மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 40,000 இந்தியர்களை காணவில்லை என்று அந்நாட்டு பிரதமர் நஜிப் டன் ரஸாக் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 39,046 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் இங்குள்ளவர்களுடனேயே ( மலேசியாவில் ) தங்கியிருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு திரும்பியிருக்க வேண்டும்.அரசு ஆவணங்களின்படி அவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த பிரச்னையை விரைவில் மேற்கொள்ள உள்ள எனது இந்திய பயணத்தின்போது இந்திய அரசிடம் எழுப்புவேன்.
இந்தியர்கள் சுற்றுலாப் பயணிகளாக மலேசியாவுக்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தாராளமாக நடந்துகொள்ள விரும்புகிறோம். அதே நேரத்தில் அவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகளாக இருக்க வேண்டும் என்று மலேசியா வந்த இந்திய ஊடகவியலாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் நஜிப் மேலும் தெரிவித்தார்.
source:swissmurasam |
--
www.thamilislam.co.cc
Read more...