சமீபத்திய பதிவுகள்

இண்டெர்நெட் எனது பிறப்புரிமை

>> Friday, November 27, 2009

இண்டெர்நெட் எனது பிறப்புரிமை - ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட் தொடர்பான முன்னோடி சட்ட ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழிகாட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம்செலுத்தும் நலவாழ்வு அரசாக விளங்கும் ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட்தொடர்பான முன்னோடி சட்ட ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அந்த சட்டத்தின் படி ஃபின்லாந்தில் இனி இண்டெர்நெட் என்பது அடிப்படைஉரிமைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிற து.அதிலும் வழக்கமான இண்டெர்நெட்அல்ல அறிஞரின் தங்கு தடையில்லா அருவிப்பேச்சைப்போலதடையில்லாமல் பாயும் அதிவேக இண்டெர்நெட்அதாவது பிராட்பேண்ட்இணைப்பு.

இதன் மூலம் உலகிலேயே பிராட்பேண்ட் இணைப்பை அடிப்படைஉரிமையாக்கிய முதல் தேசம் என்னும் பெருமையை ஃபின்லாந்துபெற்றிருக்கிறது.

இதன்பயனாக் ஜூலை மாதத்திற்குள் ஃபின்லாந்துவாசிகள் பிராட்ப்பேன்ட்இணைப்பை பெறக்கூடும்.அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு 150 எம்பிஅளவு இணைப்பு கிடைக்ககூடும்.

ஃபின்லாந்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள் அல்லவா?

இண்டெர்நெட் இணைப்பு என்ன  அத்த னை முக்கிய மா என்று சில ருக்குதோன்ற லாம்.ஆனால் இண்டெர்நெட்  முக  மாற்ற த்திற்கு வித்திட க்கூடிய நாய  தொழில்நுட்ப ம் என்பதை மற ந்து விட க்கூடாது.இண்டெர்நெட்எத னையோ புதிய  வாச ல்க ளுக்கு திர ந்துவிட்டுள்ள து.


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்

 

விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.

ஈழப் போர் முடிந்து 7 மாத காலமாக வாயையே திறக்காத ராம் இப்போது திடீரென குழப்பமான அறிக்கைக் கொடுப்பதின் நோக்கம் என்ன? உலகத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் உளவியல் ரீதியான போரில் ஓர் ஆயுதமாக ராம் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரபாகரன் மரணமடைந்து விட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென செல்வராசா பத்மநாபன் 7 மாதத்திற்கு முன் அறிவித்த போது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதை ஏற்கவும் இல்லை. கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக பிரபாகரன் மீது நம்பிக்கை வைத்து கொதித்தெழுந்தனர். உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் எழுச்சிமிக்கப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். சிங்கள அரசு அப்பாவி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததை உலக நாடுகள் கண்டிப்பதற்கு முன் வந்தன. ராஜபக்சேயும் அவருடைய கூட்டாளிகளையும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டுமென்ற குரல் வலுத்தது. இதை திசைத் திருப்பவும் உலகத் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்த சதிக்கு ராம் போன்றவர்கள் துணை போனது வெட்கக் கேடானதாகும்.

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தக்கத் தருணத்தையும் தலைவரின் கட்டளையையும் எதிர்பார்த்து மறைந்திருக்கும் போராளிகளையும் மறைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெளிக் கொணரவும் அவர்களின் மனஉறுதியை சீர்குலைக்கவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு உலகத் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.
புலிகள் சார்பில் அறிக்கைக் கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அக, புற சூழ்நிலைகள் கனியும் போது பிரபாகரன் வெளிப்பட்டு அறிக்கைத் தருவார்.

சிங்கள இராணுவ வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை ஒரு போதும் மறவாமல் நம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டிய வேளையில் நம்மை திசைத் திருப்பும் வகையில் திட்டமிட்டு வெளியிடப்படும் அறிக்கைகளைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய - சிங்கள உளவுத் துறைகள் தொடர்ந்து தமிழர்களை குழப்புவதற்காக நடத்தும் உளவியல் போரை உறுதியாக எதிர் கொள்ள நாம் தயாராவோம். இந்த போரில் ஏற்பட்டப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் பிரபாகரன் வழிகாட்டுவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு தயாராகும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு நின்று போராடுவதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இன்று மானத்தமிழர் போற்றும் மாவீரர்நாள்..

 

thalavar2தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத் தமிழினத்திற்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்திற்கே மானமும் மரியாதையும் கொடுத்த மாவீரர்நாள் இன்று. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் மாவீரர்நாள் உரை நிகழ்த்த, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அதற்கு விளக்கம் கொடுக்க, உலகம் முழுவதும் மக்கள் அந்த நாளை உணர்வுபூர்வமாகக் கொண்டாட, விமானப்படை மாவீரர் சமாதிகளுக்கு மலர்மாரி தூவ தமிழன் வான் முகட்டைத் தொட்ட வண்ண மயமான காலம் மாவீரர்நாள் கண்களில் இன்று பவனி போகிறது.

LTTE0618தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மாவீரர் நாளன்று விளக்கை தலைவர் ஏற்றி வைத்தமைக்கு ஒரு குறியீடு இருந்தது. மக்கள் உள்ளங்களில் விடுதலையின் உண்மை ஒளி பரவவேண்டும் என்பதே அதன் குறியீடாகும். கடந்த மே மாதம் உலகம் முழுவதும் தமிழர் ஓரணியில் திரண்டபோது அவர்கள் உள்ளங்களில் எல்லாம் ஒளி பிறந்துவிட்டதை எல்லோரும் கண்டோம். ஒளி வரும்வரை நான் போராடுவேன் ஒளி வந்த பின்னர் நான் அங்கு தேவையில்லை, அந்த ஒளியின் வழியே மக்கள் நடந்து செல்வார்கள் என்று 2007ம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் வே.பிரபாகரன் கூறினார். மாவீரர்களின் ஒளி வழி காட்டுகிறது, அதன் வழி நான் நடக்கிறேன் என்று அதை அழுத்தமாகவும் தெரிவித்தார்.

இன்று ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் பாதை தெரிகிறது. சிறீலங்கா அரசு, இந்திய அரசு, உலக சமுதாயம் யாவும் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. இனியோர் அரசியல் பாதையை தெளிவான முறையில் வகுப்பதற்கு ஏற்ற அத்தனை சிரமங்களையும் மாவீரர்கள் சுமந்துவிட்டார்கள். முள் நிறைந்த பகுதியெல்லாம் நடந்து தமது உயிரைக் கொடுத்து, மக்கள் இனி எங்கெல்லாம் போகக் கூடாது என்பதற்காக தமது உயிரால் வழிகாட்டி, உயிரில் ஒளிகாட்டி சென்றுள்ளார்கள்.

அம்மா உன் கையால் ஒரு கிண்ணம் பால் குடிக்க வந்திருக்கிறேன்… கடைசியாக கரும்புலி மில்லர் தாயிடம் கூறிய வார்த்ததை இது…

என்னை தண்ணீரைக் குடிக்கச் சொல்லி களங்கப்படுத்தாதேயுங்கோ… இது தண்ணீரையும் குடிக்க மறுத்து திலீபன் சொன்ன கடைசி வசனம்.

ஒருவன் பாலைக் குடித்து உடலை எரித்தான் மற்றவன் தண்ணீரும் குடிக்காமல் உடலை எரித்தான்.

தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைப்பார்கள் மற்றவர்கள் ஆனால் மாவீரன் கேணல் கிட்டுவோ பேயகள் உலாவும் நடுக்கடலில் நெருப்பேற்றி வீரமரணமடைந்தான். இந்து சமுத்திரத்தின் நடுவிலேயே தீ உயிர்த் தீ மூட்டினான்.

மரங்கள் மூடிய மாங்குளத்து வீதியிலே ஒரு மரக்கன்றை நட்டு தேசத்தைக் காப்பாற்றுங்கள் என்று சிறுவர்களிடம் கூறிவிட்டு தீயானான் கரும்புலி போர்க்.

தனது வளர்ப்புத் தந்தையை சந்தித்த இடத்திலேயே மறுபடியும் வந்து உயிர் விடைபெற்றான் கரும்புலி காந்தரூபன்.

maavirarஇப்படியாக ஒவ்வொரு மாவீரனுக்கும் ஒவ்வொரு புதுமை வரலாறு எழுதக்கூடியவாறு பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தேசத்திற்காக உயிர் கொடுத்தார்கள்.

இந்தப்போராட்டத்தில் ஆயுதம் ஏந்தியவர்களை மட்டும் மாவீரராகக் கருதிவிட முடியாத நிலை வன்னியில் ஏற்பட்ட இறுதிப் போரில் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகக் கலந்தார்கள், பலர் உயிருடன் புதைந்தார்கள், பலர் உதிரம் ஓடஓட மடிந்தார்கள். மரணத்திற்கு வரைவிலக்கணம் கூற முடியாத கொடுமைகளை சந்தித்தார்கள். செவ்விந்தியர்கள் அவர்கள் மண்ணில் எரிக்கப்பட்டு அத்தனை உடமைகளும் அபகரிக்கப்பட்ட காட்சி அரங்கேறியது. அங்கு மடிந்த அத்தனைபேருமே மாவீரர்கள்தான்.

இத்தனை காட்சிகளுக்குப் பிறகும் தலைவர் வந்து மாவீரர்நாளில் அடுத்த கட்டம்பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்பது யதார்த்தமான கேள்வி. ஆகவேதான் இம்முறை மாவீரர்நாளின் அடுத்த பக்கத்திற்குள் போகிறோம். ஈழத் தமிழினத்திற்கான வரலாற்றையும், அது போக வேண்டிய பாதையையும் மாவீரர்கள் எழுதிவிட்டார்கள். அதில் பயணிக்க வேண்டியதே காலத்தின் பாதையாக உள்ளது. மாவீரர்களின் ஒளி நிச்சயம் நமக்கு வழி காட்டும்.

மாவீரர்களின் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும் ஒரு காலத்திற்குள் இன்றிலிருந்து போகிறோம். ஆமாம்… மணியடிக்கும் ஓசை கேட்கிறது! இது மாவீரர்நாள்.


source:puthinamnews


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பி.எஸ்.என்.எல்., '3 ஜி' மொபைல் இணைப்பு : 'பேன்சி' எண்களுக்கு போட்டா போட்டி

 
 

Front page news and headlines today

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வெளியிட்ட, "3 ஜி' மொபைல் இணைப்பின், "பேன்சி எண்' பெறுவதற்கான ஏலத்தில் பலத்த போட்டி நிலவுகிறது. பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி, "3 ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, "சிம்கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர," 2 ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி, "3 ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதே எண்ணுடன் கூடிய, கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு வழங்கப்படுகிறது.சமீபத்தில், "2 ஜி' சேவையில், 250 "பேன்சி' எண்கள் ஏலம் விடப்பட்டன. தான் விரும்பிய மொபைல் போன் எண் ணிற்காக, ஒருவர் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்துள்ளார். "2 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில், சென்னை தொலைபேசிக்கு, நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, "3 ஜி' மொபைல் இணைப்பு எண்களில், "பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய, "3 ஜி' இணைப்புகள் அனைத்தும், "94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை "பேன்சி' எண்களாக குறிக்கப்படுகின்றன. சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றிற் கென குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் 1,000 ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2,000 ரூபாயும், கடைசி ஐந்து எண்களுக்கு 3,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகை குறைந்தபட்ச இருப்புத் தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள், இந்த தொகையில் இருந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், சென்னையில், "3 ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள், "பேன்சி' எண்களாக பிரிக்கப்பட்டு, அவற் றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரிபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.300 வைத் திருக்க வேண்டும். ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும் 1ம் தேதி வரை, ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பதிவிற்குப் பின், ஏலத்திற்கான எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்காக ஒரு ரூபாய் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சென்னை தொலைபேசி தவிர, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலை பேசி எண்கள் ஏலம் நடந்து வருகிறது. தற்போது நடந்துவரும், "3 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட, சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், "" 3 ஜி' ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால், அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால், 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள், திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால், அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்

 
 கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும். 
8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9.CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும். 
10. FDD Error காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட், டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.11. HDD Error or Hard Disk Failure  என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk)  கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.
14. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம். 
15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
16. Non System Disk Error:  : பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
17. Missing Operating System: சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys  ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். 
18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம். 
19. IO Error : சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.
20.Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK  பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும். 
21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். 
22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும். 
23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை. 
25. MMX/DLL FILE MISSING :  இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.பேஸ் புக் முந்துகிறது
சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களாக ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்கள் இன்டர்நெட் மக்களிடையே புகழ் பெற்ற தளங்களாக இயங்குகின்றன. ஆன்லைன் மக்கள் தொகை இந்தியாவில் 4 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க ஆர்குட் மற்றும் பேஸ்புக் தளங்களிடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டுள்ளது. 
அண்மையில் பேஸ்புக் அதன் தளத்தில் ஒரு அப்ளிகேஷன் பைலை பதிந்து பயன்படுத்த அனுமதி தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தினால், கூகுள் இயக்கும் ஆர்குட் தளத்திலிருந்து, காண்டாக்ட் தகவல்கள் அனைத்தையும் எளிதாகக் கொண்டு வரலாம். குறிப்பாக ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களிலும் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், இதைப் பார்த்தால் தங்களுடைய அக்கவுண்ட் டேட்டாவினை பேஸ்புக்கிற்குக் கொண்டு போக எண்ணுவார்கள். இதன் மூலம் பேஸ்புக்கின் ஆன் லைன் ஜனத்தொகை உயரும். இந்த வகையில் இந்தியாவில் ஆர்குட், பேஸ்புக் தளத்திலிருந்து சரியான ஆபத்தைத்தான் சந்தித்துள்ளதாக, ஆன்லைன் விஷயங்களில் ஆய்வு நடத்துபவர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 1 அன்று இந்த அப்ளிகேஷன் தரப்பட்டு பலரும் இதனைப் பயன்படுத்திப் பார்க்க முயன்றனர். அப்போது பிரச்சினைகள் பல ஏற்பட்டு, அனைவரும் தங்கள் விரக்தியைட் தெரிவித்தனர். மறுநாளே பிரச்சினை சரி செய்யப்பட்டு, பேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கேட்க, பலரும் தங்கள் டேட்டாவினை பேஸ்புக்கிற்கு மாற்றிக் கொண்டனர். இது பற்றி கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தள நிர்வாகிகளைக் கேட்ட போது தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரு சோஷியல் நெட்வொர்க் உள்ளாக சிறைப் பிடித்து வைக்க விரும்பவில்லை என்றும், யாரும் எதனையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். 
ஆனால் பேஸ்புக்கைப் பொருத்தவரை, இது அதன் பலத்தைக் காட்டும் முயற்சியாகும். ஆகஸ்ட்டில் மட்டும் இதன் ஜனத்தொகை பத்து லட்சம் உயர்ந்தது. ஆனால் ஆர்குட் ஜனத்தொகை 20 லட்சம் குறைந்தது. இப்படியிருக்க புதிதாய் பேஸ்புக் தரும் அப்ளிகேஷன் இன்னும் பலரை, அத்தளத்திற்கு மாற்றிக் கொள்ள தூண்டுதலாய் இருக்கிறது.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

என் இனிய தமிழினமே, சகோதர இந்தியர்களே

 

indiaஎன் இனிய தமிழினமே, சகோதர இந்தியர்களே, ஆளப் பிறந்தவர்களை அடிமைபடுத்த முனையும் அந்நிய சக்திகளை வேரறுக்க வேண்டும் என்ற கருத்தில் எமக்கு மாற்று கருத்து என்றுமே இல்லை,

இன்று நவம்பர்-26 இந்தியாவுக்கு கருப்பு நாள், 164 உயிர்களை பலி கொண்ட சோக தினம், யாரால் நிகழ்த்தப்பட்டது எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை நேரலையாக உலகமே பார்த்து மிரண்ட நாள், ஆனால் எங்கள் தங்க தலைவரின் பிறந்த நாள் , உங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறோம் , ஆனால் நீங்கள் தூக்கத்தில் அல்லவா இருக்கிறீர்கள், பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுடன் எம்மை ஒப்பிடாதீர்கள், அவர்கள் அந்நிய மண்ணின் மீது ஆசை கொண்டோர் , நாங்களோ தாய் மண்ணின் மீது பாசம் கொண்டோர், விடுதலைப்புலிகள் தமிழீழ தேசத்தின் போர் வீரர்கள், ஒவ்வொரு விடுதலைபுலியும் ஒழுக்க சீலர்கள்,காசுக்காக விலை போகும் வீணர்கள் அல்ல , தேசத்திற்காக உயிரை விடும் மாவீரர்கள் ,

தயவு செய்து எம் மேல் பயங்கரவாத முத்திரை குத்தி விடாதீர்கள் நவம்பர்-26இந்த காட்டுமிராண்டி செயலை கண்டிக்கும் ஒவ்வொரு இந்தியரும் இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா கூட்டாக சேர்ந்து நடத்திய தமிழின அழிப்பை தட்டிகேட்க தயங்குவதேன், தமிழீழ மண்ணில் மாண்ட உயிர்களை காண கூட அனுமதிக்காத நாடு இலங்கை, அதற்காக இந்திய வீரர்களும் இந்திய பணமும் யாருக்காக விரையம் செய்யப்படுகிறது, வட கிழக்கு இந்தியா தொடங்கி வடமேற்கு இந்தியா வரை சீனாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்து வருகிறது, இந்த களவாணி தேசங்களுடன் இலங்கையில் மட்டும் கூட்டு சேர்ந்து தமிழின அழிப்பை செவ்வனே செய்து முடிக்க மட்டும் இந்தியர்களிடம் அனுமதி கேட்பதில்லை,

மனிதாபிமான எந்த ஒரு மனிதனும் செய்ய விழையாத காரியங்களை செய்து முடித்து ஈழதமிழர்களின் பிரச்சனையை கிடப்பில் போட்டுவிட்டு இன்று இலங்கை தேர்தலுக்கு வால் பிடிக்கிறதே என்ன காரணம்? தமிழினமே இந்திய சகோதரர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் இந்தியரை கிள்ளு கீரைகளாக நினைத்து தான் ஆளும் அரசு செயல்படுகிறது, கார்கில் போரை எளிதில் மறக்க முடியுமா அல்ல மறைக்கத்தான் முடியுமா, எத்தனை உயிர்களை பழிவாங்கிய பாகிஸ்தானுடன் சேர்ந்து தமிழின அழிப்பை அரங்கேற்ற யார் அனுமதி வழங்கினார், ஆளும் அரசாங்கம் அன்னியரின் கைப்பாவையா அல்லது இந்தியரை விலைபேசிவிட்டதா,

இந்திய இராணுவமே சோனியாவின் கூலிப்படையா அல்லது இலங்கையின் அடிமைப்படையா உலக நாடுகளே இலங்கை போர்க்குற்றவாளி என தீர்மானம் கொண்டுவரும் போது இந்தியா ஏன் தடுக்கிறது, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழ்ந்தால் போர்தொடுக்கும் இந்தியா எதற்காக பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கையில் தமிழின அழிப்பை நடத்தியது, யாரை ஏமாற்ற இந்த நாடகம் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை எதிர்க்கும் இந்தியா இலங்கையில் நடத்துவது எதனால், ஊருக்கு அறிவுரை கூறும் இந்தியா அருணாச்சல அரசை சீனாவிடம் தாரை வார்க்குமோ காந்தி தேசம் இல்லை இது வாந்தி தேசம், மாவீரர் வரலாற்றால் மலரபோகும் தமிழ் ஈழத்தை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது

வாழ்க பிரபாகரன் வாழ்க வாழ்கவே

வளர்க தமிழீழம் வளர்க வளர்கவே

கண்கள் குளமானது இந்த கருணை இல்லா மானிடரால்

புண்கள் ரணமானது புத்தி கெட்ட உலகத்தினால்

எண்ணிய ஈழம் அடையும் வரை இடை நில்லாது போராட்டம்

திண்ணியம் அதை அடைந்தே தீருவோம் அது கொண்டாட்டம்

எத்தனை இடர் எமை எதிர் கொண்டாலும்

சட்டென மறித்து சமர் கொள்வோம்

வாழ்க பிரபாகரன் வாழ்க வாழ்கவே

வளர்க தமிழீழம் வளர்க வளர்கவே

நாம் தமிழர் ஏ.சேகர்source:tamilspy

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP