சமீபத்திய பதிவுகள்

ஒலிம்பிக் துளிகள்

>> Tuesday, August 19, 2008

                                                             
 
பெய்ஜிங், ஆக. 20: ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் அசந்தா சரத்கமல் தகுதி பெற்றார். மகளிர் நீளம் தாண்டுதலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சு பாபி ஜார்ஜ் பைனலுக்கு தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறினார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கும் 29வது ஒலிம்பிக் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகள் 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

நீச்சல் போட்டிகளில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப்பதக்கங்களை வென்று புதிய உலக சாதனை படைத்தார். மகளிர் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் (போல்வால்ட்) ரஷ்ய வீராங்கனை இசின்பயேவா (5.05 மீ.), ஆண்கள் 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் (9.67 வி.) ஆகியோர் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றனர்.

ஆண்கள் துப்பாக்கிச் சுடுதலில் அபிநவ் பிந்த்ரா வென்ற ஒரே தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு கவுரவத்தை அளித்துள்ளது. குத்துச்சண்டையில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அகில் குமார் கால் இறுதியில் தோற்று ஏமாற்றினார். ஜிதேந்தர், விஜேந்தர் இருவரும் இன்று கால் இறுதியில் களமிறங்குகின்றனர்.

சரத்கமல் முன்னேற்றம்: ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சென்னை வீரர் சரத்கமல் நேற்று ஸ்பெயின் வீரர் ஆல்பிரடோ கார்னராஸ் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக அமைந்த இப்போட்டியில் சரத் 4&2 என்ற செட் கணக்கில் (6&11, 12&10, 11&8, 9&11, 11&6, 11&7) வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்திய கமல், 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் வெய்க்சிங் சென் உடன் மோதுகிறார். இந்த போட்டியில் வென்றாலும், 3வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் ஹவோ வாங் (சீனா) சவாலை சமாளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் பிரீஸ்டைல் மல்யுத்தம் (60 கி.) கால் இறுதியில் தோற்ற இந்திய வீரர் யோகேஷ்வர் தத் பதக்க வாய்ப்பை வீணடித்தார். ஜப்பானின் கெனிசி யுமோட்டோ உடன் நேற்று மோதிய யோகேஷ்வர் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாடி தோற்றார்.
 
 

StumbleUpon.com Read more...

BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)

BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)
BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான்


ஏகத்துவத்திற்கு பதில்
 
முன்னுரை: குர்‍ஆனில் அல்லா செய்த ஒரு சரித்திர தவறை சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தேன், அதற்கு இஸ்லாம் கல்வி தளம் இஸ்லாமிக் அவார்னஸ் என்ற தளத்தின் கட்டுரையை மறுப்பு என்றுச் சொல்லி நான் கொடுத்த தொடுப்பை மேலோட்டமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது, அதற்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் கொடுத்த மறுப்பையே நான் என் பதிலாக முன்வைத்தேன்.


 
படிக்கவும்:

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 : குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

இஸ்லாம் கல்விக்கு பதில்: குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்


 
இதன் பிறகு ஏகத்துவம் தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது, அதாவது, பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்? (http://egathuvam.blogspot.com/2008/08/blog-post_15.html) என்ற கேள்வியோடு பைபிளில் முரண்பாடு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. அவர்கள் முன்வைக்கும் வாதம் இது தான், "யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு அறிவிக்கிறார், ஆனால், அந்த யோவான் ஸ்நானகன் நான் எலியா இல்லை என்றுச் சொல்கிறார், இது முரண்பாடு இல்லையா?" என்று கேட்டு இருந்தார்கள். இந்த கேள்விக்கு பதிலாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. ஆன்சரிங் இஸ்லாம் தளத்திற்கு ஒருவர் தன்னை ஒரு முன்னாள் கிறிஸ்தவர் என்றுச் சொல்லி, இந்த கேள்வியை கேட்டு இருந்தார், அவருக்கு பதிலாக ஆன்சரிங் இஸ்லாம் கொடுத்த பதிலை இங்கு தருகிறேன்.
 

 


 
ஆன்சரிங் இஸ்லாமுக்கு வந்த மெயில்:
 

த‌லைப்பு(Subject): விளையாட்டு முடிந்துவிட்ட‌து கிறிஸ்த‌வ‌மே!!!


ஹாய்,


நான் ஒரு முன்னாள் கிறிஸ்த‌வ‌ன், ம‌ற்றும் இந்த விவரங்களினால் தான் நான் கிறிஸ்த‌வ‌னாக‌ இல்லை.


மத்தேயு 17:12-13 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.


யோவான் 1:19-21 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான்.


எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்று இயேசு சொன்னார், மற்றும் யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு சொன்னார்.


ஆனால், யோவான் தான் எலியா இல்லை என்றுச் சொல்லி, இயேசு சொன்னதற்கு முரண்பாடாகச் சொல்லியுள்ளார். இயேசு மற்றும் யோவான் இவர்களில் ஒருவர் உண்மையை சொல்லவில்லை. இதில் எது உண்மை என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
 
எங்கள் பதில்,

ஹல்லோ ----------,

உங்கள் மெயிலுக்காக நன்றி. நீங்கள் கொடுத்த தலைப்பு(Subject) மிகவும் உற்சாகத்தை கொடுக்கும் தலைப்பு என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தவர் என்றுச் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் முதலாவது எப்படி கிறிஸ்தவராக மாறினீர்கள் என்று நான் கேட்டால், ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டீர்களே? நான் திறந்த மனதுடன் உங்கள் சாட்சியை கேட்க விரும்புகிறேன்.

உங்கள் மெயிலின் நோக்கத்தை அறிவதற்காக: நீங்கள் மிகவும் முக்கியமான முரண்பாட்டை பைபிளில் கண்டுபிடித்து விட்டதாக நினைத்துக்கொண்டு, இதன் காரணமாக எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவத்தை விட்டுவெளியேற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? உண்மையில் உங்கள் நோக்கம் அதுவல்ல என்று தெரியும்?

உங்கள் மெயிலின் நோக்கம் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும், உங்கள் தவறான புரிந்துக் கொள்ளுதல் பற்றி உங்களுக்கு தெளிவை உண்டாக்க எனக்கு அனுமதி அளியுங்கள். நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வசன மேற்கோள்கள் கீழே தரப்பட்டுள்ளது.
 
 
மத்தேயு 17:12-13 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.

யோவான் 1:19-23 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
 
இயேசு சொன்னார் யோவான் தான் எலியா என்று, ஆனால், யோவான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் பைபிள் முரண்படுகிறது என்றுச் சொல்கிறீர்கள், அதனால், "விளையாட்டு முடிந்துவிட்டது கிறிஸ்தவமே!!!" என்று வாதம் புரிகிறீர்கள். ஆனால், இது விளக்குவதற்கு மிகவும் சுலபமான விவரம் ஆகும். அதாவது யோவான் ஸ்நானகன் தான் எலியாவா அல்லது இல்லையா? இதற்கு பதில் இல்லை... மற்றும் ஆம் என்பதாகும். அதாவது, நாம் மூன்றாவது சுவிசேஷத்தின் வசனத்தை பார்த்தோமானால், இந்த பிரச்சனை பனியாய் மாயமாய் மறைந்துவிடும்.
 
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும் படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் (லூக்கா 1:13-17)
 
மேலே உள்ள வசனங்களிலிருந்து நாம் சில விவரங்களைக் காணலாம்.

முதலாவதாக, இயேசுவின் தாய் மரியாளின் உறவினரான எலிசபெத் என்ற பெண்மணிக்கு யோவான் பிறந்தார். மறுஜென்மம் என்ற கோட்பாட்டை நீங்கள் நம்பாதவராக இருப்பீர்களானால், கண்டிப்பாக யோவான் எலியாவாக பிறந்திருக்க முடியாது (Thus, unless you believe in the concept of reincarnation, John could not have literally been Elijah). எலியா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிறந்தவர். மற்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், எப்படியென்றால் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தின் படி,அவர் அக்கினி ரதம் மூலமாக் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுபடியும் வருவார் (மல்கியா அதிகாரம் 4).

இரண்டாவதாக, தேவதூதன் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் நாம் காணலாம்: "அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - He will go on before the Lord, in the spirit and power of Elijah". எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார் என்று இயேசுவிற்குத் (யோவானுக்கு உறவினர்) தெரியும். ஆனால், யோவான் ஒரு எழுத்தின் படியாக, சரீரத்தின் படியாக எலியா இல்லை (But John was not literally Elijah). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா செய்த அந்த மகிமையான ஊழியத்திற்கு ஏற்ற ஒரு ஊழியம் மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டும் என்பதை இது குறிக்கிறது, மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்படும். யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்க் ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது. இப்போழுது உங்களுக்கு புரிந்ததா? இயேசு தன் சீடர்களிடம் எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்றுச் சொன்னது, எலியா மறுபடியும் சரீர பிரகாரமாக வந்தார் என்பதைக் குறிக்காது,அதற்கு பதிலாக எலியாவின் பலத்துடன், ஆவியுடன் ஒரு ஊழியத்தை யோவான் செய்துள்ளார் என்பதையே குறிக்கும். இதில் இன்னொரு விவரம் என்னவென்றால், எலிசெபெத்திற்கு பிறந்த யோவான் தன் உறவினன் என்று இயேசுவிற்கு அந்த நேரத்தில் தெரியும். மற்றும் பழைய ஏற்பாடு சொல்வது போல, அதன் மீது நம்பிக்கைக்கொண்டு ஒரு யூதனாக‌ இயேசுவும், "மறுஜென்மத்தை நம்புகிறவர் அல்ல அதே நேரத்தில் அவர் அதை போதிப்பதும் இல்லை. இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். (And as a Jew who believed the Old Testament, obviously Jesus did not believe in, nor teach reincarnation. This is simple common sense).

இந்த இடத்தில் இயேசு சொல்லவந்த இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது! "எலியாப் போலத் தான் யோவான்" என்று இயேசு குறிப்பிடும் போது, அவர் யோவான் யார் என்பதை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை, அதோகூட, தான் (இயேசு) யார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக சொல்லியுள்ளார் (When Jesus referred to John as Elijah, He was not simply making a point about who John was, but rather Jesus was pointing to who HE was!)

எலியாவைப் பற்றியுள்ள தீர்க்கதரிசன வசனம் பற்றி தெரிந்தவர்களுக்கு சரியாக புரியும், அதாவது, இயேசு மிகவும் தெளிவாகச் சொல்கிறார், "தானே யேகோவா, வல்லமையுள்ள தேவன் - Yahweh - God Almighty" என்று. நாம் இந்த தீர்கக்தரிசனத்தை கவனிக்கும் போது, இந்த விவரம் மிகவும் தெளிவாக புரியும்.
 
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்…..இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்….ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்….அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்;…நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து,…(மல்கியா 3:1, 4:5-6, 3:2, 3:3, 3:5)
 
ஆக, எலியா "கர்த்தரின் நாளுக்கு-யேகோவாவின் நாளுக்கு(the Day of the LORD - The Day of Yahweh)" முன்பாக வரவேண்டும். மற்றும் இந்த நாளில், தேவான் தாமே தன் தேவாலயத்திற்கு வருவார். இது யாருடைய தேவாலயம் என்று இவ்வசனம் சொல்கிறது? அது தேவனின் தேவாலயம். இயேசு தன் முதல் வருகையில் அந்த தேவாலயத்திற்குச் சென்று, அதை சுத்தம் செய்தார். அவர் இரண்டாம் முறை வரும்போது, மறுபடியும் அப்படியேச் செய்வார், ஆனால், மிகவும் முழுமையான விதத்தில் செய்வார். இந்த இரண்டாம் முறை, அவர் தேவன் தானா என்று யாரும் சந்தேகம் கொள்ள முடியாது, மற்றும் அவர் மக்களை நியாயம் தீர்ப்பார்.

இதே போல யோவான் ஸ்நானகனும் மேலே சொன்ன விவரத்தை உறுதிப்படுத்தினார். யோவானிடம் "நீ யார் ?" என்ற கேள்வி கேட்கப்பட்டப்போது, ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை பயன்படுத்தி யோவான் பதில் அளிக்கிறார், "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்". கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,… சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு (ஏசாயா 40:3, 9)

மறுபடியும் ஒரு முறை தெளிவாக விவரிக்குகிறேன், மேலே உள்ள வசனங்கள் சொல்கின்றன, "பாதைகளை செவ்வைப்படுத்துங்கள், தயார்படுத்துங்கள்" என்று "ஒரு மனிதனை தயார்படுத்துங்கள்" என்று அல்ல. மற்றும் இந்த பாதை யாருக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும், தேவனுக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும்.

இப்போது சில கேள்விகள் கேட்கவேண்டும் ..... அவர்களே, நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனுக்கு எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள்? நீங்கள் சர்வ வல்லவருக்கும் அவரது சத்தியத்திற்கும் உங்களை சமர்பித்துக் கொண்டீர்களா? அல்லது உங்களை நியாயம் தீர்க்க வருகிறவரான தேவனையும் அவரது போதனையையும் தள்ளிவிடப் போகிறீர்களா?

நீங்கள் இந்த விவரங்களை அப்படியே ஒதுக்கிவிடப் போகிறீர்களா? அல்லது நீங்கள் உண்மையான தேவனிடம் வேண்டிக் கொள்ளப் போகிறீர்களா? அவரை தேடப்போகிறீர்களா? நான் உங்களை உட்சாகப்படுத்துகிறேன், அதாவது என் மூலமாக தேவன் உங்களை உட்சாகப்படுத்துவதாக நினைத்து, தேவனோடு, உண்மையான இறைவனோடு ஒப்புற‌வாகுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இப்படிக்கு,
லாசரஸ்

 
 

StumbleUpon.com Read more...

`சிமி' இயக்கத்துடன் தொடர்பு,பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்கள் கைது


`சிமி' இயக்கத்துடன் தொடர்பு
பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்கள் கைது
குஜராத் போலீசார் நடவடிக்கை


பெங்களூர், ஆக.19-

சிமி இயக்கத்துடன் தொடர்பு உடைய பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்களை குஜராத் போலீசார் கைது செய்தனர்.

குஜராத்தில் ஆமதாபாத் நகரில் கடந்த மாதம் 26-ந்தேதி தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. 55 பேரை பலி வாங்கிய இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சிமி தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்தது.

குஜராத் போலீஸ் விசாரணை

ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, 9 சிமி தீவிரவாதிகளை கைது செய்தனர். இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெடிபொருட்களை கொண்டு வந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அம்மாநிலத்தில் மேலும் சில சிமி தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இதுபற்றி விசாரிப்பதற்காக 2 பேர் கொண்ட குஜராத் போலீஸ் குழு ஒன்று மத்தியப்பிரதேசம் சென்று உள்ளது. சிமி இயக்கம் மற்றும் அதன் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இக்குழுவினர் முதலில் உஜ்ஜைனி சென்றனர். இவர்கள் சிமி இயக்கம் வலுவாக காணப்பட்ட மால்வா, நிமத் பகுதிகளுக்கும் செல்ல உள்ளனர்.

வீடு கொடுத்த 3 பேர் கைது

மேலும் ரேவா சிறையில் உள்ள சிமி இயக்கத்தின் மத்தியப்பிரதேச பிரிவின் தலைவன் நகோரியிடம் ஆமதாபாத் குண்டுவெடிப்பு பற்றி விசாரிக்க குஜராத் போலீசார் தீர்மானித்து உள்ளனர். இதற்காக அவனை கைது செய்து தங்கள் காவலில் எடுக்க நடவடிக்கை தொடங்கி உள்ளனர்.

ஆமதாபாத் குண்டுவெடிப்பில் கைதான 9 தீவிரவாதிகளில் சஜித் மன்சூரும் ஒருவன். இவனுக்கு பரூச்சில் வாடகைக்கு வீடு ஏற்பாடு செய்து தந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மன்சூரின் நடவடிக்கை பற்றி அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

பெங்களூர் டாக்டர்கள்

இந்தநிலையில் சிமி இயக்கத்துடன் தொடர்புடைய மற்றவர்களை பிடிப்பதற்காக குஜராத் போலீசார் பெங்களூர் வந்தனர். கடந்த 3 நாட்களாக ரகசிய விசாரணை நடத்திய அவர்கள், பெங்களூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பயிற்சி பல் டாக்டராக பணியாற்றி வந்த ஒரு டாக்டரையும், சொந்தமாக கிளினிக் நடத்தி வந்த வேறொரு டாக்டரையும் நேற்று கைது செய்தனர்.

அவர்களின் பெயர் விவரம் பற்றி உடனடியாக தெரியவில்லை. அதே சமயம் 2 பேரும் சிமி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தீவிரவாதி கைது

இதற்கிடையே குஜராத் போலீசார் அளித்த தகவலின்பேரில், சிமி இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை மத்தியப்பிரதேச போலீசார் நேற்றுமுன்தினம் இரவில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

இந்தநிலையில் ஆமதாபாத் குண்டுவெடிப்பில் கைதான 9 தீவிரவாதிகளில், ஒரு தீவிரவாதி பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக பெங்களூர் போலீசார் குஜராத் விரைந்து உள்ளனர்.

கர்நாடக உள்துறை மந்திரி வி.எஸ்.ஆச்சார்யா இந்த தகவலை தெரிவித்தார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=432904&disdate=8/19/2008

StumbleUpon.com Read more...

இன்டர்நெட் தொலைபேசிக்கு `டிராய்' அனுமதி,கம்ப்ïட்டரில் இருந்து செல்போனை தொடர்பு கொள்ளலாம்


இன்டர்நெட் தொலைபேசிக்கு `டிராய்' அனுமதி
கம்ப்ïட்டரில் இருந்து செல்போனை தொடர்பு கொள்ளலாம்


புதுடெல்லி, ஆக.19-

இன்டர்நெட் தொலைபேசி வசதிக்கு `டிராய்' (தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) நேற்று அனுமதி அளித்தது. சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் இந்திய தகவல் தொடர்பு துறையை உருவாக்குவதற்காக இத்தகைய முடிவை எடுத்து இருப்பதாக `டிராய்' தெரிவித்தது.

தற்போது, இரண்டு கம்ப்ïட்டர்களுக்கு இடையே மட்டும் `வாய்ஸ் மெயில்' மூலமாக தொடர்பு கொள்ள முடியும். செல்போன் அல்லது சாதாரண தொலைபேசியில் இருந்து கம்ப்ïட்டரை தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் `டிராய்' அனுமதியை தொடர்ந்து இனிமேல் தனிப்பட்ட கம்ப்ïட்டரில் இருந்து சாதாரண தொலைபேசி மற்றும் செல்போன்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இந்த முடிவின் காரணமாக, இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில், எஸ்.டி.டி. பேசுவதற்கான கட்டணங்கள் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=432839&disdate=8/19/2008

StumbleUpon.com Read more...

நிர்வாண சாமியாருக்கு எதிர்ப்பு வீடியோ

StumbleUpon.com Read more...

முதல் ஒருநாள் : 146 ரன்களில் சுருண்டது இந்திய அணி

முதல் ஒருநாள் : 146 ரன்களில் சுருண்டது இந்திய அணி
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி தனது இன்னிங்ஸ்சில், 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 146 ரன்களில் சுருண்டது.

இதன்மூலம், இலங்கை அணிக்கு 147 ரன்கள் என்ற மிக எளிய வெற்றி இலக்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக, யுவராஜ் சிங் 23 ரன்கள் எடுத்தார்; ரோகித் ஷர்மா 19 ரன்களையும், சுரேஷ் ராய்னா 17 ரன்களையும் எடுத்தனர். ஓஜா (ஆட்டமிழக்கவில்லை) 16 ரன்களையும், முனாப் படேல் 15 ரன்களையும் சேர்த்தனர்.

கோஹ்லி, ஹர்பஜன், ஜாகீர் கான் ஆகியோர் தலா 12 ரன்களையும், இர்பான் பதான் 7 ரன்களையும் எடுத்தனர்; கேப்டன் தோனி 6 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரர் கம்பீர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இலங்கை தரப்பில், மெண்டிஸ் மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குலசேகரா 2 விக்கெட்டுகளையும், வாஸ் மற்றும் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தம்புலாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட் செய்ய முடிவெடுத்து முதலில் களமிறங்கியது.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் அகில் குமார் தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் அகில் குமார் தோல்வி
பீஜிங் ஒலிம்பிக்கின் ஆடவர் 54 கிலோ பான்டம்வெயிட் பிரிவு குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில், ந்திய வீரர் அகில்குமார் தோல்வியுற்று வெளியேறினார்.

அகில் குமார் தனது காலிறுதிச் சுற்றில், மால்டோவ் குடியரசைச் சேர்ந்த வியசிஸ்லவ் கோஜன் உடன் இன்று மாலை மோதினார்.

நான்கு சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் 3-10 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்றார், அகில்.

முதல் 2 சுற்றுகள் முடிவில் இரு வீரர்களும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

ஆனால், 3-வது சுற்றில் தனது சாதுர்யமான ஆட்டத்தால் வியசிஸ்லவ் 4 புள்ளிகளைப் பெற்றார். இதனால், அச்சுற்று முடிவில் 2-6 என்ற புள்ளிக் கணக்கில் அகில் பின்னடைவைச் சந்தித்தார்.

காலிறுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் 4வது மற்றும் கடைசி சுற்றில், வியசிஸ்லவ் தற்காப்பு பாணியைப் பின்பற்றினார்.

அகில் குமாரின் குத்துகள் எதுவும் புள்ளிகளாக மாறாதபடி, சாதுர்யமாக விளையாடி, தனக்கு சாதகமாக தருணங்களைப் பயன்படுத்திக் கொண்ட வியசிஸ்லவ், எளிதாக 4 புள்ளிகளைப் பெற்று தனது மொத்த புள்ளிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்திக் கொண்டார்.

இதையடுத்து மொத்த புள்ளிகளின் அடிப்படையில் 10-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வியசிஸ்லவ் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

மால்டோவ் குடியரசு வீரரின் தற்காப்பு முறையை சமாளிக்க முடியாமல் போனதே, அகில் குமாரின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

உலக சாம்பியனான ரஷ்யாவின் செர்ஜி வோடோப்யனோவை வென்று காலிறுதிக்குள் நுழைந்த அகில்குமார், இன்றைய போட்டியில் தோல்வியுற்றதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல்

குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல்
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 'சிமி' தீவிரவாதிகள் 10 பேரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 26ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்தடுத்து பல இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 55 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருந்த அபு பஷீர் என்பவனை போலீசார் பிடித்தனர்.

குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட இவனிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த மேலும் 9 பேர் பிடிபட்டனர்.

இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், 10 பேரையும் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP