.thamilislam.co.cc
சனல்- 4 இல் ஒளிபரப்பான வீடியோ உண்மையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது
கைகள் கட்டப்பட்ட நிலையில் முழு நிர்வாணமாக தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் காட்சிகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. உலகில் அதிர்வலைகளை கிளப்பியிருந்த அந்த வீடியோக் காட்சிகள், போலியானவை என இலங்கை அரசாங்கம் கூறியது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியாவில் உள்ள நிபுணர்களைக் கொண்டு தான் அந்த வீடியோவை பரிசீலித்ததாகவும் அதன் பெறுபேறுகளின்படி அது போலியானது என நீரூபிக்கப்பட்டதாகவும் இலங்கை தெரிவித்திருந்தது. இந்த ஆய்வை நடத்தியவர் ஒரு அவுஸ்திரேலியா வாழ் சிங்களவர் என்பது பின்னர் தெரியவந்தது. source:athirvu
இருப்பினும் தற்போது அமெரிக்காவில் இயங்கிவரும் சுதந்திரமான அமைப்பொன்று இந்த வீடியோக் காட்சிகளை ஆராய்ந்து அவை உண்மையானவை எனக் கூறியுள்ளனர். டைம்ஸ் நிறுவனம் இந்த வீடியோவை தொழில் நுட்பரீதியாக ஆராயத் திட்டமிட்டு இதனை பிரட்ரிக் எனப்படும் நபரிடம் கையளித்துள்ளனர். பிரட்ரிக் என்பவர் அமெரிக்க FBI க்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குபவரும், வீடியோக் காட்சிகளை , நுண் தொழில்திறன் கொண்டு பகுத்தாய்வு செய்பவரும் ஆவார்.
கொலை நடைபெறும் போது எடுக்கப்பட்ட தொடர் காட்சிகள் நொக்கியா போனில் எடுக்கப்பட்டது எனவும், நொக்கியா போனில் உள்ள படத்தை பதிவுசெய்யும் மென்பொருளுடன் (software) இந்த வீடியோ ஒத்துப்போவதாகவும் முதலில் அவர் கண்டுபிடித்துள்ளார். காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் ஒருவர் கமராவை அசைக்கும் வேகம் என்பனவற்றையும் அவர் துல்லியமாக அளந்து, பிணங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளையும் அளந்து அதன் உண்மைத் தன்மையை விளக்கியுள்ளார்.
இந்த வீடியோ முழுவதும் செல்போனில் உள்ள கமராவால் எடுக்கப்பட்டது என்றும், இதில் எந்தவிதமாகவும் வேறு ஒளிப்பதிவுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அமெக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில் இயங்கும் ஒலி ஒளி தடய நிபுணர்கள் இந்த வீடியோ குறித்து தமது ஆய்வுகளையும் பூர்த்திசெய்துள்ளனர். அவர்களும் இந்த வீடியோ முற்றாக உண்மையானவை எனக் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழின அழிப்பிற்கு எதிரான அமைப்பினரே மிகுந்த சிரமத்தில் இந்த வீடியோவை, பல தடயவியல் நிபுணர்களிடம் கொடுத்து அதன் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டுவர பாடுபட்டுள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்க விடயம், அதுமட்டுமல்ல பாராட்டிற்குரிய விடயமும் ஆகும்.
--
www.thamilislam.co.cc
பாக்.,கில் புகுந்து தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை
வாஷிங்டன்:அமெரிக்க படைகள் மீது அல்-குவைதா மற்றும் தலிபான் தலைவர்கள் தாக்குதல் நடத்த முயன்றால், பாகிஸ்தானுக்குள் புகுந்து அவர்களை தாக்குவோம் என, அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.இது குறித்து "டிவி' பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:பாகிஸ்தானின் எல்லை பகுதியில் தலிபான்களும், அல்-குவைதா பயங்கரவாத தலைவர்களும் பதுங்கியுள்ளனர். இவர்களை ஒடுக்க முந்தைய காலத்தை விட பாகிஸ்தான் எங்களுக்கு தற்போது கூடுதல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம். பாக்., ராணுவத்தினர் இந்திய எல்லை பகுதி அருகே அதிகம் கவனம் செலுத்துவதை விட்டு, மேற்கு பகுதியில் இந்த பயங்கரவாதிகளை ஒடுக்க முயற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்தில்லை.ஒவ்வொரு நகரங்களிலும் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வரும் பயங்கரவாதிகளால் தான் ஆபத்து அதிகம். பயங்கரவாதிகளின் தாக்குதலில் அமெரிக்கர்களை விட பாகிஸ்தானியர்கள் தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். இதை பாகிஸ்தானிடம் நாங்கள் வற்புறுத்தி சொல்லி வருகிறோம். பாகிஸ்தான் எல்லை பகுதியில் முகாமிட்டுள்ள அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரை தாக்க முயற்சித்தால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தொடர்ந்து இருப்பது குறித்த நிலவரம் அடுத்த ஆண்டு இறுதியில் தெரியவரும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
--
www.thamilislam.co.cc
Read more...
தாய்லாந்தில் உள்ள மர்ம ஆயுத விமானம்: திடுக்கிடும் தகவல் அம்பலம்
கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச வான்பரப்பில் பறப்பில் ஈடுபட்டிருந்த கார்கோ விமானம், எரிபொருள் நிரப்புவதற்க்காக தாய்லாந்தில் இறங்க அனுமதி கோரி இருந்தது. அதற்கான அனுமதியைப் பெற்று அது தரையிறங்கிய வேளையில் அமெரிக்க உளவு நிறுவனமான CIA கொடுத்த இரகசியத் தகவலை அடுத்து அந்த விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில் சுமார் 35 தொன் கனரக ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு , தற்போது விசாரணைக்காக 12 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க வடகொரிய ஆயுத முகவர் ஒருவர் ஊடாக விடுதலைப் புலிகள் ஏற்கனவே ஆயுதங்களுக்கான பணத்தைச் செலுத்தி இருந்த வேளை, தற்போது கே.பி யின் உதவியுடன் இந்த ஆயுதங்களை இலங்கைக்குக் கொண்டுவந்து அது புலிகள் வெளிநாட்டில் கொள்வனவு செய்த ஆயுதம், அவற்றை வெற்றிகரமாக நாம் கைப்பற்றி இலங்கைக்கு கொண்டு வந்துள்ளோம் என இலங்கை அரசு நடத்த இருந்த நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது. அதிர்வு இணையத்திற்கு கிடைத்த நம்பத் தகுந்த தகவலின் படி அரசாங்கமே இந்த ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் வெளி நாட்டுச் சொத்துகளை முடக்கப் போகிறோம் என்றும், அவர்களுக்குச் சொந்தமான 3 கப்பல்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவருவோம் எனவும் மார்தட்டிய இலங்கை அரசு, சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், புலிகளின் கப்பல் மற்றும் ஆயுதங்களையும், அவர்களின் வெளிநாட்டுச் சொத்துகளையும் இலங்கைக்குக் கொண்டு வருவதாகக் கூறி சிங்கள மக்களை ஏமாற்ற மகிந்தவும், கோத்தபாயவும் தீட்டிய ரகசியத் திட்டம் தற்போது, அமெரிக்கா தாய்லாந்திற்குக் கொடுத்த தகவலினால் அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவரும் ரணில் அவர் தலைமையில் சரத் பொன்சேகாவை காப்பாற்றவே அமெரிக்க இவ்வாறு ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் வெற்றிகரமாக இலங்கை வந்து சேர்ந்திருந்தால், மகிந்த அரசு சிங்கள மக்களிடையே மேலும் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும். பல மில்லியன் மதிப்புள்ள இந்த ஆயுதங்களை பின்னர் கோத்தபாய விற்றுக் காசாக்கியும் இருப்பார்.
இருப்பினும் இச் செய்தியை முழுமையாக உறுதிசெய்ய முடியவில்லை. இந்த ஆயுத விமானம் கடைசியாக கொழும்பு வர இருந்தது, மற்றும் அதில் உள்ள ஆயுதங்கள், மற்றும் விமானிகள் கொடுத்த தகவல்கள், மற்றும் அமெரிக்காவின் தலையீடு என்பனவற்றை நோக்கும் போது இத்தகவலில் பல விடயங்கள் மறைந்திருப்பது புலனாகிறது.
அதிர்வின் புலனாய்வு நிருபர், கொழும்பு
source:athirvu
--www.thamilislam.co.cc Read more...