சமீபத்திய பதிவுகள்

வேலுப்பிள்ளையின் சாவும் சிறிலங்காவின் போர் குற்ற பட்டியலில் சேர்கின்றது - உருத்திரகுமாரன்

>> Monday, January 11, 2010

 

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவு சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களதும் மானுட நெறிகளுக்கு எதிரான குற்றங்களதும் பட்டியலை மேலும் நீளச் செய்கிறது என்று உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

நேற்று முன்தினம் புதன்கிழமை இயற்கைச் சாவு அடைந்த - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தந்தை - திருவெங்கடம் வேலுப்பிள்ளைக்கு வணக்கம் செலுத்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்குழுவின் சார்பில் - அதன் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை கீழே:

வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! 
ஆயிரக்கணக்கோர் இரகசிய சிறையினுள் வாடுகின்றனர்!!

 திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு ஈழத் தழிழர் தேசம் ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு ஈழத் தழிழர் தேசத்தின் துயரில் பங்கேற்பதோடு, திருமதி. வேலுப்பிள்ளை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இவ் இழப்பையொட்டித் தனது இதயபூர்வமான அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தையாகிய திரு. வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 ஆவது வயதில் சிறிலங்கா இராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது 07.01.2009 அன்று காலமாகியுள்ளார். 

அவர் மே மாதம் 2009 முதல் சிறிலங்கா இராணுவத்தினரால் இரகசிய இடமொன்றில் நீதி மற்ற சட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டட முறையில் தடுத்து வைக்கடப்பட்டிருந்தார். 

போதிய மருத்துவ வசதிகள் அவருக்கு உரிய முறையில் வழங்கப்படாமையும் அவரது சாவுக்குக் காரணம் என அறிய முடிகிறது. 

இது 1949 ஆம் ஆண்டு ஜெனீவா பிரகடனங்கள் தொடர்பான 1977 ஆம் ஆண்டு முதலாவது மேலதிக சரத்தின் 10 ம் இலக்க விதிமுறையினை மீறிய ஒரு செயலாகும். 

1977 ஆம் ஆண்டு இரண்டாவது மேலதிக சரத்து தான் இலங்கைத் தீவின் தேசிய இன பிரச்சனைக்குரிய சட்டம் எனக் கருதினாலும் கூட திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவு அச் சட்டத்தின் 7 ம் இலக்க விதிமுறைக்கும் முரணாக அமைந்துள்ளது என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

86 வயது நிறைந்த முதியவர் ஒருவரை இராணுவ இரகசிய இடமொன்றில் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான வகையில் போதிய மருத்துவ வசதிகளின்றித் தடுத்து வைப்பதென்பது மிகவும் கோரமானதும் அதிர்ச்சியூட்டுவதுமாகும். 

யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக மார் தட்டும் சிறிலங்கா அரசு, பல முதியவர்களையும், காயமடைந்த போராளிகளையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களது பிள்ளைகளையும் குடும்ப உறவினர்களையும் போதிய மருத்துவக் கவனிப்பின்றி இரகசிய இடங்களில் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளது என்பதனை அனைத்துலக சமூகத்திற்கு இத் தருணத்தில் இடித்துரைக்க விரும்புகிறோம். 

இவர்கள் அனைத்துலக மானிட நெறிச் சட்டங்களுக்கு முரணான வகையில், தமது உறவினர்களுடனோ அனைத்துலக செஞசிலுவைச் சங்கத்தினருடனோ எவ்வித தொடர்பும் - எவ்வித நீதி மற்றும் சட்ட நடவடிக்கைளுக்கான வாய்ப்புக்களும் - மறுக்கபட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். 

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவும், சட்டபூர்வமற்ற முறையிலும் மற்றும் மானுட நெறிகளுக்கு பிறழ்வான வகையிலும் எண்ணுக்கணக்கற்ற பெருந்தொகையானோர் தடுத்து வைக்கப்ட்டு வதைக்கப்படுவதும் - சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்களதும் மானுட நெறிகளுக்கு எதிரான குற்றங்களதும் பட்டியலை மேலும் நீளச் செய்கிறது. 

இரகசிய இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நோய்வாய்ப்பட்டுள்ள திருமதி வேலுப்பிள்ளை அவர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு உரிய அழுத்தங்களை வழங்குமாறு அனைத்துலக சமூகத்தினை நாம் இத் தருணத்தில் கோருகிறோம்


source:puthinappalakai


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

10 விஞ்ஞானிகளுக்கு பயங்கரவாதிகள் குறி 


புது தில்லி, ஜன. 10: இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் 10 பேருக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதால் விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் என்பதால் அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.

மஸ்கட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதி சர்பிராஸ் நவாஸிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் அந்த விஞ்ஞானிகளின் பெயரைக் கூறியுள்ளார்.

இந்திய, வங்கதேச எல்லையில் அண்மையில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நசீர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

விஞ்ஞானிகளின் பெயர்களை விசாரணையில் இருவரும் தெரிவித்ததையடுத்து அவர்களது பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தொடர்புடைய வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

2008-ல் பெங்களூரில் நடைபெற்ற தாக்குதலில் நசீருக்கும், சர்பிராஸ் நவாஸýக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு இந்திய முஜாஹிதீன்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க எலெக்ட்ரானிக் பொருள்களையும் நசீர் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோரிடம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் சில திரைப்பட ஸ்டுடியோக்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் மீண்டும் கடல் வழியாகத் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து கடலோரப் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள செம்பூர் மற்றும் டிராம்பேவுக்கு ஹெட்லி பல முறை வந்து சென்றதுடன் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை படம் பிடித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை துல்லியமாக படம்பிடிப்பதில் ஹெட்லிக்கு லஷ்கர் இயக்கத்தினர் பயிற்சி அளித்துள்ளனர்.

மும்பையில் 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடும் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலுக்காக பாகிஸ்தானில் நடைபெற்ற திட்டமிடுதல் கூட்டத்திலும் ஹெட்லி பங்கேற்றதாக நம்பப்படுகிறது.

ஹெட்லியிடம் அமெரிக்க புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்களையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளும் பணியில் பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்தே விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், திரைப்பட ஸ்டுடியோக்கள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

source:dinamani
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வன்னியில் தயாரிக்கப்பட்ட வீரத் திரைப்படம்: எல்லாளன்

 

இப்படம் தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் பெரு வெற்றிபெற்ற பெரும் தற்கொடைத் தாக்குதலில் ஒன்றாகிய அனுராதபுரம் வான்படை தளம் மீதான தாக்குதலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் பின்னர் இவ்வெற்றித் தாக்குதலை வெளியுலகிற்கு வெளிப்படுத்துவதற்காக சக போராளிகளின் பங்குபற்றுதலில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் எல்லாளன் என்னும் திரைப்படமாகும்.

சகல தயாரிப்பு வேலைகளும் பூர்த்தியுற்றநிலையில் கடந்த வருடம் வெளிவர இருந்திருப்பினும் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பு அனர்த்தம் காரணமாக அப்போது வெளிவர முடியவில்லை ஆயினும் சகல இன அனத்தங்களுக்குள்ளிருந்தும் வெளிப்பட்டு எல்லாளன் என்ற பெயருக்குரிய மிடுக்குடன் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவில் வெளிவருகிறது எல்லாளன் திரைப்படம்

கடந்த புதனன்று எல்லாளன் திரைப்படம் ரொறன்ரோ நகரில் ஜெராட்வீதியில் உள்ள ஜெராட் சினிமாவில் ஊடகவியலாளர்களுக்கும் மற்றும் பிரமுகர்களுக்கும் கௌரவ காட்சியாக காண்பிக்கப்பட்டது.

சனவரி 9ம் திகதி சனிக்கிழமை முதல் ஜெராட் சினிமாவில் சனி, ஞாயிறு தினங்களில் மாலை 2.30, 5.00 மணிக் காட்சிகளாகவும் இரவு 7.30, 10.00 மணிக்காட்சிகளாகவும் கிழமை நாட்களில் இரவு 7.30, 10.30 மணிக் காட்சிகளாகவும் காண்பிக்கப்படுகின்றது. உலகின் ஏனைய பாகங்களிலும் விரைவில் திரையிடப்படவுள்ளது.

இக்காட்சியின் தொடக்கநிகழ்வில் மாவீரர்களுக்கு அங்சலி செலுத்தப்பட்டதுடன் இப்படத்தின் தொகுப்பாளர் (editing) கோமகனின் தாயாரினாலும் கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலத்திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான லெனின் அவர்களினாலும் குத்து விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.

21 கரும்லிகள் தங்கள் உயிரை ஈய்ந்து நடத்திய இத்தாக்குதலை எவ்வித கற்பனை கலப்புமின்றி அப்படியே மீண்டும் ஒரு முறை நம் கண்முன்னே நடத்திக் காட்டுகின்றது எல்லாளன் எனும் இத்திரைப்படம்.

ஒரு சில மணி நேர தாக்குதலுக்காக போராளிகள் எத்தனை நாட்கள் பயிற்சி என்னும் தவம் புரிந்துள்ளனா் என்பதும் நாட்டின் விடுதலைக்காய் தன் உயிரை உவந்து அளிக்கும் ஒவ்வொரு போராளியின் பின்னும் நேசமும் பாசமும் கொண்ட குடும்பமும் நட்பும், ஏன் காதலும் கூட இருக்கும் என்பது பலர் அறியாதது. ஆனால் இத்திரைப்படம் இவற்றை தத்துரூபமாக தெளிவாகக் காட்டுகின்றதது

இத்திரைக்காவியம் ஈரமும் வீரமம் கொண்ட கவிதையாய் பதிவு செய்துள்ளது.

இப்படத்தின் நாயகன் உட்பட படத்தில் நடித்த நால்வர் படம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே வீரச்சாவடைந்து விட்டனர் ஏனையோர் நிலை என்னவோ?

இத்திரைக்காவியம் வன்னியில் படப்பிடிப்பு செய்யப்பட்ட இறுதித்திரைப்படமாகும்.

இப்போதைக்கு எமக்காக மடிந்த மாவீரர்கள் தங்களின் வீர தீரத்தை ஈகத்தை எமக்கு காட்டியுள்ளனர் அந்ததக் காட்சிகள் இனி எப்ப வருமோ?

அவர்களுக்காக நாம் ஒரு தரம்…………….

source:puthinamnews
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இவங்க இப்படியும் சொல்லியிருப்பாங்களோ?பொழுது போகலைன்னு சொன்னது வாஸ்தவம்தான்.. அதுக்காக இப்படியா ஸ்டேஜ்ல ஆட விட்டு வேடிக்கை பார்க்கறது...? ”முன்னாள்” ஆனா எல்லாருக்குமே இதே கதிதானோ...?

ரொம்ப கரெக்டுங்கண்ணா, ஒரு பேட்ல அடிச்சா ரன் ஒண்ணும் தேறமாட்டேங்குது... இனிமே ரெண்டு பேட்டுலயும் அடிச்சு கலக்குங்கண்ணா... அப்பவாச்சும் ஜெயிக்க முடியுதான்னு பார்ப்போம்...நான் வெண்ணெய் வெட்டத்தாம்பா கத்தி யூஸ் பண்ணுவேன்... இதை வெச்சு என்ன செய்ய...?


பல்லே வெளக்கறதில்லை போல இருக்கு... பக்கத்துல வந்தாலே ’கப்” அடிக்குது... இதுல முத்தம் வேறயா... கடவுளே...!என்ன அஸார், கிரிக்கெட் betting பற்றிய உங்கள் கேள்விகளுக்கு அசாருதீன் பதிலளிக்கிறார்-ன்னு ஒரு 52 எபிசோடு டெலி புரோகிராம் செஞ்சிடுவோமா... நம்ம சானல்கள்ல போட்டு விளம்பரத்தைக் குவிச்சு வசூலை அள்ளிரலாம்ல... யோசிங்க, யோசிங்க...


ஐயா சர்கோஸி, இந்த மூக்கு முட்டற வேலை எல்லாம் கார்லா புரூனி கிட்டே வெச்சுக்குங்க... ”கப்”பு தாங்காம எனக்கு மூச்சு முட்டுது...

இந்த குளோபல் எகானமியைப் பிடிச்சு, அப்படியே பிசைஞ்சு, உருட்டிக் கொண்டு வந்து RBI வாசல்லே வைக்கலே.... என் பேர் பிரணாப் இல்லை...
என்னது, பறக்கும் பாவை படத்தை உல்டா செஞ்சு பறக்கும் பாவைகள்னு எடுக்கறாங்களா...? கொஞ்சம் நம்பும்படியா சொல்லுங்கையா...இவரு கிட்டே எப்படிச் சொல்லி விஷயங்களைப் புரிய வைக்கறதுன்னே தெரியலயே... எதைச் சொன்னாலும் எந்த எக்ஸ்பிரஷனும் இல்லாம இப்படியே இருக்காரு... மண்டை காயுதே...


ஆஹா, மெட்ரோ ரயிலுக்கு இவ்வளவு கூட்டம் வருதா...? முன்னாடியே தெரிஞ்சிருந்தா எல்லாப் பொட்டியிலயும் நம்ம சிலை ஒண்ணை வெச்சி்ருக்கலாமே... ஹூம்ம்ம்...

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP